October 24, 2011

Scribblings 24-10-2011

நாங்க போட்ட மொக்கை தாங்காமல், கூகிளே பஸ்ஸை இழுத்து மூடும் முடிவுக்கு வந்திடுச்சு. பஸ்ல ஏறினதுக்கப்புறம் பதிவெழுதறது சுத்தமா நின்னுப்போச்சு. சும்மா ரெண்டு வரில தோணுனதெயெல்லாம் உளறிக்கொட்டி, வாங்கிகட்டிகிட்டு ஜாலியா இருந்த இடத்த மூடப்போறாங்கன்னு நினைச்சா கஷ்டம் இருக்கு. எதைக் கொண்டு வந்தோம்.... சரி சரி.. எங்கன சுத்தியும் ரங்கன சேருங்கற மாதிரி, பஸ்ல ஏறி சுத்தி சுத்தி, இப்ப தாய்வீடான ப்ளாகிற்கே திரும்ப வந்திட்டேன். முன்ன மாதிரி பதிவா போட்டுத் தள்ள முடியாதுன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன். பார்ப்போம்.
*****************

சென்ற வாரம் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து ஊருக்குப் போகிறேன். நிறைய மாற்றங்கள். முன்பு எங்கள் தெருவில் நாலே நாலு மச்சு வீடு தான் இருக்கும். இப்ப நாலே நாலு ஓலை வீடுகள் தான் இருக்கின்றன. அழகழகா வீடு கட்டியிருக்காங்க. வயதானவர்கள் முதற்கொண்டு சின்ன்பபொண்ணுங்க வரை எல்லாரும் நைட்டிதான். பளிச் கலரில் கண்டாங்கி கட்டும் எதிர்த்த வீட்டு ஆயா கூட நைட்டிக்கு மாறிட்டார்.

“என்னா ஆயா நைட்டிலாம் போட்டு அசத்துற?”

“அடப்போடி. அந்தப் பொடவைய வெளுத்து, காயவச்சு, கட்டிக்கறதுக்குள்ள, குடிச்சு கஞ்சி செரிச்சுப்புடுது. இது போட்டுக்கவும் சுளுவாருக்கு. வெளுக்கவும் சுளுவாருக்கு.”

அதுசரி.
**************

வீடுகள் மாறியிருந்தாலும், கிராமத்தில் மாறாமல் இருப்பது மனிதர்களும், நாய்களும்தான். கிராமத்தில் நாய்கள் புது ஆட்களை கண்டால் விடாமல் குரைக்கின்றன. நகரத்து நாய்களைப் போல் நிமிர்ந்து பார்த்துவிட்டு படுத்துக்கொள்வதில்லை. மனிதர்கள் காட்டும் பாசமும், கொடுக்கும் வரவேற்பும் அப்படியேத்தான் இருக்கிறது.

“சந்ரு மவளா நீஈஈ?”
”ஒம்மவனா? நீ இப்படியிருக்கையிலருந்து உன்ன பார்த்துகிட்டிருக்கேன். உனக்கு புள்ளன்னா மலைப்பா இருக்கு.”
“தீவளிக்கு வந்தியாக்கும்?”
(இன்றிரவே ஊருக்கு கிளம்பப்போகிறேன் என்றதும்)
“யே யப்பே. வாராதே ஆடிக்கொருதரந்தான். வரக்கொல்லவே கால்ல சுடுதண்ணிய ஊத்திகிட்டு தான் வருவீயளோ? பொங்கலுக்காவது பத்து பாயி்ஞ்சு நாள் தங்குறாப்புல வா”

எதிர்பட்ட பத்து பேரில் எட்டு பேர் கேட்ட கேள்விகள் இவை.

நான் பத்து மணிக்கு தான் போனேன். என் பால்ய தோழி ஒருத்தி என்னை அடையாளம் கண்டு விசாரித்தாள். ஐந்து நிமிடம் அவளிடம் பேசிவிட்டு வந்துவிட்டேன். மாலையில் நான் கிளம்புவதற்குள், இரண்டு முழம் ஜாதிமல்லியை நெருக்கமாக கட்டி கொண்டு வந்து கையில் கொடுத்தாள். ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. ”கனகாம்பரம் கூட இருக்கு. நீ வச்சிக்கமாட்டேன்னுதான் இதக் கொண்டாந்தேன்” என்றாள். ”ரெண்டடி தான் முத்து இருக்கு. இவ்ளோ பூ எப்படி வச்சிக்கிறது. நீயும் கொஞ்சம் வச்சிக்கோ” என்று பாதிபூவை அவளிடம் நீட்டினேன். ஏம்டி இம்புட்டு முடிய வெட்டிபுட்ட என்று அத்தையைப் போலவே திட்டியனுப்பினாள்.
********************

நண்பர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்..

15 comments:

தாரணி பிரியா said...

நான் போன வாரம் முடி வெட்டிட்டு வந்ததுக்கு என்னமோ ஆளை வெட்டிட்டு வந்தது போல வீட்டுல எல்லார்கிட்டயும் திட்டு :(

தீபாவளி நல்வாழ்த்துகள்

வெண்பூ said...

வெல்கம் பேக்... :)

Rajalakshmi Pakkirisamy said...

தீபாவளி நல்வாழ்த்துகள்

Rajalakshmi Pakkirisamy said...

தீபாவளி நல்வாழ்த்துகள்!!!

Unknown said...

பழைய josh இல்லைன்னாலும் நல்ல பதிவு

விஜி said...

ம்ம்ம்கும் , நம்மாள முடிஞ்சது 3 மாசத்துக்கு ஒருக்கா ஹேர் ஸ்டைல் மாத்தறதுதான் :)

CS. Mohan Kumar said...

சொந்த ஊர் சென்று வந்த கதை சுவாரஸ்யம்.

பையன் மத்தாப்பு மட்டும் தான் கொளுதுரானா? வெடியும் உண்டா?

தீபாவளி வாழ்த்துகள்

pudugaithendral said...

வாங்க !வெல்கம் பேக்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் said...

ம்ம் வாங்க வாங்க.

தீபாவளி வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

Vidhya Chandrasekaran said...

நன்றி தாரணி பிரியா.
நன்றி வெண்பூ.
நன்றி ராஜி.
நன்றி கேவிஆர்.
நன்றி விஜி.

Vidhya Chandrasekaran said...

நன்றி மோகன் குமார் (இப்போதைக்கு கேப் வெடிக்கிறான்).

நன்றி கலா அக்கா.
நன்றி சரவணக்குமார்.
நன்றி குமார் .

காவேரிகணேஷ் said...

கிராமத்துக்கு சென்றுவிட்ட வந்த தாக்கம் குறையாத பதிவு..

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

Raghu said...

அப்போ சீக்கிர‌ம் வேலாயுத‌ம் ஸ்பெஷ‌ல் ப‌திவு வ‌ரும் :))

Unknown said...

Welcome back to blog
இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துகள்