சென்ற பதிவின் தொடர்ச்சி.
ஜனவரி 26ஆம் தேதி சாயந்திரம் 4 மணிக்கு கன்யாகுமாரி சென்று இறங்கினோம். விவேகானந்தர் பாறை மற்றும் வள்ளுவரை கண்டுக்கினு வர போட் ஏறலாம் என்று போனால் அனுமர் வாலை விட நீண்டிருக்கிறது க்யூ. க்யூவில் நின்று பத்து நிமிடம் கழிச்சு நண்பன் சொன்னது "ஹே மறந்துட்டேன். 4.30 மணிக்கெல்லாம் ஃபெரி சர்வீஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க". அப்புறம் அவன் ஏன் கொஞ்ச நேரம் நொண்டிக்கிட்டு இருந்தான் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அங்கிருந்த நேரா மூக்குத்தியம்மன்/பகவதி அம்மன் கோவிலுக்கு போனோம். அங்க நடை திறப்பதற்கு முன்னமே 2 கி.மீ தொலைவிற்கு க்யூ. ஆணியே புடுங்க வேணாம். கடற்கரையில் காலை நனைச்சுட்டு அப்படியே சூர்ய அஸ்தமனத்தைப் பார்த்திடலாம்ன்னு கிளம்பினோம்.
கடற்கரையில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை பார்க்கும் வ்யூ பாய்ண்ட்
உருக்கிய வெள்ளி போன்ற கடலலை
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
தகதகக்கும் தங்க தட்டாய் சூரியன்
நர்சிம் செக்கர் வானம் என்றொரு பதிவு எழுதியிருந்தார். அவர் விவரித்திருந்த செக்கர் வானம் இதுதானோ? நர்சிம் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்றது சரியான்னு சொல்லிட்டுப் போங்க.
அஸ்தமனத்த பார்த்த கையோட கொய்யா, அன்னாசி, கரும்பு ஜூஸ் எல்லாத்தையும் முழுங்கிட்டு ரூமுக்கு போய் ஒரு குட்டி தூக்கம் போட்டோம். திரும்பவும் டின்னரின் போது படம் போவது பற்றி பேச்சு வர நாணயம் பார்க்கலாமென்று முடிவாகி தியேட்டர் பற்றி விசாரிக்கையில் "அந்த தியேட்டர்ல ரொம்ப கொசு கடிக்கும். படமே பார்க்க முடியாது. ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடும் தியேட்டர் ஏசியோட நல்லா இருக்கும்" என்றார். விடு ஜூட். படம் பார்த்துவிட்டு வந்து தூங்க ஆரம்பிக்கும்போதே எழுப்பிட்டாங்க. கல்யாணத்த சிறப்பா நடத்தி வைச்சுட்டு???!!! மண்டபத்துலேயே டிஸ்கஷன் ஆரம்பிச்சாச்சு அடுத்து எங்கன்னு? சாயந்திரம் 5.30க்கு தான் ட்ரெய்ன். மணி 10.30 தான் ஆவுது. பேசாம திருநெல்வேலி போய்ட்டு வருவோமா என ஒரு ஐடியா. அல்வா வாங்க தான் முடியும். பேசாம கன்னியாகுமாரியே போவோம். வள்ளுவர் கிட்ட போய் "அய்யா பெரியவரே. நீர் பாட்டுக்கும் பொழுது போகாம எழுதி வச்சிட்டு போய்ட்டீரு. ஒவ்வொரு வருசமும் 30 குறள மனப்பாடம் பண்ணி மார்க் வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு"ன்னு நியாயம் கேட்டுட்டு வரலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி கிளம்பியாச்சு.
இந்த தடவை பத்தே நிமிசத்துல ஃபெரில உட்கார்ந்துட்டோம் (ஃபெரியில் அனுமதிக்கும் முறையில் பல குறைகள். பெரிய தள்ளுமுள்ளு ஏற்படுகிறது). விவேகானந்தர் பாறைல ஒரு பத்து நிமிசம் சுத்திட்டு வள்ளுவரப் பார்க்கப் போகலாம்னா ஃபெரிக்கு வெயிட் பண்றதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. இனிமே வள்ளுவரப் பார்த்து நியாயம் கேட்டா, "நாங்க ஏறாம எப்படி ட்ரெய்ன் எடுக்கலாம்ன்னு?" மம்தா பானர்ஜியோடு வீணா சண்டை வருமேன்னு வள்ளுவர்கிட்ட போகாம ரூமுக்கு நடைய கட்டிட்டோம். மூட்டை முடிச்செல்லாம் எடுத்துகிட்டு வர்ற வழியில எஃக் பஃப்ஸ், க்ரீம் பன், கோக், முறுக்கு, தட்டை, பிஸ்கெட், வேர்கடலை பக்கோடா மட்டும் வாங்கிக்கொண்டோம்.
ட்ரெய்ன் ஏறினவுடனே சாப்பிட ஆரம்பித்தது. போரடிக்கும்போது மொக்கை போடுவதும் பின்பு சாப்பிடுவதுமாய் போனது. நடுவில் பாட்டுக்கு பாட்டு விளையாட ஆரம்பித்தோம். மொபைல் போனில் ஸ்டோர் பண்னி வைத்திருந்த பாட்டுகளை போட்டு விட்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். எவ்வளவு வயசானாலும், எங்க போனாலும் இந்த பிட் அடிக்கிற பழக்கம் போகவே போகாதா என அவனைக் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் சைட் சீட்டில் உட்கார்ந்திருந்த ரயில்வே போலீசார் அடிக்கடி துப்பாக்கியை தொட்டுப் பார்த்துக்கொண்டதால், உசாராகி எங்கள் இசைப் பயணத்திற்கு தேசிய கீதம் வாசித்துவிட்டோம். ஏற்கனவே சொன்னா மாதிரி டாக்டருக்கு கதை மட்டும் சிக்கியது. சீன் எல்லாம் இனிமே தான் டெவலப் செய்யனும். 28 காலை வீடு வந்து சேரும் வரை மீண்டும் கல்லூரி சென்று வந்தது போலவே இருந்தது.
February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
புகைப்படங்கள் அருமை..
//இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்//
யாரு பாக்கிறது..
:)
என்ன காமெரா வச்ருகீங்க?? படங்கள் தெளிவா இருக்கு..
போட்டோஸ் அழகோ அழகு. கன்யாகுமரி போய் ரொம்ப நாளாகி விட்டது. இப்பொழுது இனிய நினைவுகள் மீண்டும், உங்கள் பதிவால்.
நன்றி.
அருமை.. அருமை
அழகான அஸ்தமன படங்கள்.
சூரிய உதயத்தை பாத்திருக்கீங்களா? :))
நன்றி எறும்பு (சோனி மற்றும் கேனான்).
நன்றி சித்ரா.
நன்றி விதூஷ் (அத மட்டும் பார்த்துட்டேன் அன்னியோட உலகம் அழிஞ்சுடும்).
ம்ம்ம்ம்ம்.......கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பொறாமை எல்லாம் இல்லை....:)
Photoes are excellent.
சூரிய அஸ்தமன ஃபோட்டோஸ் எல்லாமே சூப்பரா எடுத்திருக்கீங்க
//"நாங்க ஏறாம எப்படி ட்ரெய்ன் எடுக்கலாம்ன்னு?" மம்தா பானர்ஜியோடு வீணா சண்டை வருமேன்னு//
அவ்வ்வளோ நல்லவங்களா நீங்க!...:)
//எஃக் பஃப்ஸ், க்ரீம் பன், கோக், முறுக்கு, தட்டை, பிஸ்கெட், வேர்கடலை பக்கோடா மட்டும் வாங்கிக்கொண்டோம்.//
மட்டும்???
படங்கள் கொள்ளை அழகு. யார் எடுத்தாங்க?
//நர்சிம் செக்கர் வானம் என்றொரு பதிவு எழுதியிருந்தார். அவர் விவரித்திருந்த செக்கர் வானம் இதுதானோ? நர்சிம் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்றது சரியான்னு சொல்லிட்டுப் போங்க.
//
ஆமாங்க.. இது தான்..படங்கள் நல்லா இருக்கு.
நன்றி மயில்.
நன்றி மோகன்குமார்.
நன்றி குறும்பன்.
நன்றி சின்ன அம்மிணி (நானும், நண்பர்களும்).
நன்றி நர்சிம்.
//ஆமாங்க.. இது தான்..படங்கள் நல்லா இருக்கு.//
ஓ, இதுதான் செக்கர் வானமா?? நர்சிமே confirm பண்ணிட்டார் ரைட்டு... என் கண்ணுக்குள்ளயே நிக்குது... அப்படியே வச்சிருங்க... என் பிரெண்ட் ஒருத்தன் செக்கர் வானம் பார்த்ததில்லை.. அவன கூட்டிட்டு வாரேன்...
:)
//Photoes are excellent//
bharathiraaja fan?
:)
படங்கள் அருமை
வேற ஒண்ணும் இல்ல...இன்னிக்கு நோ ஆணி.. அதான் இப்படி கமெண்ட் pottu polutha kalikiren...
:)
மூன்று பதிவுக்கும் சேர்த்த பின்னூட்டம்.
3. சுவாரசியமான பயணக்கட்டுரை. அழகழகான தெளிவான புகைப்படங்கள். ஆனால் இவ்வளவு தூரம் அதுவும் இரண்டு முறை போய்விட்டு வள்ளுவர் பாதம் தொடாமல் வந்ததற்கு உங்களை என்ன பண்ணலாம்?
2. இந்தப்பதிவில் மட்டுமல்ல, உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடைப்பட்ட டயலாக்குகள் ஆங்காங்கே தென்படும் இடங்கள் கொள்ளை ரசனை. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். கோவில்பட்டி நண்பரை அழைக்க எத்தனித்தது சுவாரசியம். ஹிஹி.. இது அறுவடைக்கு முந்தைய காலம் என்பதால் இந்தப் பச்சைப்பசேல். இல்லாவிட்டால் தலைகீழாக இருக்கும். திற்பரப்பு மட்டுமல்ல, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏராளமான அருவிகள் உள்ளன. ஆனால் சீசனல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் செல்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் வேண்டும்.
1. ஒண்டிப்புலி ஸ்கிரிப்டை மிக ஆவலோடு எதிர்பார்க்கும் அதே நேரம் தாமதமானாலும் பரவாயில்லை, வேட்டைக்காரன் விமர்சனம் எழுதுங்கள். உங்கள் எழுத்தில் வாசிக்க ஆவல்.
Super Photos ..
அடுத்த மாசம் வந்து பேசிக்கிறேன் .. ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
very nice photos!
--jee
http://www.eeram.in
அழகான படங்கள்.
/"அய்யா பெரியவரே. நீர் பாட்டுக்கும் பொழுது போகாம எழுதி வச்சிட்டு போய்ட்டீரு. ஒவ்வொரு வருசமும் 30 குறள மனப்பாடம் பண்ணி மார்க் வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு"/
ஹா ஹா.... என்னையே அறியாம சிரிச்சுட்டேன்....
நன்றி எறும்பு (ரைட்டு).
நன்றி கலா அக்கா.
நன்றி ஆதி.
நன்றி ராஜி.
நன்றி ஜி.
நன்றி நவாஸுதீன்.
நன்றி அன்பு தோழன்.
Post a Comment