பதிவுலகமே பரபரப்பாக கவிதையில் கபடியாடிக்கொண்டிருக்கிறது. எங்கு நோக்கினும் கவிதைகள்/கவுஜைகள். கவுண்டமனி சொல்வதுபோல் "இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமீ. அ ஆ எழுதறவனெல்லாம் கவிஞர்ங்கறான்". பதிவர்கள் கவிதை எழுதுவதைப் பார்த்து மன்னாருக்கும் கவிதை எழுத வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. துணைகளான சோடா மற்றும் மாரியிடம் மன்னாரு தன் ஆசையை வெளிப்படுத்த அடுத்த யாரை தூக்குவது என்பதற்கான திட்டம் தீட்டுகிறது மன்னார் & கோ
மன்னாரு கவுஜ எய்தற்தெல்லாம் அம்புட்டு சுகரில்ல. நெம்ப யோஜிக்கனும். எப்பவும் எத்தையோ பறிகொடுத்தாப்புல அண்ணாந்து பாத்துக்கினே இர்க்கனும். இதெல்லாம் வேலைக்காவது மன்னாரு.
சும்மா கிட மாரி. பாட்டு மட்டும் மன்னாருக்கு தெரியுமா இன்னா. அய்யர தூக்கல. அதுமேரி எவனாங்காட்டியும் கவுஜ எல்தறவனையும் தூக்கியாந்து மன்னாருக்கு கத்துத்தார சொல்லுவோம். என்னா சொல்ற மன்னாரு?
டக்கர் ரோஜனைடா சோடா. சரி யாரடா தூக்கறது?
ஒரு நாலஞ்சு பேரோட மேட்டர எட்துக்கினு பெரிய மனுசங்களாண்ட போவோம். அவுங்கோ யார்து டக்கராக்குதுன்னு சொல்றாங்களோ அவங்கள தூக்கியாந்து பட்றையப் போட்ருவோம். என்ன சொல்ற?
யோசனையை செயல்படுத்த மன்னார் அண்ட் கோ முதலில் போவது போயஸ் கார்டனுக்கு.
கையில் சின்ன கர்ச்சீப்போடு உள்ளே வருகிறார் செல்வி.ஜெயலலிதா.
"நாட்டில் ஆயிரம் பிரச்சனை தலைவிரித்தாடிக்கொண்டிருக்கையில் கதை, கவிதை, சினிமா என கிளம்பி விடுகிறார் முதலமைச்சர். இதே என் ஆட்சியில்..(விளங்கிறும். அம்மா நீங்க தான் ஜட்ஜம்மா) நான் சர்ச் பார்க் பள்ளியில் படித்தபோது நிறைய ஆங்கில கவிதைகள் எழுதியிருக்கிறேன். கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக பேனா மையின் விலையை அதிரடியாய் குறைத்தது என் அரசு தான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்த வாரம் கொடநாடுக்கு ஓய்வெடுக்க செல்கிறேன். அப்போது உடன்பிறவா சகோதரியுடன் கலந்தாலோசித்து நல்ல கவிதைகளை இனம் காண்பதெப்படி என அறிவிக்கிறேன்."
இது வேலைக்காவது என அடுத்து ம.அ.கோ பார்க்கப் போனது முத்தமிழறிஞர் கலைத்தாயின் தவப்புதல்வன் பெண்சிங்கம் தரப்போகும் ஆண்சிங்கம் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
"உடன்பிறப்புகளே. கவிதை, கவியரங்கம் போன்ற இடங்களில் தான் என் ஓயாத பணிச்சுமையை இறக்கி வைத்துவிட்டு ஓய்வு பார்க்க முடிகிறது. ஆனால் என்னை நிரந்தரமாய் ஓய்வெடுக்கச் சொல்கிறார் ஒரு சதிகாரி. பெண்சிங்கம் படம் வெளிவரும் முன்னரே அதற்கு சிறந்த படம் விருதை கொடுக்க வந்திருப்பது என்னை மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது".
ஹூக்கும். ஐயா நல்ல கவிதைன்னா இன்னா? இத்தப் படிச்சுப் பார்த்து எது நல்லாருக்குன்னு சொல்லுங்க
கவிதைகளைப் படிக்க ஆரம்பிக்கிறார் முதல்வர். நான்கைந்து கவிதைகளிலேயே டென்ஷனாகி. "யாரது? இப்படியெல்லாம் கேவலமாக கவிதை எழுதுவது? வரலாறு தெரியாதவர்கள். இதுவரைக்கும் படித்த கவிதைகள் ஒன்றில் கூட என்னைப் புகழ்ந்து யாரும் எழுதவில்லயே? நீங்க என்ன செய்றீங்க. ஒரு கவிதைப் பட்டறைக்கு ஏற்பாடு பண்ணுங்க. ஜெகத்ரட்சகனை சிறப்பு பயிற்சியாளரா அனுப்பி வைக்கிறேன். கூடவே பா.விஜய், வைரமுத்து, வாலி, சு.ப.வீ எல்லாரையும் அனுப்புறேன். பயிற்சி முடிஞ்சாற்பாடு புதுசா போட்டி வைங்க. பெரிய விழா எடுத்து போட்டில வெற்றி பெற்றவங்களுக்கு எல்லாம் கவிமாமணி பட்டம் கொடுப்போம். என்ன சொல்றீங்க"
ஒரு பக்கம் வைரமுத்து, பா.விஜய் மறுபக்கம் வாலி, ஆப்துல் ரகுமானை நினைத்துப் பார்த்து டர்ர்ர்ர்ராகி அடுத்து லேண்ட் ஆகுமிடம் பிரதமர் இல்லம்.
"ஹான் ஜி. டீக் ஹை ஜி. ஜி. ஜி. ஒகே ஜி" என தரையில் குத்துக்காலிட்டு போன் பேசி முடிக்கிறார் பிரதமர். "சோனியாஜி வாஸ் ஆன் தி லைன்".
நீ பம்மும்போதே தெரிஞ்சுதுடி யாருன்னு. வெளக்கம் வேறயா. பி.எம்ஜி யூ படி திஸ். டெல்லு எது டக்கரு?
"Why did u come here. U know i cant take any decision. U better go to madamji" என்கிறார். சோனியா வீட்டு வாசலில் தமிழக காங்கிரஸின் அத்தனை கோஷ்டிகளும் இருப்பதைப் பார்த்து மண்டையை காப்பாற்றிக்கொள்ள மீண்டும் தமிழ்நாடு ரிடர்ன்.
2011 முதல்வராக இருக்கும் இருவரை கேட்டால் என்ன என எண்ணி முதலில் சின்ன கவுண்டரிடம் போகிறது ம.அ.கோ
"என்னது கூட்டா சேர்ந்து தேர்வு செய்யனுமா. கூட்டா சேர நான் ஏன் தனிக்கட்சி ஆரம்பிச்சேன்? கவிதைகளை மக்களுடன் கடவுளுடனும் சேர்ந்து படித்து தான் செலக்ட் செய்வேன். (இது வேலைக்கே ஆவாதென்பதை எடுத்துக் கூறியதும்) ஒரு நாளைக்கு பதிவுலகத்துல சுமார் 200 கவிதைகள் எழுதப்படுது. அதுல புரியறது 4. புரியாதது 66. எண்டர் தட்டுனது எண்பது. ஹைக்கூ அம்பது" ஆ உம் என நாக்கை மடிக்க, நாக்கு வெளியே தள்ள நாட்டாமையை பார்க்கப் போகிறது ம.அ.கோ. அவர் கட்சியை சேல்ஸ் பண்னுவது சம்பந்தமாக வெளியே போயிருப்பதால் அடுத்து கவுண்டமணி. கூடவே செந்திலும்.
சூரியன் பட பேக்கிரவுண்டு மியுசிக்கோடு கவுண்டர் எண்ட்ரி.
"அய்யய்ய எம்.எல்.ஏ ஆனாலே தொல்லை தான். அங்க வா. இங்க வா. அதத் தொற. இதத் தொறன்னு. ஒரே கஷ்டமப்பா. ஆங் எங்க கவிதா. எத்தன கவிதாவை செலக்ட் பண்ணனும்?"
(கவிதை பேப்பர்களை நீட்ட)
"அடப்பாவிகளா. கவிதை செலக்ட் பண்ணவா என்னிய கூப்புட்டீங்க. நானு ஏதோ கவிதாங்கற பொண்ண செலக்ட் பண்ண கூப்டீங்கன்னுல்ல நினைச்சேன்."
செந்தில் சிரிக்க
"ஏண்டா டமாரத் தலையா உனக்கு கவிதாவப் பத்தி என்னத் தெரியும்ன்னு நீ சிரிக்கிற?"
"அண்ணே கவிதைய கவிதைன்னு சொல்லலாம். கவுஜன்னு சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்ணே"
அடேய் என செந்திலைத் துரத்திக்கொண்டு கவுண்டர் ஓட அடுத்து நிற்பது மானாட மயிலாட குழு முன்பு.
"ம்ம். பின்னிட்டீங்க. ஆனா பாருங்க. இந்த கவிதைல ஒரு லைனுக்கும் இன்னொரு லைனுக்கும் நிறைய கேப் இருக்கு. அதனாலேயே கெமிஸ்ட்ரி மிஸ்ஸாகுது"
"சூப்பர். சூப்பர். ஒரு வரிக்கும் இன்னொரு வரிக்கும் இருக்கிற சின்க் நல்லா வந்திருக்கு. ஹாட்ஸ் ஆஃப்"
"ஓ மச்சான்ஸ் இது தமில்ல எளுதியிருக்குது. எனிக்கு புர்ய மாட்டேங்குது. மச்சான்ஸ் நீ நமீதா தமில்ல போடி வைக்குது. நான் ஜட்ஜ் ஆவுது"
மண்டை சுத்திய அடுத்து ஆஜராவது நீயா நானா செட்டிலிருக்கும் கோபிநாத்திடம்.
"வாவ். அடுத்த நீயா நானா போட்டிக்கு இந்த மேட்டரையே யூஸ் பண்ணிப்போம். கவிதைகள் Vs கவுஜைகள். யாரையும் முழுசா பேச உடமாட்டோம். கண்டிப்பா போட்டியாளர்கள்ல ஒரு 4 பேராச்சும் பிழிய பிழிய அழுவனும். நான் அவங்கள் ஆறுதல் பண்னி அவங்களுக்கே பரிசை கொடுத்துடறேன். இத வெச்சே நடந்தது என்ன? அப்படின்னு ஒரு ப்ரோகிராமையும் பண்ணிடலாம். முக்கியமான விஷயம் நீங்களும் கூட காம்பியரிங் பண்ணனும்னா கோட்டு போட்டுகிட்டு தான் வரனும். ஓகேவா?"
வேலைக்காவாது என ராணி ஆறு ராஜா யாரு டீமிடம் போகிறார்கள். பப்லு, அப்பாஸ் போன்றோர் கோரஸாக "செலக்ஷன் எல்லாம் பண்ணிடலாம். வெற்றி பெற்றவங்களை அறிவிக்கும்போது கண்டிப்பா கட்டிபிடிச்சு முத்தம் கொடுப்போம்".
ஒருவேளை பொம்பிளிங்கா கவுஜ ஒகேயாயிருச்சுன்னு வை செருப்ப கயிட்டி இறுக்குவாங்கோ மாரி. வா எஸ்ஸாயிரலாம்.
கடைசி முயற்சியாக டீ.ஆரிடம் போகிறது ம.அ.கோ. கவிதை அனைத்தையும் படித்து முடிப்பவர் சொடுக்கு போட்டபடியே "என்னய்யா எழுதறாங்க? பிரஞ்யை, அசூயை, ஆயாசம் பாயாசம்னு. கவிதன்னா இப்படி எழுதனும்யா." குனிந்து தலைமுடியை கோதிவிட்டவாறே டான்ஸ் ஆடிக்கொண்டே ஒரு கவிதை சொல்கிறார். அதைக் கேட்ட மன்னாரு மாமே என்க்கு கவுஜ வடிக்கிற ஆசையே பூட்ச்சுடா என சொல்லி எகிறி குதித்து ஒடுகிறார். அந்தக் கவிதை
இதில் கவிதையோடு ஆடலுடனான தற்காப்பு கலை
போனஸாக ஒரு இங்லீஸ் கவுஜ.
டிஸ்கி : இந்த இடுகை நகைச்சுவை நோக்கத்திற்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
ஏன் இந்தக்கொலைவெறி?
அண்ணே! பதிவு சூப்பருங்கோ
//பதிவுலகத்துல இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியலடா சாமீ. அ ஆ எழுதறவனெல்லாம் கவிஞர்ங்கறான்//
என்ன கொடுமை சரவணன் இது..!!
நான் கவிதை எழுதலாம்னு யோசிக்கும்போதா நீங்க இதை பதிவிடணும்.
இருந்தாலும் நமக்கெல்லாம் ஏது வெட்கம்...அதனால எழுதத்தான் போறேன். :)
எம்மனசு நெம்ப புண்பட்டிருச்சு... அஹ் அஹ்... பண்பட்டிருச்சுன்னு சொல்ல வந்தேனுங்க..ஆனாலும் உங்களிய மன்னிக்க மாட்டேங்க. :))
விவசாயி போடனும் விதை
காதலிச்சா எழுதனும் கவிதை
டி.ஆர் தொடாம விட்டது எதை
எதிர்த்தா தலைலே விழும் உதை
ஹேய் டண்டணக்கா ஹேய் டணக்கு டக்கா
வருங்கால சூப்பர் ஸ்டார் டி.ஆர் வாழ்க !!
நான் கவிதையெல்லாம் எழுதியதே இல்லப்பா :))
படித்து படித்து சிரித்து சிரித்து ரசித்தேன்.....
:-)))
very good one.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி சேட்டைக்காரன் (அண்ணேவா?? விளங்கிரும்).
நன்றி கண்ணா (நடக்கட்டும் நாசவேலைகள்).
நன்றி ராஜி.
நன்றி விதூஷ் (யக்கோவ் ஏதாவது கிளப்பிவிட்டுட்டு போய்டாதீங்கோ)
நன்றி கார்க்கி.
நன்றி பேநாமூடி.
நன்றி கலா அக்கா (நம்ம செட்டு)
நன்றி சங்கவி.
நன்றி டி.வி.ஆர் சார்.
நன்றி சித்ரா.
டிஸ்கி இல்லாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்
ஹாஹ்ஹா, ஒருத்தர் விடாம கலாய்ச்சுருக்கீங்க, குறிப்பா கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் - இவங்களோட பகுதி சூப்பர்:)))
கடைசியில வீடியோவா அப்லோட் பண்ணியிருக்கீங்களா? ஆஃபிஸ்ல பாக்கமுடியல, Blankஆ இருக்கு
//சேட்டைக்காரன் said...
அண்ணே! பதிவு சூப்பருங்கோ
//
பதிவு
அருமை..
சேட்டைக்காரன் அண்ணே, வித்யா அக்காவ அண்ணன்னு கூப்பிடதுல ஏதாவது உள்குத்து இருக்கா? (நாராயணா நாராயணா )
தமிழ்ப்படம் பார்த்த எபெக்டா? :-))
சேட்டைக்காரன் தம்பிக்கு இதே வேலையா போச்சு. ஏன் தம்பி பதிவுலகத்துல அண்ணனுங்க மட்டும்தான் ஜூப்பரா எழுதறாங்களா? நல்லா யோசிங்கப்பு. (பாவம் யார் கிட்டயும் திட்டு வாங்கிடக்கூடாதேன்னு தான் தம்பி இந்தப் பின்னூட்டம்)
நன்றி கேவிஆர் (நீங்க நாட்டாமையாகலாம்ன்னு பார்க்கறீங்களா)
நன்றி ரகு (ஆமாங்க.அருமையான வீடியோ).
நன்றி எறும்பு.
நன்றி உழவன் (இன்னும் படம் பார்க்கல)
ஹா ஹா அசத்தல். கவுண்டமணி காமெடி டாப்.
:)))))))))))) முடியலை :))
நன்றி சரவணக்குமார்.
நன்றி மயில்.
Post a Comment