ரொம்ப நாளாயிற்று ஜூனியர் அப்டேட்ஸ் எழுதி.எக்கச்சக்கமான விஷயங்கள் இருந்தாலும் ஏனோ எழுத விருப்பமில்லை. ஒன்னே ஒன்னு மட்டும். ஜூனியர் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து 2 வாரங்கள் ஆகிறது. 7.30 மணிக்கெல்லாம் எழுந்து "அம்மா தூல்" என்று பையை மாட்டிக் கொள்பவன், கீழே இறங்கி ஆட்டோவைப் பார்த்தவுடன் காவிரியை ரிலீஸ் செய்கிறான். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என நினைக்கிறேன்.
"சஞ்சு 1 2 3 சொல்லு"
நொன்
தூ
தீ
தோர்
"ம்ம்ம்ம் 5 6 சொல்லு"
ஐ
தித்
ஆன்
ஆய்த்
நான்
தென்ன்ன்
"குட் பாய். ABCD..."
அம்மா நானாம்மா போஉம்
***************
ஐ - பாட்
சரியாக ஒரு வருடம் ஆகப்போகிறது என் கைக்கு வந்து. சில சமயம் இரண்டு நாட்களுக்கொருமுறை பாட்டு மாத்துவேன். சில சமயங்களில் மாதக்கணக்கில். ஒரு பாட்டு என முடிவு செய்துவிட்டால் திரும்ப திரும்ப அதையே கேட்பேன். கண்டிப்பாக அழுவாச்சி பாட்டுகள் நோ. என் ஐ பாடிலிருக்கும் பாட்டுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த செக்ஷன்:)
To start with என்னோட ஆல் டைம் பேவரிட் பாட்டு & நடிகர்.
நல்ல மழை பெய்யும்போது, வீட்டில் யாருமில்லாதபோது, பால்கனியில் நின்று இந்தப் பாட்டைக் கேளுங்கள். கண்டிப்பாக ஆடத் தோன்றும். The most romantic piece from Raja sir (என்னைப் பொறுத்தமட்டில்). புன்னகை மன்னனில் வரும் மியூசிக். டான்ஸ் கமல் லெவலுக்கு கம்மிதான். நீங்களும் என்சாய் பண்ணுங்க.
************************
உறவினர் ஒருவருக்கு உடம்பு சரியில்லையென கேள்விப்பட்ட இன்னொரு உறவினர் போன் செய்து விசாரித்திருக்கிறார். உரையாடல்கள் கீழே.
"அம்மாக்கு தீடிர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாமே"
"தீடிர்ன்னு தான் வரும். லலிதா உன்ன இன்னிக்கு நைட் அட்டாக் பண்ண போறேன்னு சொல்லிட்டா வரும்?"
"அதில்ல. 2 நாள் ஆஸ்பத்திரில வச்சிருந்தீங்களாமே?"
"ஹார்ட் அட்டாக்னா. ஆஸ்பத்திரில தான் வப்பாங்க. வீட்லயேவா வச்சிப்பாங்க?"
டொக்..
போன் பண்ணி விசாரித்த உறவினர் என்னிடம் ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு கர்டசிக்காக விசாரித்தால் இப்படி கடுப்படிக்கறாங்களே என்று. மற்றொருவரோ எல்லாரும் விசாரிப்புங்கற பேர்ல இன்னொரு தடவை ஹார்ட் அட்டாக் வரவழைச்சுடுவாங்க போலிருக்கு என சலித்துக்கொண்டார். அவரவர் நியாயம் அவரவருக்கு.
************************
இந்த தடவையும் தீபாவளி அன்று வேலை சுழற்றிவிட்டது. எரிச்சல் தரும் சில வழக்கங்களைப் பற்றி தனி பதிவே போடலாம். நானும் வெடிச்சேங்கற பேர்ல பேருக்கு நாலு கொளுத்திப் போட்டேன். வாழ்த்துகள் சொல்ல போன் செய்த அண்ணாவிடம்
"என்னண்ணா பட்டையக் கிளப்பறீங்களா அங்க"
"இல்லடி. நேத்து வந்ததே 9 மணிக்கு. எம்பொண்ணு (1 வயதாகிறது) வெடிச்சத்தம் கேட்டாலே அலர்றா. இனிமே தான் போய் கொஞ்சம் மத்தாப்பூ வாங்கிட்டு வரணும்"
அடடா ஒரு சிங்கம் இப்படி சீப்பட்டு போச்சே:(
*************************
அம்மா வீட்டிற்கு சென்றிருந்தபோது அம்மா சொன்னார். "வித்யா உனக்கு ஏழரை சனி விட்ருச்சுடி". கேட்டுக்கொண்டிருந்த என் தம்பி சொன்னது. "மாத்தி சொல்லுமா. அவ தான் சனிய விட்ருக்கா". அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
October 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
//காவிரியை ரிலீஸ் செய்கிறான்
:)
//ஒரு சிங்கம் இப்படி சீப்பட்டு போச்சே
:))
//மாத்தி சொல்லுமா. அவ தான் சனிய விட்ருக்கா
:))))
நீங்களும் உங்கள் அண்ணாவின் உரையாடலுக்காக தனியாக ஒரு பெரிய பதிவே போடலாம். உங்கள் பதிவுகளின் வித்தியாசமான அம்சம் இது.
ஜீனியர் அப்டேஸ் பிராமாதம்
புன்னகை மன்னன் theme music mp3 formatல் இருந்தால் upload செய்ய முடியுமா?
நன்றி
//"அம்மாக்கு தீடிர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாமே"
"தீடிர்ன்னு தான் வரும். லலிதா உன்ன இன்னிக்கு நைட் அட்டாக் பண்ண போறேன்னு சொல்லிட்டா வரும்?"
"அதில்ல. 2 நாள் ஆஸ்பத்திரில வச்சிருந்தீங்களாமே?"
"ஹார்ட் அட்டாக்னா. ஆஸ்பத்திரில தான் வப்பாங்க. வீட்லயேவா வச்சிப்பாங்க?"
//
- சீரியஸ் விஷயம் தான் என்றாலும், எழுத்து நடை Super..
//அம்மா நானாம்மா போஉம்//
cho chuweet :-)
ஆவ்வ்வ்வ்.. சனி தப்பிச்சிடுச்சா??????
//ரொம்ப நாளாயிற்று ஜூனியர் அப்டேட்ஸ் எழுதி.எக்கச்சக்கமான விஷயங்கள் இருந்தாலும் ஏனோ எழுத விருப்பமில்லை.//
அது ஏனோ... கண்ணு பட்டு விடும் என்பதாலா வித்யா?? சிலதை எழுதினால், படிக்க ரொம்ப சுவாரசியமாக இருக்குமே...
//"அம்மா தூல்" என்று பையை மாட்டிக் கொள்பவன், கீழே இறங்கி ஆட்டோவைப் பார்த்தவுடன் காவிரியை ரிலீஸ் செய்கிறான். //
ஹா...ஹா...ஹா... இதெல்லாம் சரி ஆயிடும்... கவலை வேண்டாம் வித்யா...
//நொன்
தூ
தீ
தோர்//
தூள்... இதான் மழலை... ரொம்ப ரசிக்குமே...
ராஜாவின் இசையை பற்றி சொல்ல ஏதுமில்லை... நேற்றுதான் "ONE MAN SHOW" என்ற ராஜாவின் தனி ஆவர்த்தன கச்சேரி டிவிடி பார்த்தேன்... வாவ்... மனுஷன் பின்றார்..
கண்டிப்பாக அவரவர் நியாயம் அவரவர்களுக்கே... ஆனாலும், தெரிந்தவுடன் கேட்காமல் இருக்க முடியாது.. கேட்டால், அந்த நிகழ்வை மீண்டும் ஞாபகப்படுத்துவது போல் இருக்கும்... என்ன தான் செய்வது வித்யா??
//அடடா ஒரு சிங்கம் இப்படி சீப்பட்டு போச்சே:(//
இங்கேயும் அப்படி தான் வித்யா... என் பையன் 4 வயசாறது... வெடி சத்தம் கேட்டா, பெட்ரூம்ல இருந்து வெளில வர மாட்டேங்கறான்... இப்போல்லாம் சிங்கம் சீனி வெடி கூட வெடிக்கறதில்ல...
//அம்மா வீட்டிற்கு சென்றிருந்தபோது அம்மா சொன்னார். "வித்யா உனக்கு ஏழரை சனி விட்ருச்சுடி". கேட்டுக்கொண்டிருந்த என் தம்பி சொன்னது. "மாத்தி சொல்லுமா. அவ தான் சனிய விட்ருக்கா". அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். //
ஆஹா... நாங்க சொல்ல முடியாதத தைரியமா சொன்ன தம்பி வாய்க்கு சர்க்கரை போடறதோட, அடையார் ஆனந்த பவன்ல இருந்து கிலோ கணக்குல ஸ்வீட் வாங்கி கொடுக்கலாம்... (வித்யா... இப்போ அடையார் ஆனந்த பவன் பிராஞ்ச் தாம்பரத்துல திறந்தாச்சு, தெரியுமா??...)
நன்றி பின்னோக்கி.
நன்றி அருண்குமார்.
நன்றி கார்ல்ஸ்பெர்க்.
நன்றி ராஜா.
நன்றி கார்க்கி.
நன்றி கோபி (கிளை திறக்கப்பட்டு வருடங்களாகிறது).
//அம்மா நானாம்மா போஉம்//
படிக்கும்போதே முகத்தில் smileஐ வரவழைத்தது
மழலை மொழி - இதப்பத்தியே நீங்க தனியா ஒரு பதிவ போடலாமே!
:) :) :)
//வித்யா... இப்போ அடையார் ஆனந்த பவன் பிராஞ்ச் தாம்பரத்துல திறந்தாச்சு, தெரியுமா?//
Yaaru kitta solromnu paarthu thaan soneengala...
ஜூனியர் அப்டேட்ஸ் சூப்பர்.
இப்போ தானே போக ஆரம்பிச்சிருக்கான். அதுக்குள்ளே படுத்தாதீங்க. விட்டுடுங்க பாவம். உங்க வயசு வரும் போது 1,2,3,... A,B,C,... எல்லாம் சரியா சொல்லிடுவான்.
நல்ல ரசனை வித்யா.
பேசுவது கலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
அடடா ஒரு சிங்கம் இப்படி சீப்பட்டு போச்சே:( //
இது அண்ணாவுக்கு மட்டுமா, இல்லை உங்களுக்குமா....
உங்க ஊட்டுக்காரருக்கு சனி இன்னும் விட்டிருக்காதே. ;)
ஜூனியர் அப்டேட்ஸ் சூப்பர்.
அப்புறம் இந்த மியூசிக் இதுதான் என் ரிங்டோன் :).
நன்றி குறும்பன்.
நன்றி இராஜலெட்சுமி.
நன்றி மணிகண்டன்.
நன்றி விக்னேஷ்வரி (வீட்டுக்கு வீடு வாசப்படி).
நன்றி தாரணி.
அருண் oruwebsite.comல் முயற்சி செய்யவும்.
Vidhya solla maranthutten.. Velachery Vijaya Nagar la Royal Shoppee theriyuma (Towards Baby Nagar). Athuku pakathula "Udupi Hotel" onnu irukku. anga போளி sapitu paarungalen.... ippo eppidi irukumnu theriyathu.. i was there till May.. appo varaikum super o super...
தகவலுக்கு நன்றி இராஜலெட்சுமி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். வலிய வந்து போஸ்ட்டுக்கு மேட்டர் தர்றீங்க. வாழ்க உங்கள் சேவை:)
போன் டயலாக் அட்டகாசம் :-)
ஜூனியருக்கு வாழ்த்துக்கள்! தமிழ்நாட்டுக்கே கிடைக்காத காவிரி உங்களுக்காவது கிடைக்கிறதே.. கொடுத்துவச்சவங்க நீங்க :-)
ராஜா ராஜாதான், கமல் கமல் தான்
இந்த மியூசிக்கிற்கு ரஹ்மானும் வேலை செய்ததாய் படித்து இருக்கிறேன்..
நன்றி உழவன்.
நன்றி அமுதா கிருஷ்ணா.
//வலிய வந்து போஸ்ட்டுக்கு மேட்டர் தர்றீங்க. வாழ்க உங்கள் சேவை:)
//
hotel la kanomnu thedatheenga madam... hotel oru generator room size ku thaan irukkum.. utkarnthu sapidum vasathi illa...
ஒரு பாட்டு என முடிவு செய்துவிட்டால் திரும்ப திரும்ப அதையே கேட்பேன்.
//
இந்த லுச்சாத்தனம் எனக்கும் இருக்குது.
Again இராஜி, இடமாங்க முக்கியம்:)
நன்றி ஆதி.
ஜீனியர் செய்திகளை அடிக்கடி எழுதுங்கள். அதுதான் நன்றாக இருக்கிறது.
பதிவை படித்தாலே தெரிகிறது.வாழ்க்கையை ரசனையாக கழிக்கிறீர்கள் என்று..வாழ்த்துக்கள் வித்யா.
{"மாத்தி சொல்லுமா. அவ தான் சனிய விட்ருக்கா". அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.}
சரியாத்தானே சொல்லியிருக்கு தம்பி...நூத்துல ஒரு வார்த்தை.
:))))0
Post a Comment