September 20, 2008

அதிக அறிவால் வந்த வினை

நான் சின்ன வயசிலிருந்தே ரொம்ப அறிவாளின்னு எங்கம்மா சொல்லுவாங்க. (பத்து மாசக் குழந்தையா இருக்கும்போதே பேச ஆரம்பிச்சுட்டேனாம்). படிக்கும்போது ரெண்டு board exam-லயும் ஸ்கூல் ப்ர்ஸ்ட். காலேஜ்ல என்னைவிட பெரிய ஞான பழங்கள் நிறைய பேர் இருந்தாலும் ஏதோ சுமாரா வண்டி ஒடிக்கிட்டிருந்தது. சரி சரி என் அருமை பெருமையெல்லாம் வேறொரு பதிவுல வெச்சிக்கிறேன். இப்போ மேட்டர் என்னன்னா இப்படியெல்லாம் நாலு பேர் என்னை பாராட்ட வெச்ச அறிவால தான் நான் இப்போ ஒரு பேரிம்சையை அனுபவிச்சிட்டிருக்கேன். நாலு மாசத்துக்கு முன்னால பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன். டெஸ்ட் பண்ணி பார்த்த அவரு ஒரு பல்லு சொத்தை (ஒரு காலத்துல வண்டி வண்டியா தின்ன சாக்லெட்டுகளின் வேலை). Root canal பண்ணா போதும். ஆனா உங்களுக்கு நாலு அறிவுப் பல் இருக்கு (அறிவாளிகளுக்கு அறிவு பல் இருக்கறதுல பெரிய ஆச்சர்யம் இல்ல) அத எடுத்துடனும். பின்னால பிரச்சனை வரும்னு சொன்னார். ஆனா குழந்தைக்கு ஒரு வயசு ஆகாததால இரண்டு மாசம் கழிச்சு எடுத்துடலாம்னு சொன்னார். போன மாசம் நாலு பல்லையும் ஒரே நாள்ல புடுங்கிடலாம்னு வந்து அட்மிட் ஆயிடுங்கன்னு சொன்னார். நான் வேணாம் அது பாட்டுக்கு இருந்துட்டு போகுது. பிரச்சனை பண்ணும்போது பார்த்துக்கலாம்ன்னு பிடிவாதமா மறுத்துட்டேன்.

போன வாரம் தீடிர்ன்னு வலது பக்க கீழ் தாடையில் இருக்க எல்லா பல்லுமே வலிக்கற மாதிரி இருந்தது. எந்த பல்லுன்னும் சரியா தெரியல. காதும், கழுத்தும் சேர்ந்து வலிக்க ஆரம்பிச்சிடிச்சு. மறுநாள் டாக்டர்கிட்ட போய் x-ray எடுத்துப் பார்த்தா ஒரு அறிவுப் பல்லுல இன்பெக்ஷன் ஆகிருந்தது. வேற வழியே இல்லை பல்ல புடுங்கியே ஆகனும்னு சொல்லிட்டார். பல்லு புடுங்கினதுக்கப்புறமா ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லிட்டார். நானும் குஷியா மேட்டரை அம்மாகிட்ட சொல்லி கிளம்பி வர சொல்லிட்டேன். பல்ல புடுங்கிட்டு அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனும்னு பிளான் எல்லாம் பண்ணி வெச்சேன். மறுநாள் சாயந்திரம் போனா local anaesthesia கொடுத்து போராடி ஒருவழியா பதினஞ்சு நிமிஷத்துல கீழ் பல்ல புடுங்கிட்டார். திரும்பவும் injection போட வந்தார். எதுக்குன்னு கேட்டா மேல இருக்க அறிவுப் பல்லையும் கையோடு எடுத்துடலாம்னார். வேணாம்னு சொல்றதுக்குள்ள ஊசியைப் போட்டு மேல் பல்லையும் புடுங்கிட்டார் மனுசன். ஆனா இந்தப் பல்லு ஒரே நிமிஷத்துல வந்துடுச்சு.



ஒரு வாரத்துக்கு மருந்து எழுதிக்கொடுத்துட்டு அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் காதுல இடி மாதிரி கேட்டுச்சு. அவர் சொன்னது இதுதான். "ஒரு வாரத்துக்கு சூடாகவோ, காரமாகவோ, கடினமாகவோ எதையும் சாப்பிடக்கூடாது. நொறுங்க பிசைந்த தயிர் சாதம், காரமேயில்லாம ரசம் சாதம், நிறைய ஜுஸ், ஐஸ்கிரீம் சாப்பிடனும்". அம்மா வீட்டுக்கு போய் நல்லா ஒரு பிடி பிடிக்கலாம்ங்கற என் ஆசையில மண்ண வாரிப்போட்டுட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே அம்மா வீட்டுக்கு பொட்டிய கட்டினேன். ஹும். அந்த ஏழு நாட்களும் ஒரே அவஸ்தை. எனக்கும் என் பதினாறு மாதக் குழந்தைக்கும் ஒரே சாப்பாடு. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா குளிர்ச்சியா சாப்பிட்டு தொண்டை வேற கட்டிடுச்சு. ஒரு வழியா ஏழு நாள் கழிச்சு தையல் பிரிச்சதுக்கப்புறம் சாப்பிட்ட தேங்காய் சட்னியே எனக்கு தேவாம்ரிதமாய் இருந்தது. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு பாக்கி இருக்க ரெண்டு பல்லையும் புடுங்கனும். ஆக இந்தப்பதிவோட மெஸேஜ் என்னன்னா "அதிக அறிவும் ஆப்பு வைக்கும்".

7 comments:

Arun Kumar said...

:)
இப்படி தான் கண்டபடி சாக்லேட் சாப்பிடகூடாது.:)

பல்லை பிடுங்குவது தற்போது வெகுவாக குறைந்து விட்டது. ரூட் கேணல் சிகிச்சை வெகுவாக முன்னேறி விட்டது. 3 மாசத்துக்கு முன்னாடி எனக்கும் இதே நிலைமை தான். ஆனா ரூட் கேணல் செய்து இப்போதைக்கு எஸ்கேப்

Sanjai Gandhi said...

(பத்து மாசக் குழந்தையா இருக்கும்போதே பேச ஆரம்பிச்சுட்டேனாம்)//

எச்சுச் மீ.. பொறக்கும் போது அழறதை எல்லாம் பேசறதா நெனைக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லைன்னு அம்மா கிட்ட சொல்லிவைங்க.. :))

//படிக்கும்போது ரெண்டு board exam-லயும் ஸ்கூல் ப்ர்ஸ்ட். //
போர்ட்ல கூடவா எக்ஸாம் வைப்பங்க? :( புதுசா இருக்கே..

ஒரு வகுப்புல ஒரு போர்ட்தான இருக்கும்.. எப்படி 2 போர்ட்ல எழுதினிங்க.. என்னவோ போங்க.. :)))

Vidhya Chandrasekaran said...

@ சஞ்சய்
ஆஹா சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிட்டேன் போல இருக்கே.

goma said...

யாராவது டெண்டிஸ்ட் கிட்டே போறேன்னு சொன்னா போதும் அவங்களுக்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணுவேன்
பல்வலியோட கொடுமையை இப்படித்தான் சிரிச்சு தொலைச்சு சமாளிக்கணும்.

goma said...

இந்த ரூட் கெனால்,ஸ்டெம் கெனால்,பிரான்ச் கெனால் எல்லாம் இருக்கும் .அது வரை முப்பத்திரு பல் முனை வேல் காக்க வேண்டுமே.

goma said...

எச்சூச் மீ
பொடி வச்சு பேசறதாலே பொடியன் ஆனாரா,பொடியன்னு பேர் வச்சுட்டு பொடி வச்சு பேசுறாரா?
ஆனாலும் பொடி, நல்ல கார சாரமா இருந்துச்சுங்கோ

Rajez said...

ஆமாம் வித்யா மேடம். எனக்கு பல் வலி'னு டாக்டர பார்க்க போனேன். அவரு அது ஏதோ Wisdom tooth பிரச்சினைன்னு சொன்னாரு.எனக்கு வயசு 24'னு கேட்டுட்டு, 24 வயசுல 80% மக்களுக்கு இந்த Wisdom tooth வரும் தம்பி, உங்களுக்கு ரெண்டு பல்லு பிடுங்கணும்'னு சொல்லி Xray'லாம் எடுத்தாரு. எல்லாம் சரிதான். ஏதோ ரெண்டு ஊசிய பல்லு பக்கத்துல உள்ள சதையில போட்டுட்டு இப்ப வலிக்குதா இப்ப வலிக்குதான்னு கேட்டுட்டே ஒரு பத்து தடவை திரும்ப ஊசிய போட்டுருப்பாரு.அப்பறமா என்னோட வாய் உள்ளே ஒலிம்பிக்ஸ்'ல உள்ள எல்லா விளையாட்டையும் விளையாண்டருங்க.இதையெல்லாம் கூட பரவா இல்லை.என்னோட பல்லின் சதையிலேர்ந்து ரத்தம் கொடம் கொடமா ஊத்திடுருக்கும்போது டாக்டர் என்கிட்ட சொன்னாரு, 'வலிச்சா சொல்லுங்க சார்'னு". இறுதி சடங்கல்லாம் முடிச்சதுக்கப்பறம் அந்த பக்கமும் Wisdom tooth இருக்கா மாதிரி இருக்கு ஒன்னு ரெண்ட புடிங்கிடலாமானு கேட்டாரு. நானும் சும்மானாச்சுக்கும் ஏன் டாக்டர் ரெண்டு பல்லு புடிங்கினா ரெண்டு ப்ரீ'யா, அப்படினா ஓகே'ன்னேன். அதற்க்கு இல்ல தம்பி இப்போ அதனால ஒன்னும் பிரச்சினை இல்லை, இப்போ புடுங்க அவசியமில்லைன்னு சொல்லிட்டு உங்களுக்கு சொன்ன அதே அட்வைசெஸ்...