நேற்று சாயந்திரம் மார்கெட் போயிருந்தேன். எல்லா காய்களுமே பயங்கர விலை. ஒரு கிலோ கேரட் 48 ரூபாய். விலையைவிட இன்னொரு பெரிய ஷாக் யாருமே கால் கிலோ போட மறுத்தது தான். மினிமம் அரை கிலோ தான் கொடுப்பார்களாம். வீட்டில் இருப்பது ரெண்டு பேர் தான். ஜுனியரை இன்னும் தனி டிக்கெட்டாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கூறு கட்டி வைத்திருக்கும் காய்களைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஓரு சின்ன எவர்சில்வர் தட்டில் அவர்கள் வைத்திருக்கும் காய்களில் பாதிக்கு மேல் அழுகல். தக்காளி கிலோ 32 ரூபாய். கால் கிலோ கேட்டதுக்கு முதலில் மறுத்த அவர் பின்னர் எண்ணி 5 பச்சை காய்களை நிறுத்தினார். நானே எடுத்துக்குறேன் என்ற போது வாங்கறது கால் கிலோ இதுல நீயே(ஒருமையில் தான் அழைத்தார்) எடுக்கனுமா. சரிதான் போ என்றார். எரிச்சலுடன் அங்கிருந்து நகர்ந்தேன். கறிவேப்பிலை கூட 2 ரூபாய்க்கு குறைஞ்சு கிடையாது. நேரே ஹெரிடேஜ் குரூப்பின் fresh @ ஸ்டோர்க்கு போய்விட்டேன். அங்கு வெறும் நூறு கிராம் கேரட் கூட எடை போட்டுக் கொடுத்தார்கள். விலையும் ரொம்ப ஜாஸ்தி இல்லை. 30 பைசா தான் அதிகம்.
மார்க்கெட்டில் மலிவாக இருக்கும் என்றுதான் அங்கு செல்கிறோம். ஆனால் நான் தருவதைத்தான் வாங்க வேண்டும் என்று அடாவடி பண்ணுவது எந்த விதத்தில் நியாயம். தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்து மின்சாரமும் இல்லாமல் குப்பையிலா கொட்டுவது. இப்படி கஸ்டமரை நடத்த வேண்டியது அப்புறம் ரிலையன்ஸ்காரன் வயிற்றில் அடிக்கிறான் என புலம்பி என்ன பிரயோஜனம். பூனைக்கு மணி கட்டப் போவது யார்?
October 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நீங்கள் சொல்வதும் சரி தான். எனக்கும் இதே நிலைமை தினமும் ஏற்படுகிறது. நானே தனியாள், ரோட்டில் காய்கறி வாங்கினால் ஏதோ முழு குடும்பத்துக்கும் காய்கறி வாங்குவது போல விலை சொல்கிறார்கள்.
reliance fresh, food world போன்ற இடங்களில் food coupon எடுத்து கொள்கிறார்கள். நாமே நல்ல காய்கறிகளை எடுத்து வாங்கி கொள்ளலாம் மேலும் விலையும் சரியாக இருக்கிறது
கூடவே ஜீனியர் போட்டோ எல்லாம் சூப்பர் . திருஷ்டி சுத்தி போடுங்க
காய் இல்லாம சமைக்க கத்துக்கணும் போல.
\\கூடவே ஜீனியர் போட்டோ எல்லாம் சூப்பர் . திருஷ்டி சுத்தி போடுங்க\\
செஞ்சுடறேன்:)
Post a Comment