August 26, 2009

அஞ்சலையும் அஞ்சனாவும்

ரம்மியம், துள்ளல் என கலந்து கட்டி அடிக்கும் குரலுக்கு சொந்தக்காரர். எந்த கடவுளுக்கு நேந்துகிட்டு பாட ஆரம்பிச்சாரோ தெரியல. ஹிட்ஸ் மேல ஹிட்ஸா கொடுத்துகிட்டே இருக்கார். ஆங் பாடகர் யாருன்னு தலைப்பை வெச்சே கெஸ் பண்ணிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்போதான் அஞ்சலைய வச்சு ஆட வைச்சார். இப்போ அஞ்சனான்னு உருகிட்டிருக்கார். கார்த்திக். இப்போதிருக்கும் இளம் தலைமுறைப் பாடகர்களில் தி மோஸ்ட் வெர்சடைல். அழகானவரும் கூட;)

ரஹ்மானால அறிமுகப்படுத்தப்பட்டு ஹாரிஸ் ஜெயராஜ் மூலமாக லைம் லைட்டிலேயே இருப்பவர். சீசனுக்கு ஒரு ஹிட் கொடுத்திடறார். 2001ல் வெளிவந்த ஸ்டார் படத்தில் official ப்ளேபேக் சிங்கராக அறிமுகமானார். நேந்துகிட்டேன் பாடல் சூப்பர் ஹிட்.


பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான மின்னலே படத்தில் இரண்டு தீம் மியுசிக்கில் இவர் குரல் எட்டிப்பார்க்கும். "பூப் போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்"


2002ல் வெளிவந்த சூர மொக்கைப் படமான கண்களால் கைது செய் படத்தில் வரும் அனார்களி பாட்டு அட்டகாசம் (பாட்டுக்காகவே மாஸ் பங்க் செய்துவிட்டு படத்துக்குப் போய் நொந்து நூடுல்ஸ் ஆனது தனிக்கதை).


பின்னர் அழகியில் வரும் "ஒளியிலே தெரிவது தேவதையா" மூலம் பைத்தியம் பிடிக்க வைத்தார். நான் காலேஜ் படிக்கும்போது இவரோட பெஸ்ட் ஹிட்ஸ் நிறைய வந்தது. என் தோழி ஒருத்தி இவரின் கல்யாணத்தன்று நாள் முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பாபாவில் "சக்தி கொடு" மற்றும் "மாயா மாயா" பாடல்கள் இவருக்கு நல்ல தீனியாக அமைந்தன. லேசா லேசா படத்தில் வரும் "அவள் உலக அழகியே" என்ற பாட்டு என் ஆல் டைம் பேவரிட்.

வித்யாசாகர் இசையமைப்பில் ரன் படத்தில் "தேரடி வீதியில் தேவதை வந்தா", யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஏப்ரல் மாதத்தில் "சைட் அடிப்போம்" பாடல்கள் 2002ஆம் ஆண்டில் யூத்களின் தேசிய கீதமாய் இருந்தது.பாய்ஸ் படத்தின் மூலம் இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் கிடைத்தது. "எனக்கொரு கேர்ள் பிரண்ட்" தான் மாசிவ் ஹிட் என்றாலும் எனக்குப் பிடித்ததென்னவோ "எகிறி குதித்தேன்" பாடல் தான்.

இதற்க்குப் பிறகு கஜினியில் இவர் பாடிய "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டிற்கு பிலிம்பேஃர் விருது கிடைத்தது. உன்னாலே உன்னாலே "உன்னாலே உன்னாலே", வாரணம் ஆயிரம் "அஞ்சலை", அயனில் "விழி மூடி யோசித்தால்", லேட்டஸ்டாக ஆதவன் "ஹசிலி பிசிலி" என பாடுவதெல்லாம் ஹிட்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கஜினியில் "பேக்கா", யுவராஜில் "ஷனோ ஷனோ" ரெண்டும் சூப்பர் ஹிட். தெலுங்கில் ஹேப்பி டேஸ் படத்தில் வரும் "அரே ரே" அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.


இவர் குரலில் எனக்குப் பிடித்த முக்கியமான பாடல்கள் சில

யாவரும் நலம் - சின்னக் குயில் கூவும்.
யாரடி நீ மோகினி - ஒரு நாளைக்குள் எத்தனை கனவு
சிவப்பதிகாரம் - சித்திரையில் என்ன வரும்
உனக்கும் எனக்கும் - உன் பார்வையில் பைத்தியமானேன்
பொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்
மருதமலை - ஹே என் மாமா
மொழி - என் ஜன்னலில் தெரிவது
காக்க காக்க - ஒரு ஊரில் அழகாய்
சித்திரம் பேசுதடி - இடம் பொருள் பார்த்து
7G ரெயின்போ காலனி - கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
வெயில் - காதல் நெருப்பின் நடனம்
ஓரம் போ - இதென்ன மாயம்
பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன்
வெண்ணிலா கபடி குழு - லேசா பறக்குது மனசு
அ ஆ இ ஈ - நட்ட நடு ராத்திரியை
நாளை - ஒரு மாற்றம்

பாடுவதோடு மட்டுமில்லாமல் ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியுள்ளார். விஜய்யின் லேட்டஸ்ட் கோக் விளம்பரம் இவர் பாடி இசையமைத்தது.


கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மியூசில் ஆல்பத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் கார்த்திக்.

23 comments:

நர்சிம் said...

மிக அற்புதமான பதிவு.

எழுதிய விதமும் எடுத்தாண்ட பாடல்களும் அருமை.

Welcome back..என்பதை விட Well'come back.

நிறைய எழுதுங்கள்

டக்ளஸ்... said...

யக்கோவ்...
நீங்க சொன்ன எல்லா பாட்டும் நமக்கும் பிடிக்குக்கோவ்.

எம்.எம்.அப்துல்லா said...

பேர் வைக்காத ஒரு படத்திற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னால் கார்த்திக்ராஜா இசையில் கார்த்திக்,ஹரீஷ் ஆகியோரோடு இணைந்து நானும் ஒரு பாட்டு பாடினேன்.”ஒசாமா!ஒசாமா!” என துவங்கும் அதுதான் எனக்கு முதல் பாடல். ஆனால் அது டிராப் ஆயிருச்சு(ஊத்திக்கிச்சு). இளைய தலைமுறை பாடகர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் கார்த்திக்...கேரக்டரிலும்கூட.

//என் தோழி ஒருத்தி இவரின் கல்யாணத்தன்று நாள் முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். /

அப்படியெல்லாமா இருப்பாங்க??!!??!

R.Gopi said...

//கார்த்திக். இப்போதிருக்கும் இளம் தலைமுறைப் பாடகர்களில் தி மோஸ்ட் வெர்சடைல்.//

அட...ஆமாம்... "பாபா"வில் தலைவருக்கு கூட இரண்டு பாடல் பாடியிருக்கிறார்...

மாயா மாயா மாயா எல்லாம் மாயா

சக்தி கொடு... நம் நடை கண்டு அகங்காரம் தூளாக வேண்டும்...

//நேந்துகிட்டேன் பாடல் சூப்பர் ஹிட்.//

இது சூப்ப‌ர் பாட‌ல்... ர‌ஹ்மான் ட‌ச் இருக்கும்...

//சூர மொக்கைப் படமான கண்களால் கைது செய் படத்தில் //

இதுதான் சூப்ப‌ர் கொல‌வெறி தாக்குத‌ல்ங்க‌ற‌தா??

//பாட்டுக்காகவே மாஸ் பங்க் செய்துவிட்டு படத்துக்குப் போய் நொந்து நூடுல்ஸ் ஆனது //

அய்யோ பாவ‌ம்... துபாய்ல‌ ரிலீஸ் ஆக‌ல‌... அத‌னால‌ டிவிடில‌ பார்த்து செத்தோம்...

//வித்யாசாகர் இசையமைப்பில் ரன் படத்தில் "தேரடி வீதியில் தேவதை வந்தா",//

இதுவும் ந‌ல்ல‌ ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌மான‌ பாட்டு....

//கஜினியில் இவர் பாடிய "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டிற்கு பிலிம்பேஃர் விருது கிடைத்தது. உன்னாலே உன்னாலே "உன்னாலே உன்னாலே", வாரணம் ஆயிரம் "அஞ்சலை", அயனில் "விழி மூடி யோசித்தால்", லேட்டஸ்டாக ஆதவன் "ஹசிலி பிசிலி" என பாடுவதெல்லாம் ஹிட்.//

உண்மையோ உண்மை... ஆனாலும், ஏ.ஆர்.ர‌ஹ்மான் அவ‌ருக்கு ரஜினியின் "சிவாஜி" போன்ற‌தொரு பெரிய‌ ப‌ட‌த்தில் பாட‌ வாய்ப்ப‌ளிக்க‌வில்லை என்ப‌தில் என‌க்கு வ‌ருத்த‌ம்...

//கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மியூசில் ஆல்பத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் கார்த்திக். //

அதே அதே... வ‌ரும்... (ஆனா வ‌ராதுன்னு சொல்ல‌ மாட்டேன்...)

சின்ன அம்மிணி said...

கார்த்திக், பாம்பே ஜயஷ்ரி குரல்கள் நல்ல காம்பினேஷன்

வித்யா said...

நன்றி நர்சிம்.
நன்றி டக்ளஸ் தம்பி.
நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி கோபி.
நன்றி சின்ன அம்மிணி.

mayil said...

welcome back vidhya...:)

துபாய் ராஜா said...

உங்க பாட்டுப்பதிவு எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.

நல்லதொரு இனிய பதிவு.

பிரியமுடன்...வசந்த் said...

எங்க போயிட்டீங்க இத்தன நாளா?

ஹேப்பிடேஸ் பாட்டு தவிர எல்லாப்பாட்டும் கேட்ருக்கேன்..குட் செலக்‌ஷன்ஸ்......

வித்யா said...

நன்றி மயில்.
நன்றி துபாய் ராஜா.
நன்றி வசந்த்..

கார்க்கி said...

கார்த்தில் எனக்கும் ஃபேவரிட்.. பென்னி வருகைக்கு பின் ஏ.ஆர். ஆர் கார்த்திக் பாட வேண்டிய பாடல்களை அவருக்கு தந்து விடுகிறார்.. இருவரும் நல்ல பாடகர்கள்..

பாய்ஸீல் அவர் பாடிய எல்லா பாட்டும் சூப்பர்.. அதுவும் கேர்ள் ஃப்ரெண்டு..:)))

☀நான் ஆதவன்☀ said...

ஹேப்பி டேஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். தம்ன்னாவுக்காக அந்த படத்தை பார்த்தேன். ஆனா படத்தோட இளமையான திரைக்கதையும் அழகான பாடல்களும் அப்படியே கட்டி போட்டிடுச்சு

வித்யா said...

நன்றி கார்க்கி. அடுத்த தடவை பென்னியைப் பத்தி தான் எழுதனும்.

நன்றி ஆதவன்.

பின்னோக்கி said...

என்னுடய favourite ஒளியிலே தெரிவது தேவதயா ??

SK said...

ஒளியிலே தெரிவது நான் சப்ப் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கேன். :(

சில கேட்காத பாடல்கள் உள்ளன.கேட்கிறேன்.

வித்யா said...

நன்றி பின்னோக்கி.
நன்றி SK. அந்த பாட்டு சுமார் தான். ஆனா அவர் வாய்ஸ் சூப்பர்.

Arun Kumar said...

அருமையான பாடல்கள் , தொகுப்பிற்க்கும் பதிவிற்க்கும் நன்றி

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மை காட்..

இத்தனை பாட்டுல ஒண்ணு, ரெண்டு.. அதுவும் பாதி, பாதிதான் கேட்டிருக்கேன்..

இதைப் பத்தி பதிவு போடுற அளவுக்கு வித்யாவின் ரசனையை நினைத்து ஆச்சரியம்..

தலைமுறை இடைவெளி..!???

வித்யா said...

நன்றி அருண்.
நன்றி உண்மைத்தமிழன்.

வால்பையன் said...

நல்ல வாய்ஸ் கார்த்திக்குக்கு!

Myriad of details said...

Super post... Karthik is certainly the best male singer now...

One clarification though... "Oram Po" - "Idhu enna maayam" song is not sung by Karthik but by Shankar Mahadevan.

பின்னோக்கி said...

//ஓரம் போ - இதென்ன மாயம்

ஏங்க..இது சங்கர் மகாதேவன் தானே ? கார்த்திக் இல்லையே !!

Mohan Kumar said...

கார்த்திக் எனக்கும் ரொம்ப பிடித்த பாடகர். எனக்கு ரொம்ப பிடித்த, நான் அடிக்கடி கேட்பது: " ஒரு நாளைக்குள் எத்தனை கனவு "