March 2, 2011

துணுக்ஸ் 02-03-2011

பா.ராவின் உணவின் வரலாறு படித்து முடித்தேன். ரசம் முதல் ரம் வரை அவருக்கே உரித்தான நகைச்சுவை நடையோடு சுவைபட இருக்கிறது புத்தகம் (உணவின் வரலாறு சுவையாக இல்லாமல் போனால் தானே ஆச்சரியம்). அந்தப்புரத்தில் ராணி குடித்த ஒயினும், நவராத்திரியில் சுண்டலுடனான மாமியின் என்கவுண்ட்டர் எல்லாம் குபீர் சிரிப்பு ரகங்கள். நான் கூட உணவை ரசிப்பவளாக மாறிய கதையை இங்கு தொடராக பதியலாம் என்றிருக்கிறேன். இட்லியில் ஆரம்பித்து இட்டாலியன் வரை நான் ரசித்த உணவுகள், அனுபவங்கள், எப்போதாவது செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை பகிர்கிறேன்.
***************

ஸ்கூட்டி வந்ததிலிருந்து ஆட்டோக்கு அழும் காசு மிச்சமாகி வருவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு பெசண்ட் நகரிலிருந்து அண்ணா நகர் செல்ல மினிமம் ஆட்டோ சார்ஜ் 200 ரூபாய். அதிகபட்சமாய் (பீக் ஹவர் ட்ராஃபிக்/இரவு நேரங்களில்) 280 ரூபாய். இதே பஸ்ஸில் செல்ல அதிகபட்சமாய் 15 ரூபாய் டிக்கெட் சார்ஜூம், வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கான ஆட்டோ சார்ஜஸ் 60 அல்லது எழுபது ரூபாய் ஆகிவிடுகிறது. ஆனால் நான் பயணிக்கவிரும்பும் நேரத்திற்கு பஸ் கிடைப்பது பிரச்சனை. ஸ்கூட்டி வந்தபிறகு இரண்டுமுறை குழந்தையையும் அழைத்துக்கொண்டு போய்விட்டு வந்துவிட்டேன்:) வண்டி வந்ததிலிருந்து கீழே போடவோ, ஸ்க்ராட்ச் போடவோ, யாரிடமும் திட்டு வாங்கவோ இல்லை. அதிகபட்சமாய் 40 மேல் போவதில்லை. நீ பேசாம நடந்தே போய்டலாம்ன்னு ரங்ஸ் கிண்டலடிக்கிறார். Never Mind. வேகம் விவேகமல்ல:)
****************

பெட்ரோல் விலையேற்றம் ஒருபுறமிருந்தாலும், பெட்ரோல் பங்கில் நடக்கும் கொள்ளை அதிர்ச்சியைத் தருகிறது. 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னால், நாற்பதில் ஒரு முறை நிறுத்தி எடுத்துவிடுகிறார்கள். நாம் வாய் திறக்கும் முன் அவர்களே, எவ்ளோ சொன்னீங்க எனக் கேட்டு மிச்சத்தை நிரப்புகிறார்கள். எனக்கு ஒரு முறை இதுபோல நடந்தது. இரண்டாவது தடவை 40ல் எடுத்துவிட்டு, “நூறு ரூபாய்க்கா மேடம் கேட்டீங்க” என்றார். பரவால்லீங்க. நாற்பது ரூபாய்க்கே போதும்.

இல்ல மேடம். நூறு ரூபாய்க்கே ஃபில் பண்ணிடறேன். இப்ப போட்டது சரியா விழுந்திருக்காது.

அதெப்படிங்க. அப்ப நூறு ரூபாய்க்குன்னு கேட்டா நீங்க 60 ரூபாய்க்குத்தான் ஃபில் பண்றிங்க?

ஐய்யயோ. அப்படி இல்ல மேடம். நீங்க சொன்னது நாப்பது ரூபான்னு கேட்டுது.

அதெப்படிங்க நூறுன்னு சொல்றது நாப்பதுன்னு கேக்கும்? இங்க்லீஷ்ல கூட ஹண்ட்ரட்க்கும் ஃபார்ட்டிக்கும் உச்சரிப்பில் வித்யாசம் இருக்குங்களே?

பதிலேதும் சொல்லாமல், மீண்டும் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டார்கள். இது மாதிரி மட்டுமில்லாமல், ஒருவர் பெட்ரோல் போடும்போது இன்னொரு சிப்பந்தி வந்து சைட் ஸ்டாண்ட் போடச் சொல்வது, கார் என்றால், கார்டா கேஷா என கவனத்தை திசை திருப்புவது என ஏகப்பட்ட திருட்டுத்தனங்கள் செய்கிறார்கள். இதுபற்றி கம்ப்ளையெண்ட் செய்யலாமென இருக்கிறேன்.
*************

திங்களன்று திருப்பதி சென்றிருந்தேன். தரிசனத்திற்கு க்யூவில் நின்றுக்கொண்டிருந்தபோது ஒரு பெண் எல்லாரையும் இடித்து தள்ளிக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார். என் காலை வேற மிதித்துவிட்டு, ”குழந்தை கையில போட்டிருந்த மோதிரத்தைக் காணவில்லை. கால் பவுன் மோதிரம். பெருமாளே எப்படியாச்சும் கண்டுபிடிச்சுக் கொடுத்துடு (பெருமாளென்ன போலீஸ் ஸ்டேஷனா நடத்துறாரு?).” என சத்தம் போட்டு வேண்டிக்கொண்டார். மோதிரமும் கிடைத்துவிட்டது. அதுக்கப்புறம் அவர் சொன்னது “பெருமாளே. மோதிரத்த உன் உண்டியல்லயே சேர்த்திடறேன் சாமி”. ஹூம்ம்ம். திருப்பதி பெருமாள் ஏன் பணக்கார ஸ்வாமிங்கறது இப்ப தெரியுது.
***************

சமீபத்தில் தூரத்து உறவினர் (அப்படின்னு அவர் சொல்லிக்கிட்டார்) ஒருவரை கல்யாணத்தில் பார்த்தேன். அவருடனான உரையாடல்

ஹஸ்பண்ட் எங்க வேலை பார்க்கிறார்.

சாஃப்ட்வேர்ல.

எந்தக் கம்பெனி?

(கம்பெனி பெயரைச் சொன்னதும்) அப்படின்னு ஒரு கம்பெனி இருக்கா என்ன? எங்க ஏரியாவுல அந்த கம்பெனி பஸ்ஸ நான் பார்த்ததே இல்லையே.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். மாம்பலத்துல முட்டுசந்துல இருந்துகிட்டு இந்த ரிட்டையர்ட் பெருசுங்க பண்ற தொல்லை தாங்கலடா சாமி. போக்குவரத்து வசதி இல்லாத கம்பெனியெல்லாம் கம்பெனியே இல்லையாம். அதுவும் கண்டிப்பா MNCயா இருக்கவே முடியாதாம். ஒரு நாலஞ்சு கம்பெனி பேரத் தெரிஞ்சுவச்சுகிட்டு இவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே. அவர் புள்ளையாண்டான் குப்பைக் கொட்ற கம்பெனிக்கப்புறம் தான் மத்ததெல்லாம். அவர் புள்ள அப்பதான் காலேஜ் முடிச்சு ட்ரெய்னியா சேர்ந்திருக்கும். ஆனா இவர் குடுக்கிற பில்டப்ப கேட்டீங்கன்னா என்னமோ பில் கேட்ஸுக்கே இவர் புள்ளதான் க்ளாஸ் எடுத்த மாதிரி கதை சொல்வாரு. நாராயணா. இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா.
****************

நண்பேன்டா.. க்ளைமேக்ஸ் செம்மையா இருக்கு:)

29 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதன் முதலாக ....

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஹஸ்பண்ட் எங்க வேலை பார்க்கிறார்.

சாஃப்ட்வேர்ல.

எந்தக் கம்பெனி?

திருப்பூர் பனியன் கம்ப்பெனி...

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சுவராஸ்யமா இருக்கு. ஆனா எழுத்துக்கள் ரொம்ப நெருக்கமா இருக்கு. ஸ்பேஸ் வீட்டா தேவலை . கு க மாதிரி ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் போதிய இடைவெளி விடவும்.ஏதோ நான் யூத் என்பதால் ஈசியா படிச்சுட்டேன். 40 அண்ட் 40+ வந்தால் தடுமாறுவாங்க...ஹி ஹி

Chitra said...

ஆட்டோ ரேட்ஸ் - பெட்ரோல் வங்கி கொள்ளை - எல்லாம் வாசிக்கும் போது, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பது தெரியுது. இதையெல்லாம் யாரும் கண்டுக்கவே மாட்டாங்களா? என்ன கொடுமைங்க, இது?

சமுத்ரா said...

நல்ல பதிவு...நன்றி :)

கலாநேசன் said...

மின்சாரக் கனவு....

கலாநேசன் said...

மின்சாரக் கனவு....

சிங்கை நாதன்/SingaiNathan said...

:)))))))))))))))))))))))

அன்புடன்
சிங்கை நாதன்

சே.குமார் said...

thunukkus kalakkal...

மோகன் குமார் said...

பத்திரமா வண்டி ஓட்டுங்க ஹெல்மட் போட்டுக்கிட்டு. குட்டி பையன் காத்தடிச்சா தூங்கிட போறான். பார்த்து. ..

மெதுவா வண்டி ஓட்டுவதே நல்லது. நானும் பெரும்பாலும் அப்படி தான் ஓட்டுவேன். நம் மீது தப்பு இல்லாமல் மற்றவர்கள் rash driving-ஆல் பிரச்சனை எனினும் மெதுவாய் ஓட்டினால் பாதிப்பு குறைவாய் இருக்கும்

துளசி கோபால் said...

dதூள்:-))))))))))))))))

அன்னு said...

vithya sis..,

petrol vishayam enakku puriyalai...??
vilakka mudiyuma?

youtube video sema.... he hey... nanbenda... :)))

ஹுஸைனம்மா said...

//ரசித்த உணவுகள், அனுபவங்கள், எப்போதாவது செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை பகிர்கிறேன்//

அய்யய்யோ!!

KVR said...

//எப்போதாவது செய்முறை குறிப்புகள்//

இப்படி அவசியம் ரிஸ்க் எடுக்கணுமா? வர்ற ஒண்ணு ரெண்டு வாசகர்களும் வராம போய்டுவாங்க யுவர் ஆனர் :-))

//அப்படின்னு ஒரு கம்பெனி இருக்கா என்ன? எங்க ஏரியாவுல அந்த கம்பெனி பஸ்ஸ நான் பார்த்ததே இல்லையே.//

:-)))))

அமைதிச்சாரல் said...

கலக்கல் துணுக்ஸ்..

பெட்ரோல் திருட்டு :-((

அமுதா கிருஷ்ணா said...

செய்முறை குறிப்பிற்கு பதிவுலகமே காத்து கிடக்குது வித்யா..

ILA(@)இளா said...

இப்படியெல்லாமா திருடுறாங்க.. ரூம் போட்டு உக்காந்து, உட்காந்து யோசிக்கிறாங்கப்பா

♥ RomeO ♥ said...

\\“பெருமாளே. மோதிரத்த உன் உண்டியல்லயே சேர்த்திடறேன் சாமி”//

வெளங்கிடும் ...

nvnkmr said...

//அன்னு said...

vithya sis..,

petrol vishayam enakku puriyalai...??
vilakka mudiyuma?

youtube video sema.... he hey... nanbenda... :))) //

repeetuu:-)

nvnkmr said...

//அன்னு said...

vithya sis..,

petrol vishayam enakku puriyalai...??
vilakka mudiyuma?

youtube video sema.... he hey... nanbenda... :))) //

repeetuuuuuuuuuu:-))

DINESH said...

கலக்கல் துணுக்ஸ்......

RVS said...

பெருமாளுக்கு சகலமும் சமர்ப்பணம். ;-))))

வழிப்போக்கன் said...

மாம்பலத்துல முட்டுசந்துல இருந்துகிட்டு இந்த ரிட்டையர்ட் பெருசுங்க பண்ற தொல்லை தாங்கலடா சாமி.
அம்மா தாயே! இன்னும் சில பத்தாண்டுகளில் நீங்களும் ஒரு “ரிட்டையர்ட் பெருசு” ஆகிவிடுவீர்கள். அப்பொழுது உங்களையும் இந்தக் கொசுவர்க்கத்தில் சேர்க்கத்தான் போகிறார்கள்.

வித்யா said...

நன்றி செந்தில்குமார்.
நன்றி சித்ரா.
நன்றி சமுத்ரா.

நன்றி கலாநேசன் (புரியலைங்களே?)

நன்றி சிங்கை நாதன்.
நன்றி குமார்.
நன்றி மோகன் குமார்.

வித்யா said...

நன்றி துளசி கோபால்.

நன்றி அன்னு (நடுவில் நிறுத்தி எடுப்பதனால கரெக்டான அமவுண்டிற்கு பெட்ரோ நிரப்பபடுவதில்லை).

நன்றி ஹுஸைனம்மா (பயப்படாதீங்க. என் சொந்த ரெசிபி இல்ல).

நன்றி KVR (என் சொந்த ரெசிபி கிடையாதுங்க. நீங்க சொல்ற ரிஸ்க்க நான் எடுக்கவே மாட்டேன்).

நன்றி அமைதிச்சாரல்.

நன்றி அமுதா கிருஷ்ணா (அவ்வ்வ்வ்வ்வ். உள்குத்தாட்டம் தெரியுதே).

நன்றி இளா.
நன்றி ரோமியோ.
நன்றி nvnkmr.
நன்றி தினேஷ்.
நன்றி RVS.

நன்றி வழிப்போக்கன் (உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. இன்னும் முப்பது வருஷம் கழிச்சு கண்டிப்பா நான் இந்த மாதிரி அநாவசியமான கேள்விகள யார்ட்டையும் கேக்கமாட்டேன்)

ர‌கு said...

//ஒரு நாலஞ்சு கம்பெனி பேரத் தெரிஞ்சுவச்சுகிட்டு இவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே.//

உண்மை. ம‌ன‌ம் நோகும்ப‌டி சில‌ வார்த்தைக‌ளை பெரிய‌வ‌ர்க‌ளிட‌மிருந்து கேட்ட‌துண்டு. அவ‌ர்க‌ளுடைய‌ வார்த்தைக‌ளை த‌லையில் ஏற்றிக்கொள்ளாதீர்க‌ள். வீண் டென்ஷ‌ன்தான் மிஞ்சும்.

இதைப் ப‌ற்றி ஒரு ப‌திவெழுதி ட்ராஃப்ட்டில் வைத்திருக்கிறேன். ம்ம்..ப‌திவிட‌வேண்டும்.

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

தக்குடு said...

:))

விக்னேஷ்வரி said...

ரசித்த உணவுகள், அனுபவங்கள், எப்போதாவது செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை பகிர்கிறேன்.//
இந்த செய்முறை குறிப்பு மட்டும் வேண்டாமே... பாவம் மக்கள், பொழைச்சுப் போகட்டுமே..

வேகம் விவேகமல்ல//
கை நடுங்கிட்டே ஸ்லோவாப் போனா நீங்க விவேகியா... என்னா அரசியல்..

இதுபற்றி கம்ப்ளையெண்ட் செய்யலாமென இருக்கிறேன்.//
வர வர கேப்டன் படமெல்லாம் பாக்கறதில்ல போல.. இன்னும் என்னங்க கம்ப்ளெய்ண்ட்டெல்லாம். உங்க டைரக்ட் ஆக்‌ஷன்ல இறங்க வேண்டியது தானே..

ஹாஹாஹா... செம க்ளைமேக்ஸ். :))))))))))