ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு
குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்
February 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ரொமான்சு மூடு சார்ட் ஆகுது போல ...
aaha... saringa
நல்ல பாட்டு... ஆனா உங்க கருத்து எதும் இல்லயே
காதலர் தின ஸ்பெஷல் பாட்டு ரசிச்சேன். அருமையான வரிகள் நிறைஞ்ச பாட்டு.
This is one of the best songs of Chitra and my favorite.
very nice song.
ஒரு தேன்கிண்ணம் எஃபெக்ட் பாட்டைக் கேட்டு!!
என்னோட ரொம்ப பிடிச்ச பாட்டு இது வித்யா.
//சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது//
இந்த வரிகளை முதல்ல எல்லாம் எப்ப பார்த்தாலும் எந்த பேப்பர் கிடைச்சாலும் எழுதிக்கிட்டே இருப்பேன் :)
நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா.......:))
என் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்.
//குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா//
எல்லாரும் காதல் பதிவு போடுறாங்க.. ஏன் குல தெய்வமே,
இப்படி சோதிக்கிறே
:)
நன்றி கோகுல்.
நன்றி ராஜி.
நன்றி பேநா மூடி (கருத்தா? ஹுக்கும்)
நன்றி கலா அக்கா.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி சித்ரா.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி தாரணி பிரியா.
நன்றி விஜய்.
நன்றி ரகு.
நன்றி எறும்பு.
ம்ம்... சுகமான பாடல். மீள் நினைவு படுத்தியதற்கு நன்றி. நான் அதிகம் பார்த்த படம் புன்னகை மன்னன்.
//எது வந்த போதும்
இந்த அன்பு போதும்//
இந்த வரிகள் படிக்கும் போது அவ்ளோ effect இல்லை. ஆனால் சித்ரா குரலில் இதே வரிகள் கேட்கும் போது எவ்ளோ அருமையாக இருக்கிறது!! எனக்கு பிடிச்ச பாட்டு. நன்றி
இது, இது பாட்டு....
நன்றி வாசு சார்.
நன்றி மோகன்குமார்.
நன்ற்றி அமுதா கிருஷ்ணா.
புன்னகை மன்னன் படத்தின் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்... இளையராஜாவின் இசை மழை படம் அது...
குறிப்பாக “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” பாடல், வைரமுத்துவின் வைர வரிகளும் இணைந்து படு கலக்கலாக இருக்கும்..
ஹிஹி.. என்னாச்சு திடீர்னு?
Post a Comment