ரிலையன்ஸ் நெட்வொர்க்கின் விளம்பரம் பார்த்தீர்களா? அட்டகாசமான இசை. பைபர் கான்செப்ட் என வித்தியாசமாய் யோசித்திருந்தாலும், ஹ்ரிதிக் ரோஷன் உடம்பை வளைத்து ஆடுவது ஹாவ்வ்வ்வ்வ்வ். போரிங் ரோஷன். போர்பான் பிஸ்கெட்டிற்கும் உங்க டான்ஸுக்கும் என்ன சம்பந்தம். வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க சார்.
*************
லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வரும் "Khanabadosh" பாட்டைக் கேளுங்கள். சங்கர்- எஹ்சான் - லாய் பின்னியிருக்கிறார்கள். முதல் தடவை கேக்கும்போது ரஹ்மான் குரல் மாதிரியே இருந்தது. நெட்டில் தேடியதில் மோஹன் என போட்டிருக்கிறார்கள். லவ்லி வாய்ஸ். அசின் - வேண்டாம் அம்மணி. இந்த ப்ரீக்கி கெட்டப்பெல்லாம் உங்களுக்கு கண்றாவியாய் இருக்கிறது. அதுவும் இந்த பாட்டில் ஆடுகிறேன் பேர்வழி என அவர் பண்ற சேட்டை எண்ட குருவாயூரப்பா.
**************
NDTV Profitல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராஜா சாரி ராசாவின் பேட்டி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ஆவுன்னா "In Rasa's period" ன்னு அவர் பண்ண அலம்பல் தாங்க முடியல. சார் நீங்க மத்திய அமைச்சர் தான். மொகலாய சக்ரவர்த்தி ரேஞ்சுக்கு "என் ஆட்சியில்.."ன்னு நீட்டி முழக்கிட்டிருந்தார்.
*****************
ஐ - பாட்
சர்வம் படத்தில் வரும் நீதானே பாட்டு. யுவன் வாய்ஸும் அந்த வரிகளும் க்ரியேட் பண்ணும் மேஜிக்.
நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்
இதயச் சதுக்கம் அதிருதே
உன் ஞாபகம் வந்தபின் அடங்குதே
ஒரு கணம் வாழ்கிறேன்
மறுகணம் சாகிறேன்
இரண்டுக்கும் நடுவில் நீதானே
******************
சுமார் எட்டு மாதங்களுக்கு முன் ஒரு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப அத்தியாயங்களிலே அவ்வளவு அச்சுப் பிழை. எனக்கு நேரம் கிடைத்து புத்தகம் எடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் இந்த அச்சுப் பிழைகளை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டது. மூடி பீரோவில் வைத்துவிட்டேன். ஒரே ஒருவர் என்றாலும் கூட வாசகன் வாசகன் தானே. குவாலிட்டி ப்ரொடெக்ட் என்பது எல்லாத் துறைகளிலுமே அவசியமாகிறது. என்ன நான் சொல்றது? ஏனோ இரு நாட்களாக அந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டுமென்ற உந்துதல். முழு வீச்சில் முடித்தாகிவிட்டது.
October 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அந்தப் பாட்டை பத்தி காக்டெயில் எழுதனும்ன்னு நினைச்சிருந்தேன்.. சூப்பர் பாட்டு, குரலும்..
அசினுக்கு செட்டாகலையா? ஆவ்வ்... சீக்கிரம் கல்யாணம் பண்னனுனும் போல :))
ரித்திக் சூப்பி போட்ட மாங்கொட்டை மாதிரி. என்னவோ விளம்பரம் போங்க. அதுவும் அந்த தாடியும், தலை முடியும், கோவில் வாசலில் இருக்கிறவங்களை நியாபக படுத்துகிறது.
---
ராசா- எவ்வளவு பெரிய காரியம் பண்ணிட்டு என்ன ஒரு தொனாவட்டு. எனிவே..காங்கிரஸ்க்கு பணம் வேணும். அது குடுத்துட்டா, ஸ்பெக்ட்ரம் அப்புறம் ரெய்ட் எல்லாம் போயிடும்
---
சர்வத்தில் அந்த பாலைவனப்பாட்டு மியூசிக் அருமை. இந்த பாடலை கேட்டதில்லை.
வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க சார். //
அவருக்கு தெரிஞ்சதைத் தானே அவர் பண்ணுவாரு. :)
Khwab Jo from London Dreams கேட்டீங்களா வித்யா. மெலடி சாங்க்ல என்ன ஒரு ம்யூஸிக். கலக்கல்.
அசின் - வேண்டாம் அம்மணி. இந்த ப்ரீக்கி கெட்டப்பெல்லாம் உங்களுக்கு கண்றாவியாய் இருக்கிறது. //
அதே தான். இந்த அம்மிணி பாலிவுட்ல பண்ற அலும்பு தாங்கல. நமக்குத் தான் பார்க்க சகிக்கல.
துணுக்ஸ் நல்லா இருந்துதுங்க. யூ - ட்யூப் தான் வீட்டுல போய் பாக்கணும்.
நன்றி கலா அக்கா.
நன்றி கார்க்கி.
நன்றி பின்னோக்கி.
நன்றி விக்னேஷ்வரி (எனக்கு கானாபதோஷ் தான் நெம்ப பிடிச்சிருக்கு).
நன்றி ட்ருத்.
//ரித்திக் சூப்பி போட்ட மாங்கொட்டை மாதிரி. என்னவோ விளம்பரம் போங்க. அதுவும் அந்த தாடியும், தலை முடியும், கோவில் வாசலில் இருக்கிறவங்களை நியாபக படுத்துகிறது.//ஹா ஹா
எனக்கும் இந்த விளம்பரத்தை பார்த்தாலே பிடிக்காலே.ஹ்ருத்திக்கான்னு கேட்கதோனுது பார்க்க சகிக்கல...
//குவாலிட்டி ப்ரொடெக்ட் என்பது எல்லாத் துறைகளிலுமே அவசியமாகிறது. என்ன நான் சொல்றது? //
Sari thaanga :)
//ஏனோ எனக்கு பிரபல கல்விக் குழுமத்தின் தாளாளர் நினைவுக்கு வந்தார்:)//
சரிங்க.. பார்த்து கொஞ்சம் பத்திரமா இருங்க.
சீக்கிரம் கல்யாணம் பண்னனுனும் போல :)//
யாரு அசினா? கார்க்கியா?
//ஏனோ எனக்கு பிரபல கல்விக் குழுமத்தின் தாளாளர் நினைவுக்கு வந்தார்:)//
பாத்துங்க, ஆட்டோ இல்ல, காலேஜ் பஸ்ஸே வரும்
ஆனா ஒருத்தருக்கு இங்கிலிபிஸுல பேச தெரியலங்கறதுக்காக அவரை கிண்டல் பண்ணவேணாமே...
ஹ்ரிதிக் இவ்வளோ மோசமான டான்ஸரா ??
:-)
நன்றி மேனகா.
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி ஆதி.
நன்றி குறும்பன் (கிண்டல் செய்யவில்லை. திருத்திக்கொள்ள முயற்சி செய்யலாமே. அதுவும் மீடியாவில் பேசும்போது).
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி வினிதா.
//ஏனோ இரு நாட்களாக அந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டுமென்ற உந்துதல். முழு வீச்சில் முடித்தாகிவிட்டது//
எந்தப் புத்தகம்ன்னு சொல்லவே இல்லை!!!
Post a Comment