January 18, 2010

காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்

பொங்கல் பொங்கித் தின்னு, கட்டு கட்டா கரும்பு கடிச்சு (விக்னேஷ்வரி அழாதீங்க) டயர்டா படுத்தா, மறுநாள் அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி ஒரே அடம். காலம் காலமா தொடர்ந்து செய்யற இந்த சேவையை??!! இந்த வருடமும் பண்ணியாச்சு. தீபாவளில காசு கரியாகற மாதிரி இல்லாம பொங்கல் போது வசூல் சூப்பரா இருக்கும். அதுவும் காணும் பொங்கல் அன்னிக்கு கால்ல விழுந்தா காசு. ஸ்ட்ரிக்ட்லி ஃபார் லேடீஸ்:)

எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும். கல்யாணத்துக்கு முன்னால குளிச்சோமா, போட்டத தின்னோமான்னு ஜம்முன்னு போச்சு. கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்) பாதி வேலைய பண்றது (அ) ஒத்தாசை பண்றது. மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே காய்கறி நறுக்கறது, தேங்காய் கீறறதுன்னு எடுபுடி வேலைலயே ஓட்டிக்கிட்டிருக்கேன். க.முல பொங்கலன்னிக்கு தலைவாழை இலைல சர்க்கரைப் பொங்கல், தயிர் பச்சடி, வடை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், பரங்கிக்காய் பொரியல், சௌசௌ கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு ரசம், தாளிச்ச மோர் மெனுவப் போட்டுடுவாங்க (வாழை இலைல ரசம் சாதம் சாப்பிடற கலைய இன்னும் கத்துக்காம கஷ்டப்படறது வேற விஷயம்). க.பில கிடைக்கிற காயெல்லாம் போட்டு கூட்டுக்கு ஏதோ ஒரு உறவுபோல சாம்பார், சர்க்கரைப் பொங்கல், பச்சடி, ரசம், வடை. மூணு வருஷமா மாமியாரும் உங்கம்மா வீட்டு வழக்கமென்னன்னு கேட்டுட்டே இருக்காங்க. நானும் சொல்லிட்டே இருக்கேன். மறைமுகமா அதெல்லாம் மறந்துரு. இனி இதான் பொங்கல் மெனுன்னு சொல்றா மாதிரியே இருக்கு.

காலைல 4 மணிக்கே எந்திரிச்சு காலைக்குள்ள சமையல முடிச்சு, பொங்கப் பானைல பாலோடு அரிசி, பருப்பு, வெல்லம் போட்டு பொங்கும்போது குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல்ன்னு சவுண்டு விடறது வழக்கம். திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. கீழே ஒரு நியூஸ்பேப்பர பரத்தி வச்சு அதுல சக்கைய சேமிச்சு??!! பின்னால கொளுத்தி அதுல பிஞ்சு மக்காச்சோளத்த வாட்டி திம்பது வழக்கம். இது க.முல. க.பில பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு அதை குப்பைத்தொட்டியில போடும்போது, இப்படி நடந்துகொள்வது, நம்ம மரியாதைய காப்பாத்திக்கவா? இல்ல அவங்களுக்கு தர்ற மரியாதையா? இல்ல நல்ல பொண்ணு இமேஜான்னு தெரியல. என் இயல்பு தொலைவதெதனால்ன்னும் தெரியல. இந்த தடவை தை மாசம் மதியம் தான் பொறந்ததால ஆற அமர மாமியாரோட அரட்டை அடிச்சுகிட்டே பொறுமையா சமையல் முடிச்சு பொங்கல் பொங்கி சாப்பிட்டப்போது மனி சாயந்திரம் 4.30. எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. மறுநாள் காணும் பொங்கல்.

பொங்கலன்று பண்ண சர்க்கரைப் பொங்கல், சாம்பார், பொரியல், கூட்டு, சாதம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சாம்பிளுக்கு எடுத்து தனியா வச்சிருவாங்க. இதுல சாம்பார், பொரியல், கூட்டு எல்லாத்தையும் போட்டு ஒன்னா கொதிக்க வெச்சு எரிச்ச கூட்டு ஆக்கிடுவாங்க (சாம்பார மட்டும் ரிப்பேர் பண்னி நைட் சாப்பிடற மேட்டர் ஒன்னு இருக்கு. அப்புறமா வேற பதிவுல அதப் பத்தின ரெசிபி தர்றேன்). அப்புறம் வெறும் சாதத்தில மஞ்சள் தூள், குங்குமம் போட்டு பிசைஞ்சு கலர் கலரா சாதம் பண்ணிப்பாங்க. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும். க.முல காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாவில் வசித்த வீடுகளில் தோட்டமிருந்தது. அதனால தோட்டதிலேயே கோலம் போட்டு (நான் இப்பவும் வேடிக்கப் பார்த்து) மஞ்சள் கொத்தின் இலைய பரப்பி வச்சு கணு வைக்கனும். முதல்ல சர்க்கரைப் பொங்கல். அப்புறம் மஞ்சள் சாதம். அப்புறம் சிகப்பு சாதம். எரிச்ச கூட்டு. இப்படி எல்லாத்தையும் வரிசையா, அழகா "காக்கா பிடி வெச்சேன். கணுப் பிடி வெச்சேன். காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்"ன்னு சொல்லிக்கிட்டே வைக்கனும் (சத்தியமா ஏன்னு தெரியாது). அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). முந்தின நாள் வாங்கின மஞ்சள் கிழங்கை பெரியவங்க கிட்ட (இதுவும் லேடிஸ் ஒன்லி. கல்யாணமானவங்கன்னா வூட்டுக்காரர் செய்யலாம்) கொடுத்து நெத்தில, கன்னத்துல எல்லாம் தேய்க்க சொல்லி கால்ல விழுனும் (நோ. காசு இப்ப தரமாட்டாங்க). அப்பால குளிச்சிட்டு வந்து மறுபடியும் கால்ல விழுந்தா துட்டு மாமே. துட்டு. "என்னா மாமா. ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வெறும் 100 ரூபாயா தர்றது"ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே உண்டியல ரொப்பிடுவோம். ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த வருஷம் கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய், ஒரு டிசைனர் சல்வாரோட நின்னுடிச்சு. க.பில இந்த டெக்னிக் வொர்க் அவுட் பண்றதுக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. ஏதோ அவங்களா பார்த்து கொடுத்து தான் உண்டு.

க.மு பொங்கலுக்கும் க.பி பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும் காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் மாறாம நடந்துக்கிட்டே இருக்கு. அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்:)

23 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கல்யாணம்ன்னு எட்டிப்பார்த்த கலக்‌ஷ்ன் டல்ன்னு எங்க மொய் வைக்க சொல்வீங்களோன்னு பய்ந்துட்டே வந்தேன்.. :)
சூப்பரா எழுதி இருக்கீங்க..கமு. கபி எல்லாம் நல்லா விவரமா ஒப்பு நோக்கி இருக்கீங்க..

Rajalakshmi Pakkirisamy said...

பொங்கல் வந்து போன சுவடே இல்லாம இருக்கேன்... நீங்க... 3000 ரூபாய், பொங்கல், கரும்பு அப்பிடின்னு.. நல்லா இருங்கப்பு

butterfly Surya said...

காக்கையும் குருவியும் வாழ்க வளமுடன்.

நல்லாயிருக்கு பதிவு.

Anonymous said...

//(உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). //

அதான் கலெக்சன் அமோகமா இன்னும் நடக்குது.

pudugaithendral said...

:))

Chitra said...

அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). .....பக்கத்து இலைக்கு பாயாசம். எல்லோரும் நல்லா இருங்க.

Vidhya Chandrasekaran said...

நன்றி முத்துலெட்சுமி.
நன்றி ராஜி.
நன்றி சூர்யா.
நன்றி அம்மிணி.
நன்றி கலா அக்கா.
நன்றி சித்ரா.

R.Gopi said...

கமு. கபி பலே விளக்கம்...

இவ்ளோ சொல்லிட்டு கலெக்‌ஷன் டல்னு சொன்னா, என்னா பண்றதுங்கோ??

//(உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). //

யப்பா... என்னா டெர்ரர் ஐடியா எல்லாம் வருது!!??

S.A. நவாஸுதீன் said...

சுவராசியாமா இருக்கு.

ஆனாலும் 3000 கலக்‌ஷன் கம்மிதான்.

எதையுமே ப்ளான் பண்ணனும், ப்ளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்.

இருந்தாலும் க.பி.ல இது போதும் வித்யா.

S.A. நவாஸுதீன் said...

சுவராசியாமா இருக்கு.

ஆனாலும் 3000 கலக்‌ஷன் கம்மிதான்.

எதையுமே ப்ளான் பண்ணனும், ப்ளான் பண்ணாம பண்ணினா இப்படித்தான்.

இருந்தாலும் க.பி.ல இது போதும் வித்யா.

ஆரூரன் விசுவநாதன் said...

ரசிக்கும்படியான பதிவு....
பகிர்ந்தமைக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

//அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி //

அதெல்லாம் க.மு.லதான்!!

//எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும்//

ஸேம் பிளட்!! பெருநாளைக்குப் பெருநாள் பிரியாணி செய்யறப்போவெல்லாம் எங்கம்மா சமையலைக் குறை சொன்னதெல்லாம் நினைவு வரும்!!

//மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே//

கொடுத்து வச்சவங்க நீங்க!! என்னையெல்லாம் அடுத்த வருஷமே அபுதாபிக்கு கப்பலேத்திட்டாங்க!! :-(

//தை மாசம் மதியம் தான் பொறந்ததால//
புரியலை??

உங்க பதிவு வாசிச்சதுல நிறைய பொங்கல் பண்டிகை நடைமுறைகள் தெரிஞ்சுகிட்டேன்!!

Raghu said...

//கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய்//
இது ட‌ல்லா?????? ந‌ட‌த்துங்க‌, ந‌ட‌த்துங்க‌!

//அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும்//
சே, பாவ‌ம்ங்க‌, வாழ்க்கையில‌ எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருக்கீங்க‌:(

விக்னேஷ்வரி said...

கட்டு கட்டா கரும்பு கடிச்சு //
அடுத்த பொங்கலுக்கு உங்க வீட்டுக்கு தான் வரேன். என்னை அழ வெச்ச பாவத்துக்காக கட்டுக் கட்டா இல்ல, லாரி லாரியா கரும்பு வாங்கித் தரனும்.

நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன் //
ஹாஹாஹா...

திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. //
இங்கே வேற தனியா வயித்தெரிச்சலை கொட்டிண்டீங்களா? நல்லா இருங்க.

எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. //
இங்கே வந்திடுங்க வித்யா. இங்கே எல்லாமே சாயங்காலம் தான்.

அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து //
வித்யா டச்.

அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும் //
நீங்க கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா அது அடுத்த வருஷத்துக்குள்ள டைவர்ஸ் பண்ணிடும். :)

Vidhya Chandrasekaran said...

நன்றி கோபி.
நன்றி நவாஸுதீன்.
நன்றி விசுவநாதன்.
நன்றி குறும்பன்.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி விக்கி (நீங்க முதல்ல சென்னை பக்கம் வாங்க. அப்புறம் பேசிக்கலாம்)

Anonymous said...

ம்ம்ம். உங்களுக்காவது டிரஸ். எனக்கு 3 லிட்டர் குக்கர், (பானையோட லேட்டஸ்ட் வெர்ஸன்) ஒரு தோசைக்கல் :))

தாரணி பிரியா said...

இங்க கலெக்சனே இல்லாம இருக்கேன். தம்பி ஊருக்கு வரவே இல்லை. தப்பிச்சுட்டான் :(. 3000 குறைச்சலா நடத்துங்க :). அப்புறம் நீங்க சொன்னது எல்லாம் புது மேட்டர். எங்க ஊருல காலையில காக்காவுக்கு வெக்கறது போல வைப்பாங்க. அவ்வளவுதான்

Vidhya Chandrasekaran said...

நன்றி மயில் (டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் சோ மச் யூ நோ)

நன்றி தாரணி. பழைய வசூல்லாம் சொன்னேன் மயக்கம் வரும்:)

பாத்திமா ஜொஹ்ரா said...

பின்னிட்டீங்க

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லா எழுதுறீங்க :-)

Vidhya Chandrasekaran said...

நன்றி பாத்திமா.
நன்றி உழவன் (உள்குத்து எதுவும் இல்லையே).

"உழவன்" "Uzhavan" said...

//நன்றி உழவன் (உள்குத்து எதுவும் இல்லையே).//

ஹா..ஹா.. நமக்கு இதெல்லாம் தெரியாதுங்க :-)

Thamira said...

கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்)// ரசனை. ரொம்பவும் சுவாரசியமான எழுத்து உங்களுடையது. அர்த்தராத்திரிக்கு இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்.

க.பி, க.மு விவகாரங்கள் பொதுவானவையாகத்தான் தோன்றுகிறது. குறிப்பாக வரும்படி மிகவும் குறைஞ்சுபோச்சுது. க.முவில் ரெண்டு மாசத்துக்கு தேவையான சிட்டிங், சினிமா தேவைகளுக்கு பயன்படுமளவுக்கு வருமானம் இருந்தது. :-))