ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய பாடலுடன் தொடங்குகிறது படம் (அப்பவே உஷாரா ஆயிருக்கனும்). பூலோகத்தில் நாடக கம்பெனி நடத்தும் அழகப்பன், இந்திரன், எமதர்மன் என்று வடிவேலுக்கு மூன்று கெட்டப்புகள். வடிவேலுவின் அழகில்???!!! மயங்கி இந்திரலோகம் திரும்ப மறந்து, சாபத்தால் கற்சிலையாகி நிற்கும் ரம்பையின் கழுத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாலையிடுகிறார் அழகப்பன். மாலையிட்டவனையே மணாளனாகக் கருதி, அழகப்பனை இந்திரலோகத்திற்கு வரவழைக்கிறார் ரம்பை. பகலை பூலோகத்திலும், இரவை இந்திரலோகத்திலும் கழிக்கிறார் அழகப்பன். சொர்க்கம், நரகம் என்று tour அடிக்கும் அழகப்பன், ஒரு கட்டத்தில் எமன் செய்யும் அட்டகாசங்களுக்கு முடிவு கட்ட முயற்சிப்பதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் கதை.
அழகப்பனாக வடிவேலு நிறைவாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் செய்யும் அட்வைஸ்கள் ரொம்ப ஓவர். படத்தில் பிரசார நெடி தூக்கலாக இருக்கிறது. இந்திரன் கேரக்டர் கிச்சு கிச்சு மூட்டுகிறது. அதுவும் நாரதராக வரும் நாசரிடம் அவர் மாட்டிக்கொண்டு படும் பாடு காமெடி கலகல. "ஆண்களை கண்டாலே ஒவ்வாமை" என்று கூறும்போது தியேட்டரே அதிர்கிறது. எமதர்மன் வேஷம் வடிவேலிற்கு நன்றாக பொருந்தினாலும் ஓவர் ஆக்டிங்கை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். நாரதராக நாசர் perfect. ஒவ்வொரு sceneலும் சிக்ஸர் அடிக்கிறார். சுமித்ரா முதல் ஸ்ரேயா வரை படத்தில் வீணடிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். எல்லார் பத்தியும் சொல்லிட்டு ஹீரோயின் பத்தி சொல்லலனா ரசிகர்கள் சாபம் என்னை சும்மா விடாது. தீத்தா சர்மா அழகாயிருக்கிறார், நன்றாக ஆடுகிறார். வேறொன்ரும் சொல்வதற்கில்லை.
நானொரு தேவதை பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் தேறுவதுபோலில்லை. படத்திற்கு மிகப் பெரிய பலம் art direction தான். சொர்கத்தையும், நரகத்தையும் நம் கண் முன் நிறுத்த ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலவீனம் நீண்டுக்கொண்டே போகும் கிளைமேக்ஸ் தான். அதிலும் இந்திரனிடம் சாபம் பெற்ற பிறகு வரும் காட்சிகள் இழுவையோ இழுவை. படத்தை முடிக்க டைரகர் ரொம்பவே திணறியிருக்கிறார்.
முடிவாக படம் ஆஹா ஓஹோன்னு இல்லன்னாலும் ஒரு தடவை பார்க்கலாம்கிற மாதிரி இருக்கு.
1 comments:
சப்பை படம். நல்ல விமர்சனம்..
வாழ்த்துக்கள்
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
Post a Comment