October 29, 2008

ஐஸ் பாய்

போன பதிவோடத் தொடர்ச்சி தான் இதுவும். ஆனா இந்த தடவ வேற ஒரு ஆட்டம். ஆட்டத்துக்கு பேரு ஐஸ் பாய் (அதென்ன பாய்?? வெரி பேட்). இத ஐஸ் பார்ன்னும் (அந்த பார் இல்ல) சொல்லுவாங்க. இந்த விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அண்ணன்(பெரியம்மா பையன்). அப்பாவின் சொந்த ஊரில் போட்ட ஆட்டங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சரி lets play now:)


வழக்கம்போல் இந்த விளையாட்டையும் சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கணும். கேட்சர் கண்ணை மூடிக்கொண்டு 1,2,3 எண்ணனும். அதுக்குள்ள மத்தவங்க போய் ஒளிஞ்சிக்கனும். ஒளிந்துக்கொண்டிருக்கும் எல்லாரையும் ஐஸ் போடறது (கண்டுபிடிக்கறது) கேட்சரோட வேலை. அத்தனை பேரும் மாட்டினதுக்கு அப்புறம் முதல்ல அவுட் ஆனவன் கேட்சராகி கேமை கண்டினியூ செய்யனும். எல்லாரையும் அவுட் பண்றதுக்குள்ள யாராவது ஐஸ் போட்டுட்டாங்கன்னா அதே ஆள் திரும்பவும் கேமை பிரெஷ்ஷா ஆரம்பிக்கணும். இத ரெண்டு விதமா விளையாடலாம். ஒன்னு பொதுவா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஐஸ் போடுறதையும், ஐஸ் அடிக்கறதையும் அங்கேயே வச்சிக்கிறது. இந்த typeல ஐஸ் அடிக்கறது ரொம்ப கஷ்டம். இலவு காத்த கிளியா கேட்சர் அங்கேயே சுத்திகிட்டு இருப்பான். ரெண்டாவது வகை ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடறது. அதாவது ஆள் சிக்கினவுடனே ஐஸ் நம்பர் 1 வித்யா அப்படின்னு உரக்க டிக்ளேர் பண்ணிடனும்(வரலாற்றுல நான் ஐஸ் நம்பர் 1 ஆனதா சுவடே இல்லை. ஹி ஹி ஹி). அதே மாதிரி ஐஸ் அடிக்கிர இடம் கேட்சரோட முதுகு தான். இருக்கிற கோபத்தையெல்லாம் சேர்த்து ஐஸ்ன்னு கத்திக்கிட்டே முதுகுல ஒன்னு வெச்சா கேட்சர் கேமை ரிப்பீட்டு பண்ணனும்.


நான் இந்த விளையாட்டை கத்துக்கிட்டதும், அதிகம் விளையாடினதும் என் அப்பாவின் சொந்த ஊரில் தான். என் அண்ணன்கள், அவர்களுடைய நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள பசங்கள் என மினிமம் 15 பேரோட தான் ஆட்டம் ஆரம்பமாகும். பெரியப்பாவின் வீடும் அதற்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் மாடியும் தான் எங்க பிளே ஏரியா. பெரியப்பா வீட்டு மாடி ஐஸ் பார் விளையாடுறதுக்குன்னே கட்டினா மாதிரி அவ்ளே அம்சமா இருக்கும். மாடியில் உள்ள இரண்டு ரூம்களுக்கும் பொதுவாக ஒரு சுவர் தான். ஒரு ரூமில் இருந்து மற்றொன்றுக்கு ஈசியாகப் போலாம்.

எனக்குத் தெரிந்து ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடும் வகையைத்தான் அதிகம் விளையாடிருக்கேன். இந்த ஆட்டத்தில் நிறைய கேப்மாரித்தனங்களை செய்யலாம். கேட்சரை நம்பர் எண்ண சொல்லிட்டு ஒளிந்து கொள்ளும்போது அண்ணன்கள் இருவரும் போட்டிருக்கும் சட்டையை மாற்றிக்கொள்வார்கள். கேட்சர் அறிவாளி மூஞ்சியப் பார்க்காம சட்டையைப் பார்த்து ஐஸ் போடுவான். அப்போ ராங் (wrong) ஐஸ் அடிச்சு அவனையே திரும்பவும் புடிக்கவைச்சது உண்டு. சிலசமயம் ஒரு குறிப்பிட்ட ஆளை கட்டம்கட்டிடுவாங்க. சாபூத்ரிலருந்து அவன் தப்பிச்சிட்டான்னா முதல்ல அவன கேட்சரா ஆக்கறதுக்கான பிளான் அரங்கேறும். அதுக்காக வேணும்னே அவன ஐஸ் போடறவரைக்கும் வேற யாரப் பார்த்தாலும் கண்டுக்கமாட்டாங்க. அவன முதல் ஐஸா டிக்ளேர் பண்ணதுக்கப்புறம் மளமளன்னு மத்தவங்க எல்லாரும் வேணும்னே அவுட் ஆயிடுவாங்க. அதுக்குப்பறம் தான் கச்சேரியே. எதிரி?????!!!! கேட்சரானப்புறம் அவன் நொந்து நூடுல்ஸ் ஆகி, அழற வரைக்கும் ஐஸ் அடிச்சுகிட்டே இருப்போம். ஒரு ஸ்டேஜ்க்கு மேல தாக்குப்பிடிக்க முடியாம பார்ட்டி பாதி கேமிலேயே எஸ்ஸாகிடும். விளையாட ஆரம்பிச்சுட்டா சோறு தண்ணி திங்கலைங்கறதுக் கூட தெரியாம ஆட்டம் தொடரும். ஹூம். அதெல்லாம் ஒரு காலம். இப்போ நான் பார்த்தவரைக்கும் வாண்டூஸ் யாரும் இத விளையாடற மாதிரி தெரியல.

சரி பதிவோட முக்கிய கட்டத்துக்கு வருவோம். எனக்கு இத ஒரு தொடர் பதிவா மாத்தனும்னு ஆசை. அதனால சில பேரை விளையாட கூப்பிடலாம்னு இருக்கேன். ஆடறதும் ஆடாததும் உங்க இஷ்டம். ரூல்ஸ் ரொம்ப சிம்பிள்.

1. சிறு வயதில் நீங்கள் விரும்பி ஆடின விளையாட்டு (ஏடாகூடமான ஆட்டம் எதையாவது எழுதிடாதீங்க).
2. தயவு செய்து கிரிக்கெட், செஸ் மட்டும் வேண்டாம்.

இவங்களையெல்லாம் ஆடறதுக்கு கூப்பிட்டுருக்கேன்.

1. அருண் அண்ணாத்தே
2. ஆபிசர் அக்கா
3. குசும்பரை

13 comments:

குசும்பன் said...

//ஒரு காலம். இப்போ நான் பார்த்தவரைக்கும் வாண்டூஸ் யாரும் இத விளையாடற மாதிரி தெரியல.//

விளையாட அது போல் இடம் இருப்பதும் இல்லை:)

இருந்தாலும் ஹோம் ஒர்க் செய், டாக்டர் ஆகனும் அது இதுன்னு ஏதும் சொல்லி டார்ச்சர் வேற...

குசும்பன் said...

// (ஏடாகூடமான ஆட்டம் எதையாவது எழுதிடாதீங்க).
2. தயவு செய்து கிரிக்கெட், செஸ் மட்டும் வேண்டாம்.///

சைக்கிள் ஓட்ட சொல்லிட்டு பிரேக்கையும் புடிச்சுக்கிட்டா எப்படி சைக்கிள் ஓட்டுவது?

Vidhya Chandrasekaran said...

வருகைகி நன்றி குசும்பன் சார்.

\\இருந்தாலும் ஹோம் ஒர்க் செய், டாக்டர் ஆகனும் அது இதுன்னு ஏதும் சொல்லி டார்ச்சர் வேற...\\

அப்படி சொன்னாலும் இப்போ யார் மதிக்கிறா. எல்லாம் வேற லெவல் கேமிங்க்கு போயாச்சு.

Vidhya Chandrasekaran said...

\\சைக்கிள் ஓட்ட சொல்லிட்டு பிரேக்கையும் புடிச்சுக்கிட்டா எப்படி சைக்கிள் ஓட்டுவது?\\

சைக்கிள் கன்னாபின்னான்னு ஒடிடக்கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை தான்:)

Arun Kumar said...

என்னையும் இந்த தொடர் எழுத அழைத்தமைக்கு நன்றி. இந்த வார இறுதியில் கண்டிப்பாக எழுதுகிறேன்

நன்றி

rapp said...

ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், தொடர் ஆட்டமா??????????????:):):)

rapp said...

என்னை அழைச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :):):) கண்டிப்பா அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள்ள எழுதிடறேன்:):):)

rapp said...

இப்போல்லாம் குழந்தைகள் விளையாடறாங்களா என்ன? என்னையே எங்கம்மா சரியா விளையாட விட மாட்டாங்க:):):)

Vidhya Chandrasekaran said...

@ அருண்
உங்கள் பதிவுக்கு வெயிட்டிங்:)

Vidhya Chandrasekaran said...

@ rapp
யக்கோவ் நீங்க சரியான வாலா இருந்திருக்கனும். அதான் உங்க அம்மா உங்களை விளையாட விடல:)
சரிங்க உங்க பிஸியான (வெட்டி)வேலைக்கு நடுவே இந்த தொடர் பதிவையும் போட்டுடுங்க.

Sanjai Gandhi said...

//(வரலாற்றுல நான் ஐஸ் நம்பர் 1 ஆனதா சுவடே இல்லை. ஹி ஹி ஹி).//

சேம் பின்ச் :).. என்னை முதலில் பார்த்தாலும் என் பெயரை சொல்ல மாட்டார்கள்.அப்போ எல்லாம் பசங்களுக்கு (பொண்ணுங்களுக்கும் தான்:P) என் மேல தனிப் பிரியம். பெரும்பாலும் என் கூடத் தான் சுத்திட்டு இருப்பாங்க. அதனால என்னை மாட்டிவிடமாட்டாங்க.. அப்போவே நாங்க பெரிய அரசியல்வியாதியாக்கும்.. :))


//அதே மாதிரி ஐஸ் அடிக்கிர இடம் கேட்சரோட முதுகு தான். இருக்கிற கோபத்தையெல்லாம் சேர்த்து ஐஸ்ன்னு கத்திக்கிட்டே முதுகுல ஒன்னு வெச்சா //

அட ஆமால்ல... :))))

... அடுத்த வர்கள் எல்லாம் பெரும்பாலும் நான் எழுதி இருக்கிற மாதிரியே இருக்கு.. நான் செமையா ஜெல்லி அடிச்சி இருக்கேன்.. நீங்க சுருக்கமா அழகா முடிச்சி இருக்கிங்க..

Sanjai Gandhi said...

//இவங்களையெல்லாம் ஆடறதுக்கு கூப்பிட்டுருக்கேன்.

2. ஆபிசர் அக்கா
3. குசும்பரை//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. 2 பேரும் ரொம்ப நல்லவங்களாச்சே. :))

Vidhya Chandrasekaran said...

@ சஞ்சய்
வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி.