November 2, 2009

கண்டேன் காதலை

ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான "Jab We Met" படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். பரத், தமன்னா லீட். முதல் காட்சியில் பரத் ஒரு மாதிரி நடந்து வருவார். சோர்வை காட்றாராமா? முடியலடா சாமி. "நல்லவேளை. சுமாரான சோகம் போல. ரொம்ப சோகமா இருந்தா தவழ்ந்து வந்திருப்பாரு" என தியேட்டரில் கமெண்ட் அடித்தார்கள். காதலில் தோல்வி, அம்மாவால் மனக்கசப்பு ஏற்படும் பரத் வாழ்க்கை வெறுத்து கால்போன போக்கில் மதுரை ட்ரெய்ன் ஏறுகிறார். அங்கு தமன்னாவை சந்திக்கிறார். பரத்தால் டிரெய்னை தவறவிட்டதாக சொல்லும் தமன்னாவை பரத் அவரின் சொந்த ஊரான தேனியில் கொண்டு சேர்க்கிறார். அங்கு தமன்னாவிற்கும் அவரின் தாய்மாமன் சந்தானத்திற்கும் கல்யாண ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஊட்டியில் ஒருவரை காதலிக்கும் தமன்னா வீட்டை விட்டு ஓடிப்போகிறார். ஊட்டியில் அவர் தன் காதலனை சந்தித்தாரா? பரத் என்ன ஆனார்? எல்லாம் வெள்ளித்திரையில் காண்க.

படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் இரண்டு பேர். முதலில் சந்தானம். சான்ஸே இல்லை. தமன்னாவின் ஓவர் ஆக்டிங்கையும், பரத் நடிக்கிறேன் பேர்வழி என ஆளைக் கொல்லும்போதும் ஆபத்பாந்தவனாக காப்பாற்றுகிறார். கல்யாணத்தை நிறுத்த இவர் அடிக்கும் கூத்துகள் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கினறது. அடுத்தது ஒளிப்பதிவாளர். படம் முழுக்க ஜில்லென்ற ஃபீலிங்கை கொடுக்கிறார். ஊட்டி காட்சிகள் அட்டகாசம்.



தமன்னா வழக்கமான தமிழ் ஹீரோயின்கள் செய்யும் லூசுப் பெண் கேரக்டர். ரொம்பவே ஓவர் டோஸாகியிருக்கிறது. சிக்கென்றிருக்கிறார். கொஞ்சம் அஷ்டகோணல்களை குறைத்து நடித்தாரென்றால் தூளாக இருக்கும். பரத். ஊஹும். அதுவும் ரெண்டாவது பாதியில் தான் ஈஸி கோ பெர்சனாக மாறிவிட்டதை இவர் பறைசாற்ற முயற்சிக்கும்போது (அந்த chill dude டயலாக்குகள்) "என்ன கொடுமை சார் இது" என தியேட்டரே குரல் கொடுத்தது.

மியூசிக். வித்யாசாகராமே. நம்பமுடியவில்லை. இல்லை. இல்லை. ஒரு பாட்டுக்கூட அவர் சாயல் இல்லை. "காற்று புதிதாய்" சாங் ஓகே. BGM மகா சொதப்பல். ஹிந்தியில் பாட்டுகள் எல்லாம் அட்டகாசமாய் இருக்கும்.

ஜெனரலாய் ஒரிஜினலோடு கம்பேர் செய்யக்கூடாது என்பது என் கருத்து. சீன், டயலாக் இவையெல்லாம் கூட ஒரிஜினலிலிருந்து எடுத்தாளலாம். ஆனால் காஸ்ட்யூம் கூடவா காப்பி அடிக்கனும். கொடுமையா இருக்கு. ஹிந்தியில் "நகாடா" பாட்டில் ஷாகித் கபூர் செய்த அத்தனையும் பரத் இதிலும். அந்த மெகா சைஸ் தவில் கூட அடிக்கனும்னு ரூல்ஸ் போல.

கண்டேன் காதலை - ஒரு தபா கண்டுக்கிடலாம்.

37 comments:

Anonymous said...

கண்டேன் காதலை - ஒரு தபா கண்டுக்கிடலாம்.

தல சொன்னா சரி :))

பின்னோக்கி said...

என்னங்க இது படத்தை முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை திட்டிட்டு..கடைசியில ஒரு தடவை பார்க்கலாம்னு சொல்றீங்க...

நாங்க ஏமாறத்தயாராயில்லீங்கோவ்..

நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் மாதிரியா ..?

Raghu said...

ஹிந்தில‌ க‌ரீனா க‌பூர் லொட‌ லொட‌ன்னு பேசுவாங்க‌ளே த‌விர‌, லூசு மாதிரி ப‌ண்ண‌மாட்டாங்க‌, அது ஏன்தான் த‌மிழ்ல‌ எப்ப‌வும் ஹீரோயின‌ லூசு மாதிரியே காமிக்க‌றாங்க‌ன்னு தெரிய‌ல‌.

ந‌ல்ல‌வேளை லைலா ரிடைய‌ர்(?!?!?!) ஆகிட்டாங்க‌, இல்ல‌ன்னா இந்த‌ ப‌ட‌த்துக்கு அவ‌ங்க‌ளதான் லூசா போட்டிருப்பாங்க‌..ர்ர்ர்ர்...ஸாரி..ஹீரோயினா போட்டிருப்பாங்க‌.....அய்ய‌ய்யோ, க‌ற்ப‌னை ப‌ண்ணி பாத்தாலே தாங்க முடிய‌லடா சாமி!

தாரணி பிரியா said...

நான் இன்னும் படம் பாக்கலை. காப்பாத்திட்டிங்க வித்யா நன்றி

Vidhya Chandrasekaran said...

நன்றி மயில்.

நன்றி பின்னோக்கி (Jab We Met பார்க்கலைன்னா தாரளமா ஒரு தடவை பார்க்கலாம்).

நன்றி குறும்பன்.

நன்றி தாரணிபிரியா (ஒரு தடவ ட்ரை பண்ணலாம்ங்க).

Unknown said...

bharath opening varum pothu ram gopal varma padamla varra paey madhiri irukku.thamannaa loosuthanam first halfla mokkaiya irukkunu paarthaa bharath adhai second halfla continue panraar.Nalla velaiya santhaanam kadhai muzhukka vandhu sirikka vaikkiraar.santhu kooda varum periyappaa character super.music mega sothappal.

Cable சங்கர் said...

சேம் பிஞ்ச்

அக்னி பார்வை said...

//கண்டேன் காதலை - ஒரு தபா கண்டுக்கிடலாம். ///

வேணா ..அழுதுறுவேன்..அழுதுறுவேன்

Rajalakshmi Pakkirisamy said...

//கண்டேன் காதலை - ஒரு தபா கண்டுக்கிடலாம். //

ஏற்கனவே நேபாளி, பழனின்னு பார்த்து நொந்து கிடக்கிறோம். இதுல கண்டேன் காதலையாமம் .. போங்க வித்யா.

Vidhya Chandrasekaran said...

நன்றி வெங்கட்.
நன்றி கேபிள் சங்கர்.

நன்றி அக்னி பார்வை (Jab V Met பார்த்திருந்தா கஷ்டம் தான்).

நன்றி இராஜலெட்சுமி (இன்னாது பழனி படம் பார்த்தீங்களா. நெம்ப டெரரான ஆளா இருப்பீங்க போல).

விக்னேஷ்வரி said...

சோர்வை காட்றாராமா? முடியலடா சாமி. "நல்லவேளை. சுமாரான சோகம் போல. ரொம்ப சோகமா இருந்தா தவழ்ந்து வந்திருப்பாரு" //
ஹாஹாஹா

ரொம்பவே ஓவர் டோஸாகியிருக்கிறது. //
நான் நினைச்சேன், கரீனா திகட்டாம குடுத்தத இந்தம்மா இப்படித் தான் கெடுக்கும்னு. :(

ஹிந்தியில் "நகாடா" பாட்டில் ஷாகித் கபூர் செய்த அத்தனையும் பரத் இதிலும். அந்த மெகா சைஸ் தவில் கூட அடிக்கனும்னு ரூல்ஸ் போல. //
இந்தக் கொடுமை வேறையா..

கண்டேன் காதலை - ஒரு தபா கண்டுக்கிடலாம் //
நீங்க இவ்ளோ சொன்னதுக்கப்புறம் ஒரு தபா கூட பாக்க வேண்டாம்னு முடிவு பண்ணியாச்சு. காப்பாத்தினதுக்கு நன்றி வித்யா.

Truth said...

இங்க படம் ரிலீஸ் ஆகல. இண்டெர்னெட் எல்லாம் தேடிப் பாத்தேன். கிடைக்கல. நான் படம் பாக்க முடிவு பண்ணிட்டேன். :-)
பழனியே பாத்தாச்சு... இது பாக்க மாட்டோமா!

Vidhya Chandrasekaran said...

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி ட்ரூத் (பழனியே பார்த்துட்டீங்களா. அப்ப இது உங்களுக்கு பிசாத்து.)

Truth said...

//அந்த chill dude டயலாக்குகள்
take a chill pill man. இது தான் டயலாக். நாலஞ்சு முறை ரீவைண்ட் செஞ்சு பாத்தேன். நாங்க எல்லாம் டெர்ரர் ஆமா. இதோ இப்போ உக்காந்து ஆறுமுகம் வேற பாக்கணும். நீங்க பாக்றீங்களா? லிங்க் கீழ... :-)
http://tamil.techsatish.net/file/aarumugam-2/

ஊர்சுற்றி said...

நல்ல விமர்சனம்.

Vidhya Chandrasekaran said...

மீள் வருகைக்கு நன்றி ட்ரூத் (இந்த வீபரித முயற்சி எடுக்க நான் தயாராக இல்லை).

நன்றி ஊர்சுற்றி.

Karthik said...

Paadal appa theater le ukkara mudila.. :D JWM Biggest plus songs thaan.. TUM SE HI song Tamil version padu mokka.. Comparsions with original are inevitable.. But the director has done justice to the original

aadhirai said...

intha kodumaiya theatrela vera poyi pathen. ithellam onlinela pakka vendiya movie. tharama irundhaa mattumey theatre. too muchaa panna irukkavey irukku net.

kurumban correct. nankooda appidithaa nenachen. laila, latestaa jeniliya.

Vidhya Chandrasekaran said...

நன்றி கார்த்திக்.
நன்றி ஆதிரை.

அபி அப்பா said...

நேத்திக்கே இந்த பதிவை படிச்சிருக்கலாம்! ராத்திரி பார்த்து தொலைச்சேன். ஆனாலும் நம்ம சஞ்சயின் தமன்னாவை இப்படி நீங்க குதறி இருக்க கூடாது. அது பத்தி மயில் கூட கண்டனம் தெரிவிக்காதது கண்டனத்துகுரியது!

பரத்துக்கு யாராவது லேபர் விசா எடுத்து துபபய் அனுப்பிடுங்கப்பா, தமிழ் சினிமா பொழச்சி போவுட்டும்!

நல்ல விமர்சனம்!

அபி அப்பா said...

தாழ்மையான வேண்டுகோள்! இனிமே லேடீஸ் எல்லாம் விமர்சனம் எழுதாதீங்கப்பா. வீட்டுல படிச்சுட்டு "ஹூம் எல்லாரும் எல்லா சினிமாவும் பார்த்துட்டாங்க, என்னை மன்னார்குடியில கேட்டாக, மயிலாப்பூர்ல கேட்டாகன்னு ஆரம்பிச்சிடுறாங்கப்பா:-)))

Anonymous said...

பாத்துருவோம்

Rajalakshmi Pakkirisamy said...

(Jab We Met பார்க்கலைன்னா தாரளமா ஒரு தடவை பார்க்கலாம்).

en en en intha kolaiveri...

Vidhya Chandrasekaran said...

நன்றி அபி அப்பா.
நன்றி சின்ன அம்மிணி.

மீள் வருகைக்கு நன்றி இராஜலெட்சுமி:)

Unknown said...

அகில உலக தமன்னா ரசிகர் மன்றம் சார்பாக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்
இப்படி பொது இடங்களில் உண்மையை இனிமேலாவது சொல்ல வேண்டாம்
ஆனாலும் இந்தில ரொம்ப அருமையா இருந்துச்சு
தமிழ்ல ஓகே தான்.

Rajalakshmi Pakkirisamy said...

கண்டேன் காதலை பார்த்த தாக்கம் இன்னும் இருக்குங்களா வித்யா? எதுவும் பதிவு போடல... சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க

"உழவன்" "Uzhavan" said...

ம்ஹூம்.. நாங்க ஒரு தபா கூட கண்டுக்கமாட்டோம் :-)
சிடி கிடைச்சா லைட்டா கண்டுக்குவோம்

Vidhya Chandrasekaran said...

நன்றி nvnkmr.

நன்றி இராஜலெட்சுமி. ஹி ஹி. ஆணி ரொம்ப ஜாஸ்தி. கூடிய சீக்கிரம் போடறேன்.

நன்றி உழவன்.

அ.மு.செய்யது$ said...

இன்று வலைச்சர பதிவு பாருங்கள்..!!

நீங்களும் இருக்கிறீர்கள்..!!

Gokul R said...

The comments on Bharath's acting was hilarious, as always NICE !!!

For the past 2 or 3 days your blog isn't accessible.

The Blogger said it wasn't available. Any idea what it is ..

Anyways, good that you are back ...

Vidhya Chandrasekaran said...

Thanks Gokul.

வால்பையன் said...

சன் பிச்சர்ஸ் படமெல்லாம் பார்ப்பிங்களா!?

கஷ்டம் தான்!

அடுத்து வேட்டைகாரன் தான்!

Vidhya Chandrasekaran said...

நன்றி வால்பையன் (குருவியே பார்த்துட்டோம். இத பாக்க மாட்டோமா)

Rajalakshmi Pakkirisamy said...

enga poneenga madam? aalaye kanom

Vidhya Chandrasekaran said...

போட்டாச்சு ராஜி மேடம்.

குசும்பன் said...

ஆஊன்னா எல்லோரும் இதையே சொல்லுங்க

//பரத் என்ன ஆனார்? எல்லாம் வெள்ளித்திரையில் காண்க.//

நானும் ஊர் முழுக்க தேடிபார்த்துட்டேன், தாத்தாவோட வேஷ்டியைதான் கட்டி அதில் படம் ஓட்டுறானுங்க. வெள்ளித்திரை எங்கும் இல்லை:(

Vidhya Chandrasekaran said...

வருகைக்கு நன்றி குசும்பன். இன்னிக்கு நானா. நடத்துங்க.