சேவல் சண்டையை பிண்ணனியாய் வைத்து விறுவிறுப்பான படம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பேட்டைக்காரன் (கவிஞர் ஜெயபாலன்), அவர் கூட்டாளிகள் அயூப், துரை (கிஷோர்), கருப்பு (தனுஷ்) ஆகியோர் சேவல் சண்டையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். இவர்களை ஒருமுறையாவது ஜெயித்துவிடவேண்டும் என்ற வெறியோடு அலையும் இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி அண்ட் கோ. இரு குழுக்களுக்கும் பிரச்சனை ஆகிவிடுவதால் இனி இன்ஸ்பெக்டருடன் சேவல் சண்டைக்கேப் போகமாட்டேன் எனக் கூறிவிடுகிறார் பேட்டைக்காரன். கூட்டாளியான அயூப்பைக் கொன்றதோடு மட்டுமில்லாமல், ஸ்டேஷனில் வைத்து அவமானப்படுத்தப்படுவதால் பேட்டைக்காரன் இன்ஸ்பெக்டரிடம் சவால் விடுகிறார். சேவல் சண்டையில் இன்ஸ்பெக்டரின் ஒரு சேவல் ஜெயித்தாலும் மொட்டைப் போட்டுக்கொண்டு, காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதோடில்லாமல், அதன்பின் சேவல் சண்டையில் ஈடுபடவே கூடாதென்பது பந்தயம். பேட்டைக்காரன் ஜெயிக்காது என அறுத்துவிடச் சொல்லும் சேவலை வைத்துக்கொண்டு பேட்டைக்காரனை மீறி களமிறங்குகிறார் தனுஷ். அந்தப் போட்டியில் அவருக்கு கிடைக்கும் வெற்றியானது அவருக்கு விளைவிக்கும் சங்கடங்களே மீதி ஆட்டம்.
மற்றுமொரு நேட்டிவிட்டி/மதுரை/கிராமத்துப் படமாக இல்லாமல் ஒரு வித்யாசமான கதைக்களத்தை அமைத்த வெற்றி்மாறனுக்குப் பாராட்டுகள். மனிதர்களின் நம்பிக்கை, கோபம், துரோகம், வஞ்சகம், காதல் போன்ற உணர்வுகளை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் திரைக்கதையில். பேட்டைக்காரனாக வரும் ஜெயபாலன் அருமையாக செய்துள்ளார். சேவல்களைப் பற்றி தன் கணிப்பு தவறவே தவறாது என்ற எண்ணத்தை தனுஷ் உடைக்கும்போது மருகுபவர், பின்னர் படிப்படியாக வில்லத்தனம் காட்டும்போது வெளுத்து வாங்குகிறார். அதுவும் பணத்தை தொலைத்துவிட்டதால் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் தனுஷிற்கும் கிஷோருக்கும் லாவகமாக சண்டை மூட்டி விடுவதாகட்டும், அம்மா செத்துப் போச்சு என புலம்பும் தனுஷைப் பார்த்து ஒரு நொடி குரூரப் புன்னகை புரியும்போதும் அசத்துகிறார். தனுஷிற்கு அசத்தலான கேரக்டர். மற்ற இடங்களை விட ஹீரோயினிடம் இவர் காட்டும் ரியாக்ஷன்களும் டயலாக்குகளும் க்ளாப்ஸை அள்ளுகின்றது. கிஷோர் நன்றாக நடித்திருக்கிறார். அந்த விக் அவருக்கு பொருந்தவில்லை:(
பாடல்கள் தனித்து இல்லாமல் படத்தோடு வருவது மிகப் பெரிய ப்ளஸ். அதுவும் ஒத்த சொல்லால பாட்டில் தனுஷின் இயல்பான ஆட்டம் சூப்பர். இந்தப் பாட்டிற்கும் யாத்தே யாத்தே பாட்டிற்கும் தியேட்டரில் கைத் தட்டிக்கொண்டேயிருந்தார்கள். ஹி ஹி. நானும்:) பிண்ணனி இசை ஆஹா ஒஹோ ரகமில்லையென்றாலும் மோசமில்லை. இன்னும் கொஞ்சம் மெனெக்கட்டிருக்கலாம். ஒளிப்பதிவும் ரொம்ப நன்றாக இருக்கிறது. கதை பெரும்பாலும் இரவில் நடப்பதாகக் காட்டுப்படுவதால் ஸ்க்ரீனிலும் இருட்டடிக்கிறது. வெற்றிமாறனின் வசனங்கள் மதுரை ஸ்லாங்கில் நன்றாக இருக்கிறது. அதுவும் தனுஷ் ”என்னைய காதலிக்கறன்னு சொல்லி ஏமாத்தினியில்ல. அதுக்கு ஃபைன்” என தாப்ஸியிடம் காசு புடுங்கும்போதும், “நாங்கல்லாம் சுனாமியிலே சும்மிங்க போட்றவய்ங்க”, தம்பி தம்பி என சேவலிடம் பேசும்போதும் கலக்குகிறார்.
ஆடுகளம் - அசத்தல்களம்:)
January 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
கதாநாயகி பற்றி ஒன்றும் சொல்லாததை கண்டிக்கிறேன்
புது வருஷத்தில் முதல் வெற்றி படம் அப்படின்னு சொல்றாங்க பாக்கணும்
இப்படித்தான் பொல்லாதவன் படத்தையும் ஆஹா ஓஹோ’ன்னு சொன்னாங்க.
யாத்தே பாடலைக் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது!!
மதுரை ஏரியாவுக்கு கொஞ்சம் கூட சூட் ஆகாத கதாநாயகி முகம்.
மக்களைக் காட்டறேன், மக்களின் வாழ்வைக் காட்டறேன், யதார்த்தத்தைக் காட்டறேன்னு, வெட்டுக் குத்தைக் காட்டுவது தான் சமீபத்திய படங்களின் சக்ஸஸ் ஃபார்முலா போலிருக்கு.
Looks like a good movie.... :-)
Dhanushin vetrip pathiyil meendum oru padam endru ellaarum ezhuthukireergal. parkkanum.
நன்றி எல் கே (ஹி ஹி அழகுல மயங்கிட்டதால மறந்துட்டேன்).
நன்றி மோகன்.
நன்றி விஜய் (ஹீரோயின் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறார். இதுல ரொம்ப ரத்தம் சிந்தலைங்க. யாத்தே பாட்டு - ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்:)))
நன்றி சித்ரா.
படம் வெற்றின்னா நல்லது தான், ஆனா எனக்கு பாக்காமலேயே பிடிக்கல! :D
பார்க்கணும்.என் பசங்களுக்கு படம் பிடிச்சு இருக்கு.
ம் எல்லாருமே நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.
இனி எப்போ தியேட்டருக்கு போய் சினிமா பாப்பேனோ :-(
இந்த மாதிரி விமர்சனங்களை படிச்சு திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.. யாத்தே யாத்தே.. கேட்டேன்.. கேட்கிறேன்.. ;-)
//Vijay said...
இப்படித்தான் பொல்லாதவன் படத்தையும் ஆஹா ஓஹோ’ன்னு சொன்னாங்க.
யாத்தே பாடலைக் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது!!
மதுரை ஏரியாவுக்கு கொஞ்சம் கூட சூட் ஆகாத கதாநாயகி முகம்.
மக்களைக் காட்டறேன், மக்களின் வாழ்வைக் காட்டறேன், யதார்த்தத்தைக் காட்டறேன்னு, வெட்டுக் குத்தைக் காட்டுவது தான் சமீபத்திய படங்களின் சக்ஸஸ் ஃபார்முலா போலிருக்கு.
//
;) ;)
பெரியவங்க சொல்றீங்க! முடிஞ்சா பாக்கலாம்! எங்க ஊர் 'டெண்ட் கொட்டாய்' மாதிரி செளகர்யங்கள் இல்லாததால படமே பாக்கர்து கிடையாது..
மற்ற இடங்களை விட ஹீரோயினிடம் இவர் காட்டும் ரியாக்ஷன்களும் டயலாக்குகளும் க்ளாப்ஸை அள்ளுகின்றது.//
யெஸ்.. யெஸ்.!
Post a Comment