July 9, 2009

வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு

ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.

வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."

சார் முதல்ல வீட்டை காட்டுங்க.

வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.

"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)

ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.

"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..

ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.

வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.

"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"

2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

44 comments:

சென்ஷி said...

;-(

வீடு தேடுறதுல ஏகப்பட்ட சிரமம் இருக்குது. இதுல இண்ட்டர்வ்யு வச்சு செலக்சன் செஞ்சு ஸ்ஸ்ஸப்பா..!

R.Gopi said...

//ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் //

*********

ஆ ஹா..... ஒப்பனிங்கே அமர்க்களமா இருக்கே..... ஏன்னா வில்லத்தனம்...... நீ பர்மிஷன் குடுக்கலேன்னா என்ன, எனக்கு தெரியாத ரூட்டா?? ஹ்ம்ம்.... நடக்கட்டும்...

//வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள்.//

சரியாக சொன்னீர்கள். இன்னும் சிவில் எஞ்சினியரிங் டிகிரி இருக்கான்னு மட்டும்தான் கேக்கல....

//25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன்.//

பெரிய கிர்ர்ர் தான்.......வாடகை விஷத்த விட, சீக்கிரம் ஏற்றம் அடைகிறது என்பது உண்மை.

//வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது//

ஏன் சார், இதோட நிறுத்திடீங்க... வீட்டுக்கு, குடிவந்து, வாடகை குடுத்துட்டு, நாங்களாவது தங்கலாமா, இல்ல அதுக்கும், ஏதாவது ரூல்ஸ் இருக்கான்னு கேக்கணும் போல இருக்கே??!!!

//2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.//

ம்ம்ம்.... ஆல் தி பெஸ்ட்.... வேற என்ன சொல்றது.........

Anonymous said...

ரொம்ப நொந்து போய்டீங்க போல இருக்கு.. நல்ல வீடு அமையும். வாழ்த்துகள்..

அ.மு.செய்யது said...

//பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு,//

ராஜதந்திரங்களை கரைத்து குடித்திருக்கிறீர்கள் போங்க..

குரு said...

இதெல்லாம் போக கரண்ட் பில் ஒரு யுனிட்க்கு நாலரை ருபாய்ன்னு நம்ம காதுல ஒரு ஏழரைய சொருகுவாங்க பாருங்க. அப்ப வர கடுப்புல வீட்டுக்காரன் இடுப்ப ஒடச்சு அடுப்புல போடலாம்னு தோணும்.

அகநாழிகை said...

வீடு தேடறதுல்ல இவ்ளோ கஷ்டம் இருக்குன்னு நீங்க, ஆதிமுலகிருஷ்ணன் இவங்கல்லாம் எழுதறதில இருந்து தெரியுது.

என் வீடுகளில் வாடகைக்கு இருக்கற யாரும் இவ்வளோ கஷ்டப்படல.

சீக்கிரம் செட்டிலாவுங்க.

விக்னேஷ்வரி said...

வீடு பார்க்குறது இவ்வளவு கஷ்டமா....
:(

Deepa said...

கூடிய விரைவில் நல்ல வீடு அமைய வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

வித்யா.. நாம் ஒவ்வொருவரும் சென்னையில் வலியோடு சந்திக்கும் இந்தப் பிரச்சனையை, வயிறு குலுங்கும் சிரிப்போடு தந்துள்ளீர்கள். 
// கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு
மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி//
செம புளோ.. செம டைமிங்.
ஆனாலும் நீங்க அதிர்ஷடக்காரர்தாங்க. ஏன்னா கம்பெனியே உங்களுக்கு வீடு பார்த்து தருதுல :-)

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு இவ்வளவு கஷ்டம் இல்லை. ஓரிரு கேள்விகளுக்குப் பின் ”சார் பேர் என்ன?” அப்பிடிம்பாங்க. பேரைச் சொன்ன வேகத்தில் வீடில்லை என்ற பதில் சிலரிடம் வெகுநாகரிகமாகவும்,சிலரிடம் நாகரிகமாகவும், சிலரிடம் இருந்து முகத்துக்கு நேராகவே முஸ்லீம்களுக்கு வீடு தர்றதில்லை என்றோ பதில் வந்துவிடும். இந்தப்பிரச்சனையால் நான் பல ஆண்டுகள் ஜாம்பஜாரில் உள்ள ஒரு மேன்ஷனில் ஒரு ஒட்டு அறையில் இருந்தேன்.

என்னைப் பார்த்தால் டீசண்டான தீவிரவாதி மாதிரி தெரியும் போல.

இதை நான் காமெடியாக எழுதினாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு வேதனைப் பந்து உருளத்தான் செய்கின்றது. ஒம் பொண்ணக் குடுண்ணே என்று உரிமையோடு கேட்கும் உன் போன்றவர்கள் எங்களுக்கு பெரும் ஆறுதல்.

நாகை சிவா said...

அட இதில் இவ்வளவு பிரச்சனை இருக்கா? சென்னையில் இருக்கும் அக்கா விற்கு வீடு தேடி அனுபவம் ஒரு தடவை உண்டு. இந்த அளவு இம்சை இல்லை :)

அந்த மம்மி, பம்மி - சூப்பர். செம டைமிங் & ரைமிங் :)))

Truth said...

வீடு மாற்றுவது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கும் தெரியுங்க. சீக்கிரமா ஒரு வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.

ஒரு ஐந்து வருடங்களுக்கு முன், சோலிங்கநல்லூரில் ஒரு 1BHK வீடுக்கு 2500 கேட்டதுக்கே நான் கடுப்பாயிட்டேன். இது வேலைக்காகாதுன்னு பேசாம ஒரு வீடு கட்டிட்டேன்.

ஓனர் கிட்ட எக்ஸ்ட்ரா சாவி இருந்தா, ஏதாவது தொலைந்து போனா, அவங்க பொறுப்பு எடுத்துக்குவானுங்களா? யூஸ்லெஸ்.

எம்.எம்.அப்துல்லா said...

//என் வீடுகளில் வாடகைக்கு இருக்கற யாரும் இவ்வளோ கஷ்டப்படல.

//

ஹை...வாசு அண்ணே, நீங்க செட்டில் ஆயிட்டீங்க போல :))

sri said...

First time here!
Very true , even in singapore its the similar case, but ellam decenta nadathuvanga.. solra rules ellam kittey thattey same dhaan , ana government kankaaniradhunaala , oru contract erukkum - we both would sign it - only one month rent for deposite - I can still imagine the pain one would undergo to get a house. Veetu owner eppavumey rent edukaravangala adimai maari paarkaradhu eppo dhaan pogumo

sri said...

Ungey tragedy pathi ellam comedya ve ezhudhareenga :P

Arun Kumar said...

Same Blood :)
இதே நிலை தான் எனக்கும் போன வருடம் விடு தேடிய போது..

சொந்த வீடு இல்லாத வரை இந்த பிரச்சனைகள் தான்.

மணிகண்டன் said...

இதெல்லாம் பாத்துட்டு எங்க தெருவுக்கு வருசத்துக்கு ஒருமுறை வரும் குறவர் வாழ்க்கைமுறை தான் பெஸ்ட்ன்னு சொல்லி நல்லா வாங்கிகட்டிக்கிட்டேன்.

மணிகண்டன் said...

comment moderation vachi irukkeengalaa ?

மணிகண்டன் said...

அப்துல்லா அண்ணேன்,

மதம், ஜாதி பாத்து வீடு தருவது இன்னும் பழக்கவழக்கத்தில் இருக்கு. கொஞ்ச வருஷத்துல மாறலாம். ஆனா, அதுக்காக முஸ்லிம்ன்னா தீவிரவாதிகள்ன்னு எல்லாம் அவங்க நினைக்கறது இல்ல. வருத்தப்படாதீங்க.

பெங்களூர், மும்பை மாதிரி அவுட்லுக் வரும்போது இந்த பிரச்சனைகள் சென்னைலயும் மாறலாம்.

Cable சங்கர் said...

சீக்கிரமே நல்ல வீடு ப்ராப்தி ரஸ்து..

அமிர்தவர்ஷினி அம்மா said...

சோகத்துல கூட ஒரு சுகம் மாதிரி என்னமா நடுநடுவுல ஜாலி டயலாக்ஸ்

சீக்கிரமே ஒரு நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்

ரவி said...

இவங்களுக்கு ஒரு வீடு பார்சல்.

என்ன வீடு பார்சல் கட்ட முடியாதா ?

அப்ப வீடு படத்தோட டிவிடிய கட்டுப்பா...

Sampath said...

சீக்கிரமே ஒரு நல்ல வீடு கெடைக்கும் கவலை படாதீங்கோ ...

//அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம்//

கொலம்பஸ்'ஆ .. அந்த ஆளுக்கே ஒழுங்கா வழி தெரியாது ... அவர் கிட்ட போயி என் ட்ரெய்னிங் எடுக்குறீங்க ... அப்புறம் தப்பான அட்ரஸ்'ல தான் போயி நிப்பீங்க .. வேணும்னா நெக்ஸ்ட் டைம் "வாஸ்கோ ட காமா" கிட்ட ட்ரை பண்ணுங்க ...

எப்பூடி நாங்களும் கொறை கண்டிபிடிப்போம்ல ... :)

சந்தனமுல்லை said...

விரைவில் நல்ல வீடு அமைய வாழ்த்துகள்!

நடுநடுலே உங்க டயலாக்ஸ் - செம - வித்யா டச்! :-))

pudugaithendral said...

me the 25th??

அமுதா said...

/*நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.*/
:-)
viraivil nalla veedu amaiya vaalthukkal

jothi said...

இப்பல்லாம் பேச்சிலருக்குதான் சென்னையில வீடு,. familyக்கு எல்லாம் கிடையாது. ஆமாம்

jothi said...

என்ன ஆச்சு?? உங்க ப்ளக்லயும் அப்ரூவல் கேக்குது?? உங்களுக்கு கூட எதிரிகள் அதிகமாயிட்டாங்களா?? நீங்க பெரிய ஆளாய்ட்டிங்க வித்யா,

Anonymous said...

Same blood :( நானும் லீவு போட்டுட்டுத்தான் தேடணும் இனிமேல்..

G3 said...

Kalakkal pulambals :)))

Seekiramaavae nalla veedu kidaikka vaazhthukkal :)))

தராசு said...

சீக்கிரம் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்.

கிறுக்கன் said...

சாதாரன நடையில் அசாதாரன சிந்தனை வாழ்த்துக்கள்.
சொந்த வீடு விரைவில் கட்ட இறை வேண்டுகிறேன்.

நீங்கள் சொந்த வீடு கட்டியபின் உங்களின் சில பல கருத்துக்கள் மாறுமென கூறுகிறது இக்கிறுக்கனின் கிறுக்குபுத்தி.

எதிராய்காணும் எண்ணமில்லாது எதிரணி சென்றால்
எளித்தாய்விளங்கும் இருபுற உண்மை .

-
கிறுக்கன்.

ரமேஷ் வைத்யா said...

வித்யா!
நல்ல‌ எழுத்துத் திறமை. உடனடியாகப் பத்திரிகைகளுக்கு முயற்சி செய்யுங்கள்.

Unknown said...

//"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"//

:-)))))))

Thamira said...

சாக்லெட் நிற வீடுகள் இப்போதான் எழுதி அழுதிருந்தேன். அதற்குள் நீங்கள்.!

எந்த ஏரியாவில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வெஸ்ட் தாம்பரம் என்றால்(மட்டும்) உடனே மெயிலில் என்னை தொடர்பு கொள்ளவும்.

வால்பையன் said...

இன்னும் நாட்டில் இந்த பிரச்சனை ஓயலையா?

க. தங்கமணி பிரபு said...

நல்ல பதிவுங்க!விசனத்தை விவரமா எழுதவும் நெஞ்சுறுதி வேனும்!

வீடே தேவையில்லை போங்கடா(டி) என்ற தோரனையில் தேடினால் கிடைக்குமோ என்னவோ! நான் சாலிகிராமித்திலிருந்து கோடம்பாக்கத்தில் வீடு தேடி கடைசியா உள்ளதும் போச்சுடாங்கற மாதிரி விருகம்பாக்கம் ஏரியாவில் வந்து உக்கார்ந்துக்கறேன்! இதுல இந்த ப்ராமின்ஸ்/வெஜ் ஒன்லி இன்னொரு கொடுமை!

நேசமித்ரன் said...

ரமேஷ் வைத்யா வை வழிமொழிகிறேன்
எழுத்து நடை அருமை..!

prabha devi said...

உண்மை தான் நீங்க சொல்றது .கஷ்டத்தை கூட ரெம்ப காமெடி ஆக எழுதி இருக்கிங்க .வாழ்த்துக்கள் வித்யா.........

மணிகண்டன் said...

சுவாரசிய பதிவர் விருது வாங்கிக்கோங்க. அடிக்கடி எழுதுங்க.

Information said...

சுவையான, அதே நேரம் சிந்திக்க வைக்கும் பதிவு.

Unknown said...

<<<
"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
>>>

ஹிஹி... நல்ல வீடு கிடைக்கிறது அதிர்ஷ்டம் தான்.

பவள சங்கரி said...

நல்ல வீடு சீக்கிரம்கிடைக்க வாழ்த்துக்கள் வித்யா. அருமையாக இருக்கிறது.......கலக்குங்க.....

ஹுஸைனம்மா said...

வீடு கிடைக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கும்போது, நீங்க ஏன் இப்படி அடிக்கடி வீடு மாத்துறீங்க? இல்ல துரத்தி விட்டுடுறாங்களா? :-)))