தமிழ் திரையிசைப் பாடகர்களில் என்னை ரொம்பவே கவர்ந்தவர் ஸ்வர்ணலதா. பெயரைப் போலவே குரலும் தங்கம். Flawless voice. காதல், பிரிவு, ஏக்கம், துள்ளல் என எல்லா விதமான உணர்வுகளையும் இவர் பாடும்போது உணர முடியும். உச்சஸ்தாயில் பிசிறு தட்டாமல், அலட்டாமல் பாடுவதில் வல்லவர். எம்.எஸ்.வியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இளையராஜா இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.
முறையாக கர்நாடக சங்கீதம் கற்றவர். ஹார்மோனியமும் தெரியும். 1989ல் ஜேசுதாஸோடு டூயட் மூலமாக இசைப் பயணத்தை தொடங்கியவர். எவ்வளவு ஹிட்ஸ். நிறையப் புதையல்கள். ஆனால் இவரின் குரலிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது சந்தேகமே. மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் சுத்தமான தமிழ் உச்சரிப்பைக் கொண்டிருந்தவர்.
இவர் பாடியதில் நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். சிலவற்றை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.
குயில் பாட்டு வந்ததென்ன இளமானே - என் ராசாவின் மனசிலே
மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் - வள்ளி
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலைபாயுதே
ஹாய் ராமா யே க்யா ஹுவா - ரங்கீலா
போறாளே பொன்னுத்தாயி - கருத்தம்மா
நீதானே நாள்தோறும் - பாட்டு வாத்தியார்
மேலே குறிப்பிட்டுள்ள பாடல்களில் தனியாக இருக்கும் பெண்ணின் ஏக்கம், சோகம், காதல், தாபம் என அத்தனையும் மிக அழகாக கேட்கும்போதே காட்சியாய் விரியும்.
ஆட்டமா தேரோட்டமா - கேப்டன் பிரபாகரன்
அக்கடான்னு நாங்க உடை போட்டா - இந்தியன்
முக்காலா முக்காபுலா - காதலன்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜெண்டில்மேன்
மெட்ராஸ சுத்திக் காட்டப் போறேன் - மே மாதம்
மெர்க்குரி பூக்கள் - ரட்சகன்
ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கும்மி அடி கும்மி அடி - சில்லுன்னு ஒரு காதல்
போவோமா ஊர்கோலம் - சின்ன தம்பி
இந்தப் பாடல்களைக் கேட்கும்போது அவர் குரலில் இருக்கும் துள்ளல் கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும். கால்கள் தாளம் போட ஆரம்பிக்கும்.
டூயட் பாடல்களில் இழையோடும் காதல் ஒரு சின்னப் புன்னகையை இதழோரம் தவழ விடும்.
கீரவாணி
மலைக் கோவில் வாசலிலே - வீரா
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட - உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
மல்லிகை மொட்டு மனசத் தொட்டு
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்மதுரை
அந்தியிலே வானம் - சின்னவர்
நான் ஏரிக்கரை மேலிருந்து
மெல் இசையே - மிஸ்டர் ரோமியோ
குச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே
மாயா மச்சீந்த்ரா - இந்தியன்
சித்திரையில் என்ன வரும் - சிவப்பதிகாரம்
இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். போறாளே பொன்னுத்தாயி பாட்டிற்காக தேசிய விருது கிடைத்தது. நுரையீரல் பிரச்சனைக் காரணமாக நேற்று (12-09-2010) இறைவனடி சேர்ந்தார்.
உங்கள் ஸ்வர்ண குரலுக்கு என்றுமே அழிவில்லை.
September 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
முரளியை தொடர்ந்து ஸ்வர்ணலதாவின் மரணம் அதிர்ச்சிதான் :((
Ilam vayathu pramugarkalellaam iraivanadi serginranar.Muraliyai thodarnthu ivarum.Iruvarathu aathmaavum saanthiyadaiya praarthippom.
Her voice was unique...
May her soul rest in peace.
May her soul rest in peace
// 1989ல் ஜேசுதாஸோடு டூயட் மூலமாக இசைப் பயணத்தை தொடங்கியவர்//
அவர் முதல் பாட்டு நீதிக்கு தண்டனை படத்தில் சின்னஞ்சிறு கிளியே கண்ணமா பாடல்.
May her soul rest in peace
எறும்பு
அந்தப் பாட்டை ஜேசுதாசுடன் தான் பாடினார்.
http://www.youtube.com/watch?v=AaLYIYMyqSE
//மயில் said...
முரளியை தொடர்ந்து ஸ்வர்ணலதாவின் மரணம் அதிர்ச்சிதான் :(( //
ரிப்பீட்ட்ட்ட்
I was shocked சில நாட்களாகவே இவர் எந்தப் பாடலும் பாடவில்லையே என்று என் மனைவியிடம் கூறிக்கொண்டிருப்பேன்.
புகார் படத்தில் சுந்தா ஹை மேரா குதா பாடலில் இவர் ஹம்மிங்க் மட்டுமே செய்திருப்பார். But that is a mesmerising one. அவர் மறைவு அவரது குடும்பத்தினருக்குப் பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். இந்தத் துயரிலிருந்து மீண்டு வர அவரது குடும்பத்தினருக்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். இசையுலகின் மிக சோகமான தருணம்.
இன்னும் பல ஹிட் பாடல்களைப் பாடியவர். சிறிய வயதென்பதால் அனைவருக்கும் வருத்தமே. :-(
மிகவும் வேதனையடைகிறேன் ஸ்வர்ணலதாவின் மரணச்செய்தி கேட்டு
அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்::(((
//6000த்திற்கும் மேற்பட்ட //
7000க்கும் மேலான்னு டைம்ஸ் ஆப் இந்தியா சொல்லுது.
என்ன வாய்ஸ்மா ஸ்வர்ணலதாவுக்கு..? யாராவது post போட்ருக்காங்களா?னு தேடிட்டே இருந்தேன்.
அன்புள்ள மன்னவனே - படம் பெயர் நினைவுல இல்ல (கார்த்திக், நக்மா சுந்தர்.சி இயக்கம்) ரொம்ப நல்லா பாடி இருப்பாங்க.
37 வயசு தான் ஆவுது. ரொம்பவே ஷாக் எனக்கு. :((
அம்பி
அந்தப் படம் மேட்டுக்குடி. ஹிந்துவில் 6000+ எனப் போட்டிருந்தது.
May her soul rest in peace.:((
ஸ்வர்ணலதாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்
இந்த வயதில் அநியாய மரணம் தான்.........அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்போம்.
அதிர்ச்சியான செய்தி தான்.
பாடல்களின் தொகுப்பு நன்றாக உள்ளது வித்யா.
சோகம்தான்
முரளியை தொடர்ந்து ஸ்வர்ணலதாவின் மரணம் அதிர்ச்சிதான்.
ஆன்மா சாந்தியடையட்டும்.
// //6000த்திற்கும் மேற்பட்ட //
7000க்கும் மேலான்னு டைம்ஸ் ஆப் இந்தியா சொல்லுது.
//
5000 சொச்சம் என்பதுதான் உண்மை.
பிணமாக பார்க்க பிடிக்கவில்லை.போகவில்லை :(
போறாளே பொன்னுத்தாயி...என்றபடியே போன குயில்
எனக்கும் பிடித்த குரல். ஆனால் இறந்த பிறகு அவர் குரலை இப்போதெல்லாம் கேட்க சோகம் தான் அதிகம் வருகிறது. இப்போ ஏனோ அதிகம் ரசிக்க முடியலை. போக போக மாறலாம்
Post a Comment