இன்னும் ஒரு மாதம்? அல்லது 3 மாதம்? இல்லை அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரை தான் இந்த சம்பவம் பேசப்படும் என்று ஒரு பதிவர் இன்னொருவரின் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். என் பிரார்த்தனை அது பொய்யாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஒரு சாமானியனாக நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். அரசியல்வாதிகளின் அலட்சியம் போல் நமக்கும் பன்மடங்கு இருக்கிறது. நான் வோட்டுப் போட்டால் எல்லாம் மாறிடுமான்னு கேக்கறவங்க நிறைய பேர். கண்டிப்பா மாறாதுதான். ஆனால் நம் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய முயற்சியாக வோட்டுப் போடுவது இருக்காலமில்லையா? நம்மில சில பேருக்கு 49ஓ என்ற ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை. நான் கடந்த இரண்டு முறையாக என் வோட்டை 49ஓவாகத்தான் பதிந்திருக்கிறேன் (இதற்கு நான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது இருந்தது). முதல்ல நம்ம கிட்ட இருக்கற குறைகளைக் குறைத்துக்கொள்வோம். அப்போ தான் அடுத்தவன தைரியமாய் கேள்வி கேக்கலாம்.
சந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.
1. அருண்
2. தாரணி பிரியா
3. புதுகை அப்துல்லா
4. கார்க்கி
பி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).
December 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நன்றி. கொஞ்ச நாள் எடுத்து நல்லா எழுதனும்னு நினைக்கிறேன்
// நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். //
இதையும் மீறி எதாவது செய்யலாம். அதுக்கு எதாவது முயற்சியாவது செய்யணும். எது செஞ்சாலும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யாமா. யோசிச்சு செய்யணும். அடி மேல அடி வெச்ச அம்மியும் நகரும். இது மாதிரி விடயத்துக்கும் நல்ல விழிப்புணர்வு வரும். வரணும். வர வரைக்கும் விட கூடாது.
அது என்ன49ஒ ?
http://blogintamil.blogspot.com/2008/12/blog-post_09.html
// ஜீவன் said...
அது என்ன49ஒ ?
//
??????
நன்றி :)
இன்று மாலை கண்டிப்பாக எழுதுகிறேன்.
பாண்டியில் மாமியார் வீட்டில்
//
அப்படியா ரொம்பச் சந்தோசம். வர்றப்ப எனக்கு மறக்காம________________.
:)
நன்றி வித்யா ஆபிஸில் கொஞ்சம் அதிகம் வேலைகள் :( அதனால ஒரு வாரம் டைம் குடுங்க. கண்டிப்பா சன்டே எழுதிடறேன்.
\\அது என்ன49ஒ ?\\
என்னாதுங்க ...
ஜீவன், ஜமால் மற்றும் பூர்ணிமா.
49O பற்றித் தெரிந்துகொள்ள
http://en.wikipedia.org/wiki/49-O
உங்கள் வரைக்கும் இது நல்ல முயற்சியே.
அது என்ன49ஒ ?
மெதுவா சொல்லுங்க, ஒன்னும் அவசரமில்ல
//நல்ல முயற்சியே.
அது என்ன49ஒ ?
//
இப்படி எல்லாம் வார்த்தைகள் இருக்கிறதா? சொல்லவே இல்லை
Post a Comment