April 15, 2009
ஈழமும் ஓட்டு வங்கியும்
பதவியை துறந்தால் தீர்வு வந்துவிடுமா? சிலர் பேசும் பேச்சுக்கு நான் பதவியில் இருப்பதால் தான் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் முதல்வர். தமிழ் உணர்வாளர்களென தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருமாவுக்கோ, வைகோவுக்கோ இப்போது எம்.பி சீட் தான் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது. இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தீர்வு காணாதபட்சத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்போமென கூறினால் மத்திய அரசி பணியாதா? கண்டிப்பாக நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை.
நம்மால் ஏதும் செய்ய இயலுமா? நாம் ஏன் இந்த சுயநல அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கக் கூடாது? ஓட்டு வங்கிகளாக இருந்தது போதும். இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். ஒட்டு மொத்த அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சமேனும் பயத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் நம் கையிலிருக்கும் ஆயுதம் 49O. ஏற்கனவே இம்முறையினில் வாக்களிப்பதைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன். குமுதத்தில் ஞானி "வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட 49O முறையில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமிருக்குமேயானால் நீதிமன்றத்தில் வாக்காளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளார். இது சாத்தியமா என தெரியவில்லை. நடைமுறைப் படுத்தலாம் என்றால் நாம் ஏன் 49Oவை ஆயுதமாக உபயோகிக்கக்கூடாது? அவ்வாறு செய்து மறுபடியும் தமிழகத்துக்கு தேர்தல் நடக்குமேயானால் ஈழப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கட்சிக்கே ஓட்டு என அறிவித்தால் நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு தீர்வுகாணமாட்டார்களா? இதுவும் நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.
Make a wise decision. Vote for YOUR future.
April 1, 2009
நிவா"ரணம்"
ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பொழியும் பருவ மழையானது கடந்த ஏழெட்டு வருடங்களாக மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகமெங்குமே இந்தப் பிரச்சனையிருந்தாலும் பெரும்பாலும் பாதிக்கப்படுவது வடசென்னை தான் (மீடியாக்கள் அப்படித்தான் கூறுகின்றன). நானும் சென்னையையே உதாரணத்திற்க்கு எடுத்துக்கொள்கிறேன். மழை என்றால் முக்கியமாக பாதிக்கப்படும் இடங்கள் வேளச்சேரி, மடிப்பாக்கம், வடசென்னை மற்றும் பல பகுதிகள். அரை நாள் மழைக்கே இந்தப் பகுதிகள் எல்லாம் குளம் போலாகிவிடும். ஒரு நாள் முழுவதும் மழை பெய்தால்? படகு மூலம் தான் வீட்டை விட்டு வெளியேற முடியும். ஒவ்வொரு வருஷமும் மக்கள் படும்பாடு நான்கு மாதங்களுக்கு தான் பேசப்படுகிறது. கொஞ்சம் வெயிலின் தாக்கம் தெரிய ஆரம்பிக்கும்போதும் வாயில் கரையும் தர்பூசணி துண்டுகள் போல் பிரச்சனைகளும் கரைந்து விடுகிறது.
ஏனிந்தளவிற்க்கு தண்ணீர் தேங்குகிறது. பிரச்சனைக்கு யார் காரணம்? கண்டிப்பாக நாம்தான். நம் ஒவ்வொரு செயலும் இயற்கைக்கு முரணாக ஆபத்தாகத்தானிருக்கிறது. பருவ நிலைகளில் மாற்றம், பூமியின் தட்ப வெப்பங்களில் மாற்றம் என மறைமுகமாக நாம் இயற்கையின் மீது போர் தொடுக்கின்றோம். இந்தக் காரணங்கள் ஒரு புறம். இன்னொரு மிகப்பெரிய காரணம் நீர்நிலைகளை அழிப்பது. சரியான வடிகால் வசதி இல்லாதது. இருக்கும் வடிகால்களையும் சரியாக பராமரிக்காமலிருப்பது. ஒரு இடம் விடாமல் பிளாட் போட்டு வித்தால் என்னாகும்? பிளாட் போட்டது போக மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிலங்களையும் குப்பை மேடாக மாற்றிவிடுகிறோம். அப்புறம் தண்ணீர் எப்படி வடியும்? நதியின் பாதையை அடைத்து கட்டப்பட்டிருக்கும் நிகர்நிலை பல்கலைகழகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அடையாறின் இன்றைய நிலையை பார்த்து ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா? ஏரியில் ஆக்ரமிப்பு செய்து வீடு கட்ட வேண்டியது. அப்புறம் மழைத்தண்ணி வீட்டுக்குள் புகுந்துவிட்டது என ஒப்பாரி வைக்க வேண்டியது. இங்கு யாரை குற்றம் சொல்வது? ஏரியை கூறு போட்டு வித்தவனையா? வாங்கினவனையா? இல்ல வீடு கட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் அதிகாரிகளையா? எல்லாரையும் தான். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதென்பதுபோல் இந்த விஷயத்திலும் மக்களுக்கு விஷயத்தின் வீரியம் புரியும் வரை இந்த அவல நிலை தொடரத்தான் செய்யும்.
ஒவ்வொரு முறை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும்போது ஆயிரங்களை நிவாரண நிதியாக அளித்து தப்பித்துக்கொள்கிறதே அரசாங்கம். நிவாரண நிதி இந்தப் பிரச்சனைக்கு தீர்வாகிவிடுமா? பரிசல் சொல்வதென்னமோ உண்மை தான். ஆனால் ஒவ்வொரு வருடமும் தீர்வு காணக்கூடிய பிரச்சனைக்கு வெட்டியாக பணம் செலவழிப்பதை விட, நிரந்தர தீர்வு கிட்டினால் வேறு நல்ல திட்டங்களுக்கு இந்தப் பணத்தை உபயோகிக்கலாமே. கிடைக்காத பலாக்காய்க்கு கையிலிருக்கும் களாக்காய் மேலென்பதை எத்தனை காலம் ஒற்றுக்கொள்ள முடியும்? பலாவை ருசிக்க நமக்கு உரிமையிருக்கும்போது எத்தனை நாட்கள் இந்த சமாதானத்தை சொல்லப்போகிறோம்? 2000 ரூபாய் பணம், ஒரு புடவை, ஒரு வேஷ்டி, பத்து கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணைய்க்காக எம்.ஜி.ஆர் நகரில் 42 பேர் மிதிபட்டு செத்தார்களே. எவருக்கேனும் நினைவிருக்கிறதா? என் உறவினர் ஒருவருக்கு இந்த மழையால் ஏற்பட்ட செலவு 15,000. கிடைத்த நிவாரணம் 2000. இது வெறும் உதாரணம் தான். இதைவிட கொடிய இழப்பான உயிரிழப்புக்கு யாரால் நிவாரணம் தரமுடியும்?இந்தப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு. நம் சக்திக்குட்பட்ட தீர்வுகள் நிறையவே இருக்கு. அவற்றில் என் சிற்றறிவுக்கு எட்டிய சில
# வடிகால்களில் அடைப்பு ஏற்படுத்தாமலிருப்பது. அதாவது குப்பையை குப்பைத்தொட்டியில் மட்டுமே கொட்டுவது.
# பிளாஸ்டிக்கின் உபயோகத்தை கூடுமானவரை தவிர்ப்பது. மறுசுழற்ச்சி செய்யமுடியாத பொருட்களால் தான் குப்பை தேங்குவது, வடிகால் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
# நீர் நிலைகளை பராமரிப்பது. குளம், ஏரி போன்றவற்றை அசுத்தப்படுத்தாமல் அடிக்கடி தூர் வாரி பராமரித்தால் சுபிக்ஷ்ம் நிச்சயம்.
# சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது. இதனால் பருவ நிலைகளின் மாற்றத்தை கொஞ்சமாவது தடுக்க முடியும்.
# Go green. முடிந்தவரை மரம், செடி கொடிகளை காப்பாற்றுங்கள். பெரும்பாலான பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.
# மழை நீர் சேகரிப்பு திட்டம். இது காஸ்ட்லியான திட்டமானாஅலும் ராமருக்கு அணில் உதவியது போல நிலத்தடி நீரின் அளவை ஒரளவேனும் உயர்த்தும்.
இம்மாதிரியான திட்டங்களின் மூலம் சிறுவேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.
இது கொஞ்சம் தான். இன்னும் நிறைய இருக்கு. மேற்கூறியவற்றில் கொஞ்சம் கடைபிடித்தாலே போதும்.ஒரளவேனும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
புகைப்படங்களுக்கு நன்றி http://www.anandnataraj.com/chennai-floods-2008
February 25, 2009
சில்லறை பிரச்சனை
இரண்டு மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம். ஏற்கனவே சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக இந்த செயின் ரீடெய்ல் கடைகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் மற்ற கடைகளை (மளிகை கடைகள்) ஒப்பிடும்போது இந்த இடங்களில் பொருட்களின் சுத்தம் மறுக்கமுடியாத ஒரு விஷயமாகிவிடுகிறது.
பாண்டிச்சேரியில் நிறைய cost price shop என்றழைக்கப்படும் நியாய விலை கடைகள் இருக்கு. இதில் முக்கால்வாசி கடைகளில் MRP-விட 2 அல்லது 3 ரூபாய் குறைவாக பொருட்களை கொடுக்கிறார்கள் (MRP என்பது பெயருக்கேற்றார்போல் அதிகபட்ச விலை தான். இந்த விலையிலிருந்து குறைத்து விற்றாலும் லாபம் கிடைக்கும்). ஒரு சில கடைகளில் பொருட்கள் ரொம்ப சுத்தமாக இருக்கும். அப்படிபட்ட ஒரு கடையில் நடந்தது தான் இது.
இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு "நான் வாங்கிட்டு வரேன்மா"ன்னு கிளம்பினேன். அவங்களும் ஒரு குறிப்பிட்ட கடைய சொல்லி அங்கயே வாங்க சொன்னாங்க. "மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன். இரண்டு மாடிக் கட்டடத்தில் home needs அனைத்தையும் விற்கிறார்கள். எவ்வளவோ வெரைட்டி. Peak hour மாநகரப் பேருந்து மாதிரி அவ்வளவு கூட்டம். நான் வாங்க வேண்டிய சாமான்களை மட்டும் வாங்கிட்டு திருப்பதி தரிசன வரிசை மாதிரி இருந்த க்யூவில் போய் நின்னேன். எனக்கு முன்னாடி ஒரு வயசானவரும், பின்னால் ஒரு 30-35 வயதிருக்கும் முக்கா நிஜார் போட்ட ஆள் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். முன்னால் இருந்த தாத்தாவின் முறை. பில் 93 ரூபாய். பில்லோடு 5ரூபாய் மற்றும் 2 ரூபாய் munch chocolate கொடுத்தாங்க. கேட்டதுக்கு சில்லறையில்லைன்னு சொன்னாங்க. பெரியவர் ரொம்ப உறுதியா தனக்கு சில்லறைதான் வேண்டுமெனக் கூறிவிட்டார். இதற்கிடையில் க்யூ நகராததால் ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். "ஏன் சார் அல்பத்தனமா சில்லறைக்காக சண்டை போட்றீங்க?" என்றார் ஒருவர். அதுக்கு என் பின்னாலிருந்தவர் "ஏன் கடைக்காரங்க பண்றது உங்களுக்கு அல்பத்தனமா தெரியலையா? 10 ரூபாய் பில்லூக்கு 500 ரூபாய் கொடுக்கும்போது சில்லறையில்லைன்னு சொன்னா ஒத்துக்கலாம். 7 ரூபாய் கூடவா தரமுடியாது? ஏன் வங்கில சில்லறை மாத்தி வெச்சுக்கலாமே?" என்றார். கடைசியில் அந்தப்பெரியவர் தான் வாங்கிய பொருட்களை திருப்பித்தந்துவிட்டார். எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். முதலில் ஜெர்க்கான அந்த sales girl பின்னர் சிரித்துக்கொண்டே "இதெல்லாம் வாங்க மாட்டோம் மேடம்"
"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"
"இல்ல மேடம். மேனேஜர் சொல்றத தான் நான் செய்ய முடியும்"
"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"
"அவர் இங்க இல்ல மேடம்"
திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.
இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். "பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"
February 23, 2009
வாழ்த்தும் - கண்டனங்களும்
ஆஸ்கர் விருது பெற்ற ஜெய் ஹோ பாடல்.
படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு பாடல்
|
சரி தலைப்பிலுள்ள கண்டனங்கள் யாருக்கு?
மூத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு. வக்கீல்கள் அமைதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாராம். ஒரு மாநிலத்தின் முதல்வர் மூத்த தலைவர் இப்படியா emotional blackmail செய்வது? ஏன் ஐயா உங்களால் ஒரு ஸ்திரமான நடவடிக்கையை இரண்டு தரப்பினர் மீது எடுக்கமுடியவில்லை? ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று பதறி அறிக்கை விடத் தெரிந்த உங்களுக்கு ஏன் இரண்டு தரப்பினரையும் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள்? வோட்டு போய்விடும் என வக்கீல்களுக்கா? இல்லை உங்கள் பொறுப்பிலிருக்கும் காவல்துறை எதிர்ப்பு கிளப்புவார்கள் என்றா? என்னவோ போங்கள். உங்களிடமும், உங்கள் சக அரசியல்வாதிகளிடமும் கொஞ்சமேனும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது என் தவறுதான்.
தி.மு.க தலைவரின் தொண்டரடிப்படைகளுக்கு - அவரே முடியாம போய் ஆஸ்பத்திரியில படுத்துருக்காரு. அவருக்கு தேவையானது நல்ல ஓய்வுங்கறது உங்களுக்கு தெரியாதா? அவர நிம்மதியா இருக்கவிடாம அந்த பாலத்த தொற, இந்த திட்டத்த தொறன்னு ஏன் ரப்சர் பண்றீங்க. தலைவரும் ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிறாரு? யாமறியோம் பராபரமே:)
ஜெயலலிதா உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த பிரச்சனையை ஊதி பெருசாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றன. அடிவாங்கினவனே மறந்தாலும் இவங்க வுடமாட்டாங்க போல. நான், எனது அரசு என்ற சுயதம்பட்டம், ஆணவம் இவற்றை விட்டொழித்து என்னிக்கு மேடம் பொறுப்பானா எதிர்கட்சி தலைவரா செயல்படபோறீங்க? சட்டசபைக்கு வந்தாலும் 5 நிமிஷம் தான் இருக்கறீங்க. கேட்டா கருணாநிதியும் அப்படித்தானேன்னு அவர கை காட்றீங்க. அப்ப உங்களுக்குன்னு தனி அடையாளம் ஏதும் கிடையாது. நேத்துக்கு கட்சி ஆரம்பிச்ச கேப்டன் கேட்கும் கேள்விகள் கூட நீங்க கேக்கமாட்டேங்கறீங்களே ஏன்?
வக்கீல் பெருமக்களே நீதிமன்ற வளாகத்தில் அடிதடி நடந்து நீதித்துறையே களங்கப்பட்டுடுச்சுன்னு கூவறீங்களே, சுப்ரமணிய சுவாமி மேல முட்டை அடிச்சீங்களே. எங்க வைச்சு அடிச்சீங்க புரோட்டா கடையிலயா? இந்த செயல் அநாகரிகம் இல்லையா?
காவல்துறை கனவான்களே அது சரி எவ்வளவு நாள் தான் நீங்களும் அடிவாங்க்கிட்டிருப்பீங்க. அதுக்கெதுக்குங்க வாகனங்களையெல்லாம் துவம்சம் பண்ணீங்க? வக்கீல்களை மட்டும் மொத்தியிருந்தா கொஞ்சமாவது உங்க பக்கம் நியாயம் இருந்திருக்கும் (அவங்க அடிச்சாங்க நாங்க அடிச்சோம்னு). இப்ப பாருங்க உங்களுக்கும் தான் கெட்ட பேரு.
சுப்ரமணியபுரம் படத்துல கஞ்சா கருப்பு ஒரு டயலாக் சொல்லுவார்
"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".
February 13, 2009
எது எல்லை?
ஏதோ ஒரு வாரப் பத்திரிக்கையில் எழுத்தாளர் ஒருத்தர் சொல்றார் ஐ.டி துறையினர் மன அழுத்தத்தை போக்கவே பஃப்புக்கு செல்கின்றனர் என்கிறார். சுத்தப் பேத்தல். குடித்தால் மன அழுத்தம் சரியாகிவிடுமோ. மனதை ரிலாக்ஸ் பண்ண எவ்ளோ வழிகள் இருக்கின்றன. கடற்கரையோரம் காலாற நடந்து செல்லலாம். பூங்காக்களுக்கு செல்லலாம். நண்பர்கள் ஒன்று கூடி பேசலாம். தெருவிலிருக்கு வாண்டுகளோடு சேர்ந்து விளையாடலாம். எவ்வளவோ வழிகள் இருக்கே. ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் குடி பழக்கம் அறவே தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. நீங்கள் குடிப்பதால் உங்களை கொஞ்சம் கொஞ்சமாகவும், உங்களை நம்பியிருப்பவர்களின் கனவுகளை ஒரேடியாகவும் கொல்கிறீர்கள்.
உடை விஷயத்தைப் பொறுத்தவரை தனக்கு செளகரியமான உடையை அணிய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு எல்லையும் உண்டு. உடம்பு தெரிய உடை உடுத்திய காலம் மாறி இப்போ உள்ளாடை தெரிய உடை உடுத்துவது ஃபேஷனாகிவிட்டது. ஜீன்ஸ் அணிவது தவறில்லை. ஆனால் லோ வெய்ஸ்ட் அவசியமா? காமாசோமவென்று உடை அணியவேண்டியது. அப்புறம் அவன் இங்க தொட்டான் அங்க தொட்டான்னு ஈவ் டீஸிங் கேஸ் போட வேண்டியது. சினிமாவைத் தாண்டி இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளிலும் மறைமுகமாய் வன்முறையையும், காமத்தையும் தூண்டும் நிகழ்ச்சிகள் வருவதால் இம்மாதிரியான தாக்கங்களும், ஃபேஷன் போதைகளும் கட்டுகடங்காமல் பெருகிவருகின்றன.
கடிவாளம் கூடாதென்று திமிறும் குதிரைகளுக்கு புரியும் கடிவாளத்தின் அவசியம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிச் சீரழியும்போது. குதிரையின் சொந்தக்காரர்களுக்கும் ஒருநாள் புரியும் - எப்போதும் கடிவாளத்தால் கட்டப்பட்டிருக்கும் குதிரை ஒருநாள் கட்டுகளை அவிழ்த்தெறிந்து ஒடும் என்று.
February 3, 2009
ஏதாவது செய்யனும் பாஸ்
தேர்தல்/அரசியல்
1. ஏற்கனவே ஒருத்தர் சொல்லிட்டாரு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை தான் தேர்தலின் போது பயன்படுத்த வேண்டுமென்று. அதோடு நில்லாமல் யாரெல்லாம் வாக்களிக்கவில்லையென்பதை கணக்கெடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
2. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பிண்ணனி, சொத்து விவரங்கள் சரிபார்க்கப்படுவது போல், அவர்களின் வயதும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவேண்டும். மூத்த தலைவர்கள் கட்சியையும்/இளைய தலைவர்களையும் வழிநடத்த வேண்டும்.
3. அமைச்சரவை அமைக்கும் முன், ஒருவருக்கு ஒதுக்கப்படும் இலாகவிற்க்கு அவர் பொருத்தமானவரா என்பதை தெளிவு செய்ய வேண்டும்.
சுகாதாரம்/மருத்துவம்
1. தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் கட்டாயமாக கிராமப்புறத்தில் மாதத்தில் சில தினங்கள் பணியாற்ற வேண்டும். அதே போல் தனியாக பிராக்டிஸ் செய்யும் மருத்துவர்களின் fees வரமுறைக்குட்படுத்தப்படவேண்டும்.
2. பொதுக் கழிப்பிடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள அதை உபயோகிப்பவர்கள் முதலில் முன்வரவேண்டும். உங்கள் அசுத்தத்தை நீங்களே சுத்தப்படுத்த தயங்கிவிட்டு நாறுதே நாறுதேன்னு பொறுப்பில் இருப்பவரை குறைக்கூறுவது நியாமாகாது.
3. முக்கியமான விஷயம். மதுவிலக்கு. சரக்கடிச்சிட்டு சலம்பறதானல தான் நிறைய பிரச்சனையே.
மற்றவை
1. சீக்கிரமே செய்யவேண்டியது. வீட்டு வாடகை வரைமுறை. இத்தனை சதுர அடி, இன்ன இடத்தில் இருக்கும் வீட்டுக்கு உச்ச வரம்பாக இவ்வளவுதான் வசூலிக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்படவேண்டும். அவ்வாறு ஏற்கனவே GO இருந்தால் அது பின்பற்றப்படுகிறாதா என கண்கானித்தல் வேண்டும்.
2. உங்கள் பிறந்தநாள்/மணநாள், அல்லது நீங்கள் விசேஷமாகக் கருதும் நாட்களில் கொண்டாட்டங்களுக்கு செலவிடும் தொகையில் சிறிய அளவினை ஆதரவற்றோர் இல்லங்கலிள் இருப்பவர்களுக்கு உணவளிப்பதன் மூலமோ இல்லை அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதன் மூலமோ அவர்கள் முகத்தில் சிரிப்பைக் காணலாமே.
டிஸ்கி : ஏற்கனவே பெரிய தலைகள் எழுதிய திட்டங்களை நான் கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன்.
வேண்டுகோள் : பெரிய தலைகள் எல்லாம் சேர்ந்து ஏதேனும் திட்டத்தை செயல்படுத்தினால், என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் முடிந்த உதவிகளை கட்டாயமாக செய்கிறேன்.
January 29, 2009
வாழ்க்கை வாழ்வதற்கே
அடுத்தபடியா அதிகம் விமர்சிக்கப்படுவது நாங்கள் உணவகங்களுக்கு செல்வதைப் பற்றி தான். வாரக்கடைசியில் ஒரு வேளை(யாவது) உணவகம் சென்று சாப்பிடுவது எங்கள் வழக்கம். I'm passionate about food. அதுக்குன்னு சட்டி முழுக்க சாப்பிடுற ஜீவன் இல்லை. அளவா சாப்பிடனும் அதே சமயம் அனுபவிச்சும் சாப்பிடனும். ரகுவும் என்னைப் போல் தான். எனக்கு வித்தியாசமான உணவுகளை ரசிப்பதில் ரொம்பவே ஆர்வமுண்டு. நிறைய ரெஸ்டாரெண்ட் டிரை பண்ணிருக்கோம். கையேந்தி பவனிலிருந்து பார்க் ஹோட்டல் வரை பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வீட்டிலோ சாப்பாட்டிற்காக ஏன் இவ்ளோ செலவழிக்கறீங்கன்னு கேக்கறாங்க. அட நாய்படாதபாடுபட்டு சம்பாதிக்கிறது எதுக்கு? உயிர் வாழறதுக்கு அவசியமான விஷயம் சோறு தானே? அத அனுபவிச்சு ருசிக்கறதுல என்ன தப்பு?
நாளைக்கு உயிரோட இருப்பமா இல்லையான்னு தெரியாது. சாவற நேரத்துல அய்யோ வாழ்க்கையை அனுபவிக்கல்யேன்னு புலம்பறதுல ஏதும் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தெரியலை. தாம் தூம்ன்னு செலவு பண்ணாம, கொஞ்சம் எதிர்காலத்துக்கும் சேமிச்சுகிட்டு, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கனும். என்ன நான் சொல்றது?
பி.கு : நான் போற வித்தியாசமான உணவகங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். இனிமே எழுதப் போறதை தங்கிலீஷில் எழுதலாமான்னு ஒரு யோசனையில் இருக்கேன். அடுத்த பதிவு உணவகத்தைப் பத்தி தான். உங்க ஆதரவ அள்ளித் தெளிங்க மக்களே:)
December 9, 2008
விழிப்பது எப்போது?
சந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.
1. அருண்
2. தாரணி பிரியா
3. புதுகை அப்துல்லா
4. கார்க்கி
பி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).
October 16, 2008
கால் கிலோ தக்காளி
மார்க்கெட்டில் மலிவாக இருக்கும் என்றுதான் அங்கு செல்கிறோம். ஆனால் நான் தருவதைத்தான் வாங்க வேண்டும் என்று அடாவடி பண்ணுவது எந்த விதத்தில் நியாயம். தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்து மின்சாரமும் இல்லாமல் குப்பையிலா கொட்டுவது. இப்படி கஸ்டமரை நடத்த வேண்டியது அப்புறம் ரிலையன்ஸ்காரன் வயிற்றில் அடிக்கிறான் என புலம்பி என்ன பிரயோஜனம். பூனைக்கு மணி கட்டப் போவது யார்?
September 16, 2008
Women and Financial Insecurities
One more incident flashed in my mind was the unexpected death of my uncle in a road accident. His wife does not know anything about the cash flow that my uncle made. What she knew was how much he earned. That's it. We came to know that he had an insurance policy and a claim was made for that. She doesn't know his husband's account pin number and other details. People r fighting to recover the money my uncle had given to others.
This incidents bought in a series of thoughts in me and the result is this blog.
Generally women are comfortable in paying bills, shopping and taking care of their kids. They just manage the house with whatever their husbands give. Working women also fall in the same category. only difference is that they earn some money. But that also disappears in the list above or it goes for paying some EMI's. Most of the indian women get shattered both financially and mentally after the death of their husband or when they leave them for some damn reasons. There are women who handle the situation neatly but the percentage is reasonably low.
What i personally feel is that women should be aware of the cash flow happening around the family. Instead of getting satisfied in vital tasks like running the family it's better to have a separate investment for them. The small amount of money u save in ur day to day life, if invested carefully can fetch u a huge amount later. Because anything can happen at anytime.
Men should also take the responsibility of making their wife aware about the cash flows they make, investments, bank account details and other money related matters.
P.S: Men do make sure that the awareness u create is not misused:)
July 27, 2007
Poor girlஉம் Production issueவும்:

வேலையே. ஹையா training மாதிரியே இங்கேயும் நல்லா ob அடிக்கலாம்னு happya இருந்தேன்.என் ஆசைல லோடு லோடா மண்ணு அடிக்கப்போறாங்கனு அப்ப தெரியாது.ஒரு வழியா சின்ன வேலையெல்லாம் நல்லா??!!! செய்ய ஆரம்பிச்சதுக்கப்புறம் production issues எப்படி solve பண்ணனும்னு train பண்ண ஆரம்பிச்சாங்க. இங்கதான் சனியன் சம்மணம் போட்டு உக்காந்து சடை பின்ன ஆரம்பிச்சுது. இந்த production issues இருக்கே அது super star மாதிரி. எப்ப வரும் எப்படி வரும்னே தெரியாது. ஆனா வரக்கூடாத நேரத்துல correcta வந்துடும்.வரக்கூடாத நேரம்னு எதை சொல்றேன்னு தெரிஞ்சுக்கோங்க.
July 19, 2007
முரண்பாடுகள்....
நம் வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகள் உண்டு. நாம் அவற்றைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் சமுதாயத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள்??? சுமார் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் சமீபத்தில் என் மனதில் நிழலாடியது. அன்று மனமும் உடலும் மிகவும் சோர்ந்து போனது போல் ஒரு உணர்வு. கடற்கரை சென்றால் பரவாயில்லை என்று தோணியதால் கணவருடன் besant nagar சென்றிருந்தேன். கடற்கரையில் சிறிது நேரம் காற்று வாங்கிவிட்டு (விலை என்னன்னு கேக்காதீங்க pls) dinner முடிச்சுட்டு வரலாம்னு plan. நடைபாதையை ஒட்டியுள்ள மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது "அக்கா பூ வாங்கிக்கோக்கா. 3 முழம் பத்து ரூவா தான்க்கா" என்று ஒரு சிறுமியின் குரல் கேட்டது. வேண்டாம் என்று மறுத்தவளிடம் "அக்கா தயவு செஞ்சு வாங்கிக்கோக்கா. நோட்டு வாங்க உதவியா இருக்கும்" என்றாள். எவ்வளவோ மறுத்துப்பார்த்தும் அவள் நகர்வதாயில்லை. சரி போகட்டும் என்று வாங்கினேன். (ஆனால் நிஜமாகவே அந்தப்பணம் நோட்டு வாங்க தான் செலவாகப்போகுதா என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை). அந்தச் சிறுமி நகர்ந்ததும் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அம்மா, அப்பா, ஒரு சிறுமி இறங்கினார்கள். அந்த சிறுமிக்கும் பூக்காரச் சிறுமியின் வயதுதான் இருக்கும். இவள் அழுவதும் பெற்றோர் சமாதானம் செய்வதிலிருந்து, அவள் ஏதோ பொருளுக்கு ஆசைப்பட்டு அழுவது புரிந்தது. இருவருக்கும் உள்ள வேறுபாடுகள் என்னை யோசிக்க வைத்தன. இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும். ஒருத்தி அன்றாடம் ஜீவனம் நடத்த பூ விற்கிறாள். இன்னொருத்தியோ வசதி இருந்தும் இன்னும் வேண்டுமென அழுகிறாள். ஒரே வயதுடைய இருவருக்குள் ஏனிந்த ஏற்ற தாழ்வுகள்? ஒருத்திக்கு கிடைத்த வசதியும் வாய்ப்பும் இன்னொருத்திக்கு ஏன் கிடைக்கவில்லை? இதற்கு யார் காரணம்? வசதிகளை பெருக்கிக்கொள்ளத் தெரியாத பெற்றோர்களா? இல்லை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் எண்ணிக்கை 35%லிருந்து 34.5%யாக குறைந்துள்ளது என வெகட்கமேயில்லாமல் அறிக்கை விடும் அரசியல்வாதிகளா? இந்த ஏற்றத்தாழ்வை எப்படி சரி செய்வது? இந்த கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. வீடு திரும்பியபின் tv போட்டால் நாய்களுக்கான உணவு பற்றிய விளம்பரம் "We care for dogs" என்றது. எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
July 13, 2007
Feeling the fear….

I came to my moms place in April for my delivery. Most of you know how difficult it is to kill time during weekdays, that too in the mornings. All the tv channels are loaded with those stupid serials. At this time my husband helped me out by giving some books to boost up my self confidence. One among them was FEEL THE FEAR AND DO IT ANYWAY by Susan Jeffers. This book deals with concrete techniques to turn passivity into assertiveness. Susan teaches how to stop negative thinking patterns and reeducate our mind to think more positively. As I turned the pages, I realized that fear occupies us most of the time in our life. Fear creates difficulty making decisions, looking for a new job, leaving an unsatisfactory relationship, spending money and the list continues.
Susan says to develop the habit of positive thinking to drive away the fear. But these days society looks being positive in attitude as unrealistic. If you start observing, you can find many situations, where a barrier is put for your positive attitude (though it’s very rare) by your friends, parents, co-workers etc,
Fear holds us from making important decisions in our life. We always have “what if” phenomena occupying us during decision making. At an early age we are trained to do what other people want us to do. So when we start thinking about what we want from life fear occupies us. The decision we would make today might not be the decision we would make five years from now.
This book (atleast) makes us think about our fears and the techniques to handle them. Quite interesting philosophical guide.