பீச் வியூ. நிறைய அரட்டை. கொறிக்க லைட்டான உணவுகள். கேட்க நல்லாருக்குல்ல? அனுபவிக்கப் போக வேண்டிய இடம் பெசண்ட் நகர் பீச் ரோடில் இருக்கும் Mash. கஃபேவுமில்லாமல் ரெஸ்டாரெண்ட் கணக்கிலும் வராமல் ஒரு eat out. அதிகபட்சமாய் முப்பது பேர் அமர்ந்து உணவருந்தலாம். Sizzlers, burgers, sandwiches, crepes, hot dogs என முழுக்க முழுக்க காண்டினெண்டல் மெனு. ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான ஸ்டார்டர்ஸ். ஆப்ஷன்ஸ் குறைவாக இருந்தாலும், மெனு ரசனையாக இருக்கிறது.
மினர்ஸ்டோன் சூப், வெஜ் க்ராக்கெட்ஸ், Honey glazed potato cubes மூன்றுமே நன்றாக இருந்தது. கடைசியாக சொன்ன ஐட்டம் செம்ம க்ரிஸ்பி. ஆனால் மூன்றுக்கு மேல் திகட்ட ஆரம்பித்துவிடுகிறது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
Alfredo மற்றும் Arabitta சாஸ்களைக் கொண்டு செய்த பாஸ்தாக்கள் ரொம்ப நன்றாக இருந்தன. ஃப்ரெஷ்ஷான மிளகின் காரத்தோடு க்ரீமி அண்ட் யம்மி:)
டெசர்ட்டாக சாப்பிட்ட Choco mud pie ஆவரேஜ் தான்.
மேலதிக தகவல்கள்
உணவகம் : Mash
உணவு : Continental Veg/Non-Veg
இடம் : பெசண்ட் நகர் பீச்சின் எதிர்புறம் (போலீஸ் பூத்தைத் தாண்டி ஜாவா க்ரீன் காஃபி ஷாப் அருகில்).
டப்பு : 500 + taxes for 2
பரிந்துரை : அரட்டைக்கு நல்லதொரு hangout. சாப்பாடும் மோசமில்லை. முயற்சிக்கலாம்.
May 4, 2011
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அருமை, பகிர்விற்கு நன்றிகள் பல
கலோரிகள் கூடுமே என்ற கவலை இருந்தாலும்
rightu
போகணுமே..
நான் பெசன்ட் நகர் தான்.. ஸ்கூல் காலத்துலே விஷ்ராந்தி, ஹாட் சிப்ஸ், காலேஜ் காலத்துலே பீச் ரோட் முருகன் இட்லி, இவ்வளவு தான் அப்ப சாப்பாட்டுக்கு கவனிப்பு!!!! :-(
படங்கள் டக்கரா இருக்கு. சும்மா போஸ்ட் போட்டுட்டே இருந்தா சரியில்லை. கூட்டிட்டும் போகணும்.
படங்களை பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு.
இப்படி படத்த காண்பிச்சி உசுப்பேத்துறீங்களே
அடுத்த முறை போய் பார்த்துடவேண்டியது தான்
Nice :-))
Post a Comment