July 27, 2007

Poor girlஉம் Production issueவும்:



Training periodla நல்லா லூட்டி அடிச்சுட்டு (இந்த training periodகுன்னு தனியா ஒரு பதிவே போடலாம்) projectல join பண்ண time. First 2 months there was literally no work. சும்மா document அடிக்கறது, class attend பண்றது தான்
வேலையே. ஹையா training மாதிரியே இங்கேயும் நல்லா ob அடிக்கலாம்னு happya இருந்தேன்.என் ஆசைல லோடு லோடா மண்ணு அடிக்கப்போறாங்கனு அப்ப தெரியாது.ஒரு வழியா சின்ன வேலையெல்லாம் நல்லா??!!! செய்ய ஆரம்பிச்சதுக்கப்புறம் production issues எப்படி solve பண்ணனும்னு train பண்ண ஆரம்பிச்சாங்க. இங்கதான் சனியன் சம்மணம் போட்டு உக்காந்து சடை பின்ன ஆரம்பிச்சுது. இந்த production issues இருக்கே அது super star மாதிரி. எப்ப வரும் எப்படி வரும்னே தெரியாது. ஆனா வரக்கூடாத நேரத்துல correcta வந்துடும்.வரக்கூடாத நேரம்னு எதை சொல்றேன்னு தெரிஞ்சுக்கோங்க.
1. Correcta tea குடிக்கப் போகும்போது. அதுவும் நல்ல தலவலியா இருக்கும். தொண்டை வறண்டு போயிருக்கும். அப்போ வந்து சேரும்.

2. எங்க teamla மத்த ரெண்டு பேரும் (இருக்கறதே 3 பேருதான்) lunchukku போயிருக்கும்போது வந்து தொலைக்கும். பசி வேற கண்ண கட்டும். சரி போனவங்க திரும்பி வந்துட்டாங்கலேன்னு அவங்களை பார்த்துக்க சொன்னா "Why dont u finsih it off. let it be single handed"னு தத்துவம் பேசுவாங்க. பசி மயக்கத்துல client பேசறது கிணத்துக்குள்ளருந்து கேக்குற மாதிரி இருக்கும். இதே நான் lunchக்கு போயிருக்க timeல issue வர்ற chances ரொம்ப கம்மி.

3. ரொம்ப கஷ்டப்பட்டு plan பண்ணி treatக்கு போலாம்னு கெளம்பும்போது சொய்ய்ய்ங்குன்னு வந்து குதிக்கும். சரி சீக்கிரமா முடிச்சுட்டு கிளம்பலாம்னா அன்னைக்குன்னு பார்த்து இதுவரைக்கும் வந்திராத issueவா இருக்கும். நமக்கு தெரிஞ்ச issue solve பண்றதுக்கே time ஆகும். இதுல புது issue வந்தா கேக்கவா வேணும்??? Treat குடுக்கறவன் இதான் சாக்குனு "Its getting late ya. What shall we do?"ன்னு bita போடுவான். அவனுக்கு ஒரு தலை குறைஞ்சா செலவு கம்மியாகுமேன்னு ஒரு ஆசை. கஷ்டப்பட்டு இல்லாத மூளையை போட்டு கசக்கி ஒரு வழியா solve பண்ணிட்டு கிளம்பறதுக்குள்ளே lunchuக்கு போறதா இருந்தது diinerக்கு shift ஆகியிருக்கும்.

4. Friday வந்தாலே குஷியா இருக்கும். Most of the time weekend வீட்டுக்கு ஓடிடுவேன். மாசத்துக்கு ஒரு weekend தான் சென்னைல இருக்கறது. நான் வீட்டுக்கு போகனும்னா central போய் sub-urbanல (unit trains) போகணும். OMR to Central, evening time எவ்ளோ நேரம் ஆகும்னு நிறைய பேருக்குத் தெரியும். சரி கொஞ்சம் சீக்கிரம் கிளம்பலாம்னு தப்பித் தவறி கூட நினைக்கக்கூடாது. Issue முன்னாடியே கிளம்பி Correcta நான் கிளம்பற நேரத்துல வந்து சேர்ந்துடும். PL என்னை பார்த்து சொல்வார் "I can understand. But this issue can solved by u better than any of us" அப்படின்னு (இப்ப சொல்லுங்க. Appraisalனு வரும்போது ஆப்பு வச்சுடுங்க). எல்லத்தையும் சரி பண்ணிட்டு நான் central போறதுக்குள்ள 3 unit joot விட்ருக்கும். பேய் மாதிரி நடுராத்திரில போய் இறங்க வேண்டியதாய் இருக்கும்.

இந்த மாதிரி பல நாள் நடந்திருக்கு. Production issueகூட solve பண்ணிடலாம். Issue solvedனு ஒரு mail அடிக்கனும் பாருங்க அது இன்னும் கொடுமை. பார்த்து பார்த்து எழுதனும் (School examla composition கூட இவ்வளவு carefula எழுதிருக்க மாட்டேன்). Maintenance projectla இது ஒரு பெரிய தலவலி. இப்ப யார் அந்த கொடுமைய அனுபவிக்கிறாங்கன்னு தெரியல.

P.S: யார் அந்த poor girlனு யோசிக்கிறவங்களுக்கு, அது நாந்தேன்:)

14 comments:

Srin K said...

Vidhya unakulla ivlo sogam irukum nu naan nenachu paakala... BTW, nala ezuthura... Really a good one... But nee production issue le kashta pata nu sona konjam hesitation oda sari nu sola vendi iruku... Inum neraya hrs PC munnadi Prod issues ku ukandu irunda ivvvlo feel panradula artham iruku.. Title ku pakathula dedicated to poor prod fellows nu potu irukalam..

Vidhya Chandrasekaran said...

Hey naanum neraya neram kashtapatrikken pa..u knw it..neways thanks for ur visit..

பாலா said...

ENNA KODUMAI SIR IDHU!!!!!!!!!!!!!!!11

Vidhya Chandrasekaran said...

Amam Bala rombave koduma paduthitanga..

Sudha said...

Kavalai padade.Neraiya irukkanka.Nane oruttanaka irunden.Anal nan vera accounting dep la.Nenka sollara emailum righttan.Ada carefula type pannanum.Ambiguous sa erukka kudadu.edila time vera maintain panna vendi varumbodu.Pichucum.
KCS

Vidhya Chandrasekaran said...

Sudhakar Badhikkapattavanga oru sangam arambikkalam:) thanks for ur visit.

butterfly Surya said...

நல்லாயிருக்கு.. நிறைய எழுதவும்..

வாழ்த்துக்கள்

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

butterfly Surya said...

வித்யா.. இதை படிங்க முதல்ல...

http://balavin.wordpress.com/2008/07/11/தற்காலிக-குடிப்பெயர்ச்சி

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு விஷயம் புரியல, ஆனா நீங்க எழுதிய விதம் ரொம்ப அருமையா இருந்துச்சி, நல்லா ரசித்து சிரித்து படித்தேன்.

Vidhya Chandrasekaran said...

நன்றி அமித்து அம்மா:)

Truth said...

neeengalum OMR goshti thaana? :-)

Vidhya Chandrasekaran said...

கோஷ்டில இப்போ இல்ல truth:)

Truth said...

ஓ! ஜூனியர பாத்துக்றதுக்கா? தெளிவான சிந்தனை. பாராட்டுக்கள்.

எனக்குத் தெரிஞ்ச ஒரு அப்பன் லண்டன்ல இருக்கான். அவனுடைய வைஃப் இந்தியால டெலிவரிக்காக வந்தாங்க. குழந்தை பிறந்த உடனே போலேனாக் கூட பரவால்லா. ஒரு மாசத்துலயாவது குழந்தைய பாக்க போகனும்ல? குழந்தைக்கு நாலு வயசு (மாசம் இல்லேங்க) ஆகும் போது போயிருக்கான் அந்த அப்பன். என்ன பண்ணலாம் அவனை? கேட்ட வேலைன்னு சொல்றான். உங்கள பாத்து கத்துக்கனும்.

Sundar சுந்தர் said...

:) நல்ல காமெடி தான்!