டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.
விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.
பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.
"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.
இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.
என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.
ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.
நீங்க சொல்றது நேக்கு புரியலை.
அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.
கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.
தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?
அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,
நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.
அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?
பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.
டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.
கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.
ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.
சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.
ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.
பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க
ஸ
எச்ச
ரி
ர்ரீ
க
க்கா
ம
ம்ம்மா
சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.
பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?
இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.
இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.
இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.
சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.
நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?
என்ன ஐய்ரே?
இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?
அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.
அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.
யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.
அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.

அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.
கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.
கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா
அடுத்தது காம்போதி ராகம்.
யாருக்கு பேதி?
பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.
கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.
நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?
நட்டை ராகம்.
மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி
சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?
எதுக்கு?
இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..
என் சைஸ் உங்களுக்கு பத்தாது.
அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?
வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.
அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.
அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?
குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.

35 comments:
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா
ha ha ha.. Super...
//நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும்,//
இதுக்கு மேல வேற எதுவும் இல்லையா?
//"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"//
யாரோட பாதிப்பு.
//ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.//
Karki, Tharani Priya, Mayil எல்லோரும் எங்க போனீங்க?
படிக்க நல்ல அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள்.
:)))
புரண்டு புரண்டு சிரிச்சதுல .... ஒரே "புண்ணாக"வராளி தான் போங்கோ.
"சிறுமி" யாரு? எங்க? எங்க....
--வித்யா
தமிழ் மணத்தில் வோட்டு போட்டாச்சு. ஏன் தமிழிஷில் இணைக்கலை?
மண்டபத்து மேனேஜர் உஷார்ர்....
:) ரொம்ப ரசித்தேன்.
ஹ....ஹா..ஹா...மெட்ராஸ் பாச நெம்ப நல்லா கீதும்மே.....
ரொம்ப அழகா பண்ணியிருக்கீங்க.. மெட்ராஸ் பாஷை பிச்சுக்குதே, நா சில இடங்களில் முயற்சிபண்ணி பிசிறிப்போச்சு. உங்க கிட்ட டிரெயிங் எடுத்துக்கலாம் போல.. ஹிஹி
அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.// நீங்க சிறுமியாங்க.? (சச்சின் விஜய் பாணியில் படிக்கவும்) :-))
விதூஷ்:
:)))
புரண்டு புரண்டு சிரிச்சதுல .... ஒரே "புண்ணாக"வராளி தான் போங்கோ.//
சுவாரசியம். ரிப்பீட்டு.!
:-)))))))))))))))))))))))))0
நல்லா இருக்கு. இவ்வளவு பெரிய நகைச்சுவை பதிவு எழுதுவது மிகவும் கடினம். ஒவ்வொரு வரியிலும் ஒரு சிரிப்பு.
ஆனா, நீங்க எழுதுனதுலேயே பெரிய சிரிப்பு, இது தான்.
//அறியாச் சிறுமி
பின்னுட்டேள் போங்கோ:)
மெட்ராஸ் பாஷ செம்மையா கீதும்மா
உங்களுக்கு சங்கீதம் தெரியுமா? ராகம் பேர்லாம் போட்டு தாக்குறீங்க!
நன்றி டிவிஆர் சார்.
நன்றி ராஜி.
நன்றி sreeja.
நன்றி விதூஷ் (செம டைமிங்)
நன்றி கண்ணகி.
நன்றி ஆதி.
நன்றி மஹா.
நன்றி குறும்பன்.
நன்றி பின்னோக்கி.
//ஆனா, நீங்க எழுதுனதுலேயே பெரிய சிரிப்பு, இது தான்.
//அறியாச் சிறுமி//
//
அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.// நீங்க சிறுமியாங்க.? (சச்சின் விஜய் பாணியில் படிக்கவும்) :-))//
;);)
புரண்டு புரண்டு சிரிச்சதுல .... ஒரே "புண்ணாக"வராளி தான் போங்கோ.
"சிறுமி" யாரு? எங்க? எங்க....//
ஆமாம்பா நானும் மறுக்கா கூவிக்கறேன்.
ஹ்ஹ்ஹா....
மெய்யாலுமே படா ஷோக்காகீ்தும்மே :)
\\குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே\\
இது பாரதியார் பாட்டா??
\\கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.\\
நட்டையா நாட்டையா :)
ஹா....ஹா......ஹா.....
நன்றி நர்சிம்.
நன்றி கலா அக்கா.
நன்றி சங்கவி.
நன்றி விஜய் (தப்புதான்:))
நன்றி விஸ்வநாதன்.
@ all
ஏதோ ஒரு ஃப்ளோல வந்துடுச்சுன்னு விடுவீங்களா. அத விட்டுட்டு. என்னா வில்லத்தனம்?
நல்லாத்தேன் கச்சேரி நடத்துரீக.
காமடியும் பின்றேள் :-))))
அம்சாவோட தாவணியா. :)
பிழை எழுத்துலதான் இருக்கு. (நட்டை)
ஹா ஹா ஹா. படா ஷோக்காகீதுபா
யம்மா வித்யா....
எனக்கும் இத படிச்ச உடனே கதி கலங்கிடுத்து....
//சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.//
ஓகே... யார் அந்த சிறுமி??
மெய்யாலுமே படா ஷோக்கா கீது மே...
நன்றி சித்ரா.
நன்றி உழவன்.
நன்றி நவாஸுதீன்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி கோபி.
சும்மா சுகுரா கவ்னிச்சு எய்திக்குறம்மே... அப்டியே என் வாய்க்கலேர்ந்து ஒரு பீஸ எட்து பதிவாப்போட்ட மாரிக்குது.
ரெண்டு பைசா எல்லாம் செல்லாது, அத்தால என்னோட ரெண்டுரூவா...இவ்ளோ நல்ல பதிவுல அந்த காம்போதி மேட்டர வுட்ருந்தா இன்னும் சோக்கா இர்ந்த்ருக்கும்.
-க்ருபா
நல்ல கற்பனை...நல்லா சிரிச்சேன்!
செய்யறத செஞ்சுட்டு அப்படியே கல்லுளிமங்கன்மாதிரி நிக்கிறதப் பாருன்னு சொல்வாங்களே, அதுமாதிரி, “அறியாச் சிறுமி”யாமே?? அடேயப்பா!!
நன்றி க்ருபா.
நன்றி சுந்தர்.
நன்றி ஹுஸைனம்மா.
ஹாய் வித்யா. இன்று தான் உங்க ப்ளாக் பக்கம் வந்தேன். என்னா பின்னு பின்னுட்டிங்கோ.நல்லா இருக்கே உங்க சங்கித ராக பாஷை.
எனக்கும் ராகம் தெரியும். ஆமாம் நிங்க சங்கித ப்ரியையா?அப்படியே நம்ம பக்கம் வந்து உங்க பாஷியில் கதையுங்கோ. நன்றிங்க.மிண்டும் வருகிறேன். நல்ல நகைசுவையோட இருக்கு. எனக்கு நகைசுவை ரொம்ப பிடிக்குமோங்க.
ஹாஹாஹா... தூள் வித்யா. நிறைய கிரேசி மோகன் நாடகங்கள் பார்ப்பீங்க போல தெரியுது.
நன்றி விஜி (சின்ன வயசுல கத்துகிட்டது. இப்போ ஜீரோ).
நன்றி விக்கி:))
Post a Comment