November 1, 2010

தித்தி(க்கும்)த்த தீபாவளி

அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.

வயது ஏற ஏற பண்டிகைகளின் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. சிறுவயது நினைவுகளெல்லாம் பசுமையாய் கண்முன். வீட்டில் புதுத்துணி எடுப்பது வருடத்திற்கு மூன்று முறை தான். பெற்றோர் திருமண நாள், தீபாவளி, பிறந்த நாள். பொங்கலுக்கு வீட்டுப்பொண்ணுக்கு என பெரியம்மாவிடமிருந்து வந்துவிடும்:)

Atleast ஒரு மாதத்திற்கு முன்னமே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். டிரெஸ் எடுத்து தைக்க கொடுக்கனும். அம்மா என்ன பலகாரம் என்பதை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பைனலைஸ் பண்ணுவார். எல்லா தீபாவளிக்கும் ரவா லட்டு, தேங்காய் பர்பி, வெண்ணைய் முறுக்கு, தட்டை. மெஷினில் பலகாரத்திற்கு தேவையான மாவரைக்கும் போதே எச்சிலூற ஆரம்பித்துவிடும். அதுவும் ரவா லட்டு மாவை அப்படியே திங்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒரு நாள் முறுக்கு மற்றும் தட்டை, ஒரு நாள் ரவா லட்டு, ஒரு நாள் தேங்காய் பர்பி என பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.

ஒரு வாரத்துக்கு முன்னர் அப்பா கொஞ்சமாய் பட்டாசு வாங்கி தருவார். முன்னோட்டத்திற்கு. அதிலிருக்கும் கேப்பை மட்டுமே வெடிப்போம். மத்ததெல்லாம் தீபாவளியன்று கரியாக்க சேமித்துவைக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்து மூன்று தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தாத்தா இறந்துவிட்டார். பண்டிகை கிடையாது. "சே. தாத்தா ஒரு வாரம் கழிச்சு செத்துப்போயிருக்கக்கூடாதா?" என இழப்பின் வலிதெரியாத பருவத்தில் சலித்துக்கொண்டோம். வெடிக்காத வெடிகளிலிருந்து மருந்தினை பிரித்துக்கொட்டி, கரும்புச்சக்கை போட்டு எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஊர்பையனின் காலில் பலத்த தீக்காயம். இன்னும் அவன் காலின் கருகிய தோலைப் பார்க்கும்போது அந்த சம்பவமே நினைவுக்கு வரும்.

என் பொன்னான தீபாவளி தருணங்கள் வாலாஜாவில் இருக்கும்போது தான். சரியான செட். நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். குளிச்சுட்டு ஊதுபத்தியோடு வெளியே வந்தால் தொடர்ந்து நான்கைந்து மணிநேரங்கள் வெடி போட்டுக்கொண்டேயிருப்போம். அதுவும் எல்லாரையும் கலங்கடிக்கும் விதமாக. கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.

தீபாவளியன்று மட்டும் நானும் தம்பியும் ரொம்ப ராசியாகிவிடுவோம். அப்போதானே நமக்கு வேண்டியது கிடைக்கும். இன்றுவரை எனக்கு சரங்களில் நாட்டமில்லை. என்னோட ஆல் டைம் பேவரிட் லக்ஷ்மி வெடியும், குருவி வெடியும் தான். இரண்டு மூன்று லக்ஷ்மி வெடிகளை ஒன்றாக இணைத்து வெடிக்கும்போது ஆட்டம் பாம் தோற்கும். ஒரு முறை லக்ஷ்மி வெடியை கையில் பிடித்து தூக்கிப் போடும்போது அத்தை பார்த்துவிட்டார். "பொம்பள புள்ளையா இது" என நாள் முழுவதும் அர்ச்சனை (ரவுடி). இரவு நேரங்களில் ஆறேழு புஸ்வாணங்களை ஒரே நேரத்தில் கொளுத்தும்போது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாவாடையை (டெண்த் வரை என்னோட தீபாவளி ட்ரெஸ் எதாவது ஒரு பாவாடை. அப்புறம் தான் போனபோகிறதென மாடர்ன் டிரெஸ் வாங்கித்தந்தார்கள். பெரியம்மா ரெகமண்டேஷன்) லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா. வெடி வச்சிட்டு ஓடிவர வசதியாக இருக்கும்.

தீபாவளி கொண்டாட்டங்களில் எனக்கு பிடிக்காத விஷயம் அதிகாலை எழுந்து குளிப்பது, தீபாவளி மருந்து திம்பது. லீவு நாள் அதுவுமா 5 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அவ்வ்வ்வ்வ். எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். I hate it:(

தலை தீபாவளியின்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால் நோ பட்டாசு. ஒரு துணுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றைப் பிரட்டி வாந்தி வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு ஜூனியருக்கு ஆகாதென நோ வெடிச்சத்தம். போன தீபாவளி ஏதோ சுமாராய் வெடி வைத்து மிச்ச நேரம் அடுப்படியிலேயே கழிந்தது. இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் (அ) தீபாவளி நல்வாழ்த்துகள். Have a happy and safe diwali:)டிஸ்கி : மீள்பதிவு. வெளியூர் பயணங்கள், பண்டிகைகள், முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் சில வாரங்களுக்கு தொடர்ந்து பதிவுலகத்தில் இயங்க முடியாத நிலை (தீபாவளி போனஸ்??!?!). சில நாட்கள் கழித்து நிறைய பதிவுகளுடன் சந்திக்கிறேன். மீண்டுமொருமுறை அனைவருக்கும் மனமுவந்த தீபாவளி வாழ்த்துகள்.

18 comments:

Chitra said...

HAPPY DEEPAVALI!!!!

Gopi Ramamoorthy said...

இங்கே நேத்தே தீபாவளி ஆச்சு!

ஆனாலும் நீங்க பெரிய ரௌடியாத்தான் இருந்திருக்கீக!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

Me the first ! HAPPY DIWALI VIDHYA! HAVE A NICE TIME ! GOD BLESS YOU ! HAPPY DIWALI TO YOUR FAMILY TOO. TAKE CARE.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)//

ஒரு பத்தாயிரம் வாலாவ நடு ஹால்லயே வெடிங்க!! :))

Balaji saravana said...

ம். வெடிசத்தம் காதைப் பிளக்கட்டும்..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

HAPPY DEEPAVALI!!!!

அமுதா கிருஷ்ணா said...

HAPPY DEEPAVALI....

சந்திர வம்சம் said...

WISH YOU A VERY HAPPY DEEPAVALI

புதுகைத் தென்றல் said...

same blood. me also மீள் பதிவு :))

தீபத்திருநாள் வாழ்த்துக்கள் வித்யா

Thanglish Payan said...

Happy Diwali...

LK said...

தீபாவளி வாழ்த்துக்கள் வித்யா

//ஒரு பத்தாயிரம் வாலாவ நடு ஹால்லயே வெடிங்க!! :))//

உங்க வீட்டு நடு ஹால் ???

சே.குமார் said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

V.Radhakrishnan said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்

விஜி said...

ஆப்பி தீபாவளி :))

vinu said...

ungaloadaaa "vazin vali" ippothaan padichean simply nice.

மோகன் குமார் said...

ரொம்ப சரளமான நடை வித்யா. தீபாவளி என்றாலே இனிப்பும் வெடிகளும் தான். இரண்டையும் பற்றிய நினைவுகளை விரிவாய் ரசிக்கும் படி எழுதிட்டீங்க. உங்கள் கடைசி மூன்று பதிவுகளும் Dashboard-ல் இருந்தாலும் வாசிக்க வில்லை. இன்று தான் வாசித்தேன். உண்மையில் மூன்றுமே நன்று. கேபிள் சங்கர் சொன்ன மாதிரி நல்ல variety ஆக எழுதுறீங்க. Pl. continue when you have time, without your writing affecting your kid & family.

விக்னேஷ்வரி said...

வயது ஏற ஏற பண்டிகைகளின் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. //
என்ன இது, என்னவோ ஹால்ஃப் சென்சுரி அடிச்சிட்ட மாதிரி பில்டப்பு..

அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம். //
சின்ன வயசுலருந்தே ஒரு குட்டித் தீவிரவாதி ரேஞ்சுக்கு இருந்திருக்கீங்க. என்னா வில்லத்தனம்..

லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா //
அதெல்லாம் லவ்லி டைம்ஸ் ரியலி.

விக்னேஷ்வரி said...

எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். //
இப்போ அதே மாதிரி ஜூனியரைக் கதற வைக்கறீங்களா ஹிட்லர் மம்மி.

நல்லாப் போச்சா தீபாவளி..