நீங்க நல்லவரா கெட்டவரா? தெரியலேயேப்பா...தெரியலயே.. ஸ்டைலில்
ராமதாஸிடம் - உங்களை திமுக கூட்டணில சேர்த்துக்குமா? சேர்த்துக்காதா?
அம்மாவிடம் - ரெஸ்ட் எடுக்க கொடநாடு பெஸ்ட்டா? சிறுதாவூர் பெஸ்ட்டா?
நடிகர் விக்ரமிடம் - உங்க அடுத்த படம் 2016ல ரிலீஸாகிடுமா?
கலைஞர் கருணாநிதியிடம் - டெல்லிக்கு மெசேஜ் கொடுக்க கடுதாசி பெட்டரா? தந்தி பெட்டரா?
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் - எது ஈசி? இடமிருந்து வலம் தலையாட்றதா? வலமிருந்து இடம் தலையாட்றதா?
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சிலரிடம் - எந்த மொழிப் படங்கள் சுடுவதற்கு ஏற்றவை? கொரியப் படங்களா? ஜப்பானியப் படங்களா?
தமிழ் மையம் ஜெகத் கஸ்பரிடம் - எது சுலபம்? பத்திரிக்கையாளர்களின் கேள்விகளா? சிபிஐ கேள்விகளா?
வரும்....ஆனா வராது...ஸ்டைலில்
மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் - ஊழல் நடந்துச்சா இல்லையா? = நடந்துச்சு.. ஆனா நடக்கலை
இளங்கோவன்/யுவராஜிடம் - காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா? - போட்டியிடும் ஆனா போட்டியிடாது.
சிபிஐயிடம் - ஆ.ராசாவை கைது செய்வீங்களா மாட்டீங்களா? = செய்வோம். ஆனா செய்யமாட்டோம்..
January 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
:)))
//இளங்கோவன்/யுவராஜிடம் -//
Why Yuvaraaj here?? By mistake??
போட்டு தாக்குங்க..
//Blogger மோகன் குமார் said...
:)))
//இளங்கோவன்/யுவராஜிடம் -//
Why Yuvaraaj here?? By mistake??
January 21, 2011 12:40 PM//
லோக்கல் பாலிடிக்ஸ்ல ரொம்ப வீக்காண்ணே நீங்க.. ஒன்லி இன்டர்நேஷனல் பாலிடிக்ஸா? எப்ப பார்த்தாலும் கிரிக்கெட்டிலேயே இருங்க..
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பேரு தான் யுவராஜ்..
வர வர ரொம்ப அரசியல் பேசறீங்க. புது ஸ்கூட்டி பத்திரமா இருக்கணுமா, வேண்டாமா...
என்ன ஒரே அரசியல் நெடி வீசுது.. ஏதாவது கட்சி கிட்சி ஆரம்பிக்கறமாதிரி உத்தேசமா? ஆமாம்.... ஆனா இல்லை... அப்படின்னு பதில் சொல்லிடாதீங்க.. ;-) ;-)
நல்லாயிருக்கு. இது போல அடிக்கடி ஒவ்வொருத்தரையும் பிச்சுக்க வையுங்க.
:-)))
வீட்டுக்கு ஆட்டோ நிச்சயம்
:-)))))))))))))))
அதானே என்ன பதிவுக்கு பதிவு அரசியல் கிண்டல் பலமா இருக்கு? அஞ்சாநெஞ்சன் கிட்டயேவா?
ஹா ஹா.. நல்லாருக்குங்க.
நல்லாருக்குங்க....But L.K sonna madiri வீட்டுக்கு ஆட்டோ நிச்சயம்...all the best
ஒரு கேள்வி மிஸ்ஸிங்க்.
ரஜினியிடம், நீங்க அரசியலுக்கு வருவது இருக்கட்டும், இந்த தேர்தலுக்கு ஏதாவது வாய்ஸ் கொடுப்பீங்களா மாட்டீங்களா?
அனைத்தும் சூப்பர், அட்டகாசம், தொடர்ந்து கலக்குங்க!
(ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்)
ஹா ஹா...
ஹா ஹா..
Post a Comment