July 6, 2009

பாண்டிச்சேரியின் பெஸ்ட் துரித உணவுகள்

பாண்டிச்சேரி என்றாலே எல்லாருக்கும் தண்ணி தான் நினைவுக்கு வரும். ஒரு தெருவுல பத்து கடை இருந்தா அதில 8 மதுக்கடைகள் தான். மணக்குள விநாயகர், ஆசிரமம், ஆரோவில், மாத்ரி மந்திர், பீச்கள் என நிறைய சுற்றுலா இடங்கள். ஆனந்தா இன், சற்குரு, அதிதி, ஜி.ஆர்.டி என நிறைய ஹோட்டல்கள் (அக்கார்ட் கூட கண் வைத்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்). கல்யாணமாகி இதுவரை இரண்டு முறை மணக்குள விநாயகர் கோவிலுக்கும், ஒருமுறை ஆசிரமத்திற்க்கும் நிறைய தடவை பீச்சுக்கும் சென்றிருக்கிறேன். தலைமைச் செயலகம் எதிரே இருக்கும் பீச் சனி, ஞாயிறுகளில் பத்து ரங்கநாதன் தெருவை திருப்பிவிட்டால் போலிருக்கும். நச நசன்னு கும்பல். இந்த பீச்சில் காற்றே வீசாது. ஆனால் இங்கு கிடைக்கும் பானி பூரி, சுண்டல் போன்ற அயிட்டம்களின் டேஸ்ட் யூனிக். இந்தப் பதிவில் பாண்டிச்சேரி வந்தால் ட்ரை பண்ண வேண்டிய (லைட்)பாஸ்ட் புஃட் பற்றிய ரவுண்ட் அப்.

பானிபூரி/மசாலா பூரி

பீச்சில் மட்டுமல்லாது தெருவுக்கு இரண்டு பானிபூரி கடைகள் இருக்கின்றது. பீச், மிஷன் தெரு, நேரு சாலை, காந்தி சாலை என நான் பார்த்த மட்டில் மூன்று இடங்களை ஓகே ரகத்தில் சேர்க்கலாம். முதலில் பீச் ரோட்டின் முடிவில் இருக்கும் கடை (பெட்ரோல் பங்க், ஏசியானா ஹவுஸ், லா தெரேஸ் ஹோட்டலின் எதிரில் இருக்கிறது). பாண்டிச்சேரியிலேயே தி பெஸ்ட் என எல்லாரும் கை காட்டுவது இந்தக் கடையை தான். மூன்று வருடங்களுக்கு முன் (ஹி ஹி எனக்கு கல்யாணம் ஆனப்போ) இருந்த டேஸ்ட் இப்போ இல்லை. அளவும் குறைந்துவிட்டது. வழக்கம்போல் விலை மட்டும் 10ல் இருந்து 15/20 என உயர்ந்திருக்கிறது. Still மற்ற இடங்களை கம்பேர் பண்ணும்போது இது தான் பெட்டர். காரம், மசாலா என எல்லாம் பர்பெக்ட் டேஸ்ட்.
அடுத்தது தலைமைச் செயலகத்தை ஒட்டியிருக்கும் கடை. இவரிடம் பானி பூரி கிடைக்காது. புதினா ஃபிளேவர் சற்றே தூக்கலாக, கொஞ்சம் காரமாக இருக்கும். டிஸ்போசபிள் தட்டில் தரும்போது 12ரூபாய். மற்ற சமயங்களில் 10. மூன்றாவதாக மிஷன் ஸ்ட்ரீட்டில் மெகா மார்ட் அருகிலிருக்கும் கடை. காரம், மசாலா பிடிக்காதவர்கள் இங்கே ட்ரை பண்ணலாம். அசட்டுத் தித்திப்புடன் ரொம்ப crunchy. இங்கேயும் பத்து ரூபாய்தான். சாரம் சிக்னல் அருகிலிருக்கும் கடையிலும் நன்றாக இருக்கும். ஒரு பிளேட் மசாலா பூரி, ஒன் பை டூ பானிபூரி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போய் ஒரு டம்ளர் பெருங்காயம் போட்ட மோர் குடிச்சால் நைட் டிபன் ஓவர்.

சுண்டல்

மெரினா/பெசண்ட் நகர் பீச்சில் கிடைக்கும் சுண்டல்களை விட இங்கு கிடைக்கும் சுண்டலின் டேஸ்ட் ஏ கிளாஸ். பீச் ரோட்டில் இருக்கும் காந்தி சிலைக்கு எதிரில் ஒரு தாத்தா சுண்டல் விற்பார். ரகு தான் காலேஜ் படிக்கும்போதிலிருந்து இந்த தாத்தாவின் ரெகுலர் கஸ்டமர் என்றார். எனக்குத் தெரிந்து இவரும், இவரிடம் சரக்கு தீர்ந்த பின் (ஹார்ட்லி 1 ஹவர்) இன்னொரு தாத்தாவும் தான் சுண்டலாதிபதிகள். ஐந்து ரூபாய்க்கு சின்ன பேப்பர் பொட்டலத்தில் ஐஸ்கிரீம் குச்சி போட்டுத் தருவார்கள். நல்லா குழைய வேகவைத்த பட்டாணியோடு அடையாளம் தெரியாமல் கலந்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொஞ்சூண்டு தேங்காய் என டிவைன் டேஸ்ட். இந்த இரண்டே முக்கால் வருடங்களில், பீச்சில் ஒரு வாக், ஒரு சுண்டல் பாக்கெட் என்றே பெரும்பாலான வீக்கெண்டுகளை கழித்தோம்.

லல்லு குல்பி

நேரு ஸ்ட்ரீட்டில் தனிஷ்க் நகைக்கடைக்கு பக்கத்தில் இருக்கிறது லல்லு குல்ஃபி. இங்கு பிஸ்தா, கேஸர் (குங்குமப்பூ), ஏலக்காய், சாக்லேட் மற்றும் மேங்கோ ப்ளேவர் குல்ஃபிக்கள் ஒன்று பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அட்டகாசமான ரியல் மில்க் சுவை. இவற்றோடு சாயந்திர வேளைகளில் சூடாக சமோசா, கட்லெட்களோடு சேட்டுகளின் ஸ்பெஷல் ஸ்வீட்சான குலாப் ஜாமுன், ரசகுல்லா, முந்திரி டாஃபி, பாதுஷா போன்றவையும் கிடைக்கிறது. மாலை வேளைகளில் சூப்பராய் வியாபாரம் நடக்கிறது

பஜ்ஜி

நிறையக் கடைகள் இருந்தாலும் கொஞ்சமாவது வயித்துக்கு பிரச்சனைத் தராத பஜ்ஜி கடைகள் ரெண்டே ரெண்டு தான் (எனக்குத் தெரிந்து). MG ரோட்டில் மெட்ராஸ் பேப்பர் மார்ட் எதிரில் தள்ளுவண்டியில் கிடைக்கும் வெங்காயம், உருளை, வாழைக்காய், மிளகாய் பஜ்ஜிகள் நன்றாக இருக்கும் (சூடாக சாப்பிட்டால்). பஜ்ஜி மாவில் சேர்க்கப்படும் சோம்பு சுவையை மேலும் கூட்டுகிறதென்பதென் (தாழ்மையான) கருத்து. கொசக்கடை தெருவில் இருக்கும் "கூல் கேட்" கடையிலும் பஜ்ஜிகள் நன்றாக இருக்கும். கடலை மாவு கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

மித்தாய் மந்திர்

செஞ்சி/ஆம்பூர் சாலையில் இருக்கும் கடை மித்தாய் மந்திர். இங்கு கிடைக்கும் மிண்ட் டீ டக்கராக இருக்கும். அதோடு குஜராத்தி ஸ்நாக்கான காக்ராவும் கிடைக்கும். காக்ராவில் மேத்தி ப்ளேவர் சூப்பராக இருக்கும். எனக்குத் தெரிந்து ஆக்ரா பேடா கிடைக்கும் கடை இது ஒன்றுதான்.

ரிச்சி ரிச்

ரிச்சி ரிச் பாண்டிச்சேரியின் பேமஸ் ஐஸ்க்ரீம் பார்லர். இரண்டு இடங்களில் இருக்கிறது. நேரு வீதியிலும், ரங்கப்பிள்ளை வீதியிலும். 100க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கிறது. ஹார்ட் ஐஸ்க்ரீமை விட ஸாஃப்ட் வகை ஐஸ்க்ரீம்கள் ரொம்ப நன்றாக இருக்கின்றன. மூன்று அளவுகளில் ரீசனபிள் விலையில் கிடைக்கின்றது. ஐஸ்க்ரீம்கள் மட்டுமில்லாமல் பிட்ஸா, பர்கர், ப்ரைஸ், சாண்ட்விச், போன்ற உணவு வகைகளும் கிடைக்கின்றன. இவை நேரு வீதியில் இருக்கும் கிளையில் மட்டுமே கிடைக்கும். ஆர்டரின் பேரில் பிறந்தநாள் கேக்குகள், ஹோம்மேட் சாக்லேட்ஸ் செய்து தருகிறார்கள். இவர்கள் ரம் அண்ட் ரெய்சின்ஸ் சாக்லேட் சிம்ப்ளி சூப்பர்ப்.

34 comments:

நர்சிம் said...

//தலைமைச் செயலகம் எதிரே இருக்கும் பீச் சனி, ஞாயிறுகளில் பத்து ரங்கநாதன் தெருவை திருப்பிவிட்டால் போலிருக்கும்.//

நல்லா சொல்லி இருக்கீங்க மேடம்

சந்தனமுல்லை said...

ஆஹா...drool!!

Sri said...

//கொசக்கடை தெருவில் இருக்கும் "கூல் கேட்" கடையிலும் பஜ்ஜிகள் நன்றாக இருக்கும்.

ahhaah - I was a fan of cool cat coffee when I was a student at university, esp the one after the dinner :)

Srini

அ.மு.செய்யது said...

//(அக்கார்ட் கூட கண் வைத்திருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்).//

ரெஸ்டாரன்ட் காரங்க‌ கண் வச்சா கூட உங்களுக்கு அப்டேட் வந்துருமா ??

தராசு said...

கலக்கல் ரவுண்ட் அப்.

வாழ்த்துக்கள்.

R.Gopi said...

//ஒரு பிளேட் மசாலா பூரி, ஒன் பை டூ பானிபூரி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போய் ஒரு டம்ளர் பெருங்காயம் போட்ட மோர் குடிச்சால் நைட் டிபன் ஓவர்.//

ஆ ஹா...... பசி இல்லாதவங்கள கூட சாப்பிட வைக்கற டெக்னிக் ஆச்சே இது....

//நல்லா குழைய வேகவைத்த பட்டாணியோடு அடையாளம் தெரியாமல் கலந்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொஞ்சூண்டு தேங்காய் என டிவைன் டேஸ்ட்.//

நெஜமாவே டேச்டோ இல்லையோ, சொல்றதுக்காவது வாங்கி சாப்பிடணும் போல இருக்கு.

//இங்கு பிஸ்தா, கேஸர் (குங்குமப்பூ), ஏலக்காய், சாக்லேட் மற்றும் மேங்கோ ப்ளேவர் குல்ஃபிக்கள் ஒன்று பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. அட்டகாசமான ரியல் மில்க் சுவை.//

ஹ்ம்ம்.... நடக்கட்டும்... நடக்கட்டும்....

//கொசக்கடை தெருவில் இருக்கும் "கூல் கேட்" கடையிலும் பஜ்ஜிகள் நன்றாக இருக்கும்.//

நெக்ஸ்ட் டைம் அங்க போகும்போது ட்ரை பண்ணிடுவோம்.....

//மித்தாய் மந்திர் "மின்ட் டீ"//

இது குடிச்சதில்லை.... இதையும் ஒரு கை பாத்துடுவோம்...

//ஹார்ட் ஐஸ்க்ரீமை விட ஸாஃப்ட் வகை ஐஸ்க்ரீம்கள் ரொம்ப நன்றாக இருக்கின்றன. மூன்று அளவுகளில் ரீசனபிள் விலையில் கிடைக்கின்றது.//

டேஸ்டுக்கு டேஸ்ட்டும் ஆச்சு.... பர்சும் பழுக்காதுன்னு சொல்லிட்டீங்க.....

ஆமாம், இவ்ளோவும் ஒரே டைம்ல சாப்பிட முடியுமான்னு சொல்லவே இல்லையே??

நீங்க எப்படி??? என் கிட்ட மட்டும் சொல்லுங்க...... ஓகே......

Anonymous said...

நீங்க எப்படி??? என் கிட்ட மட்டும் சொல்லுங்க...... ஓகே.....

superpa

வித்யா said...

நன்றி நர்சிம்.
நன்றி முல்லை.
நன்றி Sri.
நன்றி அ.மு.செய்யது.
நன்றி தராசு.
நன்றி கோபி.
நன்றி மயில்.

பாலாஜி said...
This comment has been removed by a blog administrator.
Arun Kumar said...

அடுத்த முறை பாண்டிசேரி செல்லும் போது இந்த கையேடு ரொம்ப உபயோகமாக இருக்கும். அடுத்த மாதம் பாண்டிசேரி கண்டிப்பாக செல்வேன். ரொம்ப ரொம்ப நன்றி

ஜீவன் said...

//பாண்டிச்சேரி என்றாலே எல்லாருக்கும் தண்ணி தான் நினைவுக்கு வரும்.//

எனக்கு கடற்கரைல இருக்குற காந்தி சிலையும்,அப்புறம் எதோ ஒரு ஆசிரமம் இருக்காமே ? அதும்தான் நினைவுக்கு வருது!

☀நான் ஆதவன்☀ said...

உங்களின் சாப்பாட்டு ஆர்வம் உண்மையிலேயே வியப்பு தான்.

புதுகைத் தென்றல் said...

ம்ம்ம்முடியலை வித்யா,

என்சைக்ளோபீடியா வா இருக்கீங்களே!!

எப்பூடி???

அக்னி பார்வை said...

//மணக்குள விநாயகர், ஆசிரமம், ஆரோவில், மாத்ரி மந்திர், பீச்கள் என நிறைய சுற்றுலா இடங்கள். ஆனந்தா இன், சற்குரு, அதிதி, ஜி.ஆர்.டி என நிறைய ஹோட்டல்கள்//

என்னது பானடிசேரில இவ்வால்வு இருக்கா?

பாரதியார் வீட்டை விட்டுடீஙக
:))))

நாகை சிவா said...

அதானே பாரதியார் வீட்டை விட்டுடீங்க.. கூடவே சண்டே மார்க்கெட் பத்தியும் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.

நீங்க முதல் பானி பூரி கடை பாட்டா கடையை ஒட்டு இருக்குமே அது தானே? எல்லாமே சூப்பரா சொல்லி இருக்கீங்க!

அதிலும் ரிச்சி ரிச் பத்தி சூப்பரா சொன்னீங்க

//இவர்கள் ரம் அண்ட் ரெய்சின்ஸ் சாக்லேட் சிம்ப்ளி சூப்பர்ப்.//

உண்மை. நள்ளிரவு வரை திறந்து இருப்பார்கள். அது தான் டாப். லேட் நைட் ஐஸ்கீரிம் வாங்கிட்டு கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டு வீட்டுக்கு வந்து தூங்கினால், அது சுகம் :)

விக்னேஷ்வரி said...

Yummy post.

Deepa said...

//விக்னேஷ்வரி said...
Yummy post.//

Repeattt!

வித்யா said...

நன்றி அருண்குமார்.
நன்றி ஜீவன்.
நன்றி ஆதவன்.
நன்றி கலா அக்கா.
நன்றி அக்னிபார்வை.
நன்றி சிவா (அப்புறமாய் தனிப் பதிவாய்).
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி தீபா.

எம்.எம்.அப்துல்லா said...

present sis.

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாசித்த‌தே சாப்பிட்டதைப்போல உணர்வு. செம்ம டேஸ்ட்டு..

அபி அப்பா said...

வித்யா தண்ணி அடிப்பவனுக்கு தான் பாண்டின்னா அந்ந்த நினைப்பு வரும்,இரவு 12க்கு ஒஅஸ்டாண்ட்ர் வெளியே ஒரு பாட்டி இட்லி கடை போட்டிருக்க்கும். அருமையா இருக்கும். அது கை ருசி விடுங்க"அய்யா ஒன் மொவளுக்கு எடுத்து போ ராசா"ன்னு அது சொல்லும் அழகு இருக்கே அது போதும்

Vijay said...

தெரியாமல்த்தேன் கேக்கறேன். நாங்கள்லாம், வயித்தெறிச்சல் படணும்’ங்கறதுக்காகவே இதெல்லாம் எழுதறீங்களா :-)))

எஞ்சாய் பண்ணுங்க :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாண்டிச்சேரியில இவ்ளோ சாப்புடுற ஐட்டம் கெடைக்குமா :)))))))

வித்யா said...

நன்றி அப்துல்லா அண்ணா.
நன்றி ஆதி.
நன்றி அபிஅப்பா.
நன்றி விஜய்.
நன்றி அமித்து அம்மா.

" உழவன் " " Uzhavan " said...

எல்லோரும் போட்டுப் பார்க்கிற கண்ணாடியை விட்டுவிட்டு, ஒரு புதிய கண்ணாடி அணிந்து பாண்டிச்சேரியைப் பார்த்திருக்கிறீர்கள். இப்பதிவு பாண்டிசேரி மண்ணுக்குக் கிடத்த பெருமை.

ஆகாய நதி said...

hmmm nice informations! :)))

jothi said...

(:)

கவலையும் மகிழ்ச்சியும் கலந்த பதிவு (என் புது legent மேட்சாகுதா?).

கவலை இதையெல்லாம் சாப்பிட கொடுத்து வைக்கலையே.

சந்தோசம் டிஸ்ஸெல்லாம் எங்க பட்ஜெட்ல இருக்கு.

வருங்கால முதல்வர் said...

நல்ல சைட் டிஷ் தான்.

வித்யா said...

நன்றி உழவன்.
நன்றி ஆகாயநதி.
நன்றி ஜோதி.
நன்றி வருங்கால முதல்வர்.

ராஜா | KVR said...

சென்னையிலே நல்ல காரமான பானியுடன் பானிபூரி எங்கே கிடைக்கும்ன்னு சொன்னிங்கன்னா தன்யனாவேன்...

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

:) :)

வித்யா said...

நன்றி ராஜா.
நன்றி இராஜலெட்சுமி.

வித்யா said...

நன்றி

Srivats said...

marina beachla masala puri , pani puri superrrrrrrrrrrr....ahaa enakku eppo edhellam sapdanum pola erukku ..hmm :(