August 24, 2009

Cascade

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


முதல் முறை அலுவலக நண்பர்களுடன் பெசண்ட் நகரில் இருக்கும் கிளைக்கு சென்றேன். 12 பேர். இருவருடைய பர்த்டே ட்ரீட். சாப்பாடு, கிண்டல் கேலியென ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான், ரகு, தம்பி, அண்ணா நால்வரும் நுங்கம்பாக்கம் கிளைக்கு சென்றோம்.

சப்பை மூக்கர்கள் திண்பதில் ஜப்பானீஸ் தவிர்த்து, சைனீஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் உணவுகள் (Not sure about the authenticity) கிடைக்கின்றன. அசைவத்திற்க்கு இணையாக சைவமும் மெனுவில் இருப்பது கூடுதல் சிறப்பு. நால்வரில் இருவர் சைவம், இருவர் அசைவம். Hunai Soup என்ற சைனீஸ் பார்ஸ்லி பிளேவர்ட் வெஜிடபிள் சூப்,
ஸ்பைசி சிக்கன் சூப்போடு, ப்ரைட் வெஜ் வாங்டான்ஸ்,
பெப்பர் சிக்கன்,
வெஜ் மோமோஸ்,

சிக்கன் திம்சும்ஸ் என ஆரம்பித்தோம்.
சூப் மிகவும் அருமையாக இருந்தது. அளவும் அதிகம். துளியூண்டு பெப்பர் சிக்கன் சாப்பிட்டேன். சிம்ப்ளி சூப்பர்ப். திம்சும் சுட சுட அட்டகாசமான சுவை. வாங்டன்சுடன் பரிமாறப்பட்ட Schezwan Sauce ரொம்ப அருமையாக இருந்தது.

மெயின் கோர்ஸிர்க்கு Spicy Thai rice, Schezwan ஸ்பைசி சிக்கன் ப்ரைட் ரைசோடு, டோஃபு தாய் கறி ஆர்டர் செய்தோம். எல்லாமே சூப்பராய் இருந்தது.
டெசர்ட்ஸ்க்கு ப்ரைட் ஐஸ்க்ரீம் (the best in town), லிட்சி கூலர், டேட்ஸ் பான் கேக் ஆகியவை ஆர்டர் செய்தோம். ப்ரைட் ஐஸ்க்ரீம் மிகவும் நன்றாக இருந்தது. மற்ற இரண்டும் ஓகே ரகங்கள்.


இந்த உணவகத்தின் மிகப் பெரிய அட்வாண்டேஜாக நான் கருதுவது உணவின் அளவு மற்றும் சர்வீஸ் தான். ஒரு ப்ளேட் ரைஸை இருவர் தாரளமாக சாப்பிடலாம். அதே போல் நீட்டாக பரிமாறுகிறார்கள். Sea food அதிகளவில் இருக்கிறது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Cascade
இடம் - காக்கனி டவர்ஸ், நுங்கம்பாக்கம் (United colours of Benetton மாடியில்). பெசண்ட் நகர் மற்றும் அண்ணா நகரிலும் கிளைகள் உண்டு.
டப்பு - நால்வருக்கான கம்ப்ளீட் மீல் 1400 ரூபாய் (இரண்டு பேர் அசைவம்)

பரிந்துரை - தாரளமாக போகலாம். ரிசர்வ் செய்யும் வசதியில்லை. வாரயிறுதியில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி. மறக்காமல் ப்ரைட் ஐஸ்க்ரீமை ட்ரை பண்ணுங்கள்.

17 comments:

வண்ணத்துபூச்சியார் said...

அயிட்டம் ஒ.கே. டப்பு ஓஓஒவர்..

கார்க்கி said...

நல்லாவே இருங்க :))))

சின்ன அம்மிணி said...

//மறக்காமல் ப்ரைட் ஐஸ்க்ரீமை ட்ரை பண்ணுங்கள்//

இது மட்டும் போதும் எனக்கு. :)

R.Gopi said...

//பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.//

க‌ம்பெனி பொறுப்பேத்துக்க‌ணும்.... ந‌ல்ல‌ ப‌சி நேர‌த்துல‌ பாத்துட்டேன்...

//ஒரு ப்ளேட் ரைஸை இருவர் தாரளமாக சாப்பிடலாம். //

நீங்க‌ ஒருத்த‌ரே ரெண்டு ப்ளேட் சாப்பிட்ட‌தா ஒரு ச‌ப்பை மூக்கு காரர் சொன்னார்...

//நால்வருக்கான கம்ப்ளீட் மீல் 1400 ரூபாய் //

நெம்ப‌ சீப்தானுங்கோ....

//மறக்காமல் ப்ரைட் ஐஸ்க்ரீமை ட்ரை பண்ணுங்கள்.//

ப‌ண்ணுவோம்....

Truth said...

படங்கள் சூப்பர். மற்றவை இன்னும் படிக்கலை. :-)

Arun Kumar said...

நாலு பேருக்கு 1400 ரூபா அதுவும் இந்த நேரத்துல.

நம்மால முடியாதுப்பா

Cable Sankar said...

படம் பார்த்ததே.. வயிறு.. நிரம்பிவிட்டது. விதயா..

G3 said...

//ப்ரைட் ஐஸ்க்ரீம் (the best in town), //

I the agree !! Naan 2 yrs back first time anga dhaan saapten friend punniyathula [Fried icecreamkku recommendation + paisa payment avanga dhaanae pannaanga ;)]

G3 said...

Aanalum oru doubtu ;) Saapadu vandhadhum ungalukku saapidara aarvatha vida photo edukkara aarvam dhaan balama irukkum pola ;)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜொள் ஏற்படுத்தும் பதிவு..

அப்புறம் ஃபிரைடு ஐஸ்கிரீமா? என்னாங்கடா விளையாடுறாங்களா? எதைத்தான் ஃபிரை பண்றதுன்னு இல்லையா.? ஹிஹி..

வித்யா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வண்ணத்துபூச்சியார்
கார்க்கி
சின்ன அம்மிணி
கோபி
ட்ரூத்
அருண்குமார்
கேபிள் சங்கர்
G3 (எப்பவாவது கேமரா கொண்டு போகும் போது அமையுதுங்க)
ஆதி

" உழவன் " " Uzhavan " said...

எங்க இங்கெல்லாம் போய் கொட்டிக்க.. இப்ப பால் விலையும் ஏறிடுச்சி :-))
சாப்பாட்டு பிரியர்களுக்கு நல்ல தகவல்.

எம்.எம்.அப்துல்லா said...

//டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.

//

இந்த மாசம் முழுக்கவே பசி நேரம்தான். நோன்பு :)

இரா. செந்தில்குமரன் said...

கொடுமை பன்றதுக்கு ஒரு அளவில்லாமல் போய்விட்டது! வேறென்ன சொல்ல!

இரா. செந்தில்குமரன் said...

கொடுமை பன்றதுக்கு ஒரு அளவில்லாமல் போய்விட்டது! வேறென்ன சொல்ல!

இரும்புக்குதிரை said...

இப்பொ வெலைல இருகிங்கலா ? சொல்லவெ இல்லை. வெலை விட்டது மட்டும் தான் பலய பதிவுல இருக்கு.

வித்யா said...

நன்றி உழவன்.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி செந்தில்குமாரன்.
நன்றி இரும்புக்குதிரை. இது முன்னர் நடந்தது. இப்போதைக்கு நோ வொர்க்.