April 25, 2011

RIO

அரிய வகைப் பறவையான Blu, குட்டியாக இருக்கும்போதே ப்ரேசிலிலிருந்து கடத்தி வரப்படுகிறது. மின்னர்சோட்டாவில் லிண்டா என்ற பெண்ணின் தோழனாக, domestic birdஆக வளர்க்கப்படுகிறது. ப்ரேசிலிலிருந்து வரும் ஆர்னிதாலஜிஸ்ட் Tulio, லிண்டாவிடம் Bluவின் இனம் அழியும் நிலையிலிருப்பதாகவும், அதே blue macaw வகையைச் சேர்ந்த jewel என்றழைக்கப்படும் பெண் பறவை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும், இனப்பெருக்கத்திற்காக Bluவை ப்ரேசிலிற்கு அழைத்து வரவேண்டுமென கோரிக்கை விடுக்கிறார். முதலில் மறுக்கும் லிண்டா, பின்னர் மனது மாறி bluவை அழைத்துக்கொண்டு ப்ரேசில் வந்து சேர்கிறார்.

வீட்டுப்பறவையாக, பறக்கத் தெரியாமல் வளர்ந்த blu, சுதந்திரமாக காற்றில் பறந்து திரிந்த jewelஐ கூண்டில் சந்திக்கிறது. தப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஜ்வெல்லிற்கும் ப்ளூவிற்கும் செட்டாகவில்லை. இதனிடையே பறவைகளை திருடி விற்கும் கும்பல், இந்த ஜோடியையும் திருடுகிறது. இவர்களிடமிருந்து முதல் முறை தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு, காலில் சங்கிலியால இந்த ஜோடி பிணைக்கப்படுகிறது. Blu & jewel கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்தார்களா? ஒன்று சேர்ந்தார்களா? Blu லிண்டாவிடம் சென்றடைந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடை மீதிப் படம்.

அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடனான பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அங்கங்கே 3D காட்சிகள் தேவையில்லை எனத் தோன்றினாலும், படத்தில் வரும் சேஸிங் காட்சிகளும், ப்ரேசிலின் ஏரியல் வீயூ காட்சிகளும் 3Dயில் அட்டகாசமாக இருக்கின்றன. Blu, jewel, rafael, pedro, nico, luiz ஆகிய பறவைகளிடையேயான காட்சிகள் நகைச்சுவையாகவும், க்ளைமேக்சில் வரும் ப்ரேசிலில் நடக்கும் கார்னிவல் காட்சிகள் பிரமிப்பையும் அளிக்கிறது. நட்பு, தன்னம்பிக்கை, காதல், பிரிவு, ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து உணர்வுகளும் கலந்த கலக்கலான எண்டெர்டெயினராக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை கலர் கலரான் காட்சியமைப்பாலும், 3D எஃபெக்ட்ஸாலும் குழந்தைகளையும், விறுவுறுப்பான திரைக்கதையால் பெரியவர்களையும் கட்டிப் போடுகிறது.

Rio Trailer

RIO - அருமையான சம்மர் எண்டெர்டெயினர். Must watch movie for all age groups.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

கோடை விடுமுறைக்கு குழந்தைகளுக்கான
ஒரு நல்ல திரைப்படத்தை
அறிமுகம் செய்தமைக்கு நன்றி
கதை சொன்னவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

Your son might have enjoyed the film.

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வருகை?

சி.பி.செந்தில்குமார் said...

சிம்ப்பிள் & நீட்

Gajani said...

Vidya pls participate in Vijay tv sweet home

ஹுஸைனம்மா said...

தலைப்பைப் பாத்து, இன்னொரு சாப்பாட்டுக்கடைன்னு நினைச்சு ஓப்பன் பண்ணேன். மொத பாராவைப் படிச்சு, ஏதோ பறவைகளைப் பத்தின அறிவியல் கட்டுரைபோலன்னு நினைச்சேன். அப்புறம் முழுசாப் படிச்சாத்தான் தெரியுது, பட விமர்சனம்!!

தலைப்புலயே அது என்ன பதிவுன்னு எழுதுங்க இனிமே. (நோ, நோ பேட் வேர்ட்ஸ்!!)

சாந்தி மாரியப்பன் said...

'பெரிய' குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் போலிருக்கு :-))