August 7, 2008

சுப்ரமணியபுரம் - இரண்டு முறை பார்த்ததற்க்கான காரணம்

இந்த படத்தின் பாடல்கள் கேட்டதிலிருந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜாஸ்தியாகவே இருந்தது. டைரக்டர் ஏமாற்றாமல் தரமான படத்தை பார்த்த திருப்தியை ஏற்படுத்திவிட்டார். படம் எனக்கு பிடித்தற்கான காரணங்கள் இதோ.

1. First scene கஞ்சா கருப்பு வருவதிலிருந்தே படம் top gearல travel பண்ண ஆரம்பிக்குது. ஒரு சின்ன இடத்தில் கூட தொய்வு ஏற்படுத்தாத டைரக்டர் சசிகுமார்க்கு முதல் ஜே.

2. ஹீரோயின் selectionக்காக ரெண்டாவது ஜே. பேசும் கண்களும், கொள்ளை கொள்ளும் சிரிப்பும், chance இல்ல. ஜெய் கூட romance பண்ணும் போது பார்க்கும் கள்ளப்பார்வை இருக்கே absolutely no words to describe.

3. ஜேம்ஸ் வசந்தனை music directora தேர்வு செய்ததற்கு மூன்றாவது ஜே. Coffee with Anu programla music director choice பத்தி அவர் சொன்னது அட போட வைத்தது. "சிறு பொண்மனி" பாட்டு வரும்போதெல்லாம் தியெட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்குது. Nice choice.

4. படத்தில் வரும் எந்த கேரக்டரும் வேஸ்ட் என்று சொல்லவே முடியாதபடி அமைந்த screenplay. Lead characters முதல் பரமனின் அண்ணியாக நடித்தவர் வரை அத்தனை பேரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

5. இயல்பான வசனங்கள். மதுரை தமிழும், நகைச்சுவையும் நல்ல கூட்டணி. உதாரணத்திற்கு
கஞ்சா கருப்பு : "நம்ம பொழப்புக்கு இதெல்லாம் நல்லாவா இருக்கு?"
ஜெய் : "நமக்கு ஏதுடா பொழைப்பு??"
க கருப்பு : "இவைங்களுக்கு மத்தில வாழ்றதே பெரிய பொழப்பு தான்டா..."

6. Thrills and twists of second half. அதுவும் கடைசி 45 நிமிடங்கள் அதிர வைக்கும் சரவெடி.

ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த நல்ல படம். இன்னொரு தடவை பார்க்க chance கிடைக்குதான்னு பார்க்கலாம்.

1 comments:

butterfly Surya said...

நல்ல விமர்சனம்..

அனைவரும் பார்க்க வேண்டிய சில உலக சினிமாக்கள்

Pursuit of Happyness - உண்மை தழுவிய கதை. Hollywood'ன் success formula இது. Will Smith தயாரித்தது மற்றும் நடித்தது. நமக்கு பழகிய இந்திய மத்தியதர வாழ்க்கை. ஆனால் கதை நடப்பது San Francisco. அவ்வளவே தான் வித்தியாசம். Spider Man, Harry Potter எல்லாம் தமிழ் பேசினார்கள், நம் நாட்டில். இந்த படத்தை தமிழ் செய்து வெளியிட்டார்களா என தெரியவில்லை. செய்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு. சராசரி சினிமா ரசிகனுக்கு தெரிந்த Hollywood படங்களில் இருந்து இது பல காணி தூரம் தள்ளியே இருக்கிறது. பல தரப்பில் ரசிக்கபட்ட ஒரு படம் இது.

Babel - இது முதலில் Horror படமில்லை. ஆனால் பயமுறுத்துகிறது. சாதாரண வாழ்க்கையின் அசாதாரண பயங்கள் தான். பிரமாண்டமாய் யோசிக்காமல், எளிமையான script. ஆனால் நிகழ்வுகள் அழுத்தமானவை. தனி தனி கதைகளாய் சொல்லபட்டு வருபவற்றை, கொஞ்சம் கொஞ்சமாய் முடிச்சு போட்டு ஒரே கதை தான் என தெளிவாக்கபடும் ஒரு திரைப்படம்.

L.A. Confidential & The Departed - இரண்டுமே ஒரு வகையில் ஒரு மாதிரி. தங்களுக்குள் (police/gangster groups) தங்களுக்கு தெரியாமல் புகுத்தபட்ட விஷயத்தை கண்டுபிடிப்பது தான். குருதிபுனல், காக்கிசட்டை, போக்கிரி எல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. நல்ல பர பர திரைக்கதை. Dinner சாப்பிட்டுகொண்டே பார்க்க சரியான படங்கள்.

Bicycle Thief - இது ஒரு பழைய இத்தாலிய திரைப்படம். கடைசி நிமிஷ பன்ச் தான் திரைப்படம். . ஒரு சைக்கிளுக்கு அவ்வளவு மரியாதை அந்த காலத்தில் (1948).

Apocalypto - Mel Gibson'ன் The passion of the Christ. இது.. Mel Gibson'ன் இரண்டாவது இயக்க முயற்சி. அசாத்திய முயற்சி. Mayan நாகரீகம் தான் கதைக்களம் மற்றும் அந்த மக்கள் தான் கதையில் இருக்கிறார்கள். கொஞ்சமாய் பல தமிழ் பட கதைகளில் வரும் விஷயம் தான். அப்பாவி ஹீரோ, கடைசியில் வில்லனை ரவுண்ட் கட்டி அடிக்கும் மசாலா கதை. ஆனால் இதன் பிரமாண்டம் ஆச்சரியம். இங்கே பிரமாண்டம் graphics அல்லது set கிடையாது. நம் கண் முன் விரியும் Mayan மக்களின் வாழ்க்கை.

Walk the line - ஒரு biography வழி கதை. The beautiful mind, Pursuit of Happyness எல்லாம் இந்த வகையறா. இங்கே Johnny Cash என்பவரின் இசை வாழ்க்கை. பார்க்க பார்க்க எனக்கு முன் சிந்து பைரவி தான் ஓடியது. அச்சு அசல் அப்படியே எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இரண்டிருக்கும் பெரும்பாலும் நிறைய ஒற்றுமை. வாழ்ந்து, கெட்டு மறுபடியும் வாழ்ந்து விட்ட ஒரு இசைஞனின் வாழ்க்கை அழகாக நெய்யபட்ட படம். படத்தின் கதாநாயகி Reese Witherspoon கொள்ளை அழகு.

சூர்யா
சென்னை