டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)
ரொம்ப நாளாய் ஒரு authentic cuisine ட்ரை பண்ணனும் என்றிருந்தது. சைனீஸ் என்றால் ரகு அலறுகிறார். கேரளா என்றால் தம்பி முறுக்கிக் கொள்கிறான். இந்த நேரத்தில் ஒரு நாள் இடைவெளி விட்டு பெற்றோருடைய திருமணநாளும், என் திருமணநாளும் வந்தது. எங்கள் மணநாள் fell on a weekday. எங்கும் பிளான் பண்ணி போகமுடியவில்லை. பெற்றோரின் மணநாளன்று "எப்பப் பாரு கிச்சன்லயே தான இருக்க. இன்னிக்கு சமைக்க வேண்டாம். லஞ்சுக்கு வெளிலப் போகலாம்" என நாங்கள் எல்லாரும் அம்மாவை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தோம். அம்மாவிற்கு நான் - வெஜ் அலர்ஜி. சரவண பவன் மீது கடுங்கோபத்திலிருந்தார் அப்பா. இந்த தடவை சம்திங் நியூ என நினைத்து முடிவானது தான் புரசைவாக்கத்திலுள்ள ரசம் ரெஸ்டாரெண்ட். ஸ்ரீகிருஷ்ணா குழுமத்தின் authentic கொங்குநாட்டு உணவுகள் பரிமாறப்படும் சைவ உணவகம்.
கண்டிப்பாக டேபிள் ரிசர்வ் செய்யனும். புரசைவாக்கத்தில் அந்த கட்டிடம் குட்டி செட்டிநாட்டு அரண்மனை போலிருந்தது. கீழே ஸ்வீட்ஸ். முதல் மாடியில் ரெஸ்டாரெண்ட். அட்டகாசமான இண்டீரியர். மெனுவை அலசுவதற்கு முன் கொங்குநாடு பத்தின தம்மாத்தூண்டு டிடெய்ல்ஸ் நானறிந்தளவில். கொங்குநாடு என்பது கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு காங்கேயம், திருப்பூர், ஈரோடு, கரூர், பொள்ளாச்சி, பழனி, சேலம், தாராபுரம் போன்ற கிட்டத்தட்ட 50 ஊர்களை உள்ளடக்கிய பிராந்தியம். ஏறத்தாழ தேங்காயோடு அளவான மசாலாக்களை சேர்த்து மிதமான காரத்திலேயே சமைக்கிறார்கள். இதெல்லாம் என் கோயம்புத்தூர் நண்பனின் அம்மா சொன்னது.
ஓவர் டு த ஃபுட். எங்களிருவரைத் தவிர மற்ற அனைவரும் கொங்குநாடு ஸ்பெஷல் thali ஆர்டர் செய்தார்கள். வெல்கம் ட்ரிங், சூப், சாலட் (2), வாழைப்பழ தோசை, கொங்கு மசால் தோசை, காய்கறி பரோட்டா, அரிசி பருப்பு சாதம் இவற்றோடு வழக்கமான சவுத் இண்டியன் ஐட்டம். வெல்கம் ட்ரிங்காக கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிய மோர். அதோடு சூப்பாக எதோவொரு ரசம். Weird combination. அந்த வாழைப்பழ தோசை அட்டகாசம். சாப்பாடு சூப்பர். ஆனா எதுவுமே சூடாக இல்லாதது ஒரு பெரிய குறை. சர்வீசும் வெரி ஸ்லோ:( இந்த சாப்பாட்டிற்கு 225 ரூபாய் ரொம்ப ஓவர்.
அடுத்தது ala carte வில் நாங்கள் ஆர்டர் செய்தது நெல்லிக்காய் ரசம், வாழைப்பூ வடை, மக்காச்சோள வடை. மூணுமே ஏ கிளாஸ். மெயின் கோர்ஸிர்கு நான் பொரிச்ச பரோட்டாவும் பொள்ளாச்சி தேங்காய் குழம்பும் ஆர்டர் செய்தேன். ரெண்டுமே தூள். ஆனால் அந்த பொரிச்ச பரோட்டாவை ஒரு பீஸ்க்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை. திகட்டுகிறது. ரகு இட்லி உப்புமா ஆர்டர் பண்ணி கடுப்படித்தார். வீட்டில் செய்தால் சீண்டக்கூடமாட்டார். ஹூம்ம். வீட்டில் செய்தது போலவே இருந்தது. May be this is wat u call homely food:) Ala carte மெனு அட்டகாசமாக இருக்கிறது. குழிப்பணியாரம் மற்றும் இடியாப்பங்களில் நான்கைந்து வெரைட்டிகள்.
எங்களை ரொம்ப டிஸ்டர்ப் செய்தது டெசர்ட் மெனு தான். இளநீர் பாயாசம், கருப்பட்டி அல்வா, பருத்திப்பால் அல்வா. படிக்கும்போதே சாப்பிடனும் போலிருந்தது. மூன்றில் கருப்பட்டி அல்வா ரொம்ப சுமார் தான். மற்ற ரெண்டும் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த பருத்திப்பால் அல்வா. சூடாக வாயில் போட்டதும் கரைந்து ம்ம்ம் டிவைன்.
இறுதி அத்யாயம் ரொம்பவே பயங்கரமானது. பர்ஸ் பழுத்தது என்பதெல்லாம் சும்மா. அதையும் தாண்டி வேறெதாவது டெர்ம் யோசிக்க வேண்டும். Too too costly.
மேலதிக தகவல்கள்
உணவகம் - ரசம்
இடம் - புரசைவாக்கத்திலுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மாடியில். மயிலாப்பூரிலும், அண்ணாநகரிலும் கிளைகள் உண்டு.
டப்பு - ரொம்பவே அதிகம். Thali மீல்ஸ் 225 ரூபாய். Ala carte நினைவில்லை.
பரிந்துரை - Authentic கொங்கு ஃபுட் (5 வருடம் கோவையிலிருந்த என் தம்பியின் சர்ட்டிபிகேட்).யாராவது ட்ரீட் தர்றேன் என்றால் போகவும். இல்லை சம்பளம் வாங்கியவுடன் போகலாம். ஆனால் பில்லை பார்த்தவுடம் மயக்கம் ஏற்படுவது உறுதி. தயவு செய்து அண்ணா நகரிலுள்ள கிளைக்கு செல்வதை தவிர்க்கவும். சமீபத்தில் தான் திறந்ததால் that place literally has nothing (2 மாதங்களுக்கு முன்).
December 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
எங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து சப்பாத்தி தந்திருக்காங்க
சாப்பிட்டு பதினேழு மணி நேரமாச்சு ... கொலபட்டினில இதுவேறையா ......
நல்லா இருங்க மேடம் !
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 'ரசம்' போனோம்.
அதே கொங்கு 'தாலி' ரொம்ப சுமார்.
லைவ் ம்யூஸிக் வேற இருந்துச்சு. ஒரு தப்லா & ஒரு ஹார்மோனியம்.
தமிழ்பாட்டுன்னு அழகென்ற சொல்லுக்கு முருகா.... டங் டங் டங்டங் டங்..... வாசிச்சார்.
பழைய சினிமாப் பாட்டு வாசிக்கச் சொல்லி அனுப்பினேன்... பேரர்கிட்டே.
போனால் போகட்டும் போடா வாசிச்சார். அதுக்கப்புறம் சட்டி சுட்டதடா.....
போதுண்டா சாமின்னு ஆச்சு.
டேபிள் எல்லாம் புக் பண்ணிக்கலை.
இட்லி திருவிழான்னு போட்டுருக்கேன்னுதான் போனது. ஆனால் அது இரவு உணவாம்.
இதுவரை சென்னையில் நடுத்தர ஹோட்டேல்களில் பரவாயில்லை என்று சொல்லும் சாப்பாடு 'ரங்கோலி' குஜராத்தி மீல்ஸ்.
கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கும்
//Blogger கார்க்கி said...
எங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து சப்பாத்தி தந்திருக்காங்க//
வீட்டு சாப்பாடு கிடைக்குதேன்னு சந்தோசப்படுங்க
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி கார்க்கி (தி பெஸ்ட் ஆச்சே. அப்புறமென்ன)
நன்றி ராஜன் (டிஸ்கி! டிஸ்கி!)
நன்றி டீச்சர் (ரங்கோலி ட்ரை பண்ணினேன். பட் நாட் தி தாலி. அடுத்த தடவை பண்ணிடறேன்).
நன்றி தாரணி பிரியா (அப்போ கோவை வந்தா ஹோட்டல் செலவு மிச்சம்)
"ரசம்" போறோமோ இல்லையோ நீங்க போட்டிருக்கற போட்டோஸ் எல்லாம் கலக்கல் ,சாப்பிட்டு முடிச்ச எபெக்ட் வித்யா.
***
ரகு இட்லி உப்புமாஆர்டர் பண்ணி கடுப்படித்தார்
***
நீங்க ரொம்ப நல்ல பொண்ணா இருக்கீங்க :)- இதேமாதிரி நான் ஆர்டர் பண்ணி இருந்தா அங்கேயே ஒரு கொலை நடந்து இருக்கும் !
பட், இட்லி உப்புமா நல்லா தான் இருக்கும் ! வீட்டுல நீங்க இட்லி மிச்சம் இருக்குன்னு பண்ணினா அது எப்படி சாப்பிட பிடிக்கும் :)- ?
எனக்கு பசிக்குது. நான் போய் சமைக்கணும். :-)
அப்போ இந்த தடவை கொஞ்சம் disappointedனு சொல்லுங்க
//பரோட்டாவை ஒரு பீஸ்க்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை. திகட்டுகிறது//
ஃபோட்டோல பாக்கறதுக்கு நல்லாதாங்க இருக்கு. ஹும்..சாப்பாட்டு விஷயத்துல நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்
ஒரு மாசம் கழிச்சு இப்பதான் பாக்கமுடியுது, வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதலாமே, தொடர்ந்து எழுதுங்க
adutha month chennaiku vanthuduvomla... apporam paarunga naanga ippidi photo potu ungala kadupakkurom....
//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கும்//
ippidi oru risk venam.... 225 rupees naan tharen vidhya...
நன்றி மிஸஸ் தேவ்.
நன்றி மணிகண்டன் (மீந்த இட்லியை வீணாக்காமல் இருக்க கண்டுபிடித்த டிஷ் தானே. அதான் abide by rules)
நன்றி ட்ருத்.
நன்றி குறும்பன் (கண்டிப்பாக முயற்சிக்கிறேன்).
நன்றி இராஜி (ஆஹா வாங்க வாங்க. ஜோடி போட்டுக்கலாம்:))
//டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.//
இன்னும் சாப்புடல.. டைம் பாருங்க... ஹ்ம்ம்...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
நல்லா எழுதி இருக்கீங்க! :-)
கேதட்றல் ரோட்டில் இருக்கும் ( சுத்தம் குறைவான ) ஸ்ரிக்ரிஷ்ணா ஸ்வீட்சின் நாஸ்டா செக்சன் பற்றி எழுதுங்கள்!
இதுக்கு இதனை காசு தண்டம் அழுகனுமா? எங்கூருக்கு வாங்க, எல்லாமே நாங்க செஞ்சு தரோம், ( பார்சல் கூட உண்டு)
//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கு//
கொலை முயற்சிக்கு 307 தானே?
எங்க ஊருக்கு விளம்பரமா? நன்றிங்க!
நாக்குல ஜலம் கொட்டுது..
நன்றி பேநா மூடி.
நன்றி நர்சிம்.
நன்றி விஜயசங்கர்.
நன்றி மயில் (தாரணி வேற கூப்பிட்ருக்காக.)
நன்றி கார்க்கி.
நன்றி பழமைபேசி.
நன்றி ஆதி.
நல்ல வேளை..எங்க ரொம்ப பாராட்டிருவீங்களோன்னு நெனச்சேன். இது கொங்கு ரெஸ்டாரன்ட் இல்லைங்க. போங்கு ரெஸ்டாரன்ட்.
ரெகுலர் ஐட்டத்தையே (லைக் மாட்டார் பனீர்) 'பள்ளிப்பாளையம் பாலாடை கட்டி குருமா' அப்டின்னு ஊரு பேர போட்டு translate பண்ணி ஏமாத்துறவங்க.
காசு வாங்கட்டும். ஆனா வாங்கற காசுக்கு portion ஆவது சரியா குடுக்கணும். 75 80 ரூவா குடுத்து தோசை வாங்கினா நம்ம வீட்டு தோசை அளவுக்கு ஒன்ன குடுத்துட்டு அதுல 400g மசாலாவ அடிச்சு குடுத்தாங்க. I was terribly disappointed.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்ராஜ்.இப்போ வெகு சில உணவகங்கள் தான் ஜெனரஸ் போர்ஷன் தருகின்றன. ரசம் போர்ஷன் நார்மல் தான். பனீர் என்றுமே எனக்கு நார்த் இண்டியன் ஐட்டம் தான்.
Post a Comment