இரண்டு மெனு கார்டுகள். ஒன்று தென்னிந்திய உணவு வகைகளை பரிமாறும் க்ரிம்ஸன் சக்ரா. மற்றொன்று காண்டினெண்டல் வகைகளைப் பரிமாறும் கார்னுகோப்பியா. க்ரிம்ஸன் சக்ராவில் (பெரும்பாலும்)க்ரில் பேஸ்ட் உணவு வகைகளை பரிமாறுகிறார்கள். செட் மீல்ஸும் இருக்கிறது. நாங்கள் a-la-carte தேர்வு செய்துகொண்டோம். ஸ்டார்டருக்கு பனீர் வறுவல், தவா வெஜிடபிள்ஸ். பருப்பு சூப். மூன்றுமே நன்றாக இருந்தன. மெயின்கோர்ஸிற்கு காளான் ரொட்டி, பிந்தி மசாலா மற்றும் ஸ்மோக்ட் வெஜ் ரைஸ். பொதுவாகவே உணவகங்களில் சர்வ் செய்யப்படும் பராத்தா வகைகள் மிக திக்ககாக இருக்கும். ஆனால் இங்கு, காளான் ரொட்டி மெலிதாய், நல்ல சுவையோடு, மிருதுவாகவும் இருந்தது. காரசாரமான வெஜ் ரைஸ். அருமையான பிந்தி மசாலா. டெசர்ட்டிற்கு பஞ்சாமிர்தம் சொஃபல் மற்றும் கேரட் அல்வா ஆர்டர் செய்தோம். முதல் ஐட்டம் வித்யாசமாக நன்றாக இருந்தது. கேரட் அல்வா ஒக்கே ரகம் தான். கோவா நிறைய சேர்த்திருந்ததால் அவ்வளவாக கவரவில்லை.
மேலதிக தகவல்கள்
உணவகம் : க்ரிம்ஸன் சக்ரா
உணவு : தென்னிந்திய உணவுகள் வெஜ்/நான்வெஜ்
இடம் : காந்தி நகர், அடையார். அடையார் கிளப் அருகில்
டப்பு : 1800 இருவருக்கு. ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்.
பரிந்துரை : அருமையான சூழல். நல்ல சர்வீஸ். உணவின் ருசிக்காக கட்டாயம் போகலாம். ஆனால் விலை ரொம்ப அதிகமாக இருப்பது மைனஸ். Must try atleast once:)
6 comments:
என்னது ரெண்டு பேருக்கு 1,800 ரூபாவா? ஏழை சாஃப்ட்வேர் இஞ்சினியர் மனைவி ஒரு வேளைக்கு செய்யுற சாப்பாட்டு செலவா இது? :)))
பதிவை வெளியிடும் நேரமும் படங்களும் பிடிச்சது. பிடிக்காதது நீங்க சொன்ன விலை !! Too much !
//Must try atleast once:)//
ம்..ம்..ஹூம்
:))வெண்பூ கரீட்டு...
ahaa.. வித்யா வடை போச்சே. நான் எழுதணும்னு வச்சிருந்தேன். ம்ஹும்.. அங்க கொடுக்கிற பிரியாணி நல்ல டேஸ்ட்..
//1800 இருவருக்கு//
பதிவும் படங்களும் அழகு...
விலை நெஞ்சை அடைக்குது போங்க...
செட்டிநாட்டுப் பக்கம் வாங்க 50,60 ரூபாய்க்குள்ள அருமையான சாப்பாடு சாப்பிட்டு வரலாம்.
Post a Comment