அடிப்படை சுவைகளில் ஒன்றான இனிப்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஸ்வீட் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. பாயாசம் ஆரம்பித்து பை (pie) வரை எத்தனை வகை. எண்ணிலடங்கா சுவை. எனக்கும் ஒரு காலத்தில் ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். இப்போது ஸ்வீட் உண்பதைக் குறைத்துக்கொண்டேன். நான் உண்டவரை வித்யாசமான சுவைக் கொண்ட, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கிற, ஸ்பெஷாலிட்டி வகை ஸ்வீட்களைப் பற்றிய குறிப்புகளே இந்தப் பதிவு.
மக்கன் பேடா
குலோப் ஜாமூனின் ரிச் வெர்ஷன். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் பிரியாணிக்கப்புறம் ஃபேமஸான ஐட்டம். கொஞ்சமே கொஞ்சம் புளிப்போடு (மாவில் தயிர் சேர்க்கிறார்களாம்) ஜீராவில் ஊறியிருக்கும் பேடாவைக் கடித்துக்கொண்டே வரும்போது நடுவில் மாட்டும் முந்திரி மற்றும் பூசணி, வெள்ளரி விதைகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அம்மா பிரியாணிக் கடையில் குஷ்கா சாப்பிட்டுவிட்டு நேராக சேர்மன் ஸ்வீட்ஸ் போய் மக்கன் பேடா சாப்பிடுவது சொர்க்கம்:) நிறைய கடைகளில் விற்கப்பட்டாலும் சேர்மன் ஸ்வீட்ஸில் நன்றாக இருக்கும். ஷெல்ஃப் லைஃப் ரொம்பக் கம்மி. ஃப்ரிட்ஜில் வைத்தால் ரெண்டு நாட்கள் தாங்கும்.
புகைப்படம் நன்றி http://tastyappetite.blogspot.com/2010/08/makkan-peda-arcot-sweet.html
ட்ரை ஃப்ரூட் அல்வா
இதுவும் வேலூர் ஸ்பெஷல் தான். கோட்டைக்கு எதிரே இருந்த (இப்போதில்லையென நினைக்கிறேன்) ஆக்ரா ஸ்வீட்ஸில் கிடைக்கும் ஐட்டம் இது. ட்ரை ஃப்ரூட் அல்வா. மற்ற இடங்களில் கிடைக்கும் ட்ரை ஃப்ரூட் அல்வாக்கள் போல் இறுகியில்லாமல், வாயில் போட்டால் வழுக்கிக் கொண்டு போகும் சுவை. முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ், டூட்டி ஃப்ரூட்டி போன்றவையோடு கொஞ்சம் கேரட், கோவா சேர்த்து செய்யப்படும் அல்வா இது. என் அக்காவின் ஃபேவரைட்.
காஜூ டாஃபி
பாண்டிச்சேரியில் நேரு வீதியில் உள்ள லல்லு குல்ஃபி கடையில் கிடைக்கும் முந்திரி கேக். சாக்லேட் போன்று சிறு சிறு துண்டுகளாக பட்டர் பேப்பரில் சுற்றி வைத்திருப்பார்கள். கொஞ்சம் நொரநொரவென சர்க்கரையும் முந்திரியும் தனித்து தெரியும் வித்யாசமான இனிப்பு.
ஆக்ரா பேடா
காலேஜ் டூரிற்காக ஆக்ரா சென்றபோதுதான் முதன்முதலில் சுவைத்தேன். Fell in love with its taste:) பூசணியையும் சர்க்கரையும் கொண்டு செய்யப்படும் இனிப்பு. சென்னையில் கங்கோத்ரியிலும், பாண்டியில் மித்தாய் மந்திரிலும் மட்டுமே கிடைக்கிறது (எனக்குத் தெரிந்து).
மால்புவா
ராஜஸ்தான் ஸ்பெஷல் இனிப்பு இது. கிட்டத்தட்ட குலோப் ஜாமூன் டேஸ்ட் தானென்றாலும் தட்டையாக, அதிகம் ஜீராயில்லாமல் இருக்கும். சூடாக சாப்பிடும்போது தேவாம்ரிதமாக இருக்கும். சென்னையில் அண்ணா நகர் ஸ்ரீ ராஜஸ்தானி தாபாவில் கிடைக்கும்.
ரப்டி
பாஸந்தி, கீர், பால் பாயாசம் எல்லாவற்றையும் சேர்த்து உருவாக்கினது போலொரு சுவை. கெட்டியாக பிஸ்தா சீவி போட்ட ரப்டி டக்கராக இருக்கும். சென்னையில் வேளச்சேரி கெபாப் கோர்ட்டில் கிடைக்கிறது
காஜா
பட்டனுக்குத் தைக்கறதில்லீங்க. ஆந்திரா ஸ்பெஷல் ஸ்வீட். பாதுஷா மாதிரியே இருக்கும். ஆனால் உள்ளே ஸ்டஃப் செய்யப்பட்டிருக்கும் ஜீராதான் அல்டிமேட். அதோடு பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்கப்பட்டிருக்கும். என் அண்ணாவின் மாமனார் ஊரிலிருந்து (காக்கிநாடா) வரும்போதெல்லாம் வாங்கிவருவார். கண்டிப்பாக ஒன்றிரண்டாவது ரிசர்வ் பண்ணி வைப்பார் அண்ணா:)
புத்ரேக்கலு
முதன்முதலில் இந்த ஸ்வீட்டை நீட்டிக்கொண்டே பேர் சொன்னபோது ஏங்க ஸ்வீட் கொடுக்கும்போது திட்றீங்க என ஆஃபிஸ் கொலீக்கை கலாய்த்திருக்கிறோம். ஆனால் சுவை அற்புதமாக இருக்கும். இதை எப்படி இவ்வளவு பொறுமையாக செய்கிறார்கள் என்ற ஆச்சர்யம் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஏற்படும். அவ்வளவு மெல்லிய பேப்பர் போலிருக்கும் லேயர்கள் வாயில் போட்டவுடனே கரையும்.
யாழ்ப்பாணம் கொழுக்கட்டை
தமிழினி இனிப்பகம் என்ற கடைகளிக் கிடைக்கும். கேழ்வரகில் செய்யப்பட்ட மேல்மாவும், அதிகம் இனிப்பில்லாத தேங்காய் மற்றும் பயத்தம்பருப்பு பூரணமும் நல்ல காம்பினேஷன். அதுவும் இளஞ்சூட்டில் சாப்பிடும்போது அட்டகாசமாக இருக்கிறது. ஒரு பீஸ் எட்டு ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஆப்பிள் ரசகுல்லா
அடையார் ஆனந்த பவனில் கிடைக்கும் பெங்காலி வகை இனிப்பு. சொட்டச் சொட்ட ஜீராவுடன் அவ்வளவு சாஃப்டாக இருக்கும். ப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடும்போது சுவை இன்னும் இருமடங்காக இருக்கும்.
டிஸ்கி : இனிப்புகளை அளவாக உண்பது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்;))
November 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
அனைத்திலும் ரெண்டு ரெண்டு பார்சல்
மக்கன் பேடா தவிர எல்லாமே எனக்கு புதுசு :)))
காலையில இப்படி போஸ்ட் போடறது அநியாயம் :). நானும் ஒரு காலத்தில் ரொம்ப இனிப்பு சாப்பிட்டேன் . இப்ப இல்லை
ஆக்ரா பேடா இதை எங்க ஊரில் காசி அல்வான்னு சொல்வாங்க.
//ஆக்ரா பேடா இதை எங்க ஊரில் காசி அல்வான்னு சொல்வாங்க//
illai ithu vera.. its different dish
வெயிட் குறைக்கணும்னு ஆசைப்பட்ட தாபிக்கு எல்லாத்திலையும் ஒரு கிலோ பார்சல் :)
பார்க்க பார்க்க பசிக்குது...
I am on diet & hence skipped reading the article. Not my area :))
ஆஹா படிக்கும் போதே நாக்கு ஊறுதே.. ஸ்லர்ப்ப் ;)
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வித்யாஆஆஆஆஆஆஅ
சரி சரி எல்லாம் சாப்பிட்டு அழுத்த ஸ்வீட் தான் அதனால ஓக்கேய்..
எல்லாத்தையும் விட டாப் என்ன தெரியுமா? டெல்லியில் போன முறை போயிருந்த 10 நாளூம் கரோல்பாக்கில் தினம் காலையில் சாப்பிட்ட சுட சுட சுட குலோப் ஜாமூன், சாஃப்டா. ஸ்மூத்தா, வாயில போட்டா வயித்தில விழுந்தது..ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இவ்ளோ ஸ்வீட்டுகளை கண்ணுல காமிச்சு கெளப்பிவிட்டுட்டு டிஸ்கியா போடறீங்க..
ஒடனே ஓடறேன் ஸ்வீட்ஸ் கடைக்கு :-)))))))))
வாவ், இனிப்பா இருக்கு பதிவு. அதென்ன நக்கலு டிஸ்கில..
ஆக்ரா பேடா திருநெல்வேலியில் கிடைக்கும்.மால்புவா,காஜா சாப்பிடணுமே..
Ivlo perum pudhusu... athanaiyum sollitu kadasila nachunu kammiya sapda sollitingale:-(
நன்றி LK (கேட்கறதுதான் கேட்கறீங்க. கிலோ கணக்கிலயே கேளுங்க).
நன்றி கவிதா.
நன்றி தாரணி (காசி அல்வா வேறு) .
நன்றி சங்கர் (பக்கத்து இலைக்கு பாயசமா?).
நன்றி சங்கவி.
நன்றி மோகன் குமார் (எப்பவாச்சும் சாப்பிடலாம். தப்பில்லைங்க).
நன்றி பாலாஜி.
நன்றி விஜி.
நன்றி அமைதிச்சாரல்.
நன்றி விக்கி.
நன்றி அமுதா கிருஷ்ணா,
நன்றி gomy.
மேடம் புத்ரேக்கலு எங்க கிடைக்கும்னு சொல்லவே இல்ல
எனக்கு நன்றி சொல்லவே இல்லையே? ஓ நான் பின்னூட்டமே போடலையா?
அப்புறம், நான் எழுதின முதல் கதை லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி ஸ்பெஷல் புத்தகத்தில் வந்திருக்கிறது. சமயம் கிடைக்கும்போது படிங்கள். நன்றி.
அட நீங்க வேற இந்த போடோவேல்லாம் பாத்து நாக்குல எச்சி ஊறுதுங்க
இனிப்பான பதிவு.
சுவையான பதிவு.
எல்லாமே எனக்கு புதுசு.
'சுவை'யான பதிவு.
ஆக்ரா பேடா எங்க ஊர் திருநெல்வேலியில் ‘பூசணிக்கா பர்ஃபி’ன்னு ரொம்ப ஃபேமஸ். அல்வா அதை அமுக்கி விட்டதால் வெளியே அறியப் படலை போலும்:)! ரொம்பப் பிடிக்கும். சின்னதில் நிறைய சாப்பிடுவேன். இப்போ டயட்டு:))!
இனிப்பான பதிவு!
நன்றி balak (ஆந்திரா - காகிநாடாவில்).
நன்றி கோபி.
நன்றி மங்குனி அமைச்சர்.
நன்றி மாதேவி.
நன்றி சரவணக்குமார்.
நன்றி குமார்.
நன்றி ராமலக்ஷ்மி.
Post a Comment