நீ அருகில் இல்லாதபோது
எல்லாவற்றிலும் நீயே தெரிகிறாய்
#வாசன் ஐ கேர் காதல்
***********
என் பெயர் சொல்லி யார் கூப்பிட்டாலும்
திரும்பி பார்ப்பதில்லை
நான் நீயானதிலிருந்து
# ENT காதல்
**********
வெற்றுத் தாள் கைகளில்..
காகிதத்தில் அடக்க முடியாக் காதல்..
# Illiterate காதல்
***********
ரொம்ப வெயிட் போட்டுட்ட
எனச் சொல்லும் டாக்டரிடம்
எப்படிச் சொல்ல
என் இதயத்தில் நீ இருப்பதை
# குண்டு க் கவிதை
****************
எடையும் தூரமும் பொருட்டல்ல உனக்கு
எப்பொழுதும் உன்னை நோக்கியே என் எண்ணமும் செயல்களும்
நியூட்டனின் ஈர்ப்பு விதியை பொய்யாக்குகிறாய்
#சயிண்டிஸ்டின் காதல்
***************
என்னைத் தருகிறேனென்றேன்.
கொஞ்சமே கொஞ்சமாய் கொடுத்தாய் புன்னகையை.
வட்டியும் முதலுமாய் நிறைய வாங்கிக் கொண்டிருக்கிறாய் என் காதலை
# மார்வாடிக் காதல்
பி.கு : இந்த வருடக் காதலர் தினத்திற்கு பஸ்ஸில் போட்ட மொக்கைகள்:)
October 19, 2011
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//இந்த வருடக் காதலர் தினத்திற்கு //
அடுத்த வருச காதலர் தினமே வரப்போவுது, இப்பத்தான் இது வெளிய வருது!! கடசீக் கவிதையை எழுதுன கையோட மார்வாடிக் கடைக்குப் போயிட்டீங்களோ? :-)))))
ஒவ்வொரு துறையினருக்கும் ஒவ்வொருவிதமான காதலா... கலக்கல்
கலக்கிட்டிங்க போங்க...
#இவைகளை தவிர்த்து பார்த்தால்
காதல் வரிகள் மிக அழகு தான் ...
Post a Comment