February 13, 2012

ஜூனியர் அப்டேட்ஸ் 13-02-2012

ஜூனியருக்கு சமீபத்தில் பனீர் பக்கோடா செய்து கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு, “அம்மா நீ சூப்பரா செஞ்சிருக்கியே. யார் கத்துகொடுத்தா?”

ஃப்ளாஷ்பேக் : சிங்கம், புலி, மான் என எதையாவது வரைந்துக்கொண்டு வந்து காட்டுவான். நான் ”சூப்பரா வரைஞ்சு இருக்கியே. யார் சொல்லிக்கொடுத்தா?” எனப் பாராட்டுவேன்.

#ஙே!!!
***********

திங்கட்கிழமையிலிருந்து ஜூனியர் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஸ்கூலுக்கு போகவேண்டுமென ஒரு கவுண்ட் வைத்திருப்பார். தினமும் காலையில் அந்த கவுண்ட் குறைகிறதென்பதை உறுதி செய்துக்கொள்வார். வெள்ளியன்று கொஞ்சம் ஆஃப் மூடில், ஸ்கூலுக்கு வேண்டாம்ன்னு லைட்டா சிணுங்கினான். அவன் மூடை லிஃப்ட் செய்யும் விதமாக ”உனக்கு ஆஃப் டே தான் ஸ்கூல். அம்மாக்கு இன்னும் ஒன் டே ஆஃபிஸ் இருக்குடா” என்றேன் சோகமாக (இருகோடுகள் தத்துவத்தின் படி, அவன் சோகம் குறையுமென்ற நம்பிக்கையில்). அதற்கு சார்வாள் “அதான் டூ டேஸ் லீவு வரப்போகுதுல்ல. ஏன் அழற. அழாம ஆஃபிஸ் போகனும் சரியா?”

#தேவைதான் எனக்கு
**************

திருத்தணி முருகர் கோவிலில் அபிஷேக தரிசனம் செய்துகொண்டிருந்தோம். ஜூனியரின் கேள்விகள்:

”அந்த அங்கிள் பாலெல்லாம் கீழ கொட்றாரே. அவங்க அம்மா திட்டமாட்டாங்களா?”

அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்யறாங்க என்று கேட்டவனிடம் என் அம்மா சாமியக் குளிப்பாட்டறாங்கன்னு சொன்னாங்க. அதற்கு அவன் என்னிடம்

“உம்மாச்சி ப்ரவுன் சோப்பெல்லாம் போட்டு குளிக்காதா? (சிலையைப் பார்த்து) சோப் போட்டு குளிச்சாதான் டர்ட்டி எல்லாம் போகும். அப்பதான் வாசனை அடிக்கும். இல்லைன்னா ஸ்மெல்லடிக்கும்” என்றான். இடம் மறந்து எல்லோரும் சிரித்துவிட்டோம்.

”ஏன்ம்மா சும்மா சும்மா கதவ சாத்தறாங்க?” என்றான் திரை போடும்போதெல்லாம். கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “உம்மாச்சிக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்றாங்கல்ல அதான். கதவு சாத்தலைன்னா எல்லாம் ஷேம் ஷேம் சொல்லுவாங்க இல்ல. அதான் க்ளோஸ் பண்ணிட்டாங்க”.

”சும்மா சும்மா உம்மாச்சி குளிச்சிகிட்டே இருக்கானே. தண்ணிலயே இருந்தா சளி பிடிக்கும் தானே?”
*******************

ஜூனியருக்கு இருந்த வீசிங் பிரச்சனை 90% சதவிகிதம் குணமடைந்தாலும், குளிர்காலமென்பதால் சில பொருட்களின் மீதான் தடை தொடர்கிறது. அந்த லிஸ்டில் ஆரெஞ்சும் உண்டு. ஒரு முறை ஆரஞ்சு வேண்டுமென்று கேட்டபோது பழம் அழுகிவிட்டதாக அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. அடுத்த முறை உறவினர் ஆரஞ்சு வாங்கிவந்திருந்தார். இவன் கேட்டபோது, நாளைக்கு ஈவ்னிங் தர்றேன் என சொல்லியிருந்தேன். மறுநாள் குளித்துவிட்டு சாமியிடத்தில் ஸ்லோகம் சொல்லிமுடித்தவுடன் (அம்மா பழக்கிவிட்டது), “உம்மாச்சி சஞ்சு நல்லாருக்கனும். நல்லா படிக்கனும். ஹெல்த்தியா இருக்கனும். எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். ஆரஞ்சு வேஸ்ட்டா போகாம இருக்கனும்” என்றான். காஃபி புரையேற சிரித்துக்கொண்டிருந்தேன்.
********************

எனக்கு உடம்பு சரியில்லையென்பதால், ஒருநாள் ரங்ஸ் வேன் ஏத்திவிடப் போயிருந்தார். மதியம் நான் பிக்கப் செய்யப் போனபோது

“அம்மா, அப்பா என்னை இங்கதான் நிக்க சொன்னான்”

“அவன் இவன் சொல்லக்கூடாது. வாங்க போங்க தான் சொல்லனும். சரியா?”

“ம்ம்ம்ம். அப்பா என்னை இங்கதான் நிங்க சொன்னாங்க”

#ஙே!!!
********************

”அம்மா நீங்க க்ரே கலர் கார சூப்பரா ஓட்றீங்களே. பின்னாடி போகும்போது நேராதான் போகனும் சரியா? இப்பி இப்பி ஆட்டக்கூடாது சரியா? அங்க கிட்டபோய் திரும்பி, திரும்பி பின்னால வந்து, திரும்பி நேரா போகனும். அப்பதான் இடிக்காம இருக்கும். சரியா?”

#பார்க் பண்ணும்போது கேட்டில் இடித்ததிலிருந்து, தினமும் வண்டியெடுக்கும்போதெல்லாம் இந்த அட்வைஸ்:))

9 comments:

விஜி said...

:)) சூப்பரு :)

ஹுஸைனம்மா said...

அப்படியா, வேலைக்குப் போறீங்களா இப்ப?

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா... சூப்பருங்க...

Raghu said...

ஜூனியருக்கு இன்னைக்கு பிறந்தநாளா? Sanjay is 4 years old. congratulations!ன்னு மேல இருக்கற விட்ஜெட்டில் டிஸ்ப்ளே ஆகுது.

மீதி பத்து சதவீதமும் சரியாகி, நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

ரெண்டாவது அப்டேட்டுக்கான உங்க கமென்ட், முதல் அப்டேட்டுக்கும் பக்காவா சூட் ஆகுது :))

Porkodi (பொற்கொடி) said...

rofl. nalla thaan vekraru aapu junior!

Vidhya Chandrasekaran said...

நன்றி விஜி.

நன்றி ஹுஸைனம்மா. ஆமாம். பார்ட் டைம் வேலை. ஜூனியர் ஸ்கூலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள ரிட்டர்ன் வர மாதிரி:)

நன்றி சரவணகுமரன்.

நன்றி ரகு. இல்லைங்க. விட்ஜெட் வேல செய்யல போல. மே மாதம் தான் பிறந்தநாள்.

நன்றி பொற்கொடி.

CS. Mohan Kumar said...

பயல் கலக்குறான்; குறிப்பா சாமி குளிக்கும் போது அவன் கேட்ட கேள்விகள் ..

உங்களிடம் நான் கேட்க நினைத்ததை ஹுசைனம்மா கேட்டாங்க

//பார்ட் டைம் வேலை. ஜூனியர் ஸ்கூலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள ரிட்டர்ன் வர மாதிரி:)

இது மிக நல்லது ! பெண்களுக்கு இத்தகைய வேலை கிடைப்பது அரிது. நல்லது தொடருங்கள்

Bala said...

நல்லா இருக்குங்க. அதிலும் காரை பின்னாடி எடுக்கறதுக்கு சொன்ன அட்வைஸ்..... ஏ கிளாஸ்....

சுரேகா said...

மிகவும் ரசித்தேன்.. குட்டிப்பையனின் சேட்டைகள் தொடரட்டும்..!! :))