September 22, 2009

படம் பேர் என்ன?

சில வாரங்களுக்கு முன் டிவியில் சிவகிரி என்ற அற்புதமான(அபத்தமான அல்ல) படத்தின் ட்ரெய்லரை (மட்டுமே) காணும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒரு வித பயபக்தியுடன் (பயம் மட்டுமில்ல) பார்த்து முடித்தபோது இப்படி டைட்டில் போட்டார்கள்.

சிவகிரி
He is different


இதைப் பார்த்துட்டு அப்பா "இதுல ஒரு மிஸ்டேக் இருக்குடி" என்றார். என் மூளைக்கு எட்டியவரை எதுவும் தோணவில்லை. என்னப்பா என கேட்டதுக்கு "Its different"னு வந்திருக்கனும் என்றார். ஹீரோ - முடியலடா சாமீ.
************

ரோஜாவுக்கு நல்ல ராசி. சந்திரபாபு நாயுடு கட்சில சேர்ந்ததுமே அவருக்கு இருந்த பேர் டேமேஜ் ஆச்சு. ரெட்டிய பூச்செண்ட்டோட போய் பார்த்தாங்க. மலர் வளையம் வைக்க வேண்டியதாய் போச்சு. இது ஆந்திராவில் இருக்கும் என் உறவினரின் கமெண்ட். எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
*************

"கூலிக்காரன்"
இல்ல
"தொழிலாளி"
ப்ச்
"வேலைக்காரன்"
ஹே அது அமலாவோட நடிச்சது
"கூலி"
உஹூம்
"உழைக்கிறவன்"
கிர்ர்ர்ர்ர்
"சுமை தூக்கி"
அடிங்க..
ஆங் "உழைப்பாளி"

புரியலையா?

ரஜினி ரோஜாவோட ஜோடியா நடிச்ச படம் பேர் என்ன? கூலியா வருவாரே.

இப்ப முதல்ல இருந்து படிங்க. திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல. இந்தக் கூத்து எங்க வீட்டில் அடிக்கடி நடக்கும்.
*****************

ரொம்ப நாள் கழிச்சு தமிழ்மணம் பார்த்தா ஒரே உ.போ.ஒ விமர்சனம். கிர்ர்ர். அயன் படத்துக்கப்புறம் குவிக் கன் முருகன் பார்த்தோம். கொஞ்சம் ஸ்லோ மூவிங் என்றாலும் அங்கங்கே ஹார்ட்டி லாப்ஃஸ். "Situation urgent sir", "Next time put more elaichi in payasam" போது தியேட்டரே அதிர்ந்தது. நாசர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ராஜூ சுந்தரமும் வழக்கம்போல். அடுத்த வாரமாவது உ.போ.ஒ பார்க்கனும். பார்க்கலாம்.
***************

ரெஸ்டாரெண்ட் போய் கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. வீட்டுக்கும் ஹாஸ்பிட்டலுக்குமான அலைச்சலில் இரண்டு முறை BBQ Nation மிஸ்ஸாகிவிட்டது. ஏற்கனவே போன உணவகங்களைப் பற்றி தான் எழுதலாம்னு இருக்கேன். அடுத்த இடுகையில் எல்லார் வயித்தெரிச்சலையும் கொட்டிகலாம்னு பார்க்கிறேன். அதுக்கு முன்னாடி ஒரு துணுக் சாய்ஸ். அம்ரிதா ஐஸ்கீரீமின் நேச்சுரல்ச் அவுட்லெட்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது. Wide options. 100கிராம் ஐஸ்க்ரீம் 30 ரூபாய் + டேக்ஸ். பேஸ் தேர்ந்தெடுத்து டாப்பிங்கையும் நாமளே சூஸ் பண்ணலாம். ஒரு முறை போய் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். யம்மி:)
************

13 comments:

Anonymous said...

ஐஸ் கிரீம் ட்ரை பண்ணிடலாம்...:))

சிவகிரி ன்னு பேர் வைச்ச அது பேரரசு படமா?

அமுதா கிருஷ்ணா said...

பாவம் ரோஜா...

கார்க்கி said...

சிவகிரி...ஹிஹிஹி

Anonymous said...

//திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல.//
அட ஆமாம்.

ரோஜா - செல்வமணி கட்சில சேந்ததும் அவர் என்ன ஆனார் :)

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

//திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல.//
அட ஆமாம்.

ரோஜா - செல்வமணி கட்சில சேந்ததும் அவர் என்ன ஆனார் :)/

முன்ணணி தயாரிப்பாளரா இருந்தவரு முன்னாள் தயாரிப்பாளர் ஆகிட்டாரே! - அட ரோஜா ஜோஸ்யம் நல்லாவே ஒர்க் ஆகுது :)

Cable Sankar said...

PARAVAAYILLAI NEEGA TRAILARA MATTUM THAN PATHEENGA..:)

அக்னி பார்வை said...

//இதைப் பார்த்துட்டு அப்பா "இதுல ஒரு மிஸ்டேக் இருக்குடி" என்றார். என் மூளைக்கு எட்டியவரை எதுவும் தோணவில்லை. என்னப்பா என கேட்டதுக்கு "Its different"னு வந்திருக்கனும் என்றார். ஹீரோ - முடியலடா சாமீ.
///
முடியல

வித்யா said...

நன்றி மயில்.
நன்றி அமுதா.
நன்றி கார்க்கி.
நன்ரி சின்ன அம்மிணி (ஆஹா இது வேறயா).
நன்றி ஆயில்யன்.
நன்றி சங்கர் (டிரெய்லருக்கே கண்ண கட்டிடுச்சு)
நன்றி அக்னிப்பார்வை.

R.Gopi said...

//சிவகிரி என்ற அற்புதமான(அபத்தமான அல்ல) படத்தின் ட்ரெய்லரை (மட்டுமே) காணும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒரு வித பயபக்தியுடன் (பயம் மட்டுமில்ல) //

ஓப்பனிங்கே டெர்ரரா இருக்கே வித்யா...

//என்னப்பா என கேட்டதுக்கு "Its different"னு வந்திருக்கனும் என்றார். ஹீரோ - முடியலடா சாமீ.//

என‌க்கும் முடிய‌ல‌ வித்யா.... எப்டி, இப்டி எல்லாம்...??
ரோஜா ஜோசியம் சூப்பர்....

செல்வமணி எவ்ளோ பெரிய டைரடக்கரா இருந்தாது... ரோஜா ராசி... அவரு இப்போ எங்கேன்னு தேடணும்...

//கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல. இந்தக் கூத்து எங்க வீட்டில் அடிக்கடி நடக்கும்.//

ஓ..ஹோ... அங்கேயும் ந‌ட‌க்க‌ற‌தா?? பேஷ்... பேஷ்....அதான‌ பார்த்தேன்...

//நாசர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ராஜூ சுந்தரமும் வழக்கம்போல். அடுத்த வாரமாவது உ.போ.ஒ பார்க்கனும். பார்க்கலாம்.//

நாச‌ர் ஆல்டைம் ஓவ‌ர் ஆக்டிங்... உ.போ.ஒ... பார்த்தாச்சு... பார்க்க‌லாம்... பிடிக்குமா என்று தெரிய‌வில்லை...

//அம்ரிதா ஐஸ்கீரீமின் நேச்சுரல்ச் அவுட்லெட்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது. Wide options. 100கிராம் ஐஸ்க்ரீம் 30 ரூபாய் + டேக்ஸ். பேஸ் தேர்ந்தெடுத்து டாப்பிங்கையும் நாமளே சூஸ் பண்ணலாம்.//

ஓ,..அப்ப‌டியே... வ‌ரும்போது ட்ரை ப‌ண்றேன்...

தாங்க்ஸ் வித்யா...

SanjaiGandhi said...

என்னாது சிவகிரி ட்ரைலரா? ஏங்க வயித்துல புளிய கரைக்கிறிங்க? பேரரசு ரிட்டர்ன்ஸா? அவ்வ்வ்வ்வ்வ்வ்..

அந்த ஐச்க்ரீம் வாங்கி அனுப்புங்க,, சாப்ட்டு பார்த்துட்டு சொல்றேன்.. ;)

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க

தாரணி பிரியா said...

நேத்து கிளிப்பிங்ஸ் பார்த்த புண்ணியத்தை நானும் கட்டிக்கிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ் எப்படி எல்லாம் கிளம்பறாங்க :)

வித்யா said...

நன்றி கோபி.
நன்றி சஞ்சய்.
நன்றி நர்சிம்.
நன்றி தாரணி பிரியா.