முன்னாபாய் தந்த ஹிரானியிடமிருந்து ஹிலேரியசாய் மற்றொன்று. மாதவன் விமானத்தை நிறுத்துவதில் தொடங்கி படம் முடியும் வரை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்கள். அப்படியே அழுத்தமாய் ஒரு மெசேஜும் சொல்கிறார்கள். ஃபர்ஹானும், ராஜுவும் சதுர் என்ற மற்றொரு நண்பனின் தகவலின் அடிப்படையில் தங்கள் தோழனான ரான்ச்சோவை தேடி ஷிம்லா பயணிக்கிறார்கள். அங்கு ரான்ச்சோ என்ற பெயரில் வேறொருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். ரான்ச்சோவை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை வெகு சுவாரசியமாக பிளாஷ்பேக்குடன் சொல்லியிருக்கிறார்கள்.
ரான்ச்சோவாக ஆமிர். ஃபர்ஹானாக மாதவன். ராஜ் கேரக்டருக்கு ஷர்மான். மூவருமே அசத்தலான சாய்ஸ். பாடி லேங்குவேஜிலேயே கல்லூரி மாணவர்கள் இமேஜைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். இவர்கள் மட்டுமில்லாது படத்தில் வரும் அனைவருமே சரியான தேர்வு. தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். போமன் இரானியைத் தவிர இந்த கேரக்டரை வேறு யாராலும் சிறப்பாக செய்துவிட முடியாது. கரீனா பாட்டி. ம்ம்ம். லேபில் மெஷினுக்கான ஆமிர்கானின் விளக்கம் சூப்பர்ப். புத்தகத்திலிருந்து வாந்தியெடுப்பதால் பயனில்லை. உணர்ந்து படிக்கவும், செயல்படுத்தி பார்ப்பதும் அவசியம் என்ற மெஸேஜ் படம் முழுவதும். ஆனால் அவ்வளவு நகைச்சுவையோடு.
Salt water is good conductor of electricity தொடங்கி, சமத்கார் பலாத்கார் ஆசிரியர் தின உரை, குஜ்லி கி ரொட்டி என அனைத்தும் ROTFL வகையறா. அதுவும் ஆஸ்பத்திரியில் ஷர்மானிடம் ஆமிர் அவிழ்த்துவிடும் பொய் மூட்டையும், மாதவனின் ரியாக்ஷனும் சிம்ப்ளி க்ரேட். அந்த சீனியர் மரணம், ஆமிரின் பிளாஷ்பேக், கரீனாவின் அண்ணனைப் பற்றிய உண்மை, ஷர்மானின் இண்டர்வ்யூ காட்சிகள், மாதவனுக்கும் அவர் அப்பாவிற்கும் நடக்கும் உரையாடல் என நிறைய இடங்களில் மனம் கணக்க வைக்கிறார். எல்லாரையும் விட சதுராக வரும் ஓம் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.
பாடல்கள் அத்தனையுமே அருமை. டைட்டில் சாங், ஆல் இஸ் வெல் என எல்லாமே நன்றாக இருக்கிறது. அதுவும் அந்த சீனியர் கிதார் இசைத்துக்கொண்டே சோகமாக பாடும் பாடல் வரிகள் நச்.
Give me some sunshine.
Give me some rain.
Give me a chance to grow up once again.
ஒளிப்பதிவும் அருமை. சிம்லா, லடாக்கின் மொத்த அழகையும் கேமிரா அள்ளிக்கொடுக்கிறது. அதுவும் சிம்லா மலைகளின் மீது கார் போகும்போது பசுமையான காட்சிகள், உடனே கரடுமுரடான பாறைகள் என காட்டுவது வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் தொடர்ந்து வரும் என்பதை சிம்பாலிக்காக உணர்த்துகிறது (பின்ன. எப்பதான் நானும் இயம், இசம்களை கண்டுபிடிக்கறது? எப்ப எலக்கியவாதி ஆகறது?).
மிஸ் பண்ணக்கூடாத படம்.
3 Idiots - Brilliant.
டிஸ்கி : சனி இரவு புக் செய்திருந்த வேட்டைக்காரனை விடுத்து ஞாயிறு மதியம் இதற்கு வர சம்மதித்த ரகுவுக்கு சலாம்.
தமிழில் வரும் பட்சத்தில்
எதிர்பார்ப்பு : சூர்யா என் சாய்ஸ். நாசர் வைரசாக நடிக்கலாம்.
பயம் 1 : வைரசாக பிரகாஷ் ராஜ்
பயம் 2 : இந்தப் படம் சேரன் கண்ணில் படாமல் இருத்தல் நலம். கல்லூரியின் ஏதாவது ஒரு தூணில் சாய்ந்துகொண்டு முதுகைக் காட்டி, குலுங்கி குலுங்கி அவர் அழுவதைப் பார்க்க எனக்கு தைரியம் இல்லை.
பயம் 3 : இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்.
January 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
எனக்கு பிடிக்கலையேங்க :)-
ஆனா அமீர் பொய் சொல்லும்போது மாதவன் ரியாக்ஷன் சூப்பர்.
//கரீனா பாட்டி.//
அச்சச்சோ
உங்க பயம் எல்லாம் :)
i liked it too.
ஹிந்தி படமே பார்க்குறது இல்லை. விமர்சனம் மட்டுமே படிக்கிறது.
சேரன் பாவம். விட்டுடுங்க.
ஆகா. அப்போ இந்த வெள்ளிக்கிழமை நல்ல படம் பார்க்கலாம். நன்றி வித்யா.
பயம் 1 : வைரசாக பிரகாஷ் ராஜ்
பயம் 2 : இந்தப் படம் சேரன் கண்ணில் படாமல் இருத்தல் நலம். கல்லூரியின் ஏதாவது ஒரு தூணில் சாய்ந்துகொண்டு முதுகைக் காட்டி, குலுங்கி குலுங்கி அவர் அழுவதைப் பார்க்க எனக்கு தைரியம் இல்லை.
பயம் 3 : இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்.
................நியாமான பயங்கள்.......விமர்சனம் நல்லா இருந்துச்சு.
நன்றி மணிகண்டன் (??!!)
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி சர்வேசன்.
நன்றி பின்னோக்கி (முதல்ல அவர நிறுத்த சொல்லுங்க)
நன்றி நவாஸுதீன்.
நன்றி சித்ரா.
//பாடி லேங்குவேஜிலேயே கல்லூரி மாணவர்கள் இமேஜைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்//
உண்மையா சொல்லுங்க, 21 வயசுல வர்ற வேட்டைக்காரனை விடவா?
//பயம் 3 : இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்//
நீங்க பயப்படவே வேணாங்க, அவங்க எப்பவுமே சுமாரான படத்தை வாங்கிதான் "சூப்பர் ஹிட்", "மெகா ஹிட்"னு மார்க்கெட்டிங் பண்ணுவாங்க (Exception - அயன் & கண்டேன் காதலை)
" 1 & 2 கூட ஒகே, ஆனால், //இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்.
// யப்பா, 26 மணி நேரமும் விளம்பரம் போட்டே….. முடியல……"
நன்றி ராஜி.
நன்றி குறும்பன்.
நன்றி மை டேஸ்.
//எதிர்பார்ப்பு : சூர்யா என் சாய்ஸ். நாசர் வைரசாக நடிக்கலாம்.//
appidiye Sameera :)
//இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்.//.....
ரொம்பவே பயந்திருக்கீங்களே:-)
நல்ல படம். பார்க்கணும்
பயம் 3 : இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும். //
அதான் என் பயமும் :))
அருமையான அலசல்
http://erodesuresh.blogspot.com/
நன்றி ராஜி (ஆனா சமீரா சூர்யாக்கு அக்கா மாதிரி இல்ல இருக்காங்க)
நன்றி பிரியா.
நன்றி மோகன்குமார்.
நன்றி மயில்.
நன்றி சுரேஷ்.
படம் பார்க்கணும்
நல்ல படம் வித்யா. உங்களுக்கு இருக்கும் பயங்கள் தான் எனக்கும்.
Kalakkal ... "Good Blog" pola... :)
படம்
விமர்சனம்
பயம்
எல்லாமே கலக்கல்.!
பின்குறிப்புகள் அபாரம் :-)
நன்றி டிவிஆர் சார்.
நன்றி விக்னேஷ்வரி.
நன்றி ராஜி தகவலுக்கு:)
நன்றி ஆதி.
நன்றி உழவன்.
உங்க பயம் நிஜமாக இருக்கணும்னு எனக்கு பயமா இருக்கு
// Blogger My days(Gops) said...
" 1 & 2 கூட ஒகே, ஆனால், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்.
யப்பா, 26 மணி நேரமும் விளம்பரம் போட்டே….. முடியல……" //
Nachhnnu irukku ! Very true..
madhavan73.blogspot.com -- thanks
Blogger My days(Gops) said...
" 1 & 2 கூட ஒகே, ஆனால், //இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்காமலிருக்கனும்.
// யப்பா, 26 மணி நேரமும் விளம்பரம் போட்டே….. முடியல……"
Repeat.... Very rightly said.
( http://madhavan73.blogspot.com plz. visit & comment.)
நல்லா அலசி காயப்போட்டுட்டீங்க. உண்மைக்கும் நான் பொமன் இரானிக்காகத்தான் பாத்தேன். அந்த கேரக்டருக்கு அவர் ரொம்ப பொருந்துகிறார்.
சேரன்...நியாயமான பயம்.
http://amaithicchaaral.blogspot.com/2009/12/3-idiots.html
நல்லதொரு படத்துக்கு... நல்ல விமர்சனம்...
Post a Comment