March 22, 2011

Mainland China

ரொம்ப நாட்களாக சைனீஸ் உணவிற்கான கார்விங் இருந்தது. புது ரெஸ்டாரெண்டும் ட்ரை செய்து நாளாச்சே என மெயின்லாண்ட் சைனாவிற்கு நடையைக் கட்டினோம். ரெஸ்டாரெண்டைப் பத்தி டிவி மற்றும் பேப்பர் விளம்பரங்களின் மூலமே அறிந்திருந்ததால் உறவினர் ஒருவரை கூப்பிட்டு கேட்டதற்கு authentic chinese என்றால் மெயின்லாண்ட் சைனா தான் என துண்டைத் தாண்டாத குறையாக சத்தியம் செய்தார் (சைனாவில் வாழ்ந்திருக்காமல், சீன நண்பர்களைக் கொண்டிருக்காமல் அத்தெண்டிசிட்டியை எப்படி முடிவு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை:)).

கிறிஸ்துமஸ் அன்று சென்றோம். ரிசர்வேஷன் கட்டாயம் தேவை. 8 மணிக்கு சென்றபோது ரெஸ்டாரெண்ட் ஃபுல்லாக இருந்தது. Amazing ambience. நுழைந்தவுடனே மூன்று ஆளுயர சீன சிலைகள் வரவேற்கின்றன. சிகப்பு வண்ணத்தை அடிப்படையாக கொண்ட டெகரேஷன் நன்றாக இருந்தது. இதெல்லாம் மட்டும் ஒரு உணவகத்திற்குப் போதுமா? முக்கியமான மேட்டருக்குப் போவோம். ஜூனியருக்கு கொஞ்சம் காரத்தைக் குறைத்து சில்லி பொட்டேட்டோ ஃப்ரையும், எங்களுக்கு siu mai என்கிற திம்சும்மும், wonton clear soup ஆர்டர் செய்தோம். சூப் ஒக்கே. பொட்டேட்டோ ஃப்ரை கொடுமையாக இருந்தது. ஜூனியர் தொட்டக்கையால் தொடல. திம்சும்மும் ஆவரேஜ் தான். சூடாக இல்லாதது பெரிய குறையாக இருந்தது. உடன் பரிமாறப்பட்ட மஸ்டர்ட் சாஸ், இன்ன பிற சாஸ்கள் அட்டகாசம். இதற்கிடையில் கிறிஸ்துமஸ் செலிப்ரேஷனில் ஒரு பார்ட்டாக லக்கி ட்ராவில் எங்களுக்கு Honey glazed vegetables கொடுத்தார்கள். அட்டகாசமாக இருந்தது.





மெயின் கோர்ஸிற்கு Pan fried வெஜ் நூடுல்ஸோடு வெஜிடபிள் க்ரேவி ஆர்டர் செய்தோம். ரெண்டுமே ரொம்ப சுமாராகத்தான் இருந்தது. இதற்கு white pepper/cascade far better. ரங்ஸ் டெசர்ட் வேண்டாம் என ஒதுங்கிக் கொள்ள நான் தேங்காய் கொழுக்கட்டை மாதிரி ஒரு வஸ்துவை சாப்பிட்டேன். குறிப்பிட்டு சொல்லும்படியான சுவை இல்லை. இதுவும் ஒக்கே தான்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Mainland China
உணவு - Chinese (Veg & Non-Veg)
இடம் - நாங்கள் சென்றது செனடாஃப் ரோடிலிருக்கும் கிளைக்கு. தாபா எக்ஸ்பிரஸிற்கு பக்கத்திலிருக்கும் டொயட்டோ ஷோரூமின் பின்புறம். ஸ்டெர்லிங் ரோடு அருணா ஹோட்டலிலும் ஒரு கிளை இருக்கிறது.
டப்பு - 1700+ taxes. அநி்யாயத்துக்கு காஸ்ட்லி.

பரிந்துரை - Too expensive. Food not worth for the price

March 14, 2011

வித்யா ரம்பம் கரிஷ்யாமி

பெயர்க்காரணம் பற்றிய தொடர்பதிவிற்கு கோபி அழைப்பு விடுத்திருந்தார். என்னுடைய பெயருக்கான காரணம் பெரிய வரலாற்றுச் சம்பவமா இல்லைன்னாலும் தொடர்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சே. இத சாக்கா வச்சி மொக்கையப் போடலாமேன்னு எழுதறேன். என்னையும் மதிச்சு எழுதச் சொன்னதுக்கு நன்றி கோபி:)

எனக்கு வித்யான்னு பெயர் வச்சது என் அத்தைதானாம். பெரிய பெரியப்பா/பெரியம்மா டீச்சர். ரெண்டாவது பெரியப்பா மிலிட்டரில இருந்தாரு. அவருக்கும் கிட்டத்தட்ட டீச்சர் போஸ்ட்தானாம். அத்தையும் மாமாவும் டீச்சர்ஸ். எங்கப்பாவும், சித்தப்பாவும் தான் டீச்சர் உத்யோகம் பார்க்காம வேற லைனுக்கு போனது. குடும்பத்துல பாதி பேர் பயிற்றுவிக்கும் பணில இருந்ததால் எனக்கு படிப்புக் கடவுளான சரஸ்வதியின் பெயரையே வச்சிட்டாங்க. சின்ன வயசில அம்மா சொல்லிக்கொடுத்த ஸ்லோகமான ”நமஸ்துப்யம் வரதே”வில் என் பெயரும் வருதேன்னு ரொம்ப பெருமையா இருக்கும். பெயருக்கேத்த மாதிரி படிப்புல நான் சூப்பர்ங்கறது இந்தப் பதிவுக்கு தேவையில்லாத விஷயம்:)

என்னுடையது unique பெயரெல்லாம் கிடையாது. தெருவுக்கு தெரு வித்யாங்கற பேர்ல யாராவது இருப்பாங்க. ஆனா இன்னைக்கு வரைக்கும் இன்னொரு வித்யாவால பெயர்க்குழப்பம் வந்ததேயில்லை. பள்ளியில், என் வகுப்பில் நான் ஒருத்திதான் வித்யா. கல்லூரியில் நிறைய வித்யாக்கள் இருந்தாலும் எல்லோரும் வேற வேற டிபார்ட்மெண்ட். அதனால் நோ ப்ராப்ளம். வேலைக்குப் போகும்போது ட்ரெய்னிங்கில் இன்னொரு வித்யா இருந்தாள். அவள் வித்யாலக்‌ஷ்மி. அதனால் அங்கேயும் குழப்பம் லேது.

பேரென்ன?

வித்யா

இனிஷியல்?

C

ஓஹ். ஸ்ரீ வித்யாவா?

இல்லைங்க C.வித்யா

அதான்மா ஸ்ரீ வித்யா தான நானும் சொல்றேன்.

ஐய்யோ சார். ஸ்ரீ இல்ல சார். C. C. இது வேலைக்காவது. நீங்க வித்யா சந்திரசேகரன்னே ரெஜிஸ்டர் பண்ணுங்க.

இப்படித்தான் C.Vidhyaவாக இருந்த நான் வித்யா சந்திரசேகரனானேன். அன்றிலிருந்து இன்று வரை, இனிமேலும் நான் வித்யா சந்திரசேகரன் தான். கல்யாணமான பின்பு நிறைய பெண்கள் கணவர் பெயரை சேர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். என் அம்மா உட்பட. என் மாமியார் வீட்டில் கூட “என்ன அப்பா பேரை எழுதற. ஹஸ்பெண்ட் பேர்தான எழுதனும்?” அப்படின்னு சொன்னாங்க. அப்படியெதுவும் ரூல் இருக்கா என்ன எனத் திருப்பிக் கேட்டேன். அதோடில்லாம ஜஸ்ட் லைக் தட் பெயரெல்லாம் மாத்திக்கமுடியாது. கெஸட்ல பதியனும். சர்ட்டிஃபிக்கேட்ல எல்லாம் என்ன பெயர் இருக்கோ அதுதான் கடைசி வரைக்கும் யூஸ் பண்ணனும். அதான் நல்லதுன்னு சொல்லி ஒரு வழியா சமாளிச்சேன்.

அவ்ளோதான் பெயர்காரணம், புராணமெல்லாம். எல்லாரும் வரிசைல வந்து என்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டுப் போங்க. படிப்பு நல்லா வரும்:)

March 8, 2011

தோத்துப் போனப்புறம்

இங்கு சிறந்த முறையில் ப்ரோகிதம் நடத்திதரப்படும் (திருமணங்களுக்கு மட்டும்)

-கலைஞர்
அறிவாலயம்
***************

இங்கு குறைந்த விலையில், 365 நாட்களும் ஓய்வுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.

-செல்வி. ஜெயலலிதா
ஜெஜெ டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்
போயஸ் கார்டன், கொடநாடு, சிறுதாவூர்
(எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை)
***************

இங்கு சிறந்த முறையில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் பயிற்சி அளிக்கப்படும். இருபது வருட அனுபவம் ஆய்ந்த ஆசிரியரின் மேற்பார்வையில் வகுப்புகள் எடுக்கப்படும்

-டாக்டர் இராமதாசு
தைலாபுரம் தோட்டம்
****************

ஆசைப்பட்ட பொருள் கிடைக்காமல் கை நழுவிப் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற இங்கு வகுப்புகள் எடுக்கப்படும். அதோடு அண்ணனை சமாளிப்பது எப்படி என்ற கோர்சும் இலவசமாக கற்றுத்தரப்படும்.

இலவுக் காத்த கிளி ஸ்டாலின்
முன்னாள் மேயர், எதிர்கால முதலமைச்சர்
ஆயிரம் விளக்கு
*****************

மீசையில் மண் ஓட்டினால் மீசைக்கு பாதிப்பு வராமல் துடைப்பது, மடக்கி முறுக்கு மீசை வளர்ப்பது முதல் மீசைக்கென்றே தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி பட்டறை.

திருமாவளவன்
சிறுத்தைக்குட்டி பயிற்சி பட்டறை
கொழும்பு ஏர்போர்ட்
******************

இங்கு சுத்தமான, சுவையான கூட்டு வகைகள் சப்ளை செய்யப்படும்

கேப்டன் கேட்டரிங் சர்வீஸ்
******************

அமைதியான குளத்தில் குவா குவா எனக் கத்தியபடியே தவளைக்கல் எறிவது எப்படி, வாயாலேயே வடை சுடுவது எப்படி போன்ற பராம்பரியமிக்க விளையாட்டுகள் இங்கு பயிற்றுவிக்கப்படும்

-ஈ.வி.கேஸ் இளங்கோவன் & கோ
- யுவராஜா & கோ

பி.கு : மேற்குறிப்பிட்டுள்ள இரு கம்பேனிகளுக்கும் தலைவர் ஒருவர்தான். ஆனால் கம்பேனி வேற வேற.
***************

வெறிச்சோவென்றிருக்கும் ஆஃபிஸில், பயமில்லாமல் தைரியமாய் உட்கார்ந்து ஈ ஓட்டுவது எப்படி என்ற கலை இங்கு பயிற்றுவிக்கப்படும். பயிற்சிக்கு பணம் கட்டுபவர்களுக்கு கால் கிலோ விபூதியும், குங்குமமும் இனாமாக வழங்கப்படும்.

-கமலாலயம்
***************

எங்கள் கார்டனில் தோப்பைப் போல காட்சியளிக்கும் ஒத்தை மரம், ஒரு இலை கூட இல்லாத மரம், கண்ணீர் வடிக்கும் மரம், போன்ற அரிய வகை மரங்கள் விற்பனைக்கு

வைகோ
தாயகம்
***************

பிஸினசில் நன்றாக லாபம் பார்த்த பின்னர், குடைச்சல் கொடுத்து, பார்ட்னரே தங்களை வெளியே துரத்துவது எப்படி? தகுதிக்கு மீறி ஆசைப்படுவது எப்படி? போன்ற வாழ்க்கைக்கு உபயோகமான பயிற்சிகள் அளிக்கப்படும்.

-காங்கிரஸ் தலைமை
*****************

எல்லாவிதமான பக்கவாத்தியங்களும் இங்கு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படும். ஸ்ருதி சுத்தமாய் ஜால்ரா அடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும் வகுப்புகள்.

வீரமணி, சுப.வீ, தங்கபாலு
********************

March 2, 2011

துணுக்ஸ் 02-03-2011

பா.ராவின் உணவின் வரலாறு படித்து முடித்தேன். ரசம் முதல் ரம் வரை அவருக்கே உரித்தான நகைச்சுவை நடையோடு சுவைபட இருக்கிறது புத்தகம் (உணவின் வரலாறு சுவையாக இல்லாமல் போனால் தானே ஆச்சரியம்). அந்தப்புரத்தில் ராணி குடித்த ஒயினும், நவராத்திரியில் சுண்டலுடனான மாமியின் என்கவுண்ட்டர் எல்லாம் குபீர் சிரிப்பு ரகங்கள். நான் கூட உணவை ரசிப்பவளாக மாறிய கதையை இங்கு தொடராக பதியலாம் என்றிருக்கிறேன். இட்லியில் ஆரம்பித்து இட்டாலியன் வரை நான் ரசித்த உணவுகள், அனுபவங்கள், எப்போதாவது செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை பகிர்கிறேன்.
***************

ஸ்கூட்டி வந்ததிலிருந்து ஆட்டோக்கு அழும் காசு மிச்சமாகி வருவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு பெசண்ட் நகரிலிருந்து அண்ணா நகர் செல்ல மினிமம் ஆட்டோ சார்ஜ் 200 ரூபாய். அதிகபட்சமாய் (பீக் ஹவர் ட்ராஃபிக்/இரவு நேரங்களில்) 280 ரூபாய். இதே பஸ்ஸில் செல்ல அதிகபட்சமாய் 15 ரூபாய் டிக்கெட் சார்ஜூம், வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கான ஆட்டோ சார்ஜஸ் 60 அல்லது எழுபது ரூபாய் ஆகிவிடுகிறது. ஆனால் நான் பயணிக்கவிரும்பும் நேரத்திற்கு பஸ் கிடைப்பது பிரச்சனை. ஸ்கூட்டி வந்தபிறகு இரண்டுமுறை குழந்தையையும் அழைத்துக்கொண்டு போய்விட்டு வந்துவிட்டேன்:) வண்டி வந்ததிலிருந்து கீழே போடவோ, ஸ்க்ராட்ச் போடவோ, யாரிடமும் திட்டு வாங்கவோ இல்லை. அதிகபட்சமாய் 40 மேல் போவதில்லை. நீ பேசாம நடந்தே போய்டலாம்ன்னு ரங்ஸ் கிண்டலடிக்கிறார். Never Mind. வேகம் விவேகமல்ல:)
****************

பெட்ரோல் விலையேற்றம் ஒருபுறமிருந்தாலும், பெட்ரோல் பங்கில் நடக்கும் கொள்ளை அதிர்ச்சியைத் தருகிறது. 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால், நாற்பதில் ஒரு முறை நிறுத்தி எடுத்துவிடுகிறார்கள். நாம் வாய் திறக்கும் முன் அவர்களே, எவ்ளோ சொன்னீங்க எனக் கேட்டு மிச்சத்தை நிரப்புகிறார்கள். எனக்கு ஒரு முறை இதுபோல நடந்தது. இரண்டாவது தடவை 40ல் எடுத்துவிட்டு, “நூறு ரூபாய்க்கா மேடம் கேட்டீங்க” என்றார். பரவால்லீங்க. நாற்பது ரூபாய்க்கே போதும்.

இல்ல மேடம். நூறு ரூபாய்க்கே ஃபில் பண்ணிடறேன். இப்ப போட்டது சரியா விழுந்திருக்காது.

அதெப்படிங்க. அப்ப நூறு ரூபாய்க்குன்னு கேட்டா நீங்க 60 ரூபாய்க்குத்தான் ஃபில் பண்றிங்க?

ஐய்யயோ. அப்படி இல்ல மேடம். நீங்க சொன்னது நாப்பது ரூபான்னு கேட்டுது.

அதெப்படிங்க நூறுன்னு சொல்றது நாப்பதுன்னு கேக்கும்? இங்க்லீஷ்ல கூட ஹண்ட்ரட்க்கும் ஃபார்ட்டிக்கும் உச்சரிப்பில் வித்யாசம் இருக்குங்களே?

பதிலேதும் சொல்லாமல், மீண்டும் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டார்கள். இது மாதிரி மட்டுமில்லாமல், ஒருவர் பெட்ரோல் போடும்போது இன்னொரு சிப்பந்தி வந்து சைட் ஸ்டாண்ட் போடச் சொல்வது, கார் என்றால், கார்டா கேஷா என கவனத்தை திசை திருப்புவது என ஏகப்பட்ட திருட்டுத்தனங்கள் செய்கிறார்கள். இதுபற்றி கம்ப்ளையெண்ட் செய்யலாமென இருக்கிறேன்.
*************

திங்களன்று திருப்பதி சென்றிருந்தேன். தரிசனத்திற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தபோது ஒரு பெண் எல்லாரையும் இடித்து தள்ளிக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார். என் காலை வேற மிதித்துவிட்டு, ”குழந்தை கையில போட்டிருந்த மோதிரத்தைக் காணவில்லை. கால் பவுன் மோதிரம். பெருமாளே எப்படியாச்சும் கண்டுபிடிச்சுக் கொடுத்துடு (பெருமாளென்ன போலீஸ் ஸ்டேஷனா நடத்துறாரு?).” என சத்தம் போட்டு வேண்டிக்கொண்டார். மோதிரமும் கிடைத்துவிட்டது. அதுக்கப்புறம் அவர் சொன்னது “பெருமாளே. மோதிரத்த உன் உண்டியல்லயே சேர்த்திடறேன் சாமி”. ஹூம்ம்ம். திருப்பதி பெருமாள் ஏன் பணக்கார ஸ்வாமிங்கறது இப்ப தெரியுது.
***************

சமீபத்தில் தூரத்து உறவினர் (அப்படின்னு அவர் சொல்லிக்கிட்டார்) ஒருவரை கல்யாணத்தில் பார்த்தேன். அவருடனான உரையாடல்

ஹஸ்பண்ட் எங்க வேலை பார்க்கிறார்.

சாஃப்ட்வேர்ல.

எந்தக் கம்பெனி?

(கம்பெனி பெயரைச் சொன்னதும்) அப்படின்னு ஒரு கம்பெனி இருக்கா என்ன? எங்க ஏரியாவுல அந்த கம்பெனி பஸ்ஸ நான் பார்த்ததே இல்லையே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மாம்பலத்துல முட்டுசந்துல இருந்துகிட்டு இந்த ரிட்டையர்ட் பெருசுங்க பண்ற தொல்லை தாங்கலடா சாமி. போக்குவரத்து வசதி இல்லாத கம்பெனியெல்லாம் கம்பெனியே இல்லையாம். அதுவும் கண்டிப்பா MNCயா இருக்கவே முடியாதாம். ஒரு நாலஞ்சு கம்பெனி பேரத் தெரிஞ்சுவச்சுகிட்டு இவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே. அவர் புள்ளையாண்டான் குப்பைக் கொட்ற கம்பெனிக்கப்புறம் தான் மத்ததெல்லாம். அவர் புள்ள அப்பதான் காலேஜ் முடிச்சு ட்ரெய்னியா சேர்ந்திருக்கும். ஆனா இவர் குடுக்கிற பில்டப்ப கேட்டீங்கன்னா என்னமோ பில் கேட்ஸுக்கே இவர் புள்ளதான் க்ளாஸ் எடுத்த மாதிரி கதை சொல்வாரு. நாராயணா. இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா.
****************

நண்பேன்டா.. க்ளைமேக்ஸ் செம்மையா இருக்கு:)