December 2, 2008

ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008

இதோ வந்தேன் வந்தேன் என்று 2009 வந்துகொண்டிருக்கிறது. ஜூனியரின் பேவரைட் பாடல்களை(2008) பட்டியலெடுத்தேன். லிஸ்ட் இதோ:


டான்ஸ் நம்பர்ஸ்:
*********************
இந்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(


1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)
2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)
3. ஹாப்பி நீயு இயர் - குருவி
4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி
5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)
6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்
7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்
8. குட்டிப் பிசாசே - காளை


டான்ஸ் நம்பர் அல்லாதவை
**********************************
இவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் முழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.


1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)
2. ஹர ஹர சம்போ - அலிபாபா
3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்
4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்
5. அன்பே என் அன்பே - தாம் தூம்
6. தாம் தூம் - தாம் தூம்
7. யாரோ மனதிலே - தாம் தூம்
8. தேன் தேன் - குருவி
9. சின்னம்மா - சக்கரக்கட்டி
10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா
11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்
13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்
14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்
15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்
16. டோனா - சத்யம்
17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி
19. ச்சூ ச்சூ மாரி - பூ

சில சமயம் இந்த பாடல்களுக்குக்கூட டான்ஸ் ஆடுவான். எல்லாம் அவன் மூடை பொறுத்தது.

இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும். இவங்க மட்டும் இல்லன்னா ஜூனியருக்கு சாப்பாடு ஊட்றது ரொம்பக் கஷ்டம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)

20 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம் enjoy பண்ணங்க அம்மாவும் பையனுமா சேர்ந்து.

ஏன் வீடியோ எடுக்கறேன் பேர்வழி ஜீனியர் வெக்கப்படுறாமாதிரி செய்றீங்க.

கத்தாழ கண்ணால - இது அமித்துவின் பேவரிட்டும் கூட

அப்புறம் இப்போ வரும் சூரியன் எஃஃப் எம்மின் விளம்பரம்.

இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)//
சீக்கிரமே உங்க ஆடியோ சி.டி ரிலீஸ் ஆகிடும்னு சிம்பாலிக்கா சொல்றீங்க.
புரியுது.

சந்தனமுல்லை said...

:-) ஜாலி ஜூனியர் போலிருக்கே! சூப்பர் லிஸ்ட்! மேஜர் குத்துப்பாட்டும் எல்லம் இருக்கு இலலியா! இதுல சிலது பப்புக்கு பிடித்தது இருக்கு! அப்புறம் சுப்ரமணியபுரத்தில் வரும் கண்கள் இரண்டால்! ஏனோ பப்புவுக்கு கொஞ்சம் மெலோடிக்கா இருந்தா/கர்னாடிக் பேசா இருந்தாலும் பிடிக்கிறது!! அவ இரண்டு மாசமா இருக்கும்போதில்ரிந்து 9 மாசம் வரை கர்நாடிக்தன் எங்க வீட்டில்! அதோட எப்பெகட்!!

வித்யா said...

நன்றி அமித்து அம்மா. என்ன பொண்ண கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறிங்க??

வித்யா said...

நன்றி முல்லை.
ஜூனியர் கூட 1 வயசு வரைக்கும் மெலடி/கர்னாட்டிக்குன்னு தான் கேட்டுட்டு இருந்தார். இப்போ மாறியாச்சு. அவரோட ஆல் டைம் பேவரிட் ஹரிவராசனம்:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சுட்டு ம் விழி சுடரேக்குத்தான் என் பையன் டான்ஸ் ஆடிட்டிருந்தான் சின்னதுல.. :)

இவரு அடியே கொல்லுதே வா..ம்..

முரளிகண்ணன் said...

same blood

கார்க்கி said...

//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//

நான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..

மெலடியும் ரசிக்கிறாரா? வெருகுட்...

SK said...

இந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா

நமக்கு இருபது வருஷம் பாட்டு எல்லாம் ரசிச்சது கெடையாது :-)

வித்யா said...

வாங்க முத்துலெட்சுமி-கயல்விழி.
*******************************
முரளிக்கண்ணன்
:)

வித்யா said...

கார்க்கி
இப்பவும் சொல்றேன் விஜய்க்கு டான்ஸ் மட்டும் தான் நல்லா வருது. மத்ததெல்லாம் ம்ஹூம்:

வித்யா said...

\\ SK said...
இந்த காலத்து புள்ளைகளுக்கு இம்புட்டு பாடு தெரியுதா \\

நீங்க வேற பாட்டு முடிஞ்சுடுச்சுன்னா ஒரே அழுகை தான்:(

கார்க்கி said...

நான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))

காமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல‌ entertainer

வித்யா said...

\\ கார்க்கி said...
நான் எப்பவும் சொல்றேன் அவருக்கு அதுவாது வருது :)))))))

காமெடியும் நல்லாத்தானே பண்றாரு. நான் ஒன்னும் அவர விரம் சூர்யா மாதிர்னு சொல்ல வெயில்லயே.. ஆனா நல்ல‌ entertainer\\

Accepted:))

தாமிரா said...

கார்க்கி said...
//அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)//

நான் சொன்னா ஒத்துக்க மாட்டறாங்க.. குழந்தைகள் ரசனைதான் உலகிலே சுத்தமானது..விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதுனு சொல்றாங்க.. நான் டாக்டர் ஃபேனுங்க.. அவர் டான்சுன்னு எனக்கும் உயிரு..//

ஓய்ய்.. எங்க‌ வ‌ந்து அர‌சிய‌ல் ப‌ண்றே.?

ஜீவன் said...

கத்தாழ கண்ணால பாட்டு

சில பேரு தூக்கத்த கெடுத்தாலும்

சின்ன புள்ளைங்களுக்கு சோறு

ஊட்டவும் அவங்கள தூங்க

வைக்கவும் ரொம்பவே

பயன்பட்டு இருக்கு!

வித்யா said...

\\ ஜீவன் said...
கத்தாழ கண்ணால பாட்டு
சில பேரு தூக்கத்த கெடுத்தாலும் \\

அந்த சில பேர்ல நீங்களும் ஒருத்தர் தானே??

Arun Kumar said...

நன்றாக ரசித்து உங்கள் அனுபவங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள்.:)

அவர்களை சில விஷயங்கள் எப்படி கவர்கர்கின்றதே தெரியவில்லை..

நல்லா enjoy பண்ணுங்க :))

மங்களூர் சிவா said...

/
இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும்.
/

:))))))))))))

பிற்காலத்தில நமக்கும் யூஸ் ஆகும்!!

வித்யா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அருண்:)

வித்யா said...

வருகைக்கு நன்றி சிவா:)