July 22, 2009

நன்றி

கொஞ்ச நாளுக்கு வலைப்பூ பக்கம் வராம இருக்கனும்ன்னு தான் முடிவு பண்ணிருந்தேன். அவசர அவசரமா என்னை இந்த இடுகையை போட வெச்சிட்டார் மணிகண்டன். அட என்னையும் ஒரு ஆளா மதிச்சு சுவாரசியப் பதிவர் விருது கொடுத்திருக்கிறார். நன்றி மணிகண்டன். விருது கொடுத்தும் அதைப் பத்தி எழுதாம இருக்காளேன்னு தப்பா எடுத்துப்பீங்களோன்னு தான் இந்தப் பதிவு.

சடாரென ஆணிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாலும், கொஞ்சம் அசந்தாலும் அவை கடப்பாரைகளாக மாறி ஆளையே அடித்துவிடும் அபாயமிருப்பதாலும், வீடு மாற்ற வேண்டியிருப்பதாலும், என்னை நம்பி சில பல பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாலும், மேலும் நிறைய சொல்ல விரும்பாத 'லும்'க்களாலும் இத்தளத்தில் முன்பு போல் இயங்க முடியாதென்றே நினைக்கிறேன். சக பதிவர்களின் பதிவுகளை வாசிக்க நேரம்கிடைப்பதே அபூர்வமாயிருக்கும்போது பின்னூட்டம் இடுவதென்ற பேச்சுக்கே இடமில்லையென்பது வருத்தமளிக்கிறது. எல்லாரும் மன்னிப்பீர்களாக.

இன்னும் சில நாட்களுக்கு (மாதங்களுக்கு) இடுகைகளோ, பின்னூட்டங்களோ இட இயலாத நிலையிலிருக்கிறேன். இதுவரை ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. மீண்டும் வரும் பட்சத்தில் இதே ஊக்கமும், ஆதரவும் தருவீர்களென்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

17 comments:

கே.என்.சிவராமன் said...

அனைத்து பொறுப்புகளையும் வெற்றிகரமாகவும், மனநிம்மதியுடனும் முடித்துவிட்டு வாருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

pudugaithendral said...

வரும் பட்சத்தில் இதே ஊக்கமும், ஆதரவும் தருவீர்களென்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.//

என்னாதிது... ஆட்டோ அனுப்பி வைக்கறேன். உங்க ஹோட்டல் ரெவ்யூக்க்ளூக்கு வெயிட்டிங்

Gajani said...

வித்யா நான் உங்களோட வலைபூ வாசகி , நான் பின்னூட்டம் இடுவதில்லை ,ஆனாலும் உங்களோட அடுத்த பதிவை தினமும்ஆவலுடன் எதிபார்க்கிறேன்.உங்களுடைய நன்றி பதிவை பார்த்ததுமே, ஒரு பின்னூட்டம் இடனும் போல் தோன்றியது

சென்ஷி said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மீண்டும் எழுத்துலகில் விரைவில் உலா வர விரும்புகிறேன்..

அபி அப்பா said...

வாங்க வாங்க வாங்க!!!

R.Gopi said...

முதலில் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வித்யா......

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் பல விஷயங்கள் மற்றும் அந்த சொல்ல விரும்பாத "லும்", படிக்கும் போது, மனதுக்கு கஷ்டமாக இருந்தது உண்மை.....

இவை அனைத்திலிருந்தும் நீங்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்து, மேலும் சிறந்த பல படைப்புகள் படைக்க வேண்டும் என்பதே, என்னை போன்ற பல (உங்கள்) நல விரும்பியின் / விரும்பிகளின் விருப்பம்.

எங்களின் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

கடவுள் இருக்கிறார்.... அவர் எல்லாவற்றையும் கவனித்து கொள்வார். அவர் மேல் பாரத்தை போடுங்கள்........ அவர் பார்த்து கொள்வார்.

அ.மு.செய்யது said...

ஹலோ இருங்க..ஒரு நிமிசம்...........

ஹலோ.......................வித்யாக்கா !!!!!!!!

அ.மு.செய்யது said...

//Gajani said...
வித்யா நான் உங்களோட வலைபூ வாசகி , நான் பின்னூட்டம் இடுவதில்லை ,ஆனாலும் உங்களோட அடுத்த பதிவை தினமும்ஆவலுடன் எதிபார்க்கிறேன்.உங்களுடைய நன்றி பதிவை பார்த்ததுமே, ஒரு பின்னூட்டம் இடனும் போல் தோன்றியது//

இதற்காக‌வாவது நீங்கள் எழுதவேண்டும்.

உங்க ரெஸ்டாரன்ட் பதிவுகளை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்.

Anonymous said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மீண்டும் எழுத்துலகில் விரைவில் உலா வர விரும்புகிறேன்..

கார்க்கிபவா said...

வாழ்த்துகள்..

காத்திருக்கிறோம் கொ.ப.,செ

நாகை சிவா said...

நன்றி !

வணக்கம் :)

Arun Kumar said...

விருதுக்கு வாழ்த்துக்கள்..
சீக்கிரம் மீண்டும் எழுத வாங்க..

மணிகண்டன் said...

***
விருது கொடுத்தும் அதைப் பத்தி எழுதாம இருக்காளேன்னு தப்பா எடுத்துப்பீங்களோன்னு தான் இந்தப் பதிவு.
***

அப்படியெல்லாம் எடுத்துக்கமாட்டேன். என்ஜாய் த பிரேக்.

☀நான் ஆதவன்☀ said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் வித்யா. புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்து கலக்கவும் :)

"உழவன்" "Uzhavan" said...

//இத்தளத்தில் முன்பு போல் இயங்க முடியாதென்றே நினைக்கிறேன்//

மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எல்லா லும் களும் கடந்துபோகட்டுமாக. விரைவில் உங்களை வலையில் சந்திக்க காத்திருக்கிறோம். விருதுக்கு வாழ்த்துக்கள்!

துபாய் ராஜா said...

விருதிற்கு வாழ்த்துக்கள்.

எல்லா 'லும்'களையும் வெற்றிகரமாக முடித்து விட்டு வீரநடை போட்டு வாருங்கள்.

Raj said...

ஆணி....அது பாட்டுக்கு இருக்கத்தான் செய்யும்....அதுக்காக ஒரேயடியா..லீவு உட்ராதீங்கக்கா...அப்பப்போ எழுதாட்டியும் பரவாயில்ல..ஏதாச்சும் கிறுக்கவாவது செய்யுங்க