September 2, 2009

காத்திருந்து காத்திருந்து

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
இந்த வரிகளை நம் வாழ்க்கையில் ஏதாவதொரு தருணத்தில் பாட வேண்டியதாயிருக்கிறது. சிலருக்கு எப்போவாவது. சிலருக்கு அடிக்கடி. சிலருக்கு அடிக்கடி எப்போவாவது. வர வர என் நிலைமை இந்த மூன்றாவது கேட்டகிரியில் வந்து தொலைகிறது.

எங்கும் காத்திருத்தல் எதிலும் காத்திருத்தல் என்று வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கும் மட்டும் ஏன் இப்படி? என கேட்குமளவிற்கு கடுப்பாய் இருக்கிறது. மாமனாரை மருத்துவமனைக்கு செக்கப்புக்கு அழைத்துச் செல்ல பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தேன். கரெக்டாக பத்தேமுக்காலுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்தோம் (என் மாமனார் என்னை விட பங்க்சுவல்).எல்லாரையும் பார்த்து முடித்துவிட்டு டாக்டர் மாமனாரை செக்கப் செய்தபோது மணி 1.30. நடுவே இரண்டு முறை ரிசப்ஷனில் போய் கேட்டுவிட்டு வந்ததுக்கு "இல்ல மேடம். டிரசிங் கேசெல்லாம் டாக்டர் கடைசியா தான் பார்ப்பார்" என்றார்கள். அத அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போதே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே என கேட்டுவிட்டு வந்தேன். எரியும் கொள்ளியில் எண்ணைய் ஊற்றும் விதமாக மாமனார் "போன தடவை வந்தபோது அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ணலம்மா. இந்த தடவை இப்படி ஆயிடுச்சே" என்றார்.

அடுத்தும் ஹாஸ்ப்பிட்டல் தவம் தான். டோக்கன் வாங்கிக் கொண்டு மடியில் உட்கார்ந்துருவேனா என ரகளைப் பண்ணும் ஜூனியரின் பின்னால் இன்னும் மூணு பேர்தான் என்ற கவுண்டிங்கோட காத்திருந்து, என் நம்பரைக் கூப்பிடும்போது அரக்க பரக்க ஒரு அம்மா ஓடிவருவார். "புள்ளைக்கு இழுக்குது. நான் கொஞ்சம் பார்த்துடறேனே". மனிதாபிமானம் இன்னும் மரிக்காத நிலையில் சரி என்று அவரை அனுப்பிவிட்டு இன்னொரு பதினைந்து நிமிடம் ஜூனியர் பின்னால் ஓடிக்கொண்டிருக்க நேரிடும். ஆனால் இன்றுவரை நான் அவசரமாய் பார்க்கவேண்டிருக்கும் நிலையிலும் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது:(

கடைல பில்லு போடற எடத்துல கூட தொல்லை பண்ணுவாங்க. ஒன்னு ஸ்கேனிங் மெஷின் வொர்க் பண்ணாது. இல்ல அந்த கம்ப்யூட்டர் ஹேங்காகி தொலைக்கும். மேடம் ஒரு அஞ்சு நிமிஷம் என்பார்கள். இல்லன்னா யாராவது ரெண்டே ரெண்டு ஐயிட்டம் தான் ப்ளீஸ் என சொல்லி நாம் தலையசைப்பதற்க்கு முன் பொருளை கவுண்டரில் வைத்துவிடுவார்கள். அந்த ரெண்டு அயிட்டத்தை பில் பண்ணுவதற்குள் இன்னும் நான்கு பொருட்களை கொண்டு வந்து வைத்துவிட்டு "மறந்துட்டேன்" என இளிப்பார்கள். வர்ற கோவத்துக்கு ஸ்கேனர் மிஷினைக் கொண்டு மண்டையில் நச்சு நச்சுன்னு அடிக்கனும் போலிருக்கும்.

இதெல்லாத்தையும் விட மரணக் கொடுமை இந்த பஸ்ஸுக்கு காத்துகிட்டிருக்கிறது. கரெக்டா நாம போகவேண்டிய டைரக்ஷன்ல வரவே வராது. "மேரா நம்பர் கப் ஆயேகா" என வர்ற பஸ்களின் நம்பரைப் பார்த்துப் பார்த்தே கண்ணு பூத்துப் போய்டும். இது நடுவுல ஏதாவது ஒரு பிரஹஸ்பதி வந்து "ரொம்ப நேரமா நிக்கறியேம்மா. எங்க போகனும்"ன்னு கேக்கும். உனக்கெதுக்கு அந்த டிடெய்லுன்னு நம்ம பார்த்தா "எந்த பஸ்சுன்னு தெரியாம நிக்கறியோன்னு கேட்டேன்" என வெறுப்பேத்துவார்கள். உங்க பொது சேவைக்கு ஒரு அளவே இல்லாம போச்சுன்னு நொந்துகிட்டு காத்திருத்தலை தொடர வேண்டியது தான்.

இதோட நெட் கனெக்ஷனுக்கு வெயிட்டிங், நண்பர்களுக்காக வெயிட்டிங் (ஒருத்தரும் பங்சுவல் கிடையாது), ஹோட்டல்ல வெயிட்டிங், பின்னூட்டத்துக்கு வெயிட்டிங்ன்னு அப்பப்பா. வாழ்க்கைல எவ்வளவு நேரம் காத்திருக்கறதுல வீணாப் போகுது. ஆனாலும் சில சமயங்களில் காத்திருப்பது சுகத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது:)

இந்தப் பாட்டு தான் நான் முதன் முதலில் பாடிய (இரண்டே வரி) பாடலாம். ரெக்கார்ட் செய்த கேஸட் இன்னும் என் பெரியம்மாவிடம் இருக்கிறது. ஊருக்குப் போகும்போதெல்லாம் இழுத்து இழுத்து பாடின பொண்ணு இப்ப என்னம்மா பேசுது என சொல்லி கிண்டல் செய்வார்கள். Nostalgia:)

26 comments:

Shakthiprabha said...

"காத்திருப்பதில் சுகமுண்டு
காக்கவைப்பதில் சுகமுண்டு"

ன்னு சொல்லிக்கிறாங்களே அதெல்லாம் காதலுக்கு மட்டும் தான் போல :)

எல்லாருக்கும் காத்து காத்து எரிச்சல் அடைந்த அனுபவம் இருக்கறதால காக்கவைக்காம நிறைய பின்னுட்டம் வரும்

கார்க்கி said...

காக்க காக்க...

ஆயில்யன் said...

இந்த பாட்டு கேட்டா எங்க தம்பி தமிழ்பிரியன் ஞாபகம் தான் வரும் இப்ப ஊர்ல எங்க சுத்திக்கிட்டு நிக்கிதோ பயபுள்ள :))

யாசவி said...

:-)))

தராசு said...

//சிலருக்கு எப்போவாவது. சிலருக்கு அடிக்கடி. சிலருக்கு அடிக்கடி எப்போவாவது.//

இதுல ஒரு கேட்டகிரிய விட்டுட்டீங்களே, "சிலருக்கு எப்பொழுதும்"

நர்சிம் said...

நல்லா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

நல்லா எழுதி இருக்கீங்க

கார்ல்ஸ்பெர்க் said...

நான் வர்றதுக்கு கூட கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. :)

இப்பதான் வீடு மாறி போயிருக்கேன்.. இந்த ஊருல எல்லாமே ரூல்ஸ் தான்.. நம்ம ஊரு மாதிரி காசு குடுத்து சீக்கிரமா வேலைய முடிச்சுடலாம்னு பார்த்தா அதெல்லாம் இங்க நடக்காதுன்னு சொல்லிட்டானுங்க.. அதனால கொஞ்ச நாளைக்கு Office'ல மட்டும் தான்.. :(

//என் மாமனார் என்னை விட பங்க்சுவல்//

-சைக்கிள் கேப்'ல வச்சீங்க பாருங்க இந்த ஐஸ்.. எங்கயோ போய்ட்டீங்க..

ஒரு வேளை காத்திருக்குற டைம்'ல ரெம்ப போர் அடிச்சுச்சுன்னா, அதே 'காத்திருந்து காத்திருந்து' பாட்டையே Full'a பாட ட்ரை பண்ணலாம்ல :))

நாகை சிவா said...

:)

புதுகைத் தென்றல் said...

சொல்றது சரிதான் வித்யா,

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போன அனுபவம் எனக்கும் இருக்கு.

:(((((((

ஜானி வாக்கர் said...

//Shakthiprabha said...
"காத்திருப்பதில் சுகமுண்டு
காக்கவைப்பதில் சுகமுண்டு"

ன்னு சொல்லிக்கிறாங்களே அதெல்லாம் காதலுக்கு மட்டும் தான் போல :)
//

அது அந்த காலம், இப்போ காத்திருக்கற கேப்ல இன்னொரு ஃபிகர் கரெக்ட் பண்ணுற அளவுக்கு உலகம் வேகமா போகுதுங்க.

Shakthiprabha said...
This comment has been removed by the author.
Shakthiprabha said...

//Shakthiprabha said...
"காத்திருப்பதில் சுகமுண்டு
காக்கவைப்பதில் சுகமுண்டு"

ன்னு சொல்லிக்கிறாங்களே அதெல்லாம் காதலுக்கு மட்டும் தான் போல :)
//

ஜானி வாக்கர் sonnathu: அது அந்த காலம், இப்போ காத்திருக்கற கேப்ல இன்னொரு ஃபிகர் கரெக்ட் பண்ணுற அளவுக்கு உலகம் வேகமா போகுதுங்க.//

அட! அதைத் தாங்க "காத்திருப்பதில் சுகம்" ன்னு பெரியவங்க அந்தக் காலத்துலையே சொல்லியிருக்காங்க. இதையெல்லாம் விளக்கிட்டு இருக்க முடியுமா :P

Dual benefit scheme I supp.

Truth said...

:)

Vidhoosh/விதூஷ் said...

காத்திருத்தல் எரிச்சலை, nostalgia வரை இழுத்துக்கொண்டு போனதெல்லாம்... ஓவர்..:)) நல்ல பதிவுங்க.

--வித்யா

Cable Sankar said...

pinnoodathikku kathirukka veenam..? poottaachhu..

பிரியமுடன்...வசந்த் said...

காத்திருப்பதில் சுகமும் உண்டு சோகமும் உண்டு

நல்லா எழுதியிருக்கீங்க.......

வித்யா said...

நன்றி ஷக்திபிரபா.
நன்றி கார்க்கி.
நன்றி ஆயில்யன்.
நன்றி யாசவி.
நன்றி தராசு.
நன்றி நர்சிம்.
நன்றி நவாஸுதீன்.
நன்றி கார்ல்ஸ்பெர்க்.

வித்யா said...

நன்றி சிவா.
நன்றி புதுகை தென்றல்.
நன்றி ஜானி வாக்கர்.
நன்றி ட்ரூத்.
நன்றி விதூஷ்.
நன்றி சங்கர்.
நன்றி வசந்த்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏன் இப்படி கண்டதையும் நினைவுபடுத்தி கடுப்பேத்துறீங்க.? பூரா.. ஒரே சேம் பிளட்டா இருக்குது.!

வர்ற கோவத்துக்கு ஸ்கேனர் மிஷினைக் கொண்டு மண்டையில் நச்சு நச்சுன்னு அடிக்கனும் போலிருக்கும்// அவ்வ்வ்வ்வ்..

karthick said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

Gokul R said...

Hey Vidya...
I just hit ur blog accidentally and no started to follow it ...

Followers ல தேடாதீங்க .. இருக்காது ... Just be under a feeling that ppl follow ur blog without ur knowledge ..

Just read ur Kalloori Ninaivugal set and laughed like hell... I studied at BITS-Pilani and hence got a really diverse set of ppl and profs...Shoranya(Saranya), Moahes (Mahesh),Raaamaakreisnan (Ramakrishnan) are some of the names twisted by my Bengali prof ... Just remembered them ..

Ur humour sense in ur blogs is just top-notch ... keep up the great work ...

" உழவன் " " Uzhavan " said...

வெயிட் ப்ளீஸ்.. படிச்சிட்டு அப்புறமா கமெண்ட் போடுறேன்

விக்னேஷ்வரி said...

ரொம்ப நாளைக்கப்புறம் வித்யா மியூசிக் ஸ்டார்ட் ஆகிடுச்சு. காத்திருக்குறதால ஒரு பதிவு போட முடியும்னா காத்திருக்கலாம் தானே. :)

வித்யா said...

நன்றி ஆதி.
நன்றி கார்த்திக் (படத்தப் பார்க்கனுமா?)
நன்றி கோகுல்.
நன்றி உழவன்.
நன்றி விக்கி.

Arun Kumar said...

நல்ல பதிவு.
ஒரு முறை air india விமானத்தில் பயணம் செய்தால் போதும்
எல்லாம் காத்திருந்து காத்திருந்து வேஸ்ட் ஏர் இந்தியா தான் பெஸ்ட்