28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. வாழ்த்துகள் தோனி அண்ட் கோவிற்கு. எப்பவுமே என்னுடைய ஃபேவரைட் ப்ளேயர் கங்குலி தான். ஒரு சராசரி ரசிகையாய், டெக்னிகல் அறிவெல்லாம் இல்லாதவளாய், கங்குலி போன பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்;) இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா விளையாடிய போட்டிகளை மட்டுமே பார்த்தேன்.
”கடங்காராப் பாவி. லட்டு மாதிரி வந்த கேட்ச வுட்டுட்டானே.”
“வெளம்பரத்துல மட்டும் நன்னா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுங்கடா.”
“குருட்டுக் கண்ணாடியப் போட்டுண்டு புல்லப் புடுங்கறது பாரு பிரகஸ்பதி”
”செத்த வேகமா ஓடப்பிடாது. நெடுஞ்சாங்கிடையா விழுந்து கிடக்கிறான் பாரு”
“ஏன் நம்மாளுங்க யூனிஃபார்ம் கலர மாத்தினாங்க? இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது?”
இதெல்லாம் சென்ற வேர்ல்ட் கப்பின் போது என் பாட்டி அடித்த கமெண்ட். 87 வயதில் பாட்டிக்கு அபார ஞாபக சக்தி. யூனிஃபார்ம் கலரை வைத்தே எந்த டீம் என சொல்லுமளவிற்கு. அண்ணாக்கள் யாரும் பாட்டியை மேட்ச் பார்க்க விடவே மாட்டார்கள். குறிப்பாக டெண்டுல்கர் விளையாடும்போது. டெண்டுல்கர் ஃபேஸ் பண்ணும் ஒவ்வொரு பாலின் போது பாட்டி கேட்டுக்கொண்டேயிருப்பார் “டெண்டுல்கர் அவுட ஆயிட்டானா?”. இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(
****************
வெயில் வாட்டி வதைக்கிறது. பத்து நிமிடங்கள் மாடிக்கு சென்று துணி காயவைத்துவிட்டு வருவதற்குள் கண்கள் இருட்டி, தலைவலியே வந்துவிடுகிறது. கத்திரியை நினைத்தால் இப்பவே கண்ணக்கட்டுது. சன்ஸ்க்ரீன், கூலர்ஸ், பானைத் தண்ணீர், பழங்கள், மோர், கூழ் போன்றவை என்னுடைய சாய்ஸ். சூரிய பகவானே கொஞ்சம் கருணைக் காட்டு.
*****************
குழந்தைகளுக்கு நல்லது கெட்டது ஆகியவற்றை பெற்றோர் தான் சொல்லித்தரனும். சென்ற ஞாயிறு அண்ணா நகர் டவர் பார்க்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலில் சறுக்கு மரத்தில் ஏறி விளையாட குழந்தைகள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆறு வயது வாண்டு வரிசையில் நின்றது. எங்கிருந்தோ ஒருவர் (அப்பாவாகத்தான் இருக்கனும்) வந்து குழந்தையிடம் “இங்க ஏண்டா நின்னுகிட்டிருக்க? முன்னாடி போய் ஏறிச் சறுக்க வேண்டியதுதானே” எனக் கடிந்துக்கொண்டே அந்தப் பையனை முன்னாடி இழுத்துச்சென்றார். மற்ற பெற்றோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “ஏன் சார் எல்லா குழந்தைகளும் வெயிட் பண்ணித்தானே சார் போறாங்க?” என்று கேட்டதற்கு உன் வேலையப் பார்த்துகிட்டுப் போ என ஏகவசனத்தில் திட்டினார். பின்னர் அந்தப் பையனை தரதரவென இழுத்துக்கொண்டு போய்விட்டார். வருத்தமாக இருந்தது. நல்வழிக் காட்ட வேண்டியவர்களே, குறுக்குவழியை அதுவும் சின்ன வயதிலேயே போதிப்பது அந்தக் குழந்தைக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல:(
********************
மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, வாக்கிங் ஸ்டிக், காலில் மாவுக்கட்டு சகிதமிருந்த ஒரு சின்னப் பெண்ணை அழைத்துச் செல்ல அப்பெண்ணின் அம்மா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும்போது அந்தப்பெண்ணின் அம்மா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு ஓடும்போது, ஹீல் உடைந்து anklet fracture ஏற்பட்டுவிட்டதாம். இன்னும் 6 மாதங்களுக்கு ஓடவோ குதிக்கவோ கூடாது என டாக்டர் சொல்லியிருக்கிறாராம். குழந்தை எப்படிங்க ஓடியாடி விளையாடாம இருக்குமென்றார் என்னிடம். குழந்தை என்ற நினைப்பு உங்களுக்கிருந்திருந்தா ஹீல்ஸ் போட அனுமதிச்சிருப்பீங்களான்னு கேக்க நினைச்சேன். வெந்தப் புண்ணில் வேலப் பாய்ச்ச வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன். பெரியவங்களையே ஹீல்ஸ் அவாய்ட் பண்ணச்சொல்றாங்க. இவங்க என்னடான்னா குழந்தைக்கெல்லாம் ஹீல்ஸ் போட்டு அழகுப் பார்க்கறாங்க:(
*********************
அதீதம் இணைய இதழில் என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு.
April 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
அதீதம் இணைய இதழில் என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு.
..... Super! Congratulations!
ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு ஓனரா ஏ சி ரூம் அமர்ந்தால் வெயிலிலிருந்து தப்பிக்கலாம் :))
இந்த ஹை ஹீல்ஸ் செருப்பால முதுகில் டிஸ்க்கில் ஆபரேஷன் செய்து கொண்டார் எனக்கு தெரிந்த ஒரு பெண்.என்னா ஸ்டைல் வேண்டி கிடக்குதோ.
//இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(//
hmmm :(:(:(
//வெயில் வாட்டி வதைக்கிறது// உண்மை தான்
//என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.//
வாழ்த்துக்கள்
:)) நல்லாருக்கு
பாட்டி :(
அதீதத்திற்கு வாழ்த்துகள் கவிதாயினி
துணுக்ஸ் நன்று.
// ”கடங்காராப் பாவி. லட்டு மாதிரி வந்த கேட்ச வுட்டுட்டானே.”
“வெளம்பரத்துல மட்டும் நன்னா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுங்கடா.”
“குருட்டுக் கண்ணாடியப் போட்டுண்டு புல்லப் புடுங்கறது பாரு பிரகஸ்பதி”
”செத்த வேகமா ஓடப்பிடாது. நெடுஞ்சாங்கிடையா விழுந்து கிடக்கிறான் பாரு”
“ஏன் நம்மாளுங்க யூனிஃபார்ம் கலர மாத்தினாங்க? இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது?”//
:-))
//ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு ஓனரா ஏ சி ரூம் அமர்ந்தால் வெயிலிலிருந்து தப்பிக்கலாம்//
:-))
வெயிலில் இருந்து தப்பிக்கலாம்.own நஷ்டத்தில் இருந்து தப்ப முடியுமோ? :-)
//“டெண்டுல்கர் அவுட ஆயிட்டானா?”. இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(//
=((
வெயில் பத்தி சொல்வதற்கில்லை. மேல் மாடியில் இருந்து நாலு படி கீழே இறங்க முதலே வேர்வை ஒழுகுது. நான் பாத்டப்புள்ளயே குடிதனம் நடத்த பிளான் போட்டிருக்கேன்.
//ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு ஓனரா ஏ சி ரூம் அமர்ந்தால் வெயிலிலிருந்து தப்பிக்கலாம் :)) //
எப்டி எல்லாம் யோசிக்கறாங்க.
அதீதத்திற்கு வாழ்த்துக்கள்.
கடைசி இரண்டு சம்பவங்களிலும், பெற்றோரின் பொறுப்பில்லாத்தனம் தெரிகிறது. நேர்வழியில் முன்னேறுதல், முறையான ஆடை/அணிகலன்கள் எல்லாமே ”பருவத்தே பயிர்செய்ய” வேண்டிய விஷயங்கள்.
ஏஸி வேணும்னா, ஏன் சொ.செ.சூ. வச்சுக்கணும்? “விண்டோ ஷாப்பிங்” பண்ணாப் போதுமே? அதாவது ஏஸி கடைகளாப் பாத்து ஏறியிறங்கினாப் போகுது!! :-))))
//எப்பவுமே என்னுடைய ஃபேவரைட் ப்ளேயர் கங்குலி தான். ஒரு சராசரி ரசிகையாய், டெக்னிகல் அறிவெல்லாம் இல்லாதவளாய், கங்குலி போன பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்;)//
இதுதான் கமெடியே :-))
இந்த பதிவும் ரெம்ப நல்ல இருக்கிதும்மா வாழ்க வளமுடன் மென்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்
subburajpiramu@gmail.com
குழந்தைகளுக்கு நல்லது கெட்டது ஆகியவற்றை பெற்றோர் தான் சொல்லித்தரனும்...
indha thunukku unmayil nam petroorin unmai mugathai thoolurithu kaattiyadu. paaraattukkal.
Oru ?: Enakku tamil,il comment type seiya aasai, eppadi endru satru vilakkungalean.
Post a Comment