அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.
வயது ஏற ஏற பண்டிகைகளிம் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. சிறுவயது நினைவுகளெல்லாம் பசுமையாய் கண்முன். வீட்டில் புதுத்துணி எடுப்பது வருடத்திற்கு மூன்று முறை தான். பெற்றோர் திருமண நாள், தீபாவளி, பிறந்த நாள். பொங்கலுக்கு வீட்டுப்பொண்ணுக்கு என பெரியம்மாவிடமிருந்து வந்துவிடும்:)
Atleast ஒரு மாதத்திற்கு முன்னமே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். டிரெஸ் எடுத்து தைக்க கொடுக்கனும். அம்மா என்ன பலகாரம் என்பதை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பைனலைஸ் பண்ணுவார். எல்லா தீபாவளிக்கும் ரவா லட்டு, தேங்காய் பர்பி, வெண்ணைய் முறுக்கு, தட்டை. மெஷினில் பலகாரத்திற்கு தேவையான மாவரைக்கும் போதே எச்சிலூற ஆரம்பித்துவிடும். அதுவும் ரவா லட்டு மாவை அப்படியே திங்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒரு நாள் முறுக்கு மற்றும் தட்டை, ஒரு நாள் ரவா லட்டு, ஒரு நாள் தேங்காய் பர்பி என பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.
ஒரு வாரத்துக்கு முன்னர் அப்பா கொஞ்சமாய் பட்டாசு வாங்கி தருவார். முன்னோட்டத்திற்கு. அதிலிருக்கும் கேப்பை மட்டுமே வெடிப்போம். மத்ததெல்லாம் தீபாவளியன்று கரியாக்க சேமித்துவைக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்து மூன்று தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தாத்தா இறந்துவிட்டார். பண்டிகை கிடையாது. "சே. தாத்தா ஒரு வாரம் கழிச்சு செத்துப்போயிருக்கக்கூடாதா?" என இழப்பின் வலிதெரியாத பருவத்தில் சலித்துக்கொண்டோம். வெடிக்காத வெடிகளிலிருந்து மருந்தினை பிரித்துக்கொட்டி, கரும்புச்சக்கை போட்டு எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஊர்பையனின் காலில் பலத்த தீக்காயம். இன்னும் அவன் காலின் கருகிய தோலைப் பார்க்கும்போது அந்த சம்பவமே நினைவுக்கு வரும்.
என் பொன்னான தீபாவளி தருணங்கள் வாலாஜாவில் இருக்கும்போது தான். சரியான செட். நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். குளிச்சுட்டு ஊதுபத்தியோடு வெளியே வந்தால் தொடர்ந்து நான்கைந்து மணிநேரங்கள் வெடி போட்டுக்கொண்டேயிருப்போம். அதுவும் எல்லாரையும் கலங்கடிக்கும் விதமாக. கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.
தீபாவளியன்று மட்டும் நானும் தம்பியும் ரொம்ப ராசியாகிவிடுவோம். அப்போதானே நமக்கு வேண்டியது கிடைக்கும். இன்றுவரை எனக்கு சரங்களில் நாட்டமில்லை. என்னோட ஆல் டைம் பேவரிட் லக்ஷ்மி வெடியும், குருவி வெடியும் தான். இரண்டு மூன்று லக்ஷ்மி வெடிகளை ஒன்றாக இணைத்து வெடிக்கும்போது ஆட்டம் பாம் தோற்கும். ஒரு முறை லக்ஷ்மி வெடியை கையில் பிடித்து தூக்கிப் போடும்போது அத்தை பார்த்துவிட்டார். "பொம்பள புள்ளையா இது" என நாள் முழுவதும் அர்ச்சனை (ரவுடி). இரவு நேரங்களில் ஆறேழு புஸ்வாணங்களை ஒரே நேரத்தில் கொளுத்தும்போது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாவாடையை (டெண்த் வரை என்னோட தீபாவளி ட்ரெஸ் எதாவது ஒரு பாவாடை. அப்புறம் தான் போனபோகிறதென மாடர்ன் டிரெஸ் வாங்கித்தந்தார்கள். பெரியம்மா ரெகமண்டேஷன்) லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா. வெடி வச்சிட்டு ஓடிவர வசதியாக இருக்கும்.
தீபாவளி கொண்டாட்டங்களில் எனக்கு பிடிக்காத விஷயம் அதிகாலை எழுந்து குளிப்பது, தீபாவளி மருந்து திம்பது. லீவு நாள் அதுவுமா 5 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அவ்வ்வ்வ்வ். எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். I hate it:(
தலை தீபாவளியின்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால் நோ பட்டாசு. ஒரு துணுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றைப் பிரட்டி வாந்தி வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு ஜூனியருக்கு ஆகாதென நோ வெடிச்சத்தம். போன தீபாவளி ஏதோ சுமாராய் வெடி வைத்து மிச்ச நேரம் அடுப்படியிலேயே கழிந்தது. இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் (அ) தீபாவளி நல்வாழ்த்துகள். Have a happy and safe diwali:)
October 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
தீபாவளி நினைவுகள் மத்தாப்பு:)!
தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
வாட் எ கோ இன்சிடென்ஸ்.. நானும் அந்த தீபாவளி பற்றி எழுதி இருக்கேன்
ஹேப்பி தீபாவளி கொ.ப.செ
வித்யா
வழக்கம் போல், உங்களின் இந்த தீபாவளி வாழ்த்து பதிவும் அபாரம்...
என் தீபாவளி வாழ்த்து இங்கே உள்ளது, வந்து பாருங்கள்... பதிவின் முடிவில் உங்களுக்காக இருக்கும் "ஸ்பெஷல் பரிசு" எடுத்துக்கொள்ளுங்கள்... தீபாவளி கொண்டாட்டத்தை ஜமாய்ங்கள்...
(நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html)
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
வயது ஏற ஏற பண்டிகைகளிம் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. //
same blood.
பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.//
இந்தநிலையில் வந்த மாற்றமுன்னே நினைக்கிறேன். தவிர பிள்ளைகள் வளர்ந்து நாம் சிறுவயதில் ஆனந்தப்பட்டதை போல் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று ப்ளான் செய்வதிலும் களைப்பு வந்திடுகிறது.
அப்பா,அம்மாவாக இருப்பதன் கஷ்டம் இப்போதுதான் நல்லா புரியும்.
அருமையான கொசுவத்தி.
ஆனந்தமயமான தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
இனிய (அட்வான்ஸ்) திபாவளி நல்வாழ்த்துக்கள்.
நானும் சிறு வயது முதல் போன தீபாவளி வரை வெடிக்காக நிறைய செலவு செய்வேன்.
இந்த வருஷம் குளோபல் வார்மிங் அது இது’ன்னு சொல்லறாங்க. போறாக்குறைக்கு 2012 என்ற படத்தின் டிரெய்லரை வேற பார்த்துத் தொலைச்சுடேன். எதுக்கு நம்பளால பூமி இன்னும் சூடாகணும்’னு நினைச்சு, இந்த வருஷம் கொஞ்ச வெடிகளே வாங்கியிருக்கேன்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்...
பழைய ஞாபகம் எல்லாம் வந்துருச்சு...
இந்த தடவ ஊருக்கு வரவே ஒரு நாள் ஆயிடும்
ம்ம்ம் .. நல்லா
கொண்டாடுங்க ...
// Have a haapy and safe diwali:)//
அதிக சந்தோஷத்தோட கொண்டாடணும்ன்னு double "a" போட்டுட்டிங்களா ;-)?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி கார்க்கி.
நன்றி கோபி.
நன்றி கலா அக்கா.
நன்றி விஜய்.
நன்றி பிரியன்.
நன்றி ராஜா (மாத்திட்டேன்)
தீபாவளி வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் ஜூனியருக்கும் தீபாவளி வாழ்த்துகள் வித்யா :)
பட்டையக் கிளப்புங்க வித்யா. தீபாவளி நல்வாழ்த்துகள்.
கார்க்கி said...
வாட் எ கோ இன்சிடென்ஸ்.. நானும் அந்த தீபாவளி பற்றி எழுதி இருக்கேன் //
தீபாவளி நேரத்துல எல்லாரும் அதைப் பத்தித் தான்பா எழுதுவாங்க. எப்படி எல்லாம் கூட்டு சேக்குறீங்க. யப்பா...
ஹாய் வித்யா,
நான் இப்போதான் கொஞ்ச நாளா சில மொக்கைகள எழுதிட்டு வர்றேன். உங்க பதிவுகள படிச்சிட்டிருக்கும்போதுதான் தெரிஞ்சுது, நீங்க காஞ்சிபுரத்துல கொஞ்ச வருஷம் இருந்தீங்கன்னு. அடடா, அம்மணி நம்ம ஊருன்னு தெரிஞ்சதுக்கப்புறம், அடுப்பு இல்லாமலே பாசம் பொங்கிடுச்சு.
அதென்னங்க, வெரைட்டியா சாப்ட்டு ஒரு கலக்கு கலக்குறீங்க. உங்களோட பதிவ பாத்ததுக்கப்புறம்தான் வேளச்சேரில (5 வருஷமா நான் வேளச்சேரியன்)நளாஸ்னு ஒண்ணு இருக்கறதே எனக்கு தெரியும்.
உங்களுக்கும், உங்களவர்க்கும் & ஸ்பெஷலா ஜூனியர்க்கும் தீபாவளி வாழ்த்துக்கள்:)
தீபாவளி வாழ்த்துகள் :) :) :)
தீபாவளி வாழ்த்துக்கள் வித்யா :)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நன்றி சிவா.
நன்றி ஆதவன்.
நன்றி விக்கி.
நன்றி குறும்பன்.
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி மயில்.
நன்றி சின்ன அம்மிணி.
உங்களின் தீபாவளி கட்டுரை எனது இளமைகாலங்களை அசை போட வைத்து விட்டது. ஆம், நீங்கள் குறிப்பிட்டது போல் வயதாக வயதாக பண்டிகைகளில் ஆர்வம் குறைந்து வருகிறது, ஏனென்றால் பட்டாசு எல்லாம் விரயம் என்ற நினைப்பு வந்து விடுகிறது , ஆனால் குழந்தைகள் குறிப்பாக நமது வாரிசுகள் நாம் செய்த அதே குறும்போடு மேலும் வீரியத்தோடு செய்யும் போது அதை ரசிக்க முடிகிறது, உங்களின் சாப்பாட்டு ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும், நான் அதுபோல் ஒருநாளும் ருசித்து உண்டதில்லை, வயிற்றுப்பசிக்காக உண்டால் மட்டும் போதும் என நினைப்பேன், ஆனால் உங்களைப் போல் ரசித்து உண்பவர்களின் கட்டுரையை படிக்கும் போது எனக்கு அலாதி ஆனந்தம், மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்தாருக்கு என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,
அன்புடன்
ராகவேந்திரன், தம்மம்பட்டி,
வழக்கம் போல அருமையாக எழுதி இருக்கீங்க..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
//கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.//
நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள். மகிழ்ச்சி
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
//கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.//
நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள். மகிழ்ச்சி
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நல்லதொரு பகிர்வு.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி ராகவேந்திரன்.
நன்றி அருண்.
நன்றி உழவன்.
நன்றி துபாய் ராஜா.
அழகான நினைவுகள்.
கொஞ்சம் லேட்டாக நான் வந்துவிட்டதால் இந்தத்தீபாவளியை நினைத்தது போல கொண்டாடினீர்களா என எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment