December 5, 2008

கொள்கைகளும் சில காம்பரமைஸ்களும்

டிஸ்கி : இது அரசியல் பதிவல்ல.


அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.


சின்ன வயசுல இருந்தே (இப்பவும் நான் சின்னப்பொண்ணுதான்) எனக்கு பூ வைப்பது பிடிக்காது. அதுவும் இந்த கனகாம்பரம், டிசம்பர் பூ எல்லாம் பயங்கர அலர்ஜி. வீட்டில் ஏதாவது விசேஷம், பண்டிகை என்றால் கொஞ்சமே கொஞ்சமாய் மல்லி அல்லது முல்லை தலையில் குடியேறும். அதுகூட கொஞ்ச நேரம் தான். அம்மா கனகாம்பரம் கொடுக்கும்போதெல்லாம் திட்டுவேன். "ஏன் அப்படியே ஒரு பித்தளை சொம்பையும் கொடேன். மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடறேனே"ன்னு கத்துவேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் வீட்டில் எனக்கு பயங்கர ஷாக். அங்க டிசம்பர் பூவை காசு கொடுத்து வாங்குவார்கள். என்கிட்ட மாமியார் பூவை நீட்டும்போதெல்லாம் அப்புறம் வெச்சுக்கிறேன்மா என சொல்லி எஸ்ஸாயிடுவேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவங்களாவே எனக்கு அந்தப் பூவெல்லாம் புடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இப்ப நான் பூ வைக்கிறதுலருந்து தப்பிக்க என் பையன தான் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறேன். "இல்லம்மா பூ வைச்சா அது கீழ உதிருதா. சஞ்சு எடுத்து வாயிலப் போட்டுக்கிறானேன்னு வைக்கறதேல்ல". ஆனாலும் ஒரு சின்ன துணுக்காவது கொடுத்து வைச்சுக்கோன்னு சொல்லும்போது மறுக்க முடியல.


அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை. எங்க வீட்டுல எல்லாருமே திட்டுவாங்க. பொம்பள பொண்ணு நகை மேல ஆசையே இல்லாம இருக்கேன்னு. அத்தை (அப்பாவின் அக்கா) வரும்போதெல்லாம் அம்மா என்கிட்ட கெஞ்சுவாங்க. வளையல் போட்டுக்கோ, கொலுசு போட்டுக்கோ, ஜிமிக்கி வெச்ச தோடு போட்டுக்கோன்னு. இல்லைன்னா பொண்ண வளர்த்துருக்கற லட்சணத்தப் பாருன்னு என்னதாண்டி சொல்லுவாங்க என்பாள். நீயேம்மா அடுத்தவங்களுக்கு பயந்து வாழற. உனக்குத் தெரியாத உன் வளர்ப்பைப்பற்றி என்று பேசி அவள் வாயடைப்பேன். அதே மாதிரி எனக்கு சின்ன வயசுல மூக்கு குத்தனும்னு சொன்னப்போ நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்து எல்லாரும் கப்சிப். நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே என் மாமியார் கல்யாணத்துக்கு முன்னாடி மூக்குகுத்திடுமா என்று சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. எங்கம்மா வேற நான் சொன்னா கேக்கல இல்ல இப்ப என்ன பண்ணுவேன்னு வெறுப்பேத்தினாங்க. வேற வழியில்லாம் சின்னக்குழந்தைங்கல்லாம் நான் கத்தறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு மூக்கு குத்திட்டாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள் சபையில வச்சு மாமியார் எனக்கு வைர மூக்குத்தி குடுத்தாங்க. ஆனா நல்லவேளையா என்கிட்டருந்து வைர மூக்குத்தியும், மூக்குத்திகிட்டரூந்து நானும் தப்பிக்க ஏதுவாய் எனக்கு மூக்கு குத்தின இடம் செப்டிக் ஆகிடுச்சு. டாக்டர் கிட்ட காமிச்சப்போது கொஞ்ச நாளைக்கு மூக்குத்திய கழட்டி வைங்கன்னுட்டாங்க. அப்ப கழட்டின மூக்குத்தி இரண்டரை வருஷமாய் பொட்டிக்குள்ளயே தூங்குது.


எனக்கு தங்க நெக்லஸ், ஆரம், போன்றவை அணியப் புடிக்காது. தெரிஞ்சிருந்தும் பெற்றோர் அவர்களுடைய மரியாதைக்கு எனக்கு எல்லாம் செஞ்சிக்கொடுத்தாங்க. அதுல பிரச்சன்னை என்னன்னா என் மாமியார் எதாவது ஒரு விசேஷம்னா போதும். எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கோ என்பார். எனக்கு நகைக்கடை மாடல் போல் தோற்றமளிப்பதில் இஷ்டமேகிடையாது. ஆனா மாமியார் தப்பா எடுத்துக்காத மாதிரியும் சொல்லனும். இந்த விஷயத்தில் என்னோட ஆபத்பாந்தவன் ரகுதான். அவருக்கும் தங்க நகைகள் மேல் ஈடுபாடு இல்லாததால் "உங்க பிள்ளை தாம்மா போடக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரகு ஓகே சொன்னா நான் போட்டுக்கிறேன்" என அவரை கோத்துவிட்டு நான் அப்ஸ்காண்ட் ஆயிடுவேன்.


எல்லா விதத்துலயும் ஒரளவுக்கு தப்பிச்சிக்கிட்ட என்னை கோழி அமுக்குறாபோல சிக்க வச்சது என்னோட வளைகாப்பன்னிக்குதான். குழந்தைக்கு நல்லதுன்னு சொல்லி சொல்லியே ஒவ்வொரு கையிலயும் ரெண்டு டஜன் வளையல்களையும், தலையில் ஒரு ஏழெட்டு முழம் பூவையும் கட்டிட்டாங்க. அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்:(


என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது (இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டுன்னு கேக்கறீங்களா?? எல்லாம் ஒரு விளம்பரம் தான்).


ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).

168 comments:

சந்தனமுல்லை said...

சேம் பிளட்! காலையில அமித்து அம்மா என்ன நான் போட்டுட்டேனே நீங்க போடலியா பதிவு-ன்னாங்க..நாளைக்கு போடறேன்னு சொன்னேன், ஆனா அதுக்கௌ அவசியமில்லேன்னு தோணுது இப்போ! ஏன்னா, கிட்டதட்ட இதேமாதிரிதான் என்னொடானுபவங்களும், பார்வைகளும்! நல்லா எழுதியிருக்கீங்க!

வித்யா said...

வாங்க முல்லை. பாராட்டுக்களுக்கு நன்றி. சில விஷயங்களை யாராவது விவரிக்கும்போதுதான் அட நமக்கும் அப்படித்தானே என்று தோணும். இந்த பதிவுக்கு மூல காரணமே அமித்து அம்மாதான்:)

அமுதா said...

சேம் பிளட்... (நிறைய சேம் பிளட் இருக்கும்.. சினிமால கல்யாணம் ஆன உடனே ஹீரோயின் எல்லாம் புடவைல் வருவாங்களே... இப்ப கொஞ்ச நாளா இல்லை :-)) இன்னொரு அனுபவம் எனக்கு புடவை... அப்பப்பா கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் சுடிதார் போடறதே கில்ட்டி ஆகி விட்டது. அப்புறம் கொஞ்ச நாள்ல அதையும் ஹேண்டில் பண்ணியாச்சு. நல்லா எழுதி இருக்கீங்க.

வித்யா said...

வாங்க அமுதா.
ஹி ஹி எனக்கு அந்த பிரச்சனை இல்லை. நான் பங்கஷுனுக்கு மட்டும் தான் புடவை கட்டுவேன். என்னிடம் இருந்த எல்லா புடவைகளும் (பட்டு புடவையைத் தவிர்த்து)சுடிதாராய் மாறிடுச்சு:))

அதிரை ஜமால் said...

\\அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.\\

inspirations comes from great personalities.

அதிரை ஜமால் said...

\\அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை. எங்க வீட்டுல எல்லாருமே திட்டுவாங்க. பொம்பள பொண்ணு நகை மேல ஆசையே இல்லாம இருக்கேன்னு\\

அதானே - நிஜமாளுமுவா.

அதிரை ஜமால் said...

\\நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்து\\

ஹா ஹா ஹா

SK said...

இதையே பெண் பதிவர்கள் கிட்டே ஒரு தொடர் பதிவ எழுத விடலாம் போல இருக்கே ?? :))

அதிரை ஜமால் said...

\\"உங்க பிள்ளை தாம்மா போடக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரகு ஓகே சொன்னா நான் போட்டுக்கிறேன்" என அவரை கோத்துவிட்டு நான் அப்ஸ்காண்ட் ஆயிடுவேன்.\\

ரங்கமணி ரொம்ப நல்லவருருருருரு ...

SK said...

என் மாமியார் கிட்டே பூ புடிக்காது சொன்ன கேக்க மாட்டாங்களா ?? இல்லை தெரியாம கேக்குறேன் தப்ப எடுத்துகதீங்கோவ்

அதிரை ஜமால் said...

\\அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்\\

நல்ல வருதுங்க உங்களுக்கு காமெடி.

அதிரை ஜமால் said...

\\ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).\\

என் கைதட்டல் கேட்டுச்சா.

உண்மையிலேயே நல்ல மெசேஜ்

தாரணி பிரியா said...

ஆஹா இனி ஒரு சேம் பிளட் இருக்கு வித்யா. நானும் உங்க கட்சிதான். அதே மாதிரி எனக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் மெட்டி போடறது. என்னமோ ஒரு ரீஸன் சொல்லி ஒரு வாரத்தில கழட்டினது. இன்னிக்கு வரைக்கும் போடலை. எங்க அம்மா சென்டிமெண்டா ஃபீல் செஞ்சு அப்பப திட்டுவாங்க. நாந்தான் கண்டுக்கறதில்லை. மாமியார் இல்லைங்கறதுதால அந்த சைடு டோஸ் விட யாரும் இல்லை.

அதிரை ஜமால் said...

\\என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது\\

தங்கமணிகளே கவணிக்கவும்.


தி-நகர்ல கூட்டம் குறைஞ்சிடும். அப்புறம் உங்களத்தான் வந்து புடிப்பாங்க.

வித்யா said...

\\SK said...
என் மாமியார் கிட்டே பூ புடிக்காது சொன்ன கேக்க மாட்டாங்களா ?? இல்லை தெரியாம கேக்குறேன் தப்ப எடுத்துகதீங்கோவ்\\

முதலும் கடைசியுமாய் ஒரு தடவை சொன்னேன். இனிமே அப்படி சொல்லாதன்னு சொல்லிட்டாங்க. ஏன்னு நானும் கேக்கல அவங்களும் சொல்லல:)

தாரணி பிரியா said...

ஜமால் இப்ப இருக்கற நிறைய பொண்ணுங்களுக்கு நகை எல்லாம் அலர்ஜியான விஷயம்தான். பெரியவங்க தொல்லை தாங்கமதான் போட வேண்டி இருக்குது.

SK said...

ஏன் கேக்கலை ??

வித்யா said...

\\அதிரை ஜமால் said...
ரங்கமணி ரொம்ப நல்லவருருருருரு ...\\

நானும்தான்:))

SK said...

// ஜமால் இப்ப இருக்கற நிறைய பொண்ணுங்களுக்கு நகை எல்லாம் அலர்ஜியான விஷயம்தான். பெரியவங்க தொல்லை தாங்கமதான் போட வேண்டி இருக்குது //

இப்படி சொல்லி நீங்க எல்லாம் யூத் அப்படின்னு சொல்றீங்களா

அதை எல்லாம் ஒத்துக்க முடியாதுங்கோ ??

SK said...

// நானும்தான்:)) //

அதை நாங்க சொல்லணும் :-)

வித்யா said...

\\SK said...
ஏன் கேக்கலை ??\\

எப்படியும் அவங்க செண்டிமெண்டலா ஒரு காரணம் சொல்லுவாங்க. அதுக்கு நான் சிரிச்சு, அம்மா மகளா போய்டிருக்க ரிலேஷன்ஷிப் கெடுத்துக்க விரும்பல.அதான்.

வித்யா said...

வாங்க தாரணி. எனக்கு மெட்டி ஒரு பிராப்ளமா தெரியல:)

SK said...

// எப்படியும் அவங்க செண்டிமெண்டலா ஒரு காரணம் சொல்லுவாங்க. அதுக்கு நான் சிரிச்சு, அம்மா மகளா போய்டிருக்க ரிலேஷன்ஷிப் கெடுத்துக்க விரும்பல.அதான். //

இல்லை அவுங்களுக்கு உங்களுக்கு புடிக்கலைன்னு புரிய வெச்சு கேஸ் முடிக்கலாம்.

இல்லை அவுங்க சந்தோஷ படுறாங்கன்னு நீங்க வெச்சுக்க ஆரம்பிச்சு கேஸ் முடிக்கலாம்.

எத்தனை நாள் எஸ்கேப் ஆகா முடியும் ??

வித்யா said...

\\ SK said...
// நானும்தான்:)) //

அதை நாங்க சொல்லணும் :-)\\

நீங்க இப்படி சொல்லுவீங்கன்னுதான் நானே சொல்லிக்கிட்டேன்.

SK said...

// நீங்க இப்படி சொல்லுவீங்கன்னுதான் நானே சொல்லிக்கிட்டேன். //

நாங்க எப்படி சொல்லுவோம் ??

SK said...

சரி சரி மீ த 25th

வித்யா said...

SK எவ்ளோ நாள் முடியுமோ அவ்ளோ நாள் போகட்டும். இப்பவே அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. எல்லாம் இந்த சமுதாயத்துக்கு அவங்க பயப்படுறாங்க. நம்ம ஜெனரேசன் தான் அடுத்தவங்களுக்காக இல்லாம நமக்கு பிடிச்ச மாதிரி வாழறோம். அவங்க அப்படியே பழகிட்டாங்க. நமக்காக அவங்க மாறனும்னு எதிர்பார்க்க முடியாது. self esteem பாதிக்காத வரை நானே அட்ஜெஸ்ட் செஞ்சுக்கிரேன்:)

கார்க்கி said...

அதுக்குள்ள 25? கொ.ப.செ ஆன வுடன் மவுசு கூடிடுச்சு போல‌

கார்க்கி said...

/நம்ம ஜெனரேசன் தான் அடுத்தவங்களுக்காக இல்லாம நமக்கு பிடிச்ச மாதிரி வாழறோம்//

உங்களுக்கு அடுத்த ஜெனரேஷன் ஆன நாங்க எப்படி வாழ்றோம்னு நினைக்கறீங்க?

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா என்ன வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே

பத்திக்கிச்சுப்பா நாம கொளுத்திப்போட்டது.

வித்யா said...

இருபத்தஞ்சுக்கு நன்றி SK:)

SK said...

// உங்களுக்கு அடுத்த ஜெனரேஷன் ஆன நாங்க எப்படி வாழ்றோம்னு நினைக்கறீங்க? //

குட் கொஸ்டின். :-)

வித்யா said...

\\ கார்க்கி said...
/நம்ம ஜெனரேசன் தான் அடுத்தவங்களுக்காக இல்லாம நமக்கு பிடிச்ச மாதிரி வாழறோம்//

உங்களுக்கு அடுத்த ஜெனரேஷன் ஆன நாங்க எப்படி வாழ்றோம்னு நினைக்கறீங்க?\\

யோவ் என்ன நக்கலா. கல்யாணம் ஆச்சுன்னா நீ(ங்களு)யும் அங்கிள் தாங்கறத ஞாபகம் வ்ச்சிக்கோ:)

வித்யா said...

இல்ல அமித்து அம்மா. மெய்யாலுமே நீங்க நல்லா எழுதறீங்க:)

SK said...

ஆச்சுன்னா தானே... இப்போ ஆகலைல .-)

விடாதீங்க சகா.. வித்யா ஆன்டிய (aunty'??) ..

ஜீவன் said...

ம்ம் என்னென்னமோ சொல்லுறீங்க ......

////அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை/////

............................................. கேக்க நல்லாத்தான் இருக்கு


////என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது////

சூப்பர்!! நகையை பார்த்து மதிப்பவர்கள் கண்டிப்பா

மரியாதைக்கு உரியவர் அல்ல!!

///அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்//

அடடா! பின்னாடி ஜடை எல்லாம் தைச்சி இருப்பாங்களே ?

கழுத்து வலிக்கல?
///ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும்///

இது நல்ல மேட்டர்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

மாமியார் பூவை நீட்டும்போதெல்லாம் அப்புறம் வெச்சுக்கிறேன்மா என சொல்லி எஸ்ஸாயிடுவேன்.
இப்படித்தான் நானும் எஸ் ஆனேன்

எங்க கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவங்களாவே எனக்கு அந்தப் பூவெல்லாம் புடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டு,
//பழக்கப்படுத்திவிட்டுட்டாங்க.//

கார்க்கி said...

//SK said...
ஆச்சுன்னா தானே... இப்போ ஆகலைல .-)

விடாதீங்க சகா.. வித்யா ஆன்டிய (auntய்'??//

கல்யானம் ஆனா கூட நான் உங்களுக்கு அடுத்த ஜெனரேஷன் தான்

SK said...

// பழக்கப்படுத்திவிட்டுட்டாங்க.//

ரசித்தேன் :-)

வித்யா said...

நன்றி ஜீவன்.
ஜடையெல்லாம் வேணாம்னு சொன்னதுக்காக தான் எக்ஸ்ட்ராவ பூ வைச்சாங்க:((

SK said...

// கல்யானம் ஆனா கூட நான் உங்களுக்கு அடுத்த ஜெனரேஷன் தான் //

இப்படி ஒண்ணு இருக்கு இல்லை .-)

கார்க்கி said...

/யோவ் என்ன நக்கலா. கல்யாணம் ஆச்சுன்னா நீ(ங்களு)யும் அங்கிள் தாங்கறத ஞாபகம் வ்ச்சிக்கோ://

பிராக்கெட் எல்லாம் வானாம்.. நான் சின்னப்பையந்தான்.. நீ ன்னு சொல்லலாம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு தங்க நெக்லஸ், ஆரம், போன்றவை அணியப் புடிக்காது//
ம், சேம் ப்ளட்
அதனால நான் வேற டிசைன்ல சின்னதா எடுத்துக்கிட்டேன்.
அங்க போனா, நகை எடுக்க எங்கள கூப்பிட்டு இருக்கலாமே, ஒன்னுமே பார்வையாவே இல்லன்னு ஏகப்பட்ட கமெண்ட்.
நல்லவேளை ரங்கமணி வந்து காப்பாத்தினார்,

வித்யா said...

கார்க்கி & SK
கல்யாணம் ஆயிடுச்சுங்கற ஒரே காரணத்துக்காக உங்களை விட வயதில் சின்னப்பொண்ணை aunty என்றழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்:)

கார்க்கி said...

//வித்யா said...
கார்க்கி & SK
கல்யாணம் ஆயிடுச்சுங்கற ஒரே காரணத்துக்காக உங்களை விட வயதில் சின்னப்பொண்ணை aunty என்றழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்://

வயசுல சின்னப்பொண்ணா????????????? எங்க கணக்கு வாத்தியார் 34, 25அ விட பெருசுன்னு சொல்லிக் கொடுத்தார். அது தப்பா?????

அமிர்தவர்ஷினி அம்மா said...

அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்:(//
ஏ சரியா மாட்னாங்கப்பா.


ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).
கை தட்டினேன்.
என்னதான் நோகாம நோம்பு கும்பிட நெனச்சாலும், ஒரு சில மக்கள் இருக்காங்க கூட இருந்தே கெளப்பிவிட.

இதெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது, மாட்னது மாட்னது தாண்டி.

SK said...

கல்யாணம் ஆனாலே ஆன்டி தான் இல்லையா சகா

வித்யா said...

அமித்து அம்மா
எனக்கும் சில சமயங்கள்ல்ல ரங்கமணி தான் எனக்கு ஆபத்பாந்தவன்:)

கார்க்கி said...

//நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்//

அது வேற தனியா எடுக்கனுமா?

கார்க்கி said...

மீ த 50

அமிர்தவர்ஷினி அம்மா said...

சந்தனமுல்லை said...
சேம் பிளட்! காலையில அமித்து அம்மா என்ன நான் போட்டுட்டேனே நீங்க போடலியா பதிவு-ன்னாங்க..நாளைக்கு போடறேன்னு சொன்னேன், ஆனா அதுக்கௌ அவசியமில்லேன்னு தோணுது இப்போ! ஏன்னா, கிட்டதட்ட இதேமாதிரிதான் என்னொடானுபவங்களும், பார்வைகளும்! நல்லா எழுதியிருக்கீங்க!

நோ மேடம், இப்படியெல்லாம் சொல்லி நீங்க தப்ப முடியாது.
சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க உங்க பதிவை.
பின்ன அங்க வந்து கும்மி அடிக்க வேணாம்.

SK said...

// அமித்து அம்மா
எனக்கும் சில சமயங்கள்ல்ல ரங்கமணி தான் எனக்கு ஆபத்பாந்தவன்:) //

எம்புட்டு நல்லவரு :-)

வித்யா said...

யார் சொன்னா எனக்கு 34ன்னு. கார்க்கி அது உன் வயசுதான.

அமிர்தவர்ஷினி அம்மா said...

SK said...
இதையே பெண் பதிவர்கள் கிட்டே ஒரு தொடர் பதிவ எழுத விடலாம் போல இருக்கே ?? :))

ஹை நல்ல ஐடியா தான்.
ஸ்டார்ட் ம்யூஜிக்

கார்க்கி said...

//SK said...
கல்யாணம் ஆனாலே ஆன்டி தான் இல்லையா ச//

ஆமா ஆமா
ஆமா
ஆமா
ஆமா
ஆமா
ஆமா
ஆமா
ஆமா

அப்புறம் நான் தான் 50 அடிச்சேன்.. ஒரு காபி கிடைக்குமா?

SK said...

// பின்ன அங்க வந்து கும்மி அடிக்க வேணாம். //

அங்கே வந்து கும்மி அடிக்க வேணாம்னு சொல்லுறீங்களா :-) :-) :-)

கார்க்கி said...

/அமித்து அம்மா
எனக்கும் சில சமயங்கள்ல்ல ரங்கமணி தான் எனக்கு ஆபத்பாந்தவன்//

எப்பவும் நாங்க தான்.. புரிஞ்சிக்க மாட்டறீங்களே!!!

வித்யா said...

கைதட்டினதுக்கு நன்றி அமித்து அம்மா.
******************************
50 போட்டதுக்கு நன்றி கார்க்கி:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

SK said...
என் மாமியார் கிட்டே பூ புடிக்காது சொன்ன கேக்க மாட்டாங்களா ?? இல்லை தெரியாம கேக்குறேன் தப்ப எடுத்துகதீங்கோவ்

வாங்க மாமியார் சங்கப் பிரதிநிதி.
இன்னும் கல்யாணம் ஆகல இல்ல, சீக்கிரமே தஙக்மணி வர வேண்டிக்கிறேன்.
(அப்பத்தெரியும் சங்கதி)
இப்ப பதிவே போடறதில்லல்ல, அப்புறமா, நாளொரு பதிவு, பொழுதொரு கமெண்ட்டு தான்.

SK said...

// அப்புறம் நான் தான் 50 அடிச்சேன்.. ஒரு காபி கிடைக்குமா? //

சகா என்னது இது காபி எல்லாம் கேட்டுகிட்டு சின்ன புள்ள தனமா இல்லை இருக்கு :-)

வித்யா said...

காபி என்ன டிபனே தரேன். எத்தனை நாள் தான் ஒரே ரேபிட் மேல பரிசோதனை செய்யறது:)

SK said...

// வாங்க மாமியார் சங்கப் பிரதிநிதி.
இன்னும் கல்யாணம் ஆகல இல்ல, சீக்கிரமே தஙக்மணி வர வேண்டிக்கிறேன்.
(அப்பத்தெரியும் சங்கதி)
இப்ப பதிவே போடறதில்லல்ல, அப்புறமா, நாளொரு பதிவு, பொழுதொரு கமெண்ட்டு தான். //

வேற வழி :-)

ச்சின்ன பையன் பதிவு படிச்சீங்கள நேத்து ??

வித்யா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
SK said...
என் மாமியார் கிட்டே பூ புடிக்காது சொன்ன கேக்க மாட்டாங்களா ?? இல்லை தெரியாம கேக்குறேன் தப்ப எடுத்துகதீங்கோவ்

வாங்க மாமியார் சங்கப் பிரதிநிதி.
இன்னும் கல்யாணம் ஆகல இல்ல, சீக்கிரமே தஙக்மணி வர வேண்டிக்கிறேன்.
(அப்பத்தெரியும் சங்கதி)
இப்ப பதிவே போடறதில்லல்ல, அப்புறமா, நாளொரு பதிவு,

ஹா ஹா ரீப்பிட்டேய்:)

கார்க்கி said...

//50 போட்டதுக்கு நன்றி கார்க்கி//

ஹலோ காஃபி கேட்டா நன்றி சொல்றீங்க.. தலை வலிக்குதுங்க ஆன்ட்டி (ந‌ன்றி எஸ்.கே)

SK said...

// காபி என்ன டிபனே தரேன். எத்தனை நாள் தான் ஒரே ரேபிட் மேல பரிசோதனை செய்யறது:) //

இப்படி சொன்ன எங்களுக்கு உண்மை தெரியாதா ??

ஒரு நாளைக்கு ஒரு ரபிட்னு சொல்லுங்க .-)

கார்க்கி said...

// வித்யா said...
காபி என்ன டிபனே தரேன். எத்தனை நாள் தான் ஒரே ரேபிட் மேல பரிசோதனை செய்யறது//

அதுக்காக சிங்கத்து(நான் தான்) மேலயா செய்வீங்க?

SK said...

// ஹலோ காஃபி கேட்டா நன்றி சொல்றீங்க.. தலை வலிக்குதுங்க ஆன்ட்டி //

அது :-)

SK said...

கார்க்கி, ரம்யா (வில் டு லிவ்) பதிவுல உங்களை தான் கொத்து விட்டு இருக்கேன் :-)

SK said...

// யார் சொன்னா எனக்கு 34ன்னு. கார்க்கி அது உன் வயசுதான. //

கார்க்கி இப்படி தப்ப எல்லாம் சொல்லலாமா .. அவுங்களுக்கு ஜஸ்ட் 43

கார்க்கி said...

லிங்க் கொடுங்க எஸ்.கே..

எங்க வித்யா ஆன்டி காஃபி போட போயிட்டாங்களா?

தாரணி பிரியா said...

அடடா ஆபிஸ்ல ஒரு பத்து நிமிசம் வேலை பார்த்திட்டு வரதுக்குள்ள இந்த கார்க்கியும் எஸ்.கே.வும் என்ன ரகளை செஞ்சுகிட்டு இருக்காங்க.

ம்ம் ரெண்டு பேரும் இப்பவே உங்க அம்மாக்களை எப்படி சமாளிக்கறதுன்னு டிரைனிங் எடுங்க. கண்டிப்பா உங்க தங்கமணியும் இப்படிதான் இருப்பாங்க.

SK said...

http://ramya-willtolive.blogspot.com/2008/12/blog-post.html

ikkada unthi

கார்க்கி said...

/ம்ம் ரெண்டு பேரும் இப்பவே உங்க அம்மாக்களை எப்படி சமாளிக்கறதுன்னு டிரைனிங் எடுங்க. கண்டிப்பா உங்க தங்கமணியும் இப்படிதான் இருப்பாங்//

நிஜமாவா????????? எங்க அம்மாவ என்னால் சமாளிக்கவே முடியாது.. கார்க்கி, பாவம் டா நீ

SK said...

// நிமிசம் வேலை பார்த்திட்டு வரதுக்குள்ள இந்த கார்க்கியும் எஸ்.கே.வும் என்ன ரகளை செஞ்சுகிட்டு இருக்காங்க.

ம்ம் ரெண்டு பேரும் இப்பவே உங்க அம்மாக்களை எப்படி சமாளிக்கறதுன்னு டிரைனிங் எடுங்க. கண்டிப்பா உங்க தங்கமணியும் இப்படிதான் இருப்பாங்க. //

அது தான் தெரிஞ்ச கதை ஆச்சே :-)

தாரணி பிரியா said...

ஹலோ அங்கிள்ஸ் பொண்ணுங்களுக்கு எல்லாம் 20 வயசில கல்யாணம் செஞ்சறாங்க. உங்களுக்கு எல்லாம் 30 வரைக்கும் வெயிட் செய்யறதால நீங்க சின்ன பசங்க ஆயிடுவிங்களா என்ன?

SK said...

// ஹலோ அங்கிள்ஸ் பொண்ணுங்களுக்கு எல்லாம் 20 வயசில கல்யாணம் செஞ்சறாங்க. உங்களுக்கு எல்லாம் 30 வரைக்கும் வெயிட் செய்யறதால நீங்க சின்ன பசங்க ஆயிடுவிங்களா என்ன? //

அப் கோர்ஸ் வி ஆர் யூத் யு நோ ...

வாட் எ சில்லி கொஸ்டின் யா :-) :-)

தாரணி பிரியா said...

hi me the 75. vidhya enakkum oru coffee

தாரணி பிரியா said...

ennathu chinna pasakala SK unga pethi enga collegela thane padikara

கார்க்கி said...

// எல்லாம் 30 வரைக்கும் வெயிட் செய்யறதால நீங்க சின்ன பசங்க ஆயிடுவிங்களா என்ன?//


அக்கா, அப்ப கூட நான் உங்கள எல்லோரையும் விட சின்னவன் தான்.. வயசுல சொன்னேன்.. ஆனா அறிவுல, அழகுல.. அத விடுங்க.. என் வாயாலே சொன்னா நல்லயிருக்காது

SK said...

அவுங்க எஸ் ஆகி ரொம்ப நேரம் ஆச்சு :-) :-)

சொல்லாமல் எஸ் ஆனா கொ. ப. செ. என்ன பண்றது :-)

தாரணி பிரியா said...

Karki neegala pavam. ungakitta matta pora Thangamanithan pavam. avanga Rangamaniyai samalikka thaniya training edukkanum

கார்க்கி said...

/தாரணி பிரியா said...
ennathu chinna pasakala SK unga pethi enga collegela thane padiகர//

ஆமாங்க.. அவங்க டூடொரியல் காலெஜ்.. நீங்களும் அங்கதானா?

SK said...

// ennathu chinna pasakala SK unga pethi enga collegela thane padikara //

நீங்க விஜயகாந்த் தங்கச்சிய சொல்லவே இல்லை :-)

தாரணி பிரியா said...

அதை எங்க காதால கேட்டாலும் ரத்தம் வரும் கார்க்கி

கார்க்கி said...

//Karki neegala pavam. ungakitta matta pora Thangamanithan pavam. avanga Rangamaniyai samalikka thaniya training edukkஅனும்//

நான் ரொம்ப நல்லவங்க.. எங்க அம்மா சொன்னா மறு பேச்சு பேசாம 10 மணிக்கே எழுந்திடுவேன் தெரியுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

SK said...
கல்யாணம் ஆனாலே ஆன்டி தான் இல்லையா சகா

நாங்கல்லாம் கல்யாணம் ஆனாதான் ஆண்ட்டி, இங்க சில பேரு கல்யாணம் ஆகாமலே அங்கிள்னு பட்டம் வாங்கிடுறாங்க.

ஹே , என் பொண்னுகிட்ட குமார் அங்க்கிள்னுதான் சொல்லி வெச்சிருக்கேன்.

தாரணி பிரியா said...

நான் Engineering college -la வேலை பாக்கறேன் கார்க்கி & எஸ்.கே

கார்க்கி said...

//தாரணி பிரியா said...
அதை எங்க காதால கேட்டாலும் ரத்தம் வரும் கார்க்//

அதானே.. பொண்ணுங்க எல்லாம் பொறாமி புடிச்சவங்க.. அதான் ரத்தம் வருது.. சரியா எஸ்.கே?

வித்யா said...

SK, கார்க்கி
கடமை அழைச்சிடுச்சுங்க. உங்கள மாதிரியா நமக்கு சின்ன முதலாளி இருக்காரே. ரகுவக்கூட கவனிக்க வேணாம். சின்ன முதலாளிய கண்டுக்காம விட்டா அவ்ளோதான்.

கார்க்கி said...

//ஹே , என் பொண்னுகிட்ட குமார் அங்க்கிள்னுதான் சொல்லி வெச்சிருக்கே//

இன்னைக்கு கார்க்கின்னு மட்டும் சொல்லி அங்கிளா அண்ணனானு கேலுங்க.. மறைக்காம உண்மைய சொல்லுங்க‌

தாரணி பிரியா said...

வாங்க அமித்து அம்மா இந்த ரெண்டு பசங்களும் ஓவரா சின்ன பையன்ங்க மாதிரி சீன் ஒட்டறாங்க பாருங்க‌

SK said...

// அதானே.. பொண்ணுங்க எல்லாம் பொறாமி புடிச்சவங்க.. அதான் ரத்தம் வருது.. சரியா எஸ்.கே? //

மிகச்சரி :-)

கார்க்கி said...

/தாரணி பிரியா said...
நான் Engineering college -la வேலை பாக்கறேன் கார்க்கி & எஸ்.கே//

ஓ.. அவ்ளொ பெரியவங்களா? தெரியாம அக்கானு சொலிட்டேன் ..

தாரணி பிரியா said...

தாத்தா சொல்லிட போறா பாருங்க

SK said...

// நான் Engineering college -la வேலை பாக்கறேன் கார்க்கி & எஸ்.கே //

ஒ அங்கே இருந்து தான் கும்மியா :-)

விஜயகாந்த் காலேஜ்'ஆ ??

வித்யா said...

\\ அமிர்தவர்ஷினி அம்மா said...
நாங்கல்லாம் கல்யாணம் ஆனாதான் ஆண்ட்டி, இங்க சில பேரு கல்யாணம் ஆகாமலே அங்கிள்னு பட்டம் வாங்கிடுறாங்க.
ஹே , என் பொண்னுகிட்ட குமார் அங்க்கிள்னுதான் சொல்லி வெச்சிருக்கேன்.\\

நல்ல ஐடியா அமித்து அம்மா. நான் சஞ்சுகிட்ட SK தாத்தான்னும், கார்க்கி தாத்தான்னும் சொல்லி வைக்கிறேன்:)

தாரணி பிரியா said...

சின்ன வயசுலேயே எனக்கு பெரிய வேலை கிடைச்சுருக்கு :)

கார்க்கி said...

//தாத்தா சொல்லிட போறா பாருங்//

பார்ப்போமே.என்ன பெட்?

கார்க்கி said...

மீ த 100

கார்க்கி said...

மீ த 100

தாரணி பிரியா said...

100

SK said...

// ஹே , என் பொண்னுகிட்ட குமார் அங்க்கிள்னுதான் சொல்லி வெச்சிருக்கேன். //

இது அநியாயம் அக்கிரமம்.

அடுத்த தடவை பேசும் போது குமார் கூப்பிடு சொல்லிடறேன் :-) :-)

கார்க்கி said...

ஆன்ட்டி நான் தான் 100ம்.. காஃபி உண்டா இல்லையா?

தாரணி பிரியா said...

அடப்பாவி சரி சரி நல்லாயிருங்க‌

SK said...

// இன்னைக்கு கார்க்கின்னு மட்டும் சொல்லி அங்கிளா அண்ணனானு கேலுங்க.. மறைக்காம உண்மைய சொல்லுங்க‌ //

என்னை கழட்டி விட்டுட்டு நீங்க எஸ் ஆகுரீங்கலே சகா :-)

வித்யா said...

எங்க வூட்ல காபி எல்லாம் கிடையாது. ஒன்லி டீ:)

கார்க்கி said...

/நல்ல ஐடியா அமித்து அம்மா. நான் சஞ்சுகிட்ட SK தாத்தான்னும், கார்க்கி தாத்தான்னும் சொல்லி வைக்கிறேன்//


ஆஹா.. ஒன்னு கூடிட்டாங்கப்பா ஒன்னு கூடிட்டாங்க..

SK said...

// நல்ல ஐடியா அமித்து அம்மா. நான் சஞ்சுகிட்ட SK தாத்தான்னும், கார்க்கி தாத்தான்னும் சொல்லி வைக்கிறேன்:)
//

இந்த சதியை நாங்கள் போராடி முறி அடிப்போம் :-)

கார்க்கி said...

//என்னை கழட்டி விட்டுட்டு நீங்க எஸ் ஆகுரீங்கலே சகா ://

உங்களர்தான் ஆல்ரெடி டேமேஜ் பண்ணிட்டிங்களா சகா

கார்க்கி said...

/வித்யா said...
எங்க வூட்ல காபி எல்லாம் கிடையாது. ஒன்லி டீ//\\

பரவாயில்ல..

SK said...

// எங்க வூட்ல காபி எல்லாம் கிடையாது. ஒன்லி டீ:) //

நாங்க டா டீ இல்லீங்க :-) :-)

தாரணி பிரியா said...

ஊஹீம் நான் எல்லாம் நரசுஸ் காபியா பேஷ் பேஷ் நன்னாயிருக்கு குரூப் . நேக்கு காபிதான் வேணும்

தாரணி பிரியா said...

ஊஹீம் நான் எல்லாம் நரசுஸ் காபியா பேஷ் பேஷ் நன்னாயிருக்கு குரூப் . நேக்கு காபிதான் வேணும்

SK said...

நூறு அடித்த தானை தளபதி வாழ்க :-)

வித்யா said...

கார்க்கி அப்ப வூட்டாண்ட வாங்க. Special டீ ஒன்னு போட்டுத்தரேன்:)

SK said...

// ஊஹீம் நான் எல்லாம் நரசுஸ் காபியா பேஷ் பேஷ் நன்னாயிருக்கு குரூப் . நேக்கு காபிதான் வேணும் //

நீங்க தான் நரசுஸ் ஓனரா சொல்லவே இல்லை :-) :-)

தாரணி பிரியா said...

illai SK Coimbatorela captain innum college kattalaiye

கார்க்கி said...

//தாரணி பிரியா said...
ஊஹீம் நான் எல்லாம் நரசுஸ் காபியா பேஷ் பேஷ் நன்னாயிருக்கு குரூப் . நேக்கு காபிதான் வேணு//

நாங்க உழைச்சு 100 அடிச்சுட்டு கேட்கிறோம்.. நீங்க எதுக்கு கேட்கறீங்க?

// SK said...
நூறு அடித்த தானை தளபதி வாழ்க :‍)//

வாழ்க வாழ்க..(ஓ நான் தானா அது)

தாரணி பிரியா said...

naan KCT

வித்யா said...

தாரணி
மாமியாரோ அம்மாவோ வந்தாதான் பில்டர் காபி. அவசரத்துக்கு nescafe தான் வச்சிருக்கேன். ஓகேவா??

SK said...

// கார்க்கி அப்ப வூட்டாண்ட வாங்க. Special டீ ஒன்னு போட்டுத்தரேன்:) //

ஸ்பெஷல் டீ எபக்ட் எப்படி இருக்கும்னு சொல்லிடுங்க .-)

கார்க்கி said...

/வித்யா said...
கார்க்கி அப்ப வூட்டாண்ட வாங்க. Special டீ ஒன்னு போட்டுத்தரேன்://

எஸ்.கே ..ஸ்பெஷல்ன்னா புரியுதா? ஜாக்கிரதையா இருக்கனும்

தாரணி பிரியா said...

75 நான் அடிச்சதாலதானே நீங்க 100 அடிக்க முடிஞ்சது அதனாலதான். :)

தாரணி பிரியா said...

double ok vidhya

கார்க்கி said...

//தாரணி பிரியா said...
75 நான் அடிச்சதாலதானே நீங்க 100 அடிக்க முடிஞ்சது அதனாலதான். ://

மேட்ட்ட்ட்டம் 50 நான் தான் அடிச்சேன்

வித்யா said...

கார்க்கி & SK
உள்குத்து எல்லாம் இல்லீங்கோ. Special டீன்னா தண்ணி இல்லாம:)

தாரணி பிரியா said...

கடமை அழைக்கிறது. இப்ப நான் எஸ் ஆகறேன். அப்பாலிக்க வர்ரேன்.

வித்யா said...

கார்க்கி 125:)

கார்க்கி said...

//தாரணி பிரியா said...
double ok viட்ஹ்ய//

ஹேய்..சூ...க்ப்..டப்..என்ன பழக்கம் இது? அவங்க எவ்ளோ பெரியவ்ங்க? பேரு சொல்லி கூப்பிடறதா?

கார்க்கி said...

//வித்யா said...
கார்க்கி & SK
உள்குத்து எல்லாம் இல்லீங்கோ. Special டீன்னா தண்ணி இல்லாம://

எனக்கு தண்ணி மட்டும் போதுங்க.. :))))))))))

வித்யா said...

மக்களே நாளை நான் பாண்டிச்சேரி போறேன். பொட்டிய கட்டனும். அதனால நானும் எஸ் ஆரேன். நான் இல்லைன்னாலும் பரவால்ல. கும்முறவங்க கும்முங்க:)

கார்க்கி said...

ஓக்கே.. வித்யா ஆன்ட்டி ,எஸ்.கே,தா.பி ..ட்ரெய்னுக்கு நேரம் ஆவுது.. எஸ் ஆகுட்டுமா?

SK said...

தா. பி. நல்ல படிய போய் பாடம் எடுங்க

வித்யா said...

கார்க்கி வரும்போது உங்களுக்கு தண்ணி வாங்கிட்டு வரேன்:)

SK said...

ஓகே ஆல் எஸ்கேப் மீ அல்சோ எஸ்கேப் யா

ஹவே எ நைஸ் ஜர்னி யா ..

பை

தாரணி பிரியா said...

ஆஹா எஸ்.கே. நான் Accounts Departmentla Junior Accountant அதனால பாடம் எல்லாம் எடுக்க முடியாது. காலேஜ் கணக்கு வழக்கு பாக்கிற வேலை மட்டும்தான் எனக்கு

SK said...

// ஆஹா எஸ்.கே. நான் Accounts Departmentla Junior Accountant அதனால பாடம் எல்லாம் எடுக்க முடியாது. காலேஜ் கணக்கு வழக்கு பாக்கிற வேலை மட்டும்தான் எனக்கு //

எனக்கு அந்த ஏரியா KCT பக்கம் ரொம்ப புடிக்கும்

RAMYA said...

அப்படியே என்னைய உரிச்சி வச்சிருக்கீங்களே, எனக்கு கூட இதே மாதிரி எண்ணங்கள் மனதில் ஓடும்.

RAMYA said...

//
அம்மா கனகாம்பரம் கொடுக்கும்போதெல்லாம் திட்டுவேன். "ஏன் அப்படியே ஒரு பித்தளை சொம்பையும் கொடேன். மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடறேனே"ன்னு கத்துவேன்.
//

ஆனா கரகாட்டகாரன் டான்ஸ் ஆடினா நல்ல இருக்கும்....

RAMYA said...

//
வித்யா said...
கார்க்கி வரும்போது உங்களுக்கு தண்ணி வாங்கிட்டு வரேன்:)

//


இதெல்லாம் வேறேயா, நடக்கட்டும் நடக்கட்டும்........

வித்யா said...

வாங்க ரம்யா.
ஹி ஹி எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தானே:)
கரகாட்டக்காரன் டான்ஸ் ஆடினா நல்லாதான் இருக்கும். நான் ஆடினாதான் கேவலமா இருக்கும்:)

கார்க்கி said...

//RAMYA said...
அப்படியே என்னைய உரிச்சி வச்சிருக்கீங்களே,//

நீங்க என்ன வாழைப்பழமா ரம்யா???? (ச்சும்மா ட்டமாஷ்)

//நான் ஆடினாதான் கேவலமா இருக்கும்:)//

எனக்கு ஒரு உண்மை தோனுது.. சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பிங்களோ?????????சோ கப்சிப்...

SK said...

சும்மா சொல்லுங்க சகா வித்யா ஒன்னும் சொல்ல மாட்டாங்க :-)

கார்க்கி said...

//வித்யா said...
கார்க்கி வரும்போது உங்களுக்கு தண்ணி வாங்கிட்டு வரேன்:)

//


இதெல்லாம் வேறேயா, நடக்கட்டும் நடக்கட்டும்........//

ஷு... பப்ளிக்.. பார்த்து பேசுங்க‌

SK said...

// ஷு... பப்ளிக்.. பார்த்து பேசுங்க‌ //

என்ன கார்க்கி ஷு வேணுமா :-)

SK said...

கார்க்கி

SK said...

வித்யா

SK said...

தா. பி.

SK said...

எஸ். கே.

SK said...

எல்லாம் சேந்து .. 150 .. எனி வே மீ த 150

வித்யா said...

சொல்லுங்க கார்க்கி..நான் தப்பா எடுத்துக்க்க மாட்டேன்:)

வித்யா said...

150 போட்ட SKக்கு ஜே:)

SK said...

நீங்க தப்ப எடுத்துகறது முக்கியம் இல்லை வாங்கிட்டு வரேன்னு சொன்ன தண்ணி :-)

தாரணி பிரியா said...

அட நம்மக்கள் இன்னும் முடிக்கலையா ?

தாரணி பிரியா said...

அது என்னா கி.மு. கி.பி மாதிரி தா.பி ஒண்ணா தாரணி சொல்லுங்க இல்லாட்டி பிரியா சொல்லுங்க :)

SK said...

நாங்க பிரிச்சு பேசி பழக்கம் இல்லீங்க .-)

அறிவன்#11802717200764379909 said...

நகையோ,பூவோ பைத்தியம் பிடித்த மாதிரி போட்டுகொள்வது எவ்வளவு எக்ஸெண்ட்ரிக் தனமோ அதே அளவு பிடிவாதமாக போட வேண்டாம் என்பதும் ஒரு வித எக்ஸெண்ட்ரிக் தனம் என்பதும் சரிதான் என எனக்குத் தோன்றுகிறது !

Sorry,if it offend you !

புதுகை.அப்துல்லா said...

மீ த லேட்டு கொ.ப.சே... நான் சொல்ல நினைத்ததை அனைவரும் சொல்லிட்டாங்க :)

குடுகுடுப்பை said...

என்னோட கொள்கையே காம்பரமைஸ் பண்ணிக்கறது தான்.:)

வித்யா said...

அறிவன்
அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. And ofcourse it didnt offend me:)
***********************************
அப்துல்லா அண்ணா நீங்க வந்ததே சந்தோஷம் தான்:)
*********************************
குடுகுடுப்பை
:))

கார்க்கி said...

கடைசி பதிவில் வந்து ஆஜர் போட்டு சென்ற கொ.ப.செ அவர்களே அதற்கு முந்தைய ஜே.கே.ஆர் பதிவுக்கு ஏன் வரவில்லை? பபதவி கிடைத்தவுடன் ஆண்வத்தில் ஆடாமல் தலையை பற்றிய எல்லாப் பதிவுக்கும் சென்று உங்கள் வரவை பதிவு செய்யுங்கள். வரலாறு மிக முக்கியம் செயலாளரே

கார்க்கி said...

////நான் ஆடினாதான் கேவலமா இருக்கும்:)//

எனக்கு ஒரு உண்மை தோனுது.. சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பிங்களோ?????????சோ கப்சிப்.//

//வித்யா said...
சொல்லுங்க கார்க்கி..நான் தப்பா எடுத்துக்க்க மாட்டேன்://

ஹிஹிஹி.. வந்து.. அது வந்து...

நீங்க ஆடினாத்தான் கேவலமா இருக்குமா?

gils said...

!!! kadisi vari padichitu onnu purijdichi..dasavatharam epect inum pogala :) first time here..nallarukunga unga post :)

வித்யா said...

கார்க்கி
நான் ரொம்ப பிஸியா பாண்டியில மாமியார் வீட்ல ஆணி புடுங்கிட்டுருக்கேன். அதனால கிடைக்கிற பத்து நிமிஷ கேப்புல தான் கிடா வெட்றேன். சென்னை வந்ததும் நம்ம அளப்பரையை ஆரம்பிச்சிட வேண்டியதுதா:)

அப்புறம் நான் ஆடினா மட்டும் தான் கேவலமா இருக்கும்:))

வித்யா said...

thanku gils:)

கார்க்கி said...

/வித்யா said...
கார்க்கி
நான் ரொம்ப பிஸியா பாண்டியில மாமியார் வீட்ல ஆணி புடுங்கிட்டுருக்கேன். அதனால கிடைக்கிற பத்து நிமிஷ கேப்புல தான் கிடா வெட்றேன். சென்னை வந்ததும் நம்ம அளப்பரையை ஆரம்பிச்சிட வேண்டியதுதா:)//

மாமியார் வீட்டுல போய் வேலை செய்வீங்களா? அந்த மாதிரி பொண்ணுங்க இருக்காங்களா? எந்த ஊருங்க? எனக்கு ஒரு பொண்ணு பாருங்க உங்க ஊருல..

//அப்புறம் நான் ஆடினா மட்டும் தான் கேவலமா இருக்கும்:)//

நான் ஆடினா மட்டும்தான் நல்லயிருக்கும் :(((((

சந்தனமுல்லை said...

http://sandanamullai.blogspot.com/2008/12/blog-post_5329.html

உங்களை டேக் செய்திருக்கேன்!

இளைய பல்லவன் said...

இங்க தங்கமணியும் சேம் ப்ளட் தான்.:))
நானும் உங்க ரங்கமணியோட சேம் ப்ளட் தான்:((

வீட்டுக்கு வீடு வாசப்படி ! ! !

அதுசரி

ஒரு மூணு பேரு சேந்து இவ்வளவு அடிச்சிருக்கீங்களே. நீங்கள்ளாம் இந்திய அணிக்குப் போனா என்ன?