போன வாரம் தீடிர்ன்னு வலது பக்க கீழ் தாடையில் இருக்க எல்லா பல்லுமே வலிக்கற மாதிரி இருந்தது. எந்த பல்லுன்னும் சரியா தெரியல. காதும், கழுத்தும் சேர்ந்து வலிக்க ஆரம்பிச்சிடிச்சு. மறுநாள் டாக்டர்கிட்ட போய் x-ray எடுத்துப் பார்த்தா ஒரு அறிவுப் பல்லுல இன்பெக்ஷன் ஆகிருந்தது. வேற வழியே இல்லை பல்ல புடுங்கியே ஆகனும்னு சொல்லிட்டார். பல்லு புடுங்கினதுக்கப்புறமா ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லிட்டார். நானும் குஷியா மேட்டரை அம்மாகிட்ட சொல்லி கிளம்பி வர சொல்லிட்டேன். பல்ல புடுங்கிட்டு அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனும்னு பிளான் எல்லாம் பண்ணி வெச்சேன். மறுநாள் சாயந்திரம் போனா local anaesthesia கொடுத்து போராடி ஒருவழியா பதினஞ்சு நிமிஷத்துல கீழ் பல்ல புடுங்கிட்டார். திரும்பவும் injection போட வந்தார். எதுக்குன்னு கேட்டா மேல இருக்க அறிவுப் பல்லையும் கையோடு எடுத்துடலாம்னார். வேணாம்னு சொல்றதுக்குள்ள ஊசியைப் போட்டு மேல் பல்லையும் புடுங்கிட்டார் மனுசன். ஆனா இந்தப் பல்லு ஒரே நிமிஷத்துல வந்துடுச்சு.
ஒரு வாரத்துக்கு மருந்து எழுதிக்கொடுத்துட்டு அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் காதுல இடி மாதிரி கேட்டுச்சு. அவர் சொன்னது இதுதான். "ஒரு வாரத்துக்கு சூடாகவோ, காரமாகவோ, கடினமாகவோ எதையும் சாப்பிடக்கூடாது. நொறுங்க பிசைந்த தயிர் சாதம், காரமேயில்லாம ரசம் சாதம், நிறைய ஜுஸ், ஐஸ்கிரீம் சாப்பிடனும்". அம்மா வீட்டுக்கு போய் நல்லா ஒரு பிடி பிடிக்கலாம்ங்கற என் ஆசையில மண்ண வாரிப்போட்டுட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே அம்மா வீட்டுக்கு பொட்டிய கட்டினேன். ஹும். அந்த ஏழு நாட்களும் ஒரே அவஸ்தை. எனக்கும் என் பதினாறு மாதக் குழந்தைக்கும் ஒரே சாப்பாடு. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா குளிர்ச்சியா சாப்பிட்டு தொண்டை வேற கட்டிடுச்சு. ஒரு வழியா ஏழு நாள் கழிச்சு தையல் பிரிச்சதுக்கப்புறம் சாப்பிட்ட தேங்காய் சட்னியே எனக்கு தேவாம்ரிதமாய் இருந்தது. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு பாக்கி இருக்க ரெண்டு பல்லையும் புடுங்கனும். ஆக இந்தப்பதிவோட மெஸேஜ் என்னன்னா "அதிக அறிவும் ஆப்பு வைக்கும்".