July 19, 2007

முரண்பாடுகள்....


நம் வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகள் உண்டு. நாம் அவற்றைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் சமுதாயத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுகள்??? சுமார் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் சமீபத்தில் என் மனதில் நிழலாடியது. அன்று மனமும் உடலும் மிகவும் சோர்ந்து போனது போல் ஒரு உணர்வு. கடற்கரை சென்றால் பரவாயில்லை என்று தோணியதால் கணவருடன் besant nagar சென்றிருந்தேன். கடற்கரையில் சிறிது நேரம் காற்று வாங்கிவிட்டு (விலை என்னன்னு கேக்காதீங்க pls) dinner முடிச்சுட்டு வரலாம்னு plan. நடைபாதையை ஒட்டியுள்ள மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது "அக்கா பூ வாங்கிக்கோக்கா. 3 முழம் பத்து ரூவா தான்க்கா" என்று ஒரு சிறுமியின் குரல் கேட்டது. வேண்டாம் என்று மறுத்தவளிடம் "அக்கா தயவு செஞ்சு வாங்கிக்கோக்கா. நோட்டு வாங்க உதவியா இருக்கும்" என்றாள். எவ்வளவோ மறுத்துப்பார்த்தும் அவள் நகர்வதாயில்லை. சரி போகட்டும் என்று வாங்கினேன். (ஆனால் நிஜமாகவே அந்தப்பணம் நோட்டு வாங்க தான் செலவாகப்போகுதா என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை). அந்தச் சிறுமி நகர்ந்ததும் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அம்மா, அப்பா, ஒரு சிறுமி இறங்கினார்கள். அந்த சிறுமிக்கும் பூக்காரச் சிறுமியின் வயதுதான் இருக்கும். இவள் அழுவதும் பெற்றோர் சமாதானம் செய்வதிலிருந்து, அவள் ஏதோ பொருளுக்கு ஆசைப்பட்டு அழுவது புரிந்தது. இருவருக்கும் உள்ள வேறுபாடுகள் என்னை யோசிக்க வைத்தன. இருவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும். ஒருத்தி அன்றாடம் ஜீவனம் நடத்த பூ விற்கிறாள். இன்னொருத்தியோ வசதி இருந்தும் இன்னும் வேண்டுமென அழுகிறாள். ஒரே வயதுடைய இருவருக்குள் ஏனிந்த ஏற்ற தாழ்வுகள்? ஒருத்திக்கு கிடைத்த வசதியும் வாய்ப்பும் இன்னொருத்திக்கு ஏன் கிடைக்கவில்லை? இதற்கு யார் காரணம்? வசதிகளை பெருக்கிக்கொள்ளத் தெரியாத பெற்றோர்களா? இல்லை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் எண்ணிக்கை 35%லிருந்து 34.5%யாக குறைந்துள்ளது என வெகட்கமேயில்லாமல் அறிக்கை விடும் அரசியல்வாதிகளா? இந்த ஏற்றத்தாழ்வை எப்படி சரி செய்வது? இந்த கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. வீடு திரும்பியபின் tv போட்டால் நாய்களுக்கான உணவு பற்றிய விளம்பரம் "We care for dogs" என்றது. எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

3 comments:

The Maverick Blog said...

Idharkku yaar karanam? Petrorum illai, ida odhukkedum illai...

"Vidhi"...

Vidhya Chandrasekaran said...

vidhi-nu solradhula enakku udanpadu illa..something needs to be done to uplift the poor society..

Arun Kumar said...

நல்ல பதிவு..
சில வேளைகளில் எனக்கும் இது போல தோன்றியது உண்டு..

ரயில் ப்ளாட்பாரத்தில் பேப்பர் விற்ற அப்துல் கலாம் என்பவர் உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டிற்க்கு ஜனாதிபதியாக ஆகி இன்று பல இந்திய சிறுவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார்..


சிலருக்கு போராடி பார்த்து அதில் வெற்றி அடையும் போது பூரண சந்தோசம்.. சிலருக்கு இந்த வேளைக்கு எப்படியோ வெற்றி அடைந்து ( அடுத்தவரை ஏமாற்றியோ) வாழ்க்கை முழுவதும் அப்படியே இருக்க ஆசை..

பணக்கார குழந்தைகளை விடுங்கள்..அவர்கள் பெற்றோரோ அல்லது அவர்களின் மூத்தவரோ என்றோ பிற்காலம் அறிந்து உழைத்னால் தான் அவர்களால் இன்று சொகுசாக இன்று வர முடிகிறது.. பணம் யாருக்கும் அத்துணை எளிதாக கிடைத்து விடுவதில்லை..

ப்ளாட்பார இந்த குழந்தைகளை சொல்லி குற்றம் இல்லை...குற்றம் எல்லாம் அவர்கள் பெற்றோரையே சாரும்..