March 22, 2011

Mainland China

ரொம்ப நாட்களாக சைனீஸ் உணவிற்கான கார்விங் இருந்தது. புது ரெஸ்டாரெண்டும் ட்ரை செய்து நாளாச்சே என மெயின்லாண்ட் சைனாவிற்கு நடையைக் கட்டினோம். ரெஸ்டாரெண்டைப் பத்தி டிவி மற்றும் பேப்பர் விளம்பரங்களின் மூலமே அறிந்திருந்ததால் உறவினர் ஒருவரை கூப்பிட்டு கேட்டதற்கு authentic chinese என்றால் மெயின்லாண்ட் சைனா தான் என துண்டைத் தாண்டாத குறையாக சத்தியம் செய்தார் (சைனாவில் வாழ்ந்திருக்காமல், சீன நண்பர்களைக் கொண்டிருக்காமல் அத்தெண்டிசிட்டியை எப்படி முடிவு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை:)).

கிறிஸ்துமஸ் அன்று சென்றோம். ரிசர்வேஷன் கட்டாயம் தேவை. 8 மணிக்கு சென்றபோது ரெஸ்டாரெண்ட் ஃபுல்லாக இருந்தது. Amazing ambience. நுழைந்தவுடனே மூன்று ஆளுயர சீன சிலைகள் வரவேற்கின்றன. சிகப்பு வண்ணத்தை அடிப்படையாக கொண்ட டெகரேஷன் நன்றாக இருந்தது. இதெல்லாம் மட்டும் ஒரு உணவகத்திற்குப் போதுமா? முக்கியமான மேட்டருக்குப் போவோம். ஜூனியருக்கு கொஞ்சம் காரத்தைக் குறைத்து சில்லி பொட்டேட்டோ ஃப்ரையும், எங்களுக்கு siu mai என்கிற திம்சும்மும், wonton clear soup ஆர்டர் செய்தோம். சூப் ஒக்கே. பொட்டேட்டோ ஃப்ரை கொடுமையாக இருந்தது. ஜூனியர் தொட்டக்கையால் தொடல. திம்சும்மும் ஆவரேஜ் தான். சூடாக இல்லாதது பெரிய குறையாக இருந்தது. உடன் பரிமாறப்பட்ட மஸ்டர்ட் சாஸ், இன்ன பிற சாஸ்கள் அட்டகாசம். இதற்கிடையில் கிறிஸ்துமஸ் செலிப்ரேஷனில் ஒரு பார்ட்டாக லக்கி ட்ராவில் எங்களுக்கு Honey glazed vegetables கொடுத்தார்கள். அட்டகாசமாக இருந்தது.





மெயின் கோர்ஸிற்கு Pan fried வெஜ் நூடுல்ஸோடு வெஜிடபிள் க்ரேவி ஆர்டர் செய்தோம். ரெண்டுமே ரொம்ப சுமாராகத்தான் இருந்தது. இதற்கு white pepper/cascade far better. ரங்ஸ் டெசர்ட் வேண்டாம் என ஒதுங்கிக் கொள்ள நான் தேங்காய் கொழுக்கட்டை மாதிரி ஒரு வஸ்துவை சாப்பிட்டேன். குறிப்பிட்டு சொல்லும்படியான சுவை இல்லை. இதுவும் ஒக்கே தான்.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Mainland China
உணவு - Chinese (Veg & Non-Veg)
இடம் - நாங்கள் சென்றது செனடாஃப் ரோடிலிருக்கும் கிளைக்கு. தாபா எக்ஸ்பிரஸிற்கு பக்கத்திலிருக்கும் டொயட்டோ ஷோரூமின் பின்புறம். ஸ்டெர்லிங் ரோடு அருணா ஹோட்டலிலும் ஒரு கிளை இருக்கிறது.
டப்பு - 1700+ taxes. அநி்யாயத்துக்கு காஸ்ட்லி.

பரிந்துரை - Too expensive. Food not worth for the price

14 comments:

CS. Mohan Kumar said...

விலையை கேட்டா மயக்கம் வருது. காப்பாற்றியதற்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

பார்க்க நல்லாயிருக்கும் போல..

சக்தி கல்வி மையம் said...

இவ்ளோ விலையில ஒரு உணவா?

'பரிவை' சே.குமார் said...

விலையை கேட்டா மயக்கம் வருது.........

துளசி கோபால் said...

ஒருமுறை அங்கே பகல் லஞ்சுக்குப் போனோம். பஃபே.

எனக்கென்னமோ எல்லாம் சுமாராத்தான் இருந்துச்சு. அணணன் மகளும் அவள் கணவரும் அப்படி ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டாங்க.

டிஸர்ட் செலக்ஷன் ரொம்பவே சுமார்.....

Vijay said...

பெங்களூர் Mainland China இரண்டு தடவை போயிருக்கேன். அங்கே சாப்பிட்டதை நினைத்தால் இன்னும் நாக்கில் எச்சில் ஊருகிறது.

Raghu said...

நாங்கள் டீமோடு டிசம்பர் 30 லஞ்சுக்கு சென்றோம். ப்ஃபே.

ஸ்டார்ட்டரிலேயே பலரும் திருப்தி அடைந்துவிட்டார்கள். மெய்ன் கோர்ஸ் நான் வெஜ்ஜில் மட்டும் ஓகே ரகம். வெஜ்ஜில் ஒன்று கூட ஹுஹும்..

ஆம்பியன்ஸையும், திம்சும்மையும் மட்டும் நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டோம்.

ஒய்ட் பெப்பர்...மீண்டும் பரிந்துரைக்கிறீர்கள். ஒரு நாள் போகணும்..

FYI - வேளச்சேரி - தரமணி 100 அடி ரோடில் இருந்த Wangs Kitchenஐ Wonton என்று மாற்றியிருக்கிறார்கள். வெறும் பெயர் மாற்றமா இல்லை ரெஸ்டாரண்ட்டே மாறியிருக்கிறதா என தெரியவில்லை. இதையும் ஒரு வாய் பார்க்கவேண்டும் :)

பவள சங்கரி said...

TOO MUCH ......VERY COSTLY VIDHYA. ANYWAY THANKS FOR SHARING.PHOTOS ARE SUPER.

Vidhya Chandrasekaran said...

நன்றி மோகன் குமார் (அதுக்கு ட்ரீட் கிடையாதா?).

நன்றி அமுதாக்கா.
நன்றி கருண்.
நன்றி குமார்.

நன்றி துளசி மேடம் (அதே. ரொம்ப சுமாரான உணவுதான்)

நன்றி விஜய் (ஒரு வேளை சென்னைல தான் இப்படியோ).

நன்றி ர‌கு (Wang's Kitchen Wonton என்ற பெயரில் இயங்குகிறது. பெயர் மட்டும் தான் மாறியிருக்கு. White pepper is a good choice for chinese. Dim sums are too good here).

நன்றி சங்கரி மேடம்.

Anonymous said...

சைனீசுன்னா, காரம், மசாலா எல்லாம் இல்லாமல் தான் இருக்கும். அதனால தான் அது சைனீஸ். அடிக்கடி சாப்பிட பிடிக்காது. ஆனால், சைனீசை சைனீசாகப் பார்த்தால் நல்லாத் தான் இருக்கும். நம்ம இந்தியர் இலங்கையர்களுக்கு அவ்வளவு பிடிக்காத காரணம் சப்பென்று இருக்கிறது என்பார்கள். அப்படி இருப்பதால் தான் அது சைனீஸ். காரம், மசாலா எல்லாம் இருந்தால் ஃப்யூஷன். But 1700is too much

RVS said...

//அமுதா கிருஷ்ணா said...

பார்க்க நல்லாயிருக்கும் போல..//
ரிப்பீட்... ;-))

vinthaimanithan said...

நண்டு ரத்தம், நட்டுவக்காளி பொரியல்லாம் கிடைக்குதுங்களா? :)))

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Ananth said...

Is that the spring roll in the photo?