September 24, 2009

காதல் தவம்

வீடு மாற்றியபோது எடுத்து வைத்த புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது தேவதைகளின் தேவதை. தபூ சங்கரின் உரைநடை மற்றும் கவிதை வடிவக் காதல். மீள் வாசிப்பு செய்ய நினைத்து தனியே எடுத்து வைத்தேன். வேலையெல்லாம் முடித்துவிட்டு கையிலெடுத்து காதலில் மூழ்கினேன். அவர் எழுதியிருப்பதெல்லாம் காதல். காதலைத் தவிர வேறொன்றுமில்லை. எனக்குப் பிடித்த சில கவிதைகள் இதோ.

உன்னைக் காதலித்துக்கொண்டு இருக்கும்போது
நான் இறந்துபோவேனோ
என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்கொண்டு
இருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
*****

'இன்று நீ
என்ன ராகத்தில் சிரிப்பாயோ' என்றேன்.
நீ மெல்லிய
புன்னகை செய்தாய்.
இன்று மௌன ராகம்தானோ
*****

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதௌ உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான் எனக்குத் தந்தாய்.
*****

தினம் தினம்
ஒரு காக்கையைப்போல்
கரைந்து கொண்டிருக்கிறது
என் காதல்
உன் வருகைக்காக.
******

நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.
******

நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
*******




இதைப் படித்துவிட்டு நானும் காதல் பற்றி எழுதினால் என்ன எனத் தோன்றியது (அடுத்த ஏழரை உங்களுக்கு). அதற்கு முன்னாள் சும்மானாச்சுக்கும் ட்ரை பண்ண கவுஜ ஒன்னு.

என்
தனிமை எரித்து
உன்
காதல் குழைத்து
கண் மையிட வா.
கண்ணில் மையிட்டு
கன்னத்தில் முத்தமுமிட்டு போ.

14 comments:

நர்சிம் said...

நல்ல முயற்சி.

101க்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

கவிதை எல்லாமே அசத்தலா இருக்கு.. உங்களுதும் தான்.. :))))))))

Truth said...

நல்லா இருக்கு வித்யா.

Arun Kumar said...

கவிதை எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

Anonymous said...

ம்ம், நல்லா இருக்கு... வேற என்ன சொல்ல முடியும்.. ( ஒரு பயம்தான்)

:))

Vidhya Chandrasekaran said...

நன்றி நர்சிம் (கிண்டல்தானே?)
நன்றி ஸ்ரீமதி (அவ்வ்வ்வ்)
நன்றி ட்ருத் (")
நன்றி அருண்குமார் (")
நன்றி மயில் (நல்லாருக்குல்ல. அப்ப அடிக்கடி எழுதறேன். நல்லால்லன்னு சொன்னீங்கன்னா இன்னும் பெட்டரா ட்ரை பண்றேன். ஆக ஏழரை ஏழரை தான்)

மணிகண்டன் said...

ரொமான்சுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் போல :)- ஒண்ணு கூட பிடிக்கலை ~!

நீங்க முயற்சியை கைவிடாதீங்க. அடுத்தது இதவிட பெட்டரா வருமேன்னு தான் கவலையா இருக்கு :)

Thamira said...

கொலைவெறி முயற்சி.! வரலைன்னா உட்ருங்க பாவம். கண்டிப்பா வேணும்னா ஸ்ரீமதியிடம் டிரைனிங் எடுக்கலாம். பின்னுவாங்க..

R.Gopi said...

நல்லா இருக்கு வித்யா...

வாழ்த்துக்கள்... காதலை பற்றி நிறைய எழுதலாமே...

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள். காதல் தவிர்த்தும் எழுத முயற்சியுங்கள்.

Vidhya Chandrasekaran said...

நன்றி மணிகண்டன்.
நன்றி ஆதி (ஏன் ஸ்ரீமதிக்கு பைத்தியம் புடிக்கனுமா?)
நன்றி கோபி.
நன்றி கார்க்கி.
நன்றி உழவன்.

sundar said...

இதுக்கு பேர் தான் சொல்லி அடிக்கறதாக்கும்.... I mean ஏழறைன்னு சொல்லிட்டு கவுஜ பாடறது...

பரவால்ல......

ம்ம்ம்....

Unknown said...

<<<
உன்னைக் காதலித்துக்கொண்டு இருக்கும்போது
நான் இறந்துபோவேனோ
என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்கொண்டு
இருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
>>>

அய்யோயோ அய்யோயோ, சூப்பரு வரி. சும்மா கலக்கலா இருக்கு!

Vidhya Chandrasekaran said...

நன்றி சுந்தர்.
நன்றி மஸ்தான்.