July 23, 2010

நான் யார் தெரியுமா?

பதிவுலகத்தில் நான் எப்படிப்பட்டவர் என்ற தொடர் பதிவுக்கு விதூஷக்கா கூப்பிட்டிருக்காங்க. ஓய்ய்ய்ய்ய்ய்ய். நாங்கள்லாம் யார் தெரியும்ல என சவுண்ட் விட நானும் களத்தில் குதிச்சாச்சு. கமான் கொஸ்டீன் மீ. கொஸ்டீன் மீ..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வித்யா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சிங்கம் எங்க போனாலும் சிங்கம் தான். அதே மாதிரி நான் இங்கயும் வித்யா தான்:)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அந்த மங்களகரமான நிகழ்வை (நாசமாப் போக என நீங்கள் சொல்வது எனக்கு கேக்குது) இதோடு நூத்தி நாப்பது தடவை எழுதியாச்சு. இங்கன போய் படிச்சு பார்த்துக்கோங்க.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஆங் அப்படியே செஞ்சி பிரபலமாயிட்டாலும். இன்னும் கொஞ்சம் பெட்டராய் சொல்லனும்னா “எனக்கு இந்த விளம்பரமே பிடிக்காதுங்க. நான் என் மனநிறைவுக்காக எழுதறேன். ஹிட்ஸ், கமெண்ட்ஸ் எல்லாம் முக்கியமில்ல”. (இதான் சாக்குன்னு கமெண்ட் போடாம போனீங்க பூச்சாண்டிக்கிட்ட புடிச்சிகுடுத்திடுவேன்).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

எழுதற முக்கால்வாசி மேட்டர் நம்ம சொந்தக் கதை சோகக் கதைதான். ஏன்னு கேட்டா யோசிச்சு எழுதற அளவுக்கு சரக்கு லேது. விளைவுகள் ஏற்படுமளவிற்கு நான் எதையும் (இங்கு) யாரிடமும் பகிர்வதில்லை.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் எழுதற மொக்கைக்கெல்லாம் காசு கொடுப்பாங்களா? Time pass. Relaxation. அம்புட்டுதேன்.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் நிறைய ஏற்படுவதுண்டு. தவறுகளை சுட்டிக்காட்டும் அளவிற்கு எனக்கு யாருடனும் பழக்கமில்லை. ஒருமுறை பட்டதே போதுமென தோன்றுகிறது. (நட்பைப் பொறுத்தவரை பதிவுலகத்திற்காக என் உலகத்தை திறப்பதற்கு ரொம்பவே தயக்கமாய் இருக்கிறது. I know i'm wrong here. Still i've my own reasons). நான் எழுத வந்தது ரிலாக்சேஷனுக்காக. அதை மட்டும் பார்த்தால் போதும் என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. அதையும் மீறி சில நிகழ்வுகள் எரிச்சலடைய செய்கின்றன. I act as a blind, deaf n dumb in blogdom during serious issues.

பொறாமை நிறைய பேரின் எழுத்தைப் பார்த்து. மொக்கை, சீரியஸ், இலக்கணம் என நிறைய விஷயங்களில் பலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். நீயும் இருக்கியே என்ற எண்ணம் ஏற்படும். அந்த லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

ஹி ஹி. என்னை எழுதுன்னு சொன்ன என் தம்பிதான் (அடிக்க தேடாதீங்க. அவன் பதிவுகலத்தை விட்டு எஸ்ஸாயிட்டான்). என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் பாராட்டுவாங்க. ஆனாலும் எப்படி இப்படி உன்னால அடக்கி வாசிக்க முடியுதுன்னு கலாய்ச்சிக்கிட்டே இருப்பாங்க. காங்க. இப்பல்லாம் கமெண்ட் வரதே பெரிய விஷயமா இருக்கு. பதிவர்களில் எப்போதாவது விக்கி உரையாடியில் பதிவு நல்லாருக்குன்னு பாராட்டுவார். நோட் பண்ணுங்க எப்போதாவது. ஏன்னா நான் எப்பவாவது தான் நல்லா எழுதறேன்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

ஒன்னியும் தெரிய வேணாம். தெரிஞ்ச வரைக்கும் போதும். 2016ல சி.எம் ஆனதுக்கப்புறம் அவங்கள எனக்கு நல்லா தெரியுமேன்னு யாராச்சும் சிபாரிசுக்கு வந்துட்டா. என்னதான் கொடை வள்ளலா இருந்தாலும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வேணுமல்லவா. ஆகவே தோழர்களே....

இதை கண்டினியூ பண்ண நான் கூப்டறது

வெட்டிவம்பு விஜய்
"No time for blog" என அலப்பறை பண்ணும் ராஜி
“பிரபல பதிவர்” விக்னேஷ்வரி (விக்கி நீங்க ஆசைப்பட்ட மாதிரியே உங்கள
பிரபலமாக்கிட்டேன். அமவுண்ட் சீக்கிரம் செட்டில் பண்ணிடுங்க)
உழவன்

30 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Vidya

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

வித்யா : ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க....

//நட்பைப் பொறுத்தவரை பதிவுலகத்திற்காக என் உலகத்தை திறப்பதற்கு ரொம்பவே தயக்கமாய் இருக்கிறது. ( . .'. . .. . .'. . . .)
//
உங்கள் முடிவு தவறல்ல...

Vijay said...

நான் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலை போலிருக்கு :(

Vidhoosh(விதூஷ்) said...

யம்மா... முடில தாயீ. :)

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... வித்யாசமான ஆனால் உண்மையான பதில்கள்..

மோகன் குமார் said...

நக்கலா வித்யாசமா கொஞ்சம் சென்னை தமிழில்.. Nice.

எறும்பு said...

//Vidhoosh(விதூஷ்) said...
யம்மா... முடில தாயீ. ///

Pls go to hospital..

எறும்பு said...

உங்களுக்கு கமெண்ட் போட்டா இந்த மாதிரி Error வருது.
அமெரிக்க 'ஏய்' காதிபத்திய சதி

This webpage is not available.

The webpage at https://www.blogger.com/comment.g?blogID=4025241944499324087&postID=5994796615288742527&page=1&token=1279863249973_AIe9_BGlaQ-gGcQuUkQSZQBVpK1RLYJZzFnci7AaBUecJ69Liq07smKcGGbXwv2V2fwBNl35d0OG0dcnilP2dC2C8kvsQhK3q2ObuQeZCpwDjbgW6cdhWyn9q4_8Y1dagIVLwCCEZxAcvsiGOMViaLIv14WdPxJlKC6aWmdDf-DR2AbkYnw3JLgCPL1tplfB-Wy30CNsqWHTiGfVH_aXRGaZa23FPMC9eBLazHgFpb-tQDGeypCD3IBDhAyHGHRcmT_rzF57agQhjNThzalno6qAt24xk0NmP8zX6j1-0TQ8dkevQwF3rzjg1M2tVv9nHrxWxj3Py8TnBPg0aQ8ujSP0wKmRK_iED_Z8qy08n_DAAdZSmNHf9Q9Xw7Kwo25hNnFlmm2-7yxmHJPO4R7clVz5GzMCfFUb65_-80Ed8Oqx7w7FMEdtJNqzhg1RnGXuCadMFPZpuLALzz_Gvhtui7lw4XH6AkrNyVe_SX8UNp9gwIA36tMcqoa5EAnXUr3S7Apc5I5NmT7zgVFZpK_xKpZlnrljGV5fjoutqrrwsXa-EK-2nvz2Dd9B6V5qNdXFn5bktR1PUIUspQ_ar78gzo9zZJ5TB2tETmF1-N_G4IDB9BaDb2_-Sxqy9VQH1E4zuOIDk34mwEb6xWd4936gEeccDKHCoZzSaqs-WfhiQyQiexOwVSXgAcjXQO0FWRywhAXf2P4JZAf4UO7qZDCus6BtZLgK2309Bu6E8vcWswhdvnR7X-2thLKn6RzrGqM63LV-Mnp3EDIJ might be temporarily down or it may have moved permanently to a new web address.

Chitra said...

ஒவ்வொரு பதிலையும் உங்கள் தனித்துவ ஸ்டைலில் சொல்லி இருப்பது கலக்கல்! இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.....

Karthick Chidambaram said...

Honest answers :-)

அமுதா கிருஷ்ணா said...

ஹையோ ஹையோ..சிரிப்பா வருது வித்யா..சூப்பர்..

வித்யா said...

நன்றி டிவிஆர் சார்.
நன்றி வழிப்போக்கன்.

நன்றி விஜய் (யாம் பெற்ற இன்பம்).

நன்றி விதூஷ் (இதுக்கே இப்படி சொன்னா எப்படி. அடுத்த கவுஜ உங்களுக்கு சமர்ப்பணம் பண்றேன் இருங்க).

நன்றி இராகவன்.

வித்யா said...

நன்றி மோகன் குமார்.
நன்றி எறும்பு (தப்பிச்சேன்).
நன்றி சித்ரா.
நன்றி கார்த்திக்.
நன்றி அமுதா.

Anonymous said...

//ஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.
//

அதை சொல்லுங்க :)

புதுகைத் தென்றல் said...

வித்யா டச்சோட பதில்கள். ரசித்தேன்

தமிழ் அமுதன் said...

///சிங்கம் எங்க போனாலும் சிங்கம் தான். அதே மாதிரி நான் இங்கயும் வித்யா தான்:)///


;;))

ஜெய்லானி said...

////ஒன்ன வச்சிக்கிட்டே ஒன்னும் முடியல. இதுக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளுது. இதுல இன்னொன்னு. ஹுக்கும்.
//

அப்ப இன்னொன்னு திரங்க தள்ளுன நாக்கு தான உள்ள போயிடும் ஹி..ஹி..

Vijay said...

Done!

நசரேயன் said...

//எறும்பு said...
//Vidhoosh(விதூஷ்) said...
யம்மா... முடில தாயீ. ///

Pls go to hospital..//

அண்ணே ஆடோவிலே அனுப்பி வையுங்க

மங்குனி அமைசர் said...

மொக்கதான் சூபரா போடுரிகளே

ஸ்ரீ.... said...

2011 முடிஞ்சு எல்லோரும் 2016 க்கு குறிவைக்கிறீங்களா? நடத்துங்க! முதல்வரானால் பதிவர்களுக்கு வரிவிலக்கு உண்டா ? பதில்கள் அழகு.

ஸ்ரீ....

சே.குமார் said...

உண்மையான 'வித்யா'சமான பதில்கள்..!

பா.ராஜாராம் said...

:-))

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா...சூப்பர் (எதுக்கும் இப்பவே ஐஸ் வெச்சுப்போம்... பின்ன.. சொன்ன மாதிரி சி எம் ஆய்ட்டா உதவுமல்ல... ஹி ஹி ஹி...)

V.Radhakrishnan said...

மிக சரியான பதில்கள்.

அமைதிச்சாரல் said...

அட்டகாசமான பதில்கள்..

வித்யா said...

நன்றி சின்ன அம்மிணி.
நன்றி கலா அக்கா.
நன்றி தமிழ் அமுதன்.
நன்றி ஜெய்லானி.

நன்றி நசரேயன் (சார்ஜ் நீங்க தருவீங்களா).

வித்யா said...

நன்றி மங்குனி அமைசர்.
நன்றி ஸ்ரீ
நன்றி குமார்.
நன்றி பா.ரா சார்.
நன்றி தங்கமணி.
நன்றி ராதாகிருஷ்ணன்.
நன்றி அமைதிச்சாரல்.

தமிழ் மகன் said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:)))