ஜுனியர்க்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன். மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் சேலையூர் போகணும்.
டாக்டர் பீஸ் - 50 ரூபாய்
மருந்து செலவு - 27 ரூபாய்
ஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)???????????!!!!!!!!!!!!!!!
October 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நேற்று ஞாயிறு கிழமை சென்னைக்கு தீடீர் பயணம். திருச்சியில் இருந்து பல்லவன் விரைவு வண்டியில் மாம்பலத்தில் இறங்கி வேளசேரி போக வேண்டும். தி நகரில் இருந்து வேளச்சேரி போக நிறைய பேருந்துகள் இருக்கின்றன. ஆனால் கூடவே அப்பா அம்மாவும் வந்து இருந்தார்கள்.
ரங்கநாதன் தெருவை ஞாயிற்றுகிழமைகளில் கடப்பதற்க்கு பதிலாக லோக்கல் அம்மன் கோவிலில் தீ மிதிக்கலாம் :)
வெஸ்ட் மாம்பலம் பக்கம் ப்ளாப்ட்பார்ம் கடந்து இறங்கி வேளசேரிக்கு ஆட்டோவில் போகலாம் என்று ஆட்டோ வாடகை விசாரித்தால் சொல்லி வைத்தது போல அனைவரும் 250 ரூபா கொடுங்க சார் என்று கூச்சபடாமல் கேட்டார்கள். வேற வழி.. கடைசியில் 200 ருபாய்க்கு பேரம் பேசி போய் சேர்ந்தோம்
என் பெற்றோரை விட்டு விட்டு நான் தனியே கோயம்பேடு வர செலவாகியதோ 6 ரூபாய் மட்டும் :)
சென்னையில் ஆட்டோவில் போவதும் பென்ஸ் கார் வைத்து இருப்பதும் ஒன்று தான் :)
மிகவும் மோசமான கொடுமைதான். அதுவும் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மீட்டருக்கு மேல யாரும் கேட்பதில்லை.. {மீட்டர் போட்டதானே..??}
எந்த தொழிலும் வேலையும் பார்க்க துப்பில்லாதவன் மட்டுமே சென்னையில் ஆட்டோ ஒட்டுபவர்கள். எந்த தகுதியும் தேவையில்லை. நிறைய பேரிடம் லைசென் கூட கிடயாது.
பெருமபாலன் ஆட்டோக்கள் காவல் அதிகாரிகளுக்கு சொந்தமானது என்று ஒரு தகவல். அதுவும் குறிப்பாக புற நகரில் நலல வசூல். சில மாதங்களாக புற நகர்களில் Private என்று போட்டு கொண்டு கலர் கலராய் ஆட்டோகள் ஒடுகின்றன். ஷேர் ஆட்டோ இந்த பகுதியில் வராதிருக்க மாமுல் கரை புரளுகிறது..
ராயப்பேட்டையில் இருக்கும் ஒரு மார்வாடிக்கு மட்டும் சென்னையில் 600 ஆட்டோகள் சொந்தம். பல மார்வாடிகளுக்கு பிரதான பிஸினஸ் இது தான்... அதனால் பெரும்பாலானவர்கள் தினசரி 300 -400ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து ஒட்டுவதாக ஒட்டுநர்கள் தெரிவிக்கிறார்கள். இது ஒரு கூட்டு கொள்ளையே...
@ Surya
எல்லா ஆட்டோகாரர்களையும் அப்படி சொல்ல முடியாது. சில பேர் நியாயமாகவும் நடக்கிறார்கள். மீட்டர் உபயோகத்தை கடுமையாக்கினால் தான் விடிவுகாலம்.
வித்யா.. பெரும்பாலானவர்களை இப்படிதான். ஒரு சில நல்லவர்கள் இருக்கிறார்கள். எங்கே போய் தேடுவது.. சென்னையில் மட்டுமல்ல திருச்சியிலும் இதே கொடுமைதான். திருச்சியிலிருந்து திருவரங்கம் செல்ல போன வாரம் 100 ரூபாய் கொடுத்தேன். மீட்டர் உபயோகத்தை கடுமையாக்கினால் தான் விடிவுகாலம்.
சரிதான்.. "Who will bell the cat" ?? I don't think that will happen..??
சூர்யா
சென்னை
டாக்டர் பீஸ் - 50 ரூபாய்
மருந்து செலவு - 27 ரூபாய்
ஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)???????????!!!!!!!!!!!!!!!
டாக்டர் பீசும்,மருந்து செலவும் இவ்ளோ கம்மியா?
சத்தியமா அவ்ளோதான்(அதனாலதான் ஆட்டோ கொள்ளையாகப்பட்டது). ஜுரத்திர்க்கு மருந்து எழுதிக் கொடுத்துட்டு temperature பார்த்தார்.(ஆனா அதே டாக்டரை நர்ஸிங் ஹோமில் போய் பார்த்தால் 150 ரூபாய் கேட்பார்கள் ரிசப்ஷனில்.)
//surya said...
வித்யா.. பெரும்பாலானவர்களை இப்படிதான். ஒரு சில நல்லவர்கள் இருக்கிறார்கள். எங்கே போய் தேடுவது.. சென்னையில் மட்டுமல்ல திருச்சியிலும் இதே கொடுமைதான். திருச்சியிலிருந்து திருவரங்கம் செல்ல போன வாரம் 100 ரூபாய் கொடுத்தேன். மீட்டர் உபயோகத்தை கடுமையாக்கினால் தான் விடிவுகாலம்.
சரிதான்.. "Who will bell the cat" ?? I don't think that will happen..??
சூர்யா
சென்னை//
சூர்யா திருச்சி ஜஙசனில் இருந்து திருவரங்கம் செல்ல நிமிடத்துக்கு ஒரு முறை பேருந்து இருக்கிறது. கூடவே ஏஸி பஸ் வோல்வோ பஸ் என பல விதமான சேவைகள்.
மக்கள் பொது பெருந்து சேவையை உபயோகிக்க வேண்டும்.
ஊருக்கு புதுசு என்று உங்களிடம் 100 ரூபா கறந்தார்கள் என்று கவலைபடவேண்டாம்.திருச்சி காரனான என்னிடமே 200 ரூபா எல்லாம் கறந்து இருக்கிறார்கள்.
உபயம் - ஏதாவது கட்சி மகாநாடு இல்லை பொது கூட்டம் என்றால் திருச்சியில் தான் நடக்கும். அப்போ தெரியும் பொதுமக்கள் வேதனை. :(
ஆட்டோ மே(மீ)ட்டர் அனுபவம் எல்லாருக்கும் இருக்கும்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் டிராஃபிக்கில் அவர்கள் செலவழிக்கும் பெட்ரோலுக்கு இந்தப் பணம் சரியாகப் போய்விடும்.
ஆட்டோ காரங்க கொடும தாங்க முடியாது. அதிலையும் ஸ்டாண்ட் ஆடோனு சொல்லி ஒரு இடத்தில ஸ்டாண்ட் போட்டு, வேற ஆட்டோவையும் ஆள் ஏற்ற விடமாட்டங்க. ஒரு தடவ என் பெற்றோர் ஆபீஸ் கு வந்திருந்தாங்க, ஆபீஸ் பக்கத்தில ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு, அதில கேட்ட ௩க்ம் தூரம் போறதுக்கு 80 ரூபா கேக்ரங்க, வேற ஆடோவையும் நிறுத்த வுட மட்டாங்கே. வேற வழியில்லாம மனுசுக்குள்ள அசிங்கமா திட்டிட்டு கொடுக்க வேண்டியது தான்.
Post a Comment