ஸ்ப்ரிங் போன்ற முடியும், கொஞ்சம் வெட்கம் கலந்தப் புன்னகையுமாய் ஹிந்தி மியூசிக் சேனலான சேனல் V இல் இவர் பாடியபோது யாரும் ஏன் இவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். குறுகிய காலத்தில் இந்த உயரத்தை அடைவோம் என. நரேஷ் ஐயர். 29 வயது இளைஞர். பார்த்தா பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கிறார். நான் பார்த்து இவர் பங்கேடுத்த ஷோக்களில் அநாவசியமாகவோ, அதிர்ந்தோ பேசியதில்லை. கோணங்கி சேட்டைகளோ, வீணான அலட்டல்களோ கிடையாது. பாட்டைப் போல் பேச்சும் மென்மை. ஹைபிட்சில் பிசிறடிக்காமல் பாடுவது இவர் ஸ்பெஷாலிட்டி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இசைப்புயலின் பார்வை இவர் மீது பட, தொட்டதெல்லாம் சாரி.. பாடினதெல்லாம் ஹிட்டாகிறது. 2005ல் ஆரம்பித்தது இசைப் பயணம். அன்பே ஆருயிரே ஷார்ட்டாக அ.ஆ என்ற ஒரு அதிசிறந்தப் படத்தில் மயிலிறகே என வருடினார் (இப்பவும் அந்தப் பாட்ட நான் கண்ண மூடிட்டு பார்க்கிறேன். கண்ணத்தொறக்க பயம்ம்மா இருக்கு). 2006 ஆம் வருடம் இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் த்ரூ. Rang De Basanthi படத்தில் இவர் பாடிய 'ரூபரூ' பாட்டு 'பாட்ஷாலா' பாட்டும் வடக்கில் பட்டையைக் கிளப்பின. இவை இரண்டும் foot tappin ரகம். அதே படத்தில் அருமையான மெலடியாக 'து பின் பதாயே' பாடியிருக்கிறார். ரூபரூ பாட்டுக்கு தேசிய விருதும், ப்லிம்பேஃர் விருதும் கிடைத்தது. இசைப் பயணம் தொடங்கி ஒரு வருடத்துக்குள்ளவே இரண்டு பெரிய விருதுகள் பெற்ற பாடகர் என்ற பெருமை இவரைச் சேரும். 'பாட்ஷாலா'வின் ரீமிக்ஸ் வெர்ஷனில் பிளேஸூடன் பின்னியிருப்பார். அதே வருடம் இவர் வரலாறுப் படத்தில் பாடிய இரு பாடல்களும் ஹிட். 'இன்னிசை' பாட்டுக்கு தல ஆடிய பரதநாட்டியம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது:)
சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இவர் பாடிய 'முன்பே வா' பாட்டை இன்றளவும் நான்கு முறையாவது ஒளிபரப்பிவிடுகின்றன தமிழ் மியூசிக் சேனல்கள். ரிங் டோன், காலர் ட்யூன் என எங்கேத் திரும்பினாலும் இது தான். எனக்கு இந்தப் பாட்டை விட 'கும்மியடி' பாட்டு ரொம்ப பிடிக்கும்.
சிவாஜி படத்தில் 'வாடா வாடா வாங்கிக்கடா'ன்னு ஒரு தீம் சாங் வருமே. பிளேஸேவுடன் சேர்ந்து பாடியது.
டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன் படத்தில் வரும் 'வலையப்பட்டித் தவிலே'. என் ஐபாடில் இருக்கும் ஒரே விஜய் பாட்டு. ரஹ்மானின் இசையும் இவர் குரலும் நடத்தும் ஜுகல்பந்தி அருமையாக இருக்கும்.
2008ஆம் ஆண்டு இரண்டு பாடல்கள் ஹிட்டடித்தன. ஒன்று வெள்ளித்திரை படத்தில் 'உயிரிலே என் உயிரிலே' என்ற மெலடி. இசையருவி இதற்கு சிறந்த மெலடி அவார்ட் கொடுத்தது.
அடுத்து வாரணம் ஆயிரம் படத்தில் வரும் 'முன் தினம் பார்த்தனே' பாட்டு. இந்தப் பாட்டிற்காக பிலிம்பேஃர் அவார்ட் கிடைத்தது. பின்னர் பசங்க படத்தில் பாடிய 'ஒரு வெட்கம் வருதே' பாட்டு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஏதோவொரு நிகழ்ச்சியில் சுப்ரமணியபுரம் படத்தில் ஹிட்டடித்த 'கண்கள் இரண்டால்' பாட்டை பாட முதலில் இவரைத்தான் அனுகினாராம். லோ பிட்சில் பாடுவது வசதியாக இல்லாததால் பெள்ளி ராஜை பாட வைத்ததாகக் கூறினார். திரும்பவும் தலக்கு வருவோம். ஏகன் படத்தில் வரும் 'ஏ சாலா' பாட்டும் இவர் பாடியது தான். ஜூனியருக்கு பிடித்த பாட்டு. கந்தக்கோட்டை படத்தில் வரும் 'உன்னை காதலி என்று ச்ச்சொல்வா' பாட்டு நன்றாக இருக்கும் (ஆனால் ஏன் ச்சொல்லவான்னு பாடறாங்கன்னு தெரியல. லேடி வாய்ஸ் இன்னும் மோசம். அவுங்க ஜொள்ளவாம்பாங்க. கொடுமை).
விண்ணைத்தாண்டி வருவாயா வரைக்கும் வந்த இவர் விண்ணைத் தாண்டியும் சாதிப்பதற்கான தகுதிகள் கொண்டவர். மேலும் பல ஹிட்கள் கொடுத்து இசைப் பிரியர்களை மகிழச் செய்ய வாழ்த்துகள் நரேஷ்.
February 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
வாழ்த்துகள் நரேஷ்...பகிர்வுக்கு நன்றி வித்யா
அவர் படும் போது ஒரு புன்னகை அவர் முகத்தில் இருக்குமே... அது நம்மையும் தொற்றிக்கொள்ளும்.. அவரை பற்றி அழகாக எழுதி இருக்கீங்க.
//டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன்//
கார்க்கி எங்க? எங்க?
//திரும்பவும் தலக்கு வருவோம்//
Grrrrrrrrrrrrr
இவர் பாடின கும்மியடி - சில்லுனு ஒரு காதல் எனக்கும் ரொம்ப பிடிக்கும். சில பாடல்கள் இப்பதான் கேள்விப்படறேன்.
i naanthaan first iru padichuttu marupadiyum varren
மேடம் உங்களுக்கு ஹிந்தி எல்லாம் தெரியுமா???!!!!!!!!!! (இப்படி ஒரு சுய விளம்பரம் தேவையா), அப்புறம்
என்ன அருமையான மெலோடீஸ் பாட்டு எல்லாம் நீங்க ரசிகிரிங்க சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் ( போதுமா கொஞ்சம் ஓவரா தெரியல ). ஆமா எவ்ளோ துட்டு வாங்கினிங்க ? (எல்லாம் சும்மா டமாசு)
ஆமாம் வித்யா,
ஷோக்களில், இண்டர்வியூக்களில் கோனங்கித்தனமில்லாமல் அழகாக பேசுகிறார். முன் தினம் பார்த்தேனே தமிழில் எத்தனை அழகோ அத்தனை அழகாக மொன்ன கனிபிச்சாவேன்ன்னு தெலுங்கிலும் உருகுகிறார்.
எனக்கும் இவரது குரல் பிடித்திருக்கிறது.
நல்ல பதிவு வித்யா.
என்ன, எல்லா இடத்துலேயும் ’தல’ தல அதிகம் அடிபடுது. சிட்டிசன் பார்த்த நியாபகம் இன்னும் போகலையா... ;)
நன்றி டிவிஆர் சார்.
நன்றி ராஜி.
நன்றி அம்மிணி.
நன்றி அமைச்சர்.
நன்றி கலா அக்கா.
நன்றி விக்கி (ரெண்டு பேர் இம்சையும் முடியல)
வாழ்த்துகள் நரேஷ்...பகிர்வுக்கு நன்றி வித்யா
:) ஒண்டிப்புலியின் பாட்டு, வீடியோ இருட்டடிப்பு செய்து விட்டு, இப்போதான் கேக்குறேன்.. நல்லாத்தான் இருக்கு.
பகிர்விற்கு நன்றி.
திறமையான ஆள்தான் போங்க அருமையாக எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு வாழ்த்துகள் !
நன்றி சித்ரா.
நன்றி விதூஷ்.
நன்றி இராமசாமி.
நன்றி சங்கர்.
நரேஷ் ஐயர் எனக்கும் பிடித்த பின்னணி பாடகர்களில் ஒருவர்...
இவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் “முன்பே வா”..
//டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன்//
ஆஹா... இந்த பதிவுல கூட ஒண்டிப்புலிய விடலியா.... அய்யோ... அய்யோ....
"பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் வரும் "காதல் கொஞ்சம்", "கரு கரு விழிகளால்" பாடல்களிலும் அசத்தியிருப்பார்
//டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன் படத்தில் வரும்//
அவர விடமாட்டிங்க போலருக்கே:))
பாவம் இவருக்கு நல்ல பாடல்கள் அமைந்த அளவுக்கு ஹீரோக்களோ, பிக்சரைஸேஷனோ அமையல [விஜய், அஜித், எஸ்.ஜே.எஸ் ரசிகர்கள் மன்னிக்க]
கொஞ்சம் தேறி வர்றப் பாட்டு “கும்மியடி”. ”முன் தினம்” பாட்டு கேக்க நல்லா இருந்தாலும், பார்க்க படு மொக்கை.
I dont know how I missed reading this post. Naresh Aiyer is one of my most favourite singer currently. Particularly cant change my ring tone from "Munbae vaa" for the past 3 years. Cant hear a better song than this after that film released.
Liked your humour in this article.
Post a Comment