சூடான, மிருதுவான, நெய் தடவிய ரொட்டிகள். நெய் வேண்டாமென்றால் சொல்லிவிடலாம். நான் சாதம் வேண்டாமென்று சொல்லிவிட்டு ரொட்டிகளை ரவுண்டுக் கட்டிக்கொண்டிருந்தேன். ஜிலேபி ஒக்கே. ரொம்ப சின்ன உணவகம் தான். அதிகபட்சம் 25 அல்லது 30 பேர் அமரலாம். சர்வீஸ் கொஞ்சம் ஸ்லோதான். ரெண்டே பேர்தான் சர்வ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பர்ஸிற்கு பங்கமில்லாமல், ஒரிஜினல் டேஸ்ட்டில், எண்ணைய் மிதக்காத க்ரேவிகளை சாப்பிட ஏற்ற இடம். சைனீஸ் ஐட்டம் எதையும் ட்ரை செய்யவில்லை. இந்த மாதிரி சின்ன உணவகங்களில் ஃப்ரைட் ரைஸ் நன்றாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கனும்.
மேலதிக தகவல்கள்
உணவகம் - போலேநாத்
உணவு - நார்த் இண்டியன், சாட், சைனீஸ் Veg
இடம் - திருவான்மியூர். மருந்தீஸ்வரர் கோவில் பின்புறம் போகும் ரோடில், சிங்கப்பூர் ஷாப்பி என்றொரு கடை இருக்கிறது. அதையொட்டி போகும் ரோட்டில் இரண்டாவது பில்டிங். மாடியில்.
டப்பு - ரொம்பக் கம்மி. தாலி மீல்ஸ் 95ரூபாய். கூடுதல் நிம்மதியாய் 8% வரியெல்லாம் கிடையாது:))
பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். மினிமம் டேஸ்ட் கேரண்டி
5 comments:
grrrrrrrr!
ஓகேய்ஸ். :)
நீங்க வழக்கமா படு காஸ்ட்லி ஹோட்டல் தான் introduce-செய்வீர்கள். இம்முறை சிக்கன விலையில் அறிமுகபடுத்தி உள்ளீர்கள். நன்றி
வேளச்சேரி 100 அடி ரோடில் புதிதாக ஆரம்பித்திருக்கும் ‘அமராவதி’க்கு சமீபத்தில் போயிருந்தேன். ஆந்திரா ஸ்பெஷல். சூப்பரும் இல்லை, சுமாரும் இல்லை. ஒரு தடவை ட்ரை பண்ணலாம். அவ்வளவே.
வடபழனி சிம்ரன்’ஸ் ஆப்பக்கடையும் 100 அடி ரோடில் திறந்திருக்கிறார்கள். அடுத்த மாதம் ப்ளான் இருக்கிறது :)
நன்றி பொற்கொடி.
நன்றி புதுகைத் தென்றல்.
நன்றி மோகன் குமார் (அவ்வ்வ். படு காஸ்ட்லியெல்லாம் எப்பவாவது தான். அதுவும் அடுத்தவங்க காசுல சாப்பிடும்போதுதான்:)).
நன்றி ரகு (அமராவது வேஸ்ட். ஆரம்பிச்சபோது இருந்த ஸ்டாண்டர்ட் இப்ப இல்ல. திருவான்மியூர் எல்பி ரோட்ல அபிருச்சின்னு ஒரு ஆந்திரா ரெஸ்டாரெண்ட் இருக்கு. அங்க ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரா இருக்கும்)
Post a Comment